LAMBORGHINI
LAMBORGHINI
இந்த வார்த்தையை
அறியாதோர் உலகில் உண்டோ ? இதை சாமானியர்கள் வாங்க முடியாது (ஆனால் நான் நினைத்தால் இன்று இரவு 11.00 pm க்குமேல் வாங்கி அதிகாலை 05.30 am க்குள் விற்று விடுவேன்
என்பது வேறு விடயம் புரிந்திருக்குமென நினைக்கிறேன்) நாம் வாங்க முடியவில்லை பெருங்கொண்ட
நிறுவனங்களின் முதலாளிகள் வாங்குகிறார்கள் அதில் அவர்களுடைய உழைப்பும், முதலீடும்
இருக்கிறது நியாயம். ஆனால் திரைப்பட நடிகர்களையும், அரசியல்வாதிகளையும்,
கிரிக்கெட் வீரர்(?)களையும் வாங்க வைப்பதற்க்கு வழிவகை
செய்கிறோம் இவர்களின் உழைப்பு கடுமையானதா ? இவர்களின் பணமெல்லாம் வெட்டியாக ஸ்விஸ் வங்கிகளில் கிடந்து அந்த
நாட்டுக்காரனுக்கு பிரயோசனப்படுகிறது வெளியுலகம் தெரியாமல் மறைந்து போனவைகளும்
ஏராளம், தாராளம் இதையெல்லாம் நினைத்தால் எனக்கு முழங்கை வலிதான் வருகிறது சரி
தொலையட்டும் அது ஒரு சாபக்கேடு. நம்ம விசயத்துக்கு வருவோம்.
இந்தக்காரை தொட்டுப்பார்க்காதவர்கள்கூட
நிறையப்பேர் இருக்கிறார்கள் இதன் விலை விபரங்களும் கீழே கொடுத்து இருக்கிறேன்
இப்படிப்பட்ட காரில் உட்கார்ந்து சிறிய அளவில் நகர்த்திப் பார்க்கும் பாக்கியம்
சமீபத்தில் எமக்கு கிடைத்தது ஆம் நண்பர்களே... வாழ்வில் நாமும் ஒருநாள் இந்தக்கார்
வாங்க வேண்டும் என்ற பேராசையெல்லாம் எனக்கு சத்தியமாக கிடையாது இன்று இதில்
உட்காரும் சந்தர்ப்பத்தை இறைவன் கொடுத்திருக்கின்றானே இதுவே போதும் என்பது என் மனதிருப்தி ஒருக்கால் இதை நானும்
வாங்கும் நிலை வந்தாலும்கூட வாங்க மாட்டேன் காரணம் இவ்வளவு ஆடம்பரமாக வாழ்வதைவிட
ஓரளவு வாழ்ந்து கொண்டு இந்தப் பணத்தில் பல ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கு
வாழ்வளிக்கலாமே என்பது எமது திண்ணமான எண்ணம். ஏன் ? இப்பொழுது நீ செய்யக் கூடாதா ? எனக் கேட்கலாம் இன்றைய
எனது தகுதிக்கு என்னால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
இந்தக்கார் இந்த நாட்டின்
முக்கியமானவர்களில் ஒருவருடையது இந்த சந்தர்ப்பத்தை எமக்கு கொடுத்த இனிய நண்பர் பரமக்குடி
திரு. மு. சோலைராஜ் அவர்களுக்கு நன்றி
NEW DELHI — Italian luxury
sports car maker Automobile Lamborghini Spa introduced the new Aventador
LP 700-4 model in Indian, priced at 36.9 million rupees
($750,000) at showrooms in New Delhi, for which it has already
received orders from 20 customers
மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள 3 உருப்படிகளில் காருக்கு மட்டுமே விலை என்பது
குறிப்பிடத்தக்கது மேலும் டெல்லி ஷோரூமில் கார் வாங்க விரும்புவோர் நமது நண்பர்
வலைப்பதிவர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களின் பெயரைச் சொன்னால் டிஸ்கவுண்ட்
உண்டு
இந்த ''தங்ககார்'' வாங்குவதற்கு
சம்பாரிப்பதற்குள் நமது ''டங்குவார்'' அந்து போயிடுமோ ?ப