இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 01, 2024

அரசியல் கிலோ எவ்வளவு ?

ணக்கம் கீழேயுள்ள இரண்டாவது புகைப்படத்தை பார்த்தீர்களா ? இது அவசியமில்லாத வேலைதானே ? இந்த வகையான கூதரைகளால்தான் நாட்டில் மதப்பிரச்சனை வருகிறது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கலாம். அவர்கள்தானே தங்களது பிழைப்புக்காக... மக்களின் மூளையை இப்படி செலுத்தி விட்டு மக்களிடையே பிரச்சனைகளை கிளப்பி பிறகு சமாதானம் செய்வதுபோல் பேசி ஆகமொத்தம் அடித்தட்டு மக்கள்தான் பலியாவான். எந்தவொரு அரசியல்வாதியும் சாகமாட்டான்.

 
இதை மக்கள்தான் உணரவேண்டும். இந்த வேலையை செய்தது பிறமதத்தினர் என்று உறுதியாக சொல்லி விடமுடியாது. இந்துவாககூட இருக்கலாம். காரணம் பணத்துக்காக எதையும் செய்யும் இழிபிறவி மக்கள் எங்கும், எல்லா சமூகத்திலும் நிறைந்து விட்டனர். மக்களிடம் நல்ல சிந்தனை இல்லை. அதன் காரணமாகவே அயோக்கியர்கள் ஆட்சியில் இருக்கின்றார்கள். அரசியல் விழிப்புணர்வு என்பது நமது மக்களிடம் இன்னும் வளரவேயில்லை. அரசியல் என்றால் கிலோ எவ்வளவு ? என்பது இன்றைய நிலைப்பாடு இருக்கிறது.
 
ஐம்பது ஆண்டுகளாக திராவிடக்கட்சிகளை கண்டு கொண்டோம். இனியாவது மாற்று அரசியலை பார்க்ககூடாதா ? திரு.சீமானின் பேச்சில் ஒரு புதிய மாற்றம் தெரிகிறது ஆனால் இது செயலுக்கு சரியாக வருமா ? என்பதை சொல்வது கடினம்தான். சரி ஓர்முறை இவருக்கும் வாய்ப்பு கொடுத்துதான் பார்த்தால் என்ன ? தயவு செய்து நான், நாம் தமிழர் கட்சிக்காரன் என்று நினைத்து விடாதீர்கள். நம்நாடு நல்லா இருக்கவேண்டும் என்ற நப்பாசை உள்ளவர்களில் நானும் ஒருவன் அவ்வளவே... 

வாக்களிக்க பணம் பெறுவதை மக்கள் நிறுத்தாத வரையில் மாற்று சிந்தனை வராது. எனது பார்வையில் இந்த பழைய தலைமுறை அதாவது நானும்தான் அழிந்தால் சரியாக வரும். கீழ்காணும் காணொளியில் இந்த பெண்மணியின் அரசியல் ஞானம் எவ்வளவு என்பதை பாருங்கள்.
 
கில்லர்ஜி புதாபி
 
காணொளி

30 கருத்துகள்:

  1. பிறரது மத உணர்வுகளை புண்படுத்தி அரசியல் செய்வது வாடிக்கைதானே...  இவர்களை எல்லாம் என்ன செய்ய முடியும்?  அதற்கொரு விளக்கம் கச்சிதமாய் வைத்திருப்பார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மத உணர்வுகளை என்பதை மன உணர்வுகள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

      நீக்கு
    2. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  2. ஓங்கி அடிக்கறாங்க..  சசிகலா நிறைய படங்கள்ல நடிச்சிருக்காங்கன்னு!  அவங்க சொல்ல வர்றது 'ஜெ'யை போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் ஜி
      "தெக்கூர் தெள்ளுமணி தெய்வானை" அம்மாளாக இருக்குமோ... ?

      நீக்கு
  3. அரசியல் என்றில்லை..  பற்பல விஷயங்களில் அறியாமைதான்.  முன்னர் மக்கள் டிவியில் வந்த இமான் அண்ணாச்சி நிகழ்ச்சி பார்த்திருக்கிறீர்களா?  பொதுமக்களிடம் மாதத்துக்கு எத்தனை நாள், வாரத்துக்கு எத்தனை நாள்னு கேட்டால் கூட தடுமாறினார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் தொலைக்காட்சி தமிழ் மக்களுக்கான தொலைக்காட்சி ஆனால் மக்கள் சொல்வது அவர்கள் பேசுவது புரியவில்லையாம் ஜி

      நீக்கு
  4. சரி...  எடப்பாடியோடு நிற்கும் சசிரேகா என்பவர் யார்?  ஹிஹிஹி...  என் கேள்வியையும் வீடியோவுல சேர்த்துடாதீங்ங்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் மைக் மோகன் காலத்தில் ஜோடி நடிகை சசிரேகா.

      நீக்கு
    2. அவர் சசிகலா இல்லையோ....     இளமைக்காலங்கள் மற்றும் வெற்றிவிழா 

      நீக்கு
  5. கில்லர்ஜி, முதல் படத்தைப் பார்த்ததும் ஆ! அரசியல் பதிவா...என்று பின் வாங்கினேன்.

    பொதுவாகச் சொல்லும் ஒரு கருத்தைச் சொல்கிறேன். மதம், சாதி பற்றிப் பேசுவது எந்த ஒரு ஆட்சிக்கும் கட்சிக்கும் நல்லதில்ல.

    பார்த்த காணொளிதான். காணொளி பார்த்து சிரித்துவிட்டேன். நாடு உருப்பட்டாப்ல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் மக்களுக்கானவர்கள் மதவாதம் பேசமாட்டார்கள்.

      நீக்கு
  6. செருப்பு படம் பார்த்து கஷ்டமாக இருக்கிறது. ஏன் இப்படி செய்கிறார்கள் என்ற கேள்விகளும் எழுகிறது.
    காணொளி பார்த்தேன் , அவர்கள் அப்பாவிகளாக இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஆம் இந்த தலைமுறைக்குப் பிறகாவது மக்கள் சிந்திக்கட்டும்.

      நீக்கு
  7. இங்கே எதிலெல்லாம் ஆதாயம் பார்க்கமுடியும் என்று அலைந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகள்.... விஷமிகள் என அனைத்தும் உண்டு.

    நாடு எப்படிப் போனால் எனக்கென்ன, நானும் என் சந்ததியினரும் நன்றாக இருந்தால் போதும் என்று தான் நாடு முழுவதும் உள்ள அரசியல்வா(வியா)திகள் நினைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      மக்கள் சிந்திக்காத வரையில் அரசியல்வாதிகள் இப்படித்தான்....

      நீக்கு
  8. காணொளில இருக்கறவங்க எல்லாருமே அனேகமா ரூபாய் வாங்கிட்டு வாக்களிக்கறவங்களாயிருக்கும். தொலைக்காட்சி சீரியல்கள் பார்க்கும் வழக்கம் நம் மக்களை எப்படி முட்டாளாக மாற்றிவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே ஆம் பாமரர்களை மேலும் முட்டாள் ஆக்குவது ஊகங்கள் தான்...

      நீக்கு
  9. வெளிநாடுகள்ல இந்த மாதிரி காலணி, ஜட்டிலலாம் கடவுள் படங்கள் (இயேசு), தேசத்தின் கொடி போன்றவற்றை பிரிண்ட் செய்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்துக் கடவுள்களை நாம் அப்படிப் பார்க்கும்போது நமக்கு ரொம்பவே உணர்ச்சியாகிடுது. அவ்ளோதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நாம் தேசியக் கொடியைக் கூட பக்தி உணர்வோடு தான் பார்ப்போம்.

      நீக்கு
  10. ஜீ வணக்கம்
    நீண்ட நாடகளுக்கு பின் தொடர்கின்றேன்... பணம் வேண்டித்தான் எல்லோரும் வெற்றி பெறுகின்றார்கள் அதுமட்டுமா.வேட்டி சேலை வழங்கும் கலாசாரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது தளத்தில் கவிதை மழையை பதிவு செய்யுங்கள்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களின் மன ஆதங்கம் புரிகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களின் நலனை முக்கியமாக கருத வேண்டும்.

    கடவுளின் படம் காலில் மிதிபடும் போது மனதை வருத்தாதா? என்னவோ நாகரீகங்கள் எல்லை மீறும் போது எதுவும் பிடிக்காமல் போகிறது.

    காணொலியில் அவர்கள் இவ்வளவு அப்பாவிகளா எனும் எண்ணம் வருகிறது. ஒரு வேளை இதுவும் ஒரு அரசியல் விளையாட்டோ ? தெரியவில்லை...! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  12. ஆகா, தங்களைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன நண்பரே. மகளது திருமண வேலைகளால் சில மாதங்கள் இணைத்தில் பயணிக்க இயலாத நிலை. இனி தொடர்வேன் நண்பரே.
    நலம்தானே நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலமே....
      தங்களது மகள் திருமணம் சிறப்பாக நிகழ்ந்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  13. பாமர மக்கள் இவர்கள். அவர்களின் அடிப்படை வாழ்க்கையே அவர்களை ஓட வைக்கும் போது யார் காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு என்ற அறிவார்ந்த சிந்தனைகள் இருக்காது என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலையும் இல்லை.

    செருப்பு விஷயம் மிகவும் வேதனை அளிக்கிறது. இவை விற்கப்படுமா?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் விற்பதினால்தான் விலைப்பட்டியல் இருக்கிறது.

      நீக்கு
  14. செருப்பு படம் ஒன்று அதைப் பற்றித் தெரியாதவர்கள் செய்ததாக இருக்கலாம். இப்போது வெளிநாட்டுச் செருப்புகளும் இங்கு விற்கப்படுகிறதே. சைனா, ஹாங்காங்க் மேக்கிங்க். அல்லது தெரிந்தே செய்தவர்களாகவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் நமக்கு அது வேதனைதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு