தாய்மை
என்பது உலகில் உயர்ந்தது இதை எல்லா மதங்கள் மட்டுமல்ல உலக மக்கள் அனைவருமே
ஏற்றுக்கொண்ட விடயம். தாயை அவர்களது வயதான காலத்தில் கவனித்துக் கொள்ளாமல்
முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டால் ? அவனை ஏசுகின்றோம். மகனை புரிந்து கொள்ளாமல் அவனது
உணர்வுகளை, சூழ்நிலைகளை அறிந்து கொள்ளாமல் அவனுக்கு இடையூறு செய்யும் தாயார்களை
நாம் நினைத்து பார்க்கிறோமா ?
மகன்
சந்தோஷமாக வாழவேண்டும் என்ற எண்ணங்களோடு மகனுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு
வந்தவள் தனது கணவனை உரிமை கொண்டாடுகிறாள். இதுதானே வாழையடி வாழையாக நடக்கிறது.
நேற்று நாம் மருமகளாக வந்தபோது செய்ததைத்தானே இன்றைய மருமகள் நமக்கு செய்கிறாள் ? இருப்பினும் பல பெண்களுக்கு இவைகளை விட்டுக் கொடுக்கும்
எண்ணம் காலங்காலமாக வருவதில்லையே...
அதிலும்
சில தாய்மார்கள் ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைத்துப்
பார்ப்பது தவறான செயல். அதைவிட தன்னை கவனிக்கும் மகனைவிட, தன்னை நினைத்துப்
பார்க்காத மகன்கள்மீது பாசம் கூடுதல் வைப்பது முறையற்றதே... இதை கவனிக்கும் மகனின்
மனைவி எப்படி ஏற்றுக்கொள்வாள் ? காலம் மாறிக்கொண்டே செல்கிறது இதை உணர்ந்து செல்லவேண்டும்
என்பது சிலருக்கு புரிவதேயில்லை. இன்றைய காலத்தில் நமக்கு வேண்டியது...
உண்ண
உணவு, உடுத்த உடை, உறங்க உறைவிடம்
இது
போதுமே... இறைவனுக்கு நன்றி சொல்லி காலத்தை கடத்திடலாமே... நான் பல மனிதர்களிடம்
பார்த்து விட்டேன். குடும்பத்தின்மீது பாசம் வைப்பவன் அவனது மரண காலம்வரை மனம்
அழுத்தமாகியே வாழ்கிறான், அப்படியே வீழ்கிறான்.
பிறருடைய
தவறுகளை கண்டு கொள்ளும் நாம், அதே தவறை தான் செய்யாமல் இருப்பதே அறிவாற்றல். நானறிந்து
ஒருவன் சுமார் முப்பது ஆண்டுகளாக தாயாரை கவனித்து வந்தான். ஆனாலும் தனது
குடும்பத்துக்கு உதவாத, தன்னை நினைக்காத, குடும்ப மரணத்தில்கூட கலந்து கொள்ளாத,
மகன்கள் மீதுதான் பாசம். இது நியாயம்தானா ? இருப்பினும் மனம் தளராமல் தாயை வெறுக்ககூடாது என்ற சிந்தையோடு
இருக்கிறான். காரணம் சமூகத்து மனிதர்களின் நரம்பில்லாத நாவுக்கு பயம்.
கௌரவத்துக்கு வாழ்பவன் சமூகத்துக்கு பயந்தே தீரவேண்டும். நல்லவேளை அவனது மனைவி
ஏற்கனவே மரணித்து விட்டாள். இல்லா விட்டால் ?
இந்தப் பாசம் என்பது ஒரு வித்த்தில் வியாதிதான்.
பதிலளிநீக்குதாயோ தகப்பனோ, பெற்றவர்களில் ஒரு சிலர் மீது அதீதப் பாசம் வைப்பது புரிந்துகொள்ள இயலாத்து. அதற்குக் காரணம் தேட முடியாது. விமி என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
வருக நண்பரே பாசமோ, காதலோ இருபுறமும் சமபங்கு இருப்பதே உண்மையானது.
நீக்குவாய்க்குள் நாக்கை எப்படி சுருட்டி வைத்துக்கொள்வாள் என யோசிக்கிறேன். (படத்தைப் பார்த்து)
பதிலளிநீக்குஹா.. ஹா.. உங்களது கவலை உங்களுக்கு...
நீக்குதாயை வெறுக்க கூடாது என்ற சிந்தனையோடு இருக்கிறான் என்றால் அவரைப்பாரட்டலாம். ஆனால் சமுகத்திற்கு பயந்து வாழ்கிறான் என்றால் அவரை பாராட்டக் கூடாது சமுகம் சாக்கடையாக இருக்கிறது என்பதால் நல்ல தண்ணீரை அதில் கலந்து கொடுக்க முடியமா என்ன
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே சமூகம் வேண்டாமென்று ஒதுங்கி வாழ வேண்டுமானால் நாம் அரசியல்வாதியாக வேண்டும்.
நீக்குபாசம் இருந்தாலும் நேரமறிந்து நகர்ந்து, விளைவறிந்து விலகி வாழத் தெரிந்திருந்தால் நலம். நாணயத்துக்கு இரண்டு பக்கம் என்பது போல மோசமான தாய்களையும் பார்க்கிறோம். மோசமான வாரிசுகளையும் பார்க்கிறோம். அனுபவிப்பவர்கள் பாடு சிரமம்தான்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது விளக்கமும் அருமை.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான அலசல் பதிவு. தங்கள் கருத்துக்கள் உண்மைதான்.. நாக்கின் நீளத்தில் நல்ல வார்த்தைகள் பிறக்காது, மனதில் தோன்றும் எண்ணங்களும் சுருங்கி விடும். இந்த உலகில் அன்பு செலுத்துவது, இந்த பாசம் வைப்பது என்பது பொதுவாக ஒருதலைபட்சமாக இருந்தால், எவருக்குமே கஷ்டம்தான். இதெல்லாம் ஒரு மாயை என்ற அளவிற்கு புரிந்து கொள்ளவும் இறைவன் அருள் நிறைய வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது விரிவான அலசல் கருத்துரைக்கு நன்றி.
நீக்குமனம் தளராமல் பாசத்தோடு இருங்க வேண்டும் மகன், என்றாவது ஒரு நாள் தாய் அந்த உண்மையான பாசத்தை ஏற்று மகனிடம் வருவார்.
பதிலளிநீக்குமகனுக்கு வாழ்த்துக்கள்.
உண்மையான பாசத்தோடு அன்பு காட்ட வேண்டும் மகன். ஊருக்கு பயந்து பாசம் காட்ட வேண்டாம்.
வருக சகோ என்றாவது ஒருநாள் ?
நீக்குகாலம் காத்திருக்குமா ? தங்களது வருகைக்கு நன்றி.
எண்ணங்கள் - நன்று. படம் - பயமுறுத்தும் நாக்கு.
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு மிக்க நன்றி
நீக்குபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பதிலளிநீக்குபற்றுக பற்று விடற்கு
வருக ஜி குறளால் குரல் கொடுத்தமைக்கு நன்றி
நீக்குகூட்டுகுடும்பங்கள் சிதற சிதற பாச மலர்களும் உதிர்ந்து விட்டன. சுயநலம் ஒன்றே தற்போதைய நடைமுறை.
பதிலளிநீக்குஆம் ஐயா கூட்டுக் குடும்பத்தின் சிதறல்களே இதற்கு கா'ரணம்.
நீக்குஉண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம் போதும் என்று வாழ்ந்துவிடலாம்தான், பங்கு கேட்டு யாரும் வராமலிருந்தால். ஒருவன் நிம்மதியாக வாழ்ந்தால் சொந்தபந்தங்களுக்கே வயிறு எரிகிறதே!
பதிலளிநீக்குஆம் நண்பரே உறவுகளை ஒரு வரைமுறையில் நிறுத்தி வாழவேண்டும்.
நீக்குஇல்லையேல் நிம்மதிக்கு கேடு.
கடைசிப் பத்தி உங்களை அப்படியே வெளிப்படுத்தி விட்டது! இல்லையா? மூத்த மகனுக்குத் திருமணம் என்றபோது ஒரு தாய் தன் மற்றக் குழந்தைகளைத் தூண்டி விட்டு "அண்ணா கல்யாணம் செய்துக்கக் கூடாது!" என்று அழுது அடம் பிடிக்கச் சொல்லித் தானும் தாலி கட்டும் நேரம் இரு கைகளையும் மேலே உயர்த்திக் கொண்டு, "அம்பிகே! 26 வயசு வரைக்கும் வளர்த்த பிள்ளையை உயிரோடு தூக்கிக் கொடுத்துட்டு நிற்கிறேனே! நீயும் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கியே!" என அழுது ஆர்ப்பாட்டம் செய்ததோடு அந்த மருமகளிடம் அவள் தன் கணவனோடு நமஸ்காரம் பண்ண வந்தப்போப் பத்தொன்பது வயது கூட நிரம்பாத பெண்ணிடம், "என் பிள்ளையை உயிரோடு தூக்கிக் கொடுத்துட்டேன் உன் கிட்டே! என் கிட்டே இருந்து என் பிள்ளையைப் பிரிக்காதே! திருப்பிக் கொடுத்துட்டு நீ போயிடு!" என்றார். அதோடு இல்லாமல் முதல் இரவன்று பிள்ளையும் மருமகளும் உள்ளே சென்றதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து, மயக்கம் போட்டாற்போல் நடித்துத் தான் இனிமே உயிருடன் இருக்கப் போவதில்லை எனவும் உடனே பிள்ளையைக் கூப்பிடுமாறும் வற்புறுத்தினார். வீட்டின் மற்றப் பெரியவர்கள் இவர் செய்வதைப் புரிந்து கொண்டு விட்டதால் எதுவும் நடக்கவில்லை. அதுக்கப்புறமும் அவருக்கு அந்த மூத்த மருமகளைக் கடைசி வரை பிடிக்காமலே தான் இருந்தது. ஆனால் அவர் தான் அவருக்குக் கடைசிக்காலத்திலும் விட்டுக் கொடுக்காமல் செய்தார். இப்படி எல்லாமும் தாய் உண்டு என்று சொல்வதற்குத் தான் இதை எழுதினேன்.
பதிலளிநீக்குவருக சகோ மீள் வருகைக்கு நன்றி.
நீக்குஆச்சர்யமாக இருக்கிறது தங்களது தகவல் நாம் பெரும்பாலும் நினைப்பது திரைப்படங்களிலும், கதைகளிலும்தான் இப்படி நடக்கும் நமது வீட்டில் இப்படி நடக்காது என்றே ஆணித்தரமாக நம்புகிறோம்.
நமக்கே நிகழும்போது மனம் ஏற்க மறுக்கிறது.
இந்த நிகழ்வைக் கண்ணெதிரே பார்த்திருக்கேன் கில்லர்ஜி! என்ன சொல்ல முடியும்? இத்தனைக்கும் அந்தத் தாய் பத்துக் குழந்தைகளுக்கும் மேல் பெற்றவர். மூத்த பிள்ளை ஒருவரே வீட்டில் சம்பாதிக்கத் தொடங்கிய ஒரே ஆள். ஆகவே அந்தத் தாய்க்கு மருமகள் வந்ததும் பிள்ளையின் சம்பாத்தியத்தில் அவளுக்கும் பங்கு இருக்கும் என்பதையே ஏற்க முடியாத மனம். கடைசி வரை சொல்லிக் காட்டி இருப்பதோடு சாப்பாடு போடுவதிலும் ஓர வஞ்சனைகள் நிறையச் செய்வார்/வெளிப்படையாகவே!
நீக்குதாய் என்பவர் எல்லோருக்கும் அமைவதில்லைதான் என்ன செய்வது ?
நீக்குமகன் தன் தாயைக் கைவிடாமல் கடைசி வரை பாதுகாக்கவேண்டும் என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை. அப்புறம் அந்தத் தாய்க்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்? தாய் என்பவளை ஓர் மனுஷியாக நினைத்து ஆதரவு காட்டினாலே போதும். தெய்வம் என்னும் நிலைக்கு எல்லாம் உயர்த்த வேண்டாம். அவளும் ஆசாபாசங்கள் நிறைந்த ஒரு மனுஷி!
பதிலளிநீக்குநாம் அரபு நாட்டில் இருபது வருடமாக வாழ்ந்ததால் எல்லோருடைய பாசமும் உண்மை என்றே கருதி வாழ்ந்து விட்டேன்.
நீக்குஎனக்கு உலகமே இப்பொழுதுதான் புரிய ஆரம்பித்து இருக்கிறது.
உண்மை தான். அதனால் தான் உங்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாக இருக்கிறது. இன்றைய தினசரியில் சொத்துக்காகப் பிள்ளை தாயையும், தகப்பனையும் அடித்துக் கொன்றதாகப் படங்களோடு செய்தி! இப்படியும் உலகம்!
நீக்குஅரும்பாடுபட்டு உண்மையாக பணம் சேர்த்து சொத்து வாங்கியவன் இன்று அவைகள்தான் எனக்கு கேடாக இருக்கிறது.
நீக்குஅவர்கள் உண்மைகள்..சொன்னக் கருத்தே என் கருத்தும்..சமூகத்துக்கு பயந்து செய்தல் உண்மையான பாசமாகுமா...
பதிலளிநீக்குவருக கவிஞரே உண்மையானவனுக்கு களங்கம் வரும்போது பாதை தடம் மாறுகிறது வேறு வழியில்லை.
நீக்குதங்களின் பெற்றோரைக் கவனித்தல் மகனின் கடமை
பதிலளிநீக்குஆனால் இன்று நிலைமை மாறிக்கொண்டிருப்பது வேதனைதான் நண்பரே
வருக நண்பரே நான் எனது கடமையை என்றுமே தவற விட்டதில்லை. வருகைக்கு நன்றி
நீக்குதாய்க்கு வயதாகி விட்டதால் தாரம் இல்லாத மகனுடன் இருந்து சமைத்து போட முடியாமல் போய் விட்டாரா சின்ன மகன் வீட்டுக்கு . ஒரு தலைபட்ச பாசமா ? பாடு பட்டு சேர்த்த பணத்தை குடும்பத்திற்கு கொடுத்து மகிழ்ந்த மகனை வெறுக்க காரணம் தெரியவில்லை. தாய், உடன்பிறந்தவர்கள், மகன், மகள் , எல்லோரும் இப்படி மாறுவதை என்னவென்று சொல்வது. வேதனையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇவ்வுலகில் இறுதிவரை வரும் உறவு மனைவி மட்டுமே...
நீக்குதாய் அல்ல! அவர் தகப்பனுக்கானவர்.
உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க இடம் இருந்தால் மட்டும் போதுமா?
பதிலளிநீக்குஅன்பான உறவுகள், முகம் ஏன் வாடி இருக்கு?
சாப்பிட்டாயா , கவலைபடாதே நாங்கள் இருக்கிறோம் என்று உறவுகள் சொல்லுவதுதான் வாழ்க்கை.
ஆம் எனக்கு...
நீக்குஉண்ண உணவு, உடுக்க உடை, உறங்க இடம் இந்த மூன்றும் இருக்கிறது ஆனால் மற்றவை இல்லை...
அன்பு தேவகோட்டைஜி,
பதிலளிநீக்குமிக மிக வேதனை இது போல ஒரு தாய் இருப்பது.
தானும் அமைதியில்லாமல் பெற்ற பிள்ளையையும்
இப்படி ஒரு தாய் இருந்தென்ன போயென்ன.
கனிவு காட்டாதவள் பெண்ணில்லை பேய்.
ஊருக்காக எதற்குக் கவலைப் பட வேண்டும். அந்தப் பையன்
தன் வழியே செல்லட்டும்.
அழைத்தால் வராத உறவுகள் அவனுக்கு வேண்டாம்.
வாழ்க வளமுடன் ஜி.
வாங்க அம்மா தங்களது வரவு கண்டு மகிழ்ச்சி.
நீக்குஇப்படியெல்லாம் நடக்குமுன்னுதான் என் அம்மா என்னை திருமணமே முடிக்காமல் இருக்க வைத்துவிட்டார். என் அம்மா வேலை செய்யும் எஜமானி அம்மா... என் அம்மாவிடம்..அடியே ..நாகு... உன் கட்சி கட்சின்னு போயி கட்சிக்கார மூலமா கல்யாணம் முடுச்சுகிட்டான்னா..உன்னையும் உன் மகளையும் பாக்க மாட்டான்டீ என்று பலவிதமா என் அம்மாவிடம் ஏற்றிவிட்டதால்.. என் அழுது புலம்பி எனது இரக்க குணத்தை அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். நானும் இளமை முறுக்கை காட்டாமல் அம்மாவின் பேச்சை கேட்டு திருமணமே் முடிக்காமலே சீனியர் சீட்டிசன் ஆகிவிட்டேன். உண்மையிலே நான் என் தாயார் இறக்கும்வரை உண்மையாக நேர்மையாக நடந்து கொண்டேன்.நண்பரே!!
பதிலளிநீக்குவருக நண்பரே...
நீக்குதாங்கள் திருமணம் செய்யாமல் வாழ்ந்தது தவறு நண்பரே இன்றைய தங்களது நிலையை நான் உணர்கிறேன்.
சத்தியம் தவறாமல் நடந்து கொண்டேன். ஆனால் என் தாயாரின் மகள் வயிற்று பேரப்பிள்ளைகளோ என் அக்காவோ, அவரின் வீட்டுக்காரரோ... என் தாயாரை விட சுயநலமிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள்,இருக்கிறார்கள்... அய்யோ..என்றால் அறுபது வருட பாவம் பிடிக்கும் என்று சொல்வது போல்..அறுபது வருட பாவம் முடிந்தது.... இனி வருத்தப்பட்டு..கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதால்..... இறக்குவரை வாழ்வது என்ற நிலைதான்...
நீக்குகாலம் பொன் போன்றது
நீக்குவாழ்வு ஒருமுறைதான் ஏதோ தடம் மாறிவிட்டது இனி புலம்பி பயனில்லைதான் நண்பரே...
கடமை என்பதையும், பாசம் என்பதையும் சில சமயங்களில் நாம் குழப்பிக்கொள்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குவருக முனைவர் அவர்களே...
நீக்குகடமையாய் நினைத்தால் எதிர்பார்ப்புகள் குறையலாம்.
பாசம் வைத்தால் பிரதிபலனை மனம் எதிர் நோக்குகிறது.