இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூலை 30, 2016

லம்பா - பாக்கியம்

LAMBORGHINI 

LAMBORGHINI

இந்த வார்த்தையை அறியாதோர் உலகில் உண்டோ ? இதை சாமானியர்கள் வாங்க முடியாது (ஆனால்  நான் நினைத்தால் இன்று இரவு 11.00 pm க்குமேல் வாங்கி அதிகாலை 05.30 am க்குள் விற்று விடுவேன் என்பது வேறு விடயம் புரிந்திருக்குமென நினைக்கிறேன்) நாம் வாங்க முடியவில்லை பெருங்கொண்ட நிறுவனங்களின் முதலாளிகள் வாங்குகிறார்கள் அதில் அவர்களுடைய உழைப்பும், முதலீடும் இருக்கிறது நியாயம். ஆனால் திரைப்பட நடிகர்களையும், அரசியல்வாதிகளையும், கிரிக்கெட் வீரர்(?)களையும் வாங்க வைப்பதற்க்கு வழிவகை செய்கிறோம் இவர்களின் உழைப்பு கடுமையானதா ? இவர்களின் பணமெல்லாம் வெட்டியாக ஸ்விஸ் வங்கிகளில் கிடந்து அந்த நாட்டுக்காரனுக்கு பிரயோசனப்படுகிறது வெளியுலகம் தெரியாமல் மறைந்து போனவைகளும் ஏராளம், தாராளம் இதையெல்லாம் நினைத்தால் எனக்கு முழங்கை வலிதான் வருகிறது சரி தொலையட்டும் அது ஒரு சாபக்கேடு. நம்ம விசயத்துக்கு வருவோம். 

இந்தக்காரை தொட்டுப்பார்க்காதவர்கள்கூட நிறையப்பேர் இருக்கிறார்கள் இதன் விலை விபரங்களும் கீழே கொடுத்து இருக்கிறேன் இப்படிப்பட்ட காரில் உட்கார்ந்து சிறிய அளவில் நகர்த்திப் பார்க்கும் பாக்கியம் சமீபத்தில் எமக்கு கிடைத்தது ஆம் நண்பர்களே... வாழ்வில் நாமும் ஒருநாள் இந்தக்கார் வாங்க வேண்டும் என்ற பேராசையெல்லாம் எனக்கு சத்தியமாக கிடையாது இன்று இதில் உட்காரும் சந்தர்ப்பத்தை இறைவன் கொடுத்திருக்கின்றானே இதுவே போதும் என்பது என் மனதிருப்தி ஒருக்கால் இதை நானும் வாங்கும் நிலை வந்தாலும்கூட வாங்க மாட்டேன் காரணம் இவ்வளவு ஆடம்பரமாக வாழ்வதைவிட ஓரளவு வாழ்ந்து கொண்டு இந்தப் பணத்தில் பல ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கு வாழ்வளிக்கலாமே என்பது எமது திண்ணமான எண்ணம். ஏன் ? இப்பொழுது நீ செய்யக் கூடாதா ? எனக் கேட்கலாம் இன்றைய எனது தகுதிக்கு என்னால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறேன். 


இந்தக்கார் இந்த நாட்டின்
முக்கியமானவர்களில் ஒருவருடையது இந்த சந்தர்ப்பத்தை எமக்கு கொடுத்த இனிய நண்பர் பரமக்குடி திரு. மு. சோலைராஜ் அவர்களுக்கு நன்றி

NEW DELHI — Italian luxury sports car maker Automobile Lamborghini Spa introduced the new Aventador LP 700-4 model in Indian, priced at 36.9 million rupees ($750,000) at showrooms in New Delhi, for which it has already received orders from 20 customers 
மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள 3 உருப்படிகளில் காருக்கு மட்டுமே விலை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் டெல்லி ஷோரூமில் கார் வாங்க விரும்புவோர் நமது நண்பர் வலைப்பதிவர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களின் பெயரைச் சொன்னால் டிஸ்கவுண்ட் உண்டு
இந்த ''தங்ககார்'' வாங்குவதற்கு சம்பாரிப்பதற்குள் நமது ''டங்குவார்'' அந்து போயிடுமோ ?

வியாழன், ஜூலை 28, 2016

காவாலி

புகைப்படத்தை சொடுக்கி படிக்கவும்.

அம்மா நான் காலேஜ் போகும்போது கபாலி என் தாவணியை புடிச்சு இழுக்கிறான்.
அந்தக் காவாலிப்பயல்ட்ட எதுக்கு வம்பு ? இழுத்தா இந்தாடா நீதானா கட்டிக்கோனு கொடுத்துட்டு வரவேண்டியதானே.... ?
* * * * * 01 * * * * *

டீக்கடைக்காரர் எதுக்கு கபாலி மேலே நெருப்பை அள்ளி வீசுனாரு ?
பழைய பாக்கியை கேட்டதுக்கு நான் நெருப்புடானு சொல்லி இருக்கான் கடைகாரர் வெறுப்புல நெருப்பை அள்ளி வீசிட்டாரு...
* * * * * 02 * * * * *

இலவுகார வீட்ல கபாலியை எல்லோரும் அடிச்சிட்டாங்களாமே... ஏன் ?
கேதம் கேட்கும்போது செத்தவருடைய மகன் கிட்டேபோய் மகிழ்ச்சி அப்படினு சொல்லி இருக்கான்.
* * * * * 03 * * * * *

மளிகைக்கடை மன்சூர் கபாலியை படிக்கல்லை வச்சு அடிச்சிட்டாராமே எதுக்கு ?
துவரம் பருப்பு வாங்கிட்டு காசு கேட்டதுக்கு நான் நெருப்புடானு சொல்லி இருக்கான் நானே துயரத்துல இருக்கேன் எங்கிட்டேயே லந்தானு சொல்லி படிக்கல்லை தூக்கி அடிச்சுட்டாரு.
* * * * * 04* * * * *

நம்ம கபாலி எதுக்கு தாய்லாந்து நாட்டுக்கு போறானாம் ?
இவங்கிட்டே 45 ரூபாய் கடன் வாங்கிட்டு ஓடின மொக்கைராசு தாய்லாந்துல பெரிய கோடீஸ்வரன் ஆகிட்டானாம் அதை வட்டியும், முதலுமா வசூல் செய்யத்தான்.
* * * * * 05 * * * * *

நம்ம கபாலி பிட்பாக்கெட் அடிச்ச பணத்தை எல்லாம் திருப்பி கொடுக்க போறானாமே... ?
ஆமா பர்ஸுல இருந்த பணமெல்லாம் கள்ள நோட்டாம்.
* * * * * 06 * * * * *

நரிக்குறவர்கள் எல்லாம் காக்கைகளை உயிரோட பிடிச்சுக்கிட்டு சென்னைக்கு போறாங்களே.... ஏன் ?
புதுசா வந்துருக்கிற டைரக்டரு தன்னோட படத்தை காக்காவுக்கு வெள்ளையடிச்சி மேலே பச்சைகுத்தி விளம்பரம் செய்யப் போறாராம் ஒரு காக்காவுக்கு 1000 ரூபாயாம்.
* * * * * 07* * * * *

நம்ம கபாலி சினிமாவுல நடிக்கப் போறானாமே இவனுக்கெல்லாம் யாரு சான்ஸ் கொடுப்பாங்க ?
படம் வெற்றியடைந்தால் மட்டுமே சம்பளம் வாங்குவேன்னு அறிக்கை விட்ருக்கான் உடனே தயாரிப்பாளர் கூட்டம் கூடிருச்சு.
* * * * * 08 * * * * *

நம்ம டைரக்டரு ரௌடிகளோட வாழ்க்கையைப்பற்றி படம் எடுக்கப் போறாராமே படத்தோட பெயர் என்ன ?
காவாலி.
* * * * * 09 * * * * *

ஏண்டி... இருளாயி கபாலி வீட்ல என்னடீ கூட்டமா இருக்கு ?
தெரியாதா உனக்கு பங்கஜம் புருசன்தான் கபாலியை புரட்டி எடுக்கிறான்.
எதுக்கு ?
பங்கஜம் குளிச்சிக்கிட்டு இருந்திருக்கா தட்டியை நீக்கி செல்போன்ல படம் எடுத்துருக்கான் கபாலி
காவாலிப்பயல் மனுஷனா அவன் ?
* * * * * 10 * * * * *

செவ்வாய், ஜூலை 26, 2016

சமத்துவபுரம்


நல்லோனுக்கும் கள்ளோனுக்கும்
கருவறையில் தொடங்கி வைப்பதும் இருட்டு
கல்லறையில் முடித்து வைப்பதும் இருட்டு.

எமது பார்வையில் இதுவே சமத்துவபுரம்.

 காணொளி

Hi, Dear just ask audio voice. 
Place: Ramanathapuram Distric (near Sathirakkudi) Karuppapillai Madam Village.

திங்கள், ஜூலை 25, 2016

நாட்டு ஆமைகள்

நாட்டாமைகள்

இதன் முதல் பகுதியை படித்த பிறகு தொடர... இதோ.
பொம்மைக்குள்...

நான் நகையைப் பார்க்கவே இல்லை இவன் பொய் சொல்றான்.
வீட்டுக்கு பொருள் கொடுக்கப் போனவனை யாரும் இப்படி சொல்ல மாட்டாங்க இவன் உன்னைவிட பெரிய சம்பளக்காரன் உன்னை ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை இவன் வார்த்தையில உண்மை இருக்கு உன் கண்ணுல பொய் இருக்கு உன்மீது நம்பிக்கை இல்லாமல் இவன் செய்த வேலைக்கு தண்டனைதான் இந்த அலைச்சல் சரி நகையை நீ கொடுக்க முடியுமா ? முடியாதா ? உனக்கு ஐந்து நிமிஷம் டைம் தர்றேன்.
அனைவரும் அமைதியாக இருக்க... இவன் ஒன்றும் சொல்லவில்லை...
டேய் நீ இவன் வீட்டுக்குப் போணைப்போடு.
அப்பொழுதெல்லாம் இந்தியாவில் மொபைல் போண் இவ்வளவு வளர்ச்சி அடையவில்லை அவனது வீட்டு நம்பருக்கு அழைப்பு போக இவனது மனைவி எடுக்க ஸ்பீக்கரை அழுத்திவிட்டு பேசினேன்.
இங்கே பாரும்மா நாங்க அபுதாபியிலருந்து ஊரைவிட்டு தள்ளி காட்டுக்குள்ளே இருந்து பேசுறோம் உன்னோட புருஷன் இப்ப எங்ககூடத்தான் இருக்கான் செயினைக் கொடுத்துட்டா ஒண்ணும் செய்யமாட்டோம் உடனே அபுதாபி திரும்பிடுவோம் இல்லைனா இன்னும் ஒரு வாரமே ஆனாலும் சரி கார் நிறைய சாப்பாடு இருக்கு உன் புருஷனை பட்டினியாப்போட்டு நாங்க மட்டுமே சாப்பிடுவோம் நீ நகையை அவன் பொண்டாட்டியிடம் கொடுக்கும்வரை என்ன சொல்றே ?
அண்ணே நல்லா இருப்பீங்க எம்புருஷனை ஒண்ணும் பண்ணிடாதீங்க...
இங்கே பாரும்மா... பிரச்சினை வேண்டாம் உன் புருஷன் கிட்டே கொடுக்கிறேன் பேசு.
என்னங்க எங்கே இருக்கீங்க ?
ஏய் நீ பயப்படாதே புள்ளே எனக்கு ஒண்ணும் இல்லை...
பாவி மனுஷா அன்னைக்கே சொன்னேனே கேட்டீங்களா ? அடுத்தவங்க பொருளு நமக்கெதுக்கு ? இப்படி சிக்கலு வரும்னு சொன்னேனே...
இவன் தலையில் அடித்துக்கொண்டான்.
இரும்மா... இப்ப என்ன சொல்றே ? போண்ல காசு ஓடிக்கிட்டு இருக்கு.
நான் கொடுத்துடுறேன்ணே... அவரை விட்டுருங்க...
சரி இன்னும் அரை மணி நேரத்துல அவரு பொண்டாட்டி உங்க வீட்டுக்கு வரும் செயினைக் கொடுக்கிறே நாங்க மறுபடியும் போண் செய்வோம்.
சரிண்ணே வரச்சொல்லுங்கண்ணே கொடுத்துடுறேன் அவரை ஒண்ணும் செஞ்சிடாதீங்கண்ணே..
இங்கே பாரும்மா எங்க புள்ளைங்க மேல சத்தியம் இதுவரை அடிக்கலை எங்களுக்கு தேவை செயினு வையி போணை.
டேய் நீ உன் வீட்டுக்கு போணைப்போட்டு உடனே போகச்சொல்லு.
வீட்டுக்கு அழைத்து சொல்ல, அவனது தம்பியும், மனைவியும் பைக்கில் இவனது ஊருக்கு போகவும் நாங்கள் மீண்டும் நகையை எடுத்தவன் வீட்டுக்கு போண் செய்யவும் சரியாக இருந்தது ஸ்பீக்கரில் அவனது மனைவி வர, இவனது மனைவி நகையைக் கொடுக்க..
இந்தாம்மா நீ நகையை வாங்கிட்டியா ? இவன் சொன்ன மாடல்தானே சந்தேகமாக இருந்தால் செயினை சுண்ணாம்பு சுவற்றில் லேசா உரசிப்பார் பென்சில் கோடு போட்டால் ஓகே.
ஆமாண்ணே பென்சில் கோடுதான்
ரைட் உடனே உன்னோட ஊருக்கு கிளம்பு..
அண்ணே எம்புருசனை ஒண்ணும் செஞ்சிடாதீங்கண்ணே..
இங்கே பாரும்மா பிரச்சினை முடிஞ்சுருச்சு நீயும் எங்களுக்கு தங்கச்சி மாதிரித்தான் செயின் வந்துருச்சு சந்தோஷம் அடிக்க வேண்டிய அவசியமில்லை உன் புருஷனை அவனோட கம்பெனியில் கொண்டு போயி விட்டுறோம் போணை வையி.
மீண்டும் காரை விரட்டிக்கொண்டு அவனது கேம்ப் வரும்வரை யாரும் பேசவில்லை பின்புறத்தில் இருந்தவன் காரைத்திறந்து விட்டு சொன்னான்.
இங்கே பார் உனக்கும், அவனுக்கும் பிரச்சினை முடிஞ்சு போச்சு இதோட நீ உன் வழியில போ அவன் அவனோட வழியில போயிடுவான் மறுபடியும் பிரச்சினை வேண்டாம் வேணும்னா சொல்லு மோதிப்பார்க்கலாம்.
அவன் அனைவரையும் முறைத்து விட்டு சென்றவன் பத்து வருடம் கடந்து விட்டது இதுவரை பிரச்சினை இல்லை நகைக்காரன் சொன்னான்.
இவனாலே எனக்கு நாலு மாசமாக எவ்வளவு போண் செலவு மனஉலைச்சல்.
அது நீ செய்த தவறுக்கு கிடைச்ச தண்டனை கிடைக்காத நகை கிடைச்சுருச்சு எல்லோரையும் ஹோட்டலுக்கு அழைத்துப்போனான் நான்கு பேரும் வயிறு நிறைய சாப்பிட்டோம் நண்பன் மனம் நிறைய பணம் கொடுத்தான்.

காணொளி

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று முடிவுக்கு வந்தது இந்நாட்டில் எப்படி வேண்டுமோ அப்படிச் செய்தேன் இது இந்தியாவுக்கு உதவாது.
சம்பவம் 2004 அல்லது 2005 இருக்கலாம்.
முற்றும்.

சனி, ஜூலை 23, 2016

பொம்மைக்குள்...



வெளிநாட்டில் வாழும் பலரும் தங்களது நண்பர்கள் விடுமுறையில் நாட்டுக்கு போகும் பொழுது தனது வீட்டுக்கு நகை, பொருள், ஏனைய பொருட்கள் கொடுத்து விடுவது வழக்கம் இது அனைவரும் அறிந்ததே எனது நண்பன் ஒருவன் அவனது ஊருக்கு பக்கத்து ஊர்க்காரன் உழுந்தூர் பேட்டை ஏரியாவில் ஏதோவொரு கிராமம் நாட்டுக்கு போக அவனிடம் தனது மனைவிக்கு சேலை, குழந்தைக்கு பொம்மை, மற்றும் சோக்லெட் வாங்கி கொடுத்து அனுப்பி இருக்கிறான் இது நடந்து பத்து வருடத்துக்கும் மேலிருக்கும் அவனும் கொண்டு போய் இவனது வீட்டில் கொடுத்து விட்டு நல்லபடியாக விருந்தும் உண்டு விட்டு போய் விட்டான் சிறிது நேரத்தில் பூத்திலிருந்து அபுதாபிக்கு போண் அவனது மனைவியின் குரல் 

என்னங்க, செயினு இல்லை
 என்னடி சொல்றே ? நல்லாப்பார்த்தியா
பொம்மையை மொத்தமாகவே கிழிச்சுப் பார்த்துட்டேன் உள்ளே ஒண்ணும் இல்லைங்க
இரு நான் அவனுக்கு போண் செய்யிறேன் நீ வீட்டுக்கு போ நான் வீட்டு நம்பருக்கு அடிக்கிறேன்

அவனது வீட்டு நம்பருக்கு அழைத்து கேட்டால்... அவன் இல்லையாம் மீண்டும், மீண்டும் அழைத்து மறுநாள் பிடித்துக் கேட்டால்
நான் நீ கொடுத்தபடி பொருளைக் கொடுத்துட்டேன் வேறேதும் எனக்குத் தெரியாது இதுக்குத்தான் அடுத்தவங்க பொருள் வாங்கிட்டு வரக்கூடாது
டேய்...எனக்குத் தெரியும் நீதான் எடுத்திருப்பே 3 பவுன் செயினு மரியாதையா எம் பொண்டாட்டிக்கிட்டே கொடுத்துரு
செயினு இருந்தால் நீ எங்கிட்டே நேரடியாக கொடுத்திருந்தால் நான் கொடுத்திருப்பேனே... நீ பொய் சொல்றே
டேய் நீ அபுதாபிக்கு வரமுடியாமல் பண்ணிடுவேன்
இஞ்சே பாரு... நான் செயினை பார்க்கலை உன்னாலே முடிஞ்சதைப்பாரு

போணை வைத்துவிட மீண்டும் அழைத்தால் யாரும் எடுப்பதில்லை ஊருக்குப்போண் செய்து அடியாட்களை அனுப்பியும் அவன் மசியவில்லை, ஒன்றும் நடக்கவில்லை காலங்கள் மூன்று மாதம் ஓடியது அவனும் அபுதாபி வந்து இறங்கி வேலையில் இணைந்து விட்டான் பஞ்சாயத்து வந்தது என்னையும் சேர்த்து பஞ்சாயத்தார் மூம்மூர்த்திகள் மற்ற இருவரும் அவனை அடிப்போம், உதைப்போம் என்று சொல்ல, இதற்கு நான் உடன்படவில்லை
அவனை அடித்து விட்டு பேசாமல் போய்விட இதென்ன ? இந்தியாவா ? போலீஸிலும் புகார் கொடுக்க முடியாது எந்த ஆதாரமும் இல்லை ரெண்டு பேரையும் உள்ளே வைப்பான் காலம்தான் போகும் ஜெயிலுக்குப் போய் வந்தால் வெளியே வந்தவுடன் கம்பெனி கேன்சல் செய்து நாட்டுக்கு அனுப்பும் வேலையும் போயி ஊருக்குப்போயி அவனை இழுத்துப்போட்டு அடித்தாலும் நகை கிடைக்காது நகையை வாங்கி அதற்குப் பிறகும் உனக்கு கோபமிருந்தால் ? நாட்டுக்குப்போயி பத்து வருசம் கழிந்தாலும் அவனை அடி போலீஸ் ஸ்டேஷன் போ மற்றதை அங்கே பார்த்துக்கிறலாம் இதற்கு சம்மதம்னா நான் வர்றேன் இல்லை எனில் அவனை அடிப்பதற்கு நான் தயார் இல்லை உங்களுக்கு பல விசயங்கள் இந்த நாட்டைப்பற்றி தெரியலை இது இந்தியா இல்லை

சிறிது யோசனைக்குப் பிறகு சம்மதித்தார்கள் மீண்டும் எக்காரணம் கொண்டும் நீங்க யாரும் அவன்மீது கை வைக்க கூடாது ஒருவேளை நான் கை வைத்தால் அவனை நீங்க அடிக்கலாம் என்ற உறுதி மொழியை வாங்கி கொண்டு வரும் வெள்ளிக்கிழமை அவனைப் புடிப்போம் என்று முடிவெடுத்து அன்றைய தினம் சிறிய வாக்மேன் டேப் ரெக்கார்டரையும் எடுத்துக்கொண்டு அப்பொழுதெல்லாம் மொபைலில் இவ்வளவு வசதிகள் வரவில்லை காரில் டிரைவிங் ஸீட்டில் நான், பக்கத்து ஸீட்டில் நகையை இழந்தவன், பின்புறத்தில் இருவர் ஒருவனை அவனது கம்பெனி கேம்புக்குள் அனுப்பி மெதுவாக பேசி அழைத்து வரச்சொன்னேன் மறைவான இடத்தில் கார் நிற்க பின்புறக்கதவைத் திறந்தவுடன் அவனை உள்ளே தள்ளி விட்டு மற்றவனும் உள்ளே உட்கார்ந்து கொள்ள, நான் காரைக் கிளப்பினேன் அவன் யாரு... யாரு... என்று கத்த சத்தம் போடாமல் வா என்றேன் முன்புறத்தில் எனது பக்கத்தில் அமர்ந்து இருந்தவனைக் கண்டதும் அவனுக்கு எல்லாம் விளங்கி விட்டது யாரும் பேசவேண்டாம் அவன் கையை மட்டும் ரெண்டு பேரும் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற கட்டளையோடு காரை சவூதி அரேபியா நாட்டுக்குச் செல்லும் சாலையில் விரட்டிக்கொண்டு போனேன் பாலைவன மணல்வெளிகள் நிறைந்த இடம் பிரதான சாலையிலிருந்து பிரிந்த சாலையில் இறக்கி போலீஸ்கார்கள் சென்றால் காணதவாறு ஒதுக்கி நிறுத்தினேன் காரை விட்டு யாரும் இறங்க வேண்டாம் என்று டேப் ரெக்கார்டரில் பதிவு பட்டனை அழுத்தி விட்டு அவனிடம் பேசினேன்.
இது நடுக்காடு உன்னை அடிச்சுக்கொன்று மணலில் போட்டு மூடிட்டு போனாலும் கண்டுபிடிக்க ஒருவாரம் ஆகும் எங்களை போலீஸ் கண்டிப்பாக பிடிச்சுடும் அதைப்பற்றி கவலையில்லை நீ மனைவி, மக்களோட வாழணுமா ? வேண்டாமா ? நீதான் முடிவு செய்யணும் சொல்லு நகை எங்கே ?

...தொடரும்

வியாழன், ஜூலை 21, 2016

Jingujang Manguny

இறைவன் மனிதனை படைத்தான்,
மனிதன் மதங்களை வகுத்தான்,
மதம் ஜாதிகளை பிரித்தன,
ஜாதி ஏற்றத் தாழ்வுகளை அமைத்தன,

இந்த உலகை படைத்தது சுப்பு என்கிறான் ஒருவன்.
இல்லை சுல்த்தான் என்கிறான் இன்னொருவன்.
இல்லை சூசை என்கிறான் மற்றொருவன்.

செவ்வாய், ஜூலை 19, 2016

வெல்லத்தான் நினைக்கிறேன்...

இப்பதிவின் முந்தைய தொடர்பு பதிவுகளின் இணைப்புகள் கீழே...

என் கதையை கேளுங்கள்...
வெல்லத்தான் நினைக்கிறேன்... ஆம் வெல்லத்தான் நினைக்கிறேன்... யாரை ? என்றுதானே கேட்கின்றீர்கள், அதை சொல்லத்தான் நினைக்கிறேன் ஆனால் எனக்கு மறதி கொஞ்சம் கூடுதல் இருப்பினும் சொல்வேன் அதற்குத்தானே வந்து இருக்கிறேன் தவறு செய்தவர்களை, கொல்லத்தான் நினைக்கிறேன்... என்ன ? குழப்பமாக இருக்கின்றதா ? (காலம் முழுவதும் உம்மோட பதிவுகள் இப்படித்தானே இருக்கு) யாரது... அங்கிட்டு புலம்புவது போலிருக்கு ? வில்லங்கத்தாரா ? சரி விசயத்துக்கு வருவோம் தேர்தல் நடந்து முடிந்து எல்லோரும் அவரவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்கள் அடுத்தது என்ன ? விட்டதை பிடிப்பதுதானே.... இனி நாம் தினசரிகளைப் படித்து, தொலைக்காட்சிகளைப் பார்த்து விட்டு பால் விலை ஏறிடுச்சு, அரிசி விலை கூடிருச்சு என்று புலம்ப வேண்டியதுதான் இதைத்தானே 1947-லில் இருந்து கடைப்பிடிக்கின்றோம் இதற்கெல்லாம் மாற்றம் வரவேண்டும் என்றால் என்ன செய்வது ? அநியாயக்காரர்களை மக்களுக்கு சேவை செய்யாதது ஏன் ? என்று கேட்டு கூண்டில் நிறுத்தி வாதாடி அவர்களை வெல்லத்தான் நினைக்கிறேன்... அரசியலில் மாறுபட்ட புரட்சியை ஏற்படுத்தி மக்களின் மனதை வெல்லத்தான் நினைக்கிறேன்... எல்லாமே பொதுவுடமை செய்து அரசியல்வாதிகளை வெல்லத்தான் நினைக்கிறேன்... இனிமேல் இந்தியாவில் தேர்தலே இல்லை இவர்தான் தொடர் ஆட்சியாளர் என்று இந்திய மக்கள் அனைவரும் சொல்லும் அளவுக்கு அவர்களின் மனதை கொள்ளையடித்து வெல்லத்தான் நினைக்கிறேன்... யுத்தமின்றி, சத்தமின்றி அண்டை நாட்டு அதிபர்களின் மனதையும் வெல்லத்தான் நினைக்கிறேன்... இருப்பினும் முடியவில்லை எப்படி முடியும் ? நான்தான் செத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதே நான் அரசியல்வாதிகள் பக்கத்தில் நின்று கொண்டு அவர்களை மிரட்டுவது அவர்களின் விழிகளுக்கு மட்டுமல்ல, மக்களின் விழிகளுக்கும் புலப்படவில்லையே... என்ன செய்வது மக்களே... எல்லாம் பகவான்(ஜி) செயல் இருப்பினும் நான் அவர்களை வெல்லத்தான் நினைக்கிறேன்...

Chivas Regal சிவசம்போ- 
ஆஹா... இனிமேல் டாஸ்மாக் போயிட்டு தனியாக போககூடாதோ...
வாழ்த்துகள் நண்பரே.

ஞாயிறு, ஜூலை 17, 2016

வெள்ளி, ஜூலை 15, 2016

கொல்லத்தான் நினைக்கிறேன்...


இப்பதிவின் முந்தைய தொடர்பு பதிவின் இணைப்பு கீழே...

தேவகோட்டை முகில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் 132-வது மாடி அறை எண் 13208 இயக்குனர் சாம்பசிவமும், கவிஞர் Chivas Regal சிவசம்போவும்.

வியாழன், ஜூலை 14, 2016

சொல்லத்தான் நினைக்கிறேன்...

14.07.2016 இன்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

நட்பூக்களே வெகு காலமாக நான் எழுத வேண்டும் என்று நினைத்த விடயம் ஒன்று நான் கணினியில் உலாவும் போது எனது கண்ணில் கண்டதை இங்கு அப்படியே தருகிறேன் கீழ்காணும் விடயம் அனைத்தும் என்னுடையது அல்ல ! கீழே குறிப்பு மட்டும் எனது - கில்லர்ஜி

செவ்வாய், ஜூலை 12, 2016

ஏமாளியா ? கோமாளியா ?


ரசிப்புத்தன்மை என்பது அவசியம் வேண்டும் அப்பொழுதுதான் அவன் மற்ற பிறவிகளிடமிருந்து வேறு படுகிறான் அதற்காக இப்படி கோமாளி வேஷம் போடவேண்டிய அவசியமென்ன ? எத்தனை சந்தோஷம் உன்முகத்தில் ? செலவு செய்து பார்க்கிறாய் பார்த்துரசி முடிந்தவுடன் அடுத்த உனது வேலையைப்பார் ஆசையாய் ஒரு லட்சியத்தோடு இதில் களம் இறங்கிவர்கள்தான் இந்த வீரர்கள் முழுப்பலனும் பெறும் எந்த வீரர்களாவது இப்படிச் செய்கிறார்களா ? இல்லையே ஏன் ? அவர்கள் அறிவாளிகள் உன்னைப்போல் கோமாளிகள் அல்ல ! மானிடா ! இந்த உலகமே உன்னைப் பார்க்கிறதே ! மறந்து விட்டாயா ? இல்லை, பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச் செய்கிறாயா ? நீ ஒருவன் இப்படிச் செய்வதால் ஒட்டு மொத்த தமிழனுக்கும் கோமாளி என்ற பெயர் கிடைக்கிறதே அதைப்பற்றி கொஞ்சம் நினைத்து பார்த்தாயா ? சரி மற்றவர்கள் கிடக்கட்டும் உனது வாழ்க்கை துணைவியை பெற்று வைத்திருக்கும் மாமியார் என்ற பெயரில் வருகிறாரே ஒருதாய் அவர் உன்னைப் பெருமைப்பட பேசமுடியுமா ? சிந்தி மானிடா சிந்தி உனது நேரத்தையும் பணத்தையும் இழந்து ஏமாளியாய் மட்டுமல்ல கோமாளியாகவும் ஆகிறாயே !
காணொளி

ஞாயிறு, ஜூலை 10, 2016

மனசுக்கு வருத்தமாயிருக்கு


சாண் ஏறினால் முழம் வழுக்கும் என்பதுபோல் எதைத் தொட்டாலும் விளங்குவது இல்லை விறகு கடை வைத்தேன் தீ பிடிச்சு விறகெல்லாம் கரியாப்போச்சு அப்பா திட்டினார் காசெல்லாம் கரியாப்போச்சே... சரின்னு கரி எல்லாம் வித்துப்புட்டு பொரி வியாபாரம் செய்வோம்னு போனால் காத்தடி காலம் பொரியெல்லாம் பறந்து போயிடுச்சு

அப்பாவுக்கு வேண்டப்பட்டவருடைய கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விட்டார். இந்த டேபிளில் இருந்து அந்த டேபிள்லில் இருக்கிறவருக்கு சாதாரண பேப்பர்தான் அதைக் கொடுக்ககூட என்னை கூப்பிடுறாங்க கடையில போயி டீ வாங்கிட்டு வரச்சொல்றாங்க, கையில இருக்கின்ற குமுதம் வாங்கி நாலு நாளாகியும் படிக்க முடியலை போதாக்குறைக்கு மேனேஜர் எதற்கெடுத்தாலும் எரிஞ்சு, எரிஞ்சு விழுந்தாரு கல் எடுத்து எறிஞ்சு மண்டையை மட்டும் உடைச்சிட்டு வந்துட்டேன்

நண்பன் சொன்னான் சென்னைக்குப் போ சினிமாவுல நடிச்சு கோடி கோடியாக சம்பாரிக்கலாம்னு சரின்னு அப்பா உறங்கும் பொழுது பீரோவுல பத்தாயிரம் ரூபாய் மட்டும் எடுத்துக்கிட்டு சென்னை போனேன் பஸ் ஸ்டாண்டில் இறங்கி சாப்பிட்டு விட்டு டாக்ஸி பிடித்தேன் ஏவிஎம் ஸ்டூடியோ போ என்றேன் ஸ்டூடியோ கேட் வாசலில் இறங்கியதும் டாக்ஸிக்கு பணம் கொடுத்து விட்டு உள்ளே போனேன் வாட்சுமேன் என்ன ? என்றான் சினிமாவுல நடிக்க வந்துருக்கேன் என்றேன் படக்குன்னு கழுத்தைப்பிடிச்சு வெளியே தள்ளிட்டான் ஏன் இவன் இப்படி நடந்துக்கிறான் சரி இரவு லாட்ஜில் தங்கி விட்டு நாளை காலை வாஹினி ஸ்டூடியோ போவோம் மறுநாள் வாஹினியிலும் அதே மாதிரி, அடுத்தநாள் சத்யா ஸ்டூடியோவிலும் சொல்லி வைத்தது மாதிரி எனக்கென்னவோ எல்லா வாட்சுமேன்கள் மீதும் சந்தேகம் வந்துடுச்சு ஐந்து நாட்கள்கூட ஆகவில்லை பணம் 250/ மட்டுமே மிச்சம் ஊருக்கு டிக்கெட் எடுக்க சரியாக இருந்துச்சு பஸ் ஏறி ஊருக்கு வந்துட்டேன்

துபாய்க்கு விசா எடுத்து அங்கேயாவது ஒழுங்கா வேலை செய்து முன்னேறிக்கொள் அப்படினு அப்பா அனுப்பி வச்சார் கம்பெனிகாரங்க பாஸ்போர்டை வாங்கி கொண்டு நாளைமுதல் டூட்டியில் ஜாய்ண்ட் பண்ணிக்கோ ஐந்து மணிக்கு வா என்றார்கள் பரவாயில்லையே நம்ம ஊருல பத்து மணி வரைக்கும் தூங்குவோம் இங்கே அதைவிட கூடுதலா தூங்கலாம் போலயே சந்தோஷமாக தூங்கி எந்திரிச்சு சாயங்காலம் ஐந்து மணிக்கு போனேன் ஆறு மணிக்கு பிளைட் ஏற்றி திரும்பவும் திருச்சி அனுப்பிட்டாங்கே

நான் என்னதாங்க செய்யிறது ? மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு இதைப்படிக்கிற நீங்களாவது ஒரு நல்ல ஐடியாவை சொல்லுங்க... உங்க ஐடியாவுக்காக காத்துக்கிட்டு திருச்சி ஏர்போட்டுலயே நிக்கேன் - கில்லர்ஜி