இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், பிப்ரவரி 02, 2017

இரு’’கை’’கள்

மாமா திரு. பாலா அவர்களுடன் கில்லர்ஜி

சில வருடங்களுக்கு முன்பு தேவகோட்டையிலிருந்து அருகிலிருக்கும் பவளமலையில் உள்ள அரண்மனை சேவகர் ஒருவரின் இல்லத்திற்கு சென்று இருந்தேன் அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் சித்திரம் யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. பிறகு அவரோடு தேரில் யாத்திரை செய்யும்போது அதே போன்ற கைகளின் சித்திரத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று வினவினேன். அவர் சித்திரத்தை கையில் எடுத்துப் பார்க்கும் படியாகச் சொன்னார். சித்திரத்தை எடுத்து அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டு கொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவு படுத்திக்கொண்டே வந்தது. அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது எனது தாயாரின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது எதற்காக தாயாரின் கைகளை மட்டும் வரைந்து வைத்திருக்கிறீர்கள் என்று வினவினேன்.


எனது தாயார் எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை தந்தை பொறுப்பற்ற முறையில் குடித்து குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் இறந்து போனார் தாயார்தான் எங்களை வளர்த்தார் தாயார் படிக்காதவர் கலிங்கபுரத்தில் ஒரு வைத்தியரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, வஸ்திரம் துவைப்பது, நாய்களைப் பராமரிப்பது போன்ற வேலைகள் மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை தாயாரின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன என் நினைவில் எப்போதுமே தாயாரின் கைகள்தான் இருக்கின்றன தாயாரின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்து போகிறேன்.

எனது தாயார் இறப்பதற்குச் சிலநாளிகை முன்பாக இந்த சித்திரத்தை வரைந்தேன் இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை ஆனால் இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் அமர்ந்திருக்கிறேன்.


இலக்கு இல்லாத எனது யாத்திரையில் யார் யார் இல்லங்களிலோ தங்கியிருக்கிறேன் உணவருந்தி இருக்கிறேன் எனது வஸ்த்திரத்தை துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன் அந்தக் கைகளுக்கு, நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன் ? ஒரு துளி என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது. கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துக் கொள்ளத்தான் என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை.

நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் ?
என்னை நானே கேட்டுக் கொண்டேன் முடிவு நம்மிடமே இருக்கிறது.

துபாய் மாமா திரு. பாலா அவர்கள் என்னிடம் கொடுத்து பதிவிடச் சொன்ன, அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவத்தின் நீண்ட விடயத்தை எனது பாணியில் பதிவுக்காக சுருக்கி தந்துந்துள்ளேன் நன்றி.


This is Not for ELECTION Advertisement

40 கருத்துகள்:

  1. இந்தக் "கைகள்" குறித்த விஷயம் ஏற்கெனவே படித்திருந்தாலும் (ஆங்கிலத்தில்) மீண்டும் படிக்க நெகிழ்ச்சியாக இருந்தது! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் முன்னவே படித்தது அறிந்து மகிழ்ச்சி

      நீக்கு
  2. இன்று தஞ்சையில் ஒரு திருமண நிகழ்ச்சி. அங்கு செல்வதற்காக அதிகாலையிலேயே எழுந்து விட்டேன். எனது அம்மா இருந்திருந்தால் அவர் எனது அப்பாவுடன் சென்று வருவார். அம்மா நினைவுடன் இருந்த நான், ஊருக்குப் போவதற்கு முன்பு உங்கள் பதிவை முதல் பதிவாக எனது டேஷ் போர்டில் கண்டு படித்தேன். அம்மாவின் கைகள். படிக்கும்போதே மனதை நெகிழ வைத்து விட்டது. அம்மா என்றால் ஒவ்வொருவருக்கும் அவரைப் பெற்ற தாய்தான் என்பதை எளிமையான நடையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. தொடர்கின்றேன், பயணத்தையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மை தாய்தானே இவ்வுலகின் நடமாடும் தெய்வம்.

      நீக்கு
  3. // கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துக் கொள்ளத்தான் // ஆகா...!

    பதிலளிநீக்கு
  4. மனம் நெகிழ்ந்தேன்.. வேறென்ன சொல்ல!..

    பதிலளிநீக்கு
  5. வழக்கம்போல உங்கள் பாணியில் ஈர்த்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஒன்று சொன்னாலும் நன்றாய்ச் சொன்னீர் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. அட...கைகள்! எங்கேயோ வ்வாசித்த நினைவு வரவும்,நெற்றி தேய்த்து நினைவுக்கு கொண்டுவந்ததும்...ஆ. ஆங்கிலத்தில்...இருந்தது...உங்கள் நடையில் தமிழில்...மீண்டும்...ஆம் நன்றி மறப்பது நன்றன்று...போற்றுவோம்... தமிழில் வாசிக்கும் போது அதன் உணர்வே தனிதான்...நெகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக உண்மையே தமிழில் வாசிக்கும் பொழுது அதன் உணர்வே தனிதான்.

      நீக்கு
  8. உள்ளத்தில் ஏதோ ஒரு வலி!

    பதிலளிநீக்கு
  9. படிக்க நெகிழ்ச்சியாய் இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. மனதை நெகிழ வைத்த பதிவு சகோ.

    பதிலளிநீக்கு
  11. அருமையான பதிவு.
    மனதை நெகிழவைத்த பதிவு.
    அன்பு காட்டும் கைகளை தட்டிவிடாமல் ஆதரவாய் பிடித்துக் கொண்டால் போதுமே!

    பதிலளிநீக்கு
  12. அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
    உன்னை விட்டு போவதற்கு உள்ளம் இல்லை மகனே
    உள்ளம் இல்லை மகனேன்று என்று பாடிய தெய்வத்தை மறக்க முடியாதுதான் :)

    பதிலளிநீக்கு
  13. உழைப்பின் கைகள்.நன்றி!

    பதிலளிநீக்கு
  14. உங்கள் பாணியில் ஆங்கிலத்தில் படித்ததைப் தமிழ் மொழியில் படிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  15. நெஞ்சை நெகி்ழ வைத்த மறக்க முடியாத அனுபவப் பதிவு.

    பாராட்டுகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  16. நெகிழ வைத்தப் பதிவு. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. ரசித்தேன். இந்த எண்ணம் பெற்றோர் உயிரோடு இருக்கும்போது எல்லோருக்கும் வராது. தொலைத்தபின்புதானே எல்லோருக்கும் பொருளின் மதிப்பு தெரிகிறது

    பதிலளிநீக்கு