தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மே 10, 2015

அன்னை

 
என் அசைவிற்கு உயிர் கொடுத்த அன்னையே
என் உயிர் உள்ளவரை மறவேன், உன்னையே
உனக்காக, தகனமும் கொடுப்பேன் என்னையே
 
திறந்து விட்டாய் என் அறிவுக் கண்ணையே
அதனால், என் புகழ் ஒருநாள் எட்டும் விண்ணையே
நான் வணங்குவது, உன் காலடி மண்ணையே
 
என்னை சுமந்தெடுத்தாய், மாதம் பத்துமே
நான் அழுதால், உன் இதயம் துடித்து கத்துமே
உன் உடலுடன், இளைத்தது உனது சத்துமே
 
என் உணவுக்கு நீ கொடுத்தது, ரத்தமே
நீ உறங்கும் போதும், கொடுத்தேன் சத்தமே
எனக்காக, சகித்துக் கொண்டாய் நித்தமே
 
கொடுத்து மகிழ்ந்தாய், எனக்கு முத்தமே
நினைத்தாய் இவனே எனது சித்தமே
உன் அன்பு என்றும், எனக்கே மொத்தமே
 
குறிப்பு - தேவகோட்டையில் இருக்கும், என்தாயின் காலடிக்கு, இந்த ''கவிதை'' சமர்ப்பணம், பிறகே பிறரின் பார்வைக்கு அர்ப்பணம்.

By, Killergee
 
அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகள்.
 
அன்பு நண்பர்களுக்கு ஓர் இனிய அறிவிப்பு கவிதைப்போட்டியில் கலந்து கொள்ள அழைக்கின்றேன். விபரங்களுக்கு கீழே இணைப்பில் காண்க...

74 கருத்துகள்:

 1. தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன் தம1

  பதிலளிநீக்கு
 2. அன்னைக்கு வடித்த அன்புக்கவிதை மலர்கொத்து
  அவ்வப்போது கவிதையும் பதிவிடலாமே சகோ...சகலகலாவல்லவர் நீங்கள் அதற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டிற்க்கும் நன்றி முயல்கிறேன்.

   நீக்கு
 3. அன்னையர் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஜி
  அன்னையர் தினத்தை போற்றும் காவி மாலை கண்டு மகிழ்ந்தேன். அத்தோடு கவிதைப்போட்டி அறிவிப்பை பகிர்ந்தமைக்கு நன்றி.த.ம 3
  இனிய அன்னையர்தின வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன் தங்களுக்கும் வாழ்த்துகள் நண்பரே... எனக்கும் அந்க கடமை உள்ளதே இதற்கு எதற்க்கு நன்றி.

   நீக்கு
 5. தங்கள் தாயின் அன்பு மொத்தமும் தங்களுக்குத்தான்
  அன்னைய்ர் தின வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சந்தோஷம் தங்களுக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 6. அன்னையர் தினத்தில் ஒரு அருமையான கவிதை. டச்சிங் கில்லர்ஜி அண்ணா:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நீண்........................ட்ட்ட்ட்ட இடைவெளிக்குப் பிறகு வந்து ரசித்து கருத்தும், வாக்கும் அளித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 7. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக் கொண்டு வந்த உங்கள் அன்னைக்கு ஆயிரம் வணக்கங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இதை எனது அன்னையும் படித்திருப்பார்கள் ஒருக்கால் எனக்கு திறமை இருந்து வெளிவந்தால் அதற்க்கு தங்களைப் போன்றவர்களின் கருத்துரையே காரணம் இதற்காக நான் நன்றி சொல்கிறேன்.

   நீக்கு
 8. இன்று அன்னையின் தினம் (Mother’s Day) – உருக்கமான வரிகளோடு பொருத்தமான கவிதை. அவரவர் தாயின் பெருமை அவரவர்க்குத் தான் தெரியும். HAPPY MOTHER’S DAY
  த.ம.5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே மிகச்சரியாக சொன்னீர்கள், சமீபத்தில் அன்னையை இழந்த தங்களுக்கு இந்த கவிதை நெருடலைத் தந்திருக்கலாம் தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் நண்பரே... இடைவெளி விடாமல் தொடர்ந்தால் நலம் நன்றி.

   நீக்கு
 9. இனிய கவிதையில் - மயங்குகின்றது மனம்!..

  பதிலளிநீக்கு
 10. என்றும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஜி தினம் அன்னையரை துதிப்பவனே மனிதன்.

   நீக்கு
 11. 'அன்னைக்கு 'சமர்ப்பணம் செய்த ,இன்னைக்கு வந்த ,உங்களின் டீ .ஆர் .பாணிக் கவிதையைப் படித்து ரசித்தேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பகவான்ஜி ஏதோ நம்மால் முடிந்ததை எழுதுவோம் மற்றது பகவான் விட்ட வழி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. நண்பர் ஹமீது ஜமான் அவர்களின் முதல் வருகைக்கு நன்றியும், அன்னையர் தின வாழ்த்துகளும்.

   நீக்கு
 13. அன்னையர் தினத்தில் பொருத்தமான் கவிதை....

  பதிலளிநீக்கு
 14. அன்னையை பற்றிய அழகான கவிதை!

  த ம 11

  பதிலளிநீக்கு
 15. அருமையான அன்னையர் தின கவிதை! அன்னையர் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகள் சுரேஷ்.

   நீக்கு
 16. தங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் !! அன்னைக்காக வழங்கிய கவிதை மிக அருமை சகோ.

  நானும் அன்னையர் தின பதிவு இன்று கொடுத்த்திருக்கிறேன். பார்வையிட வாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும், அன்னையர் தின வாழ்த்துகள் சகோ வந்தேன் தங்களின் பதிவுக்கு அருமை.

   நீக்கு
 17. உங்கள் அன்னைக்கு என் வணக்கங்கள்!!
  மிகவும் நன்றாக கவிதை எழுதியிருக்கிறீங்க.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ என் அன்னையும் படிப்பார்கள் சகோ.

   நீக்கு
 18. அன்புள்ள ஜி,

  அன்னைக்கு அருமையான கவிதாஞ்சலி
  அளித்திட்ட தங்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகள்.

  த.ம. 14

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே நன்றி தங்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகள்.

   நீக்கு
 19. நல்ல கவிதாஞ்சலி,வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. அன்னைக்கு சமர்ப்பித்த கவிதை அருமை
  போட்டியை நினைவு படுத்தியமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

   நீக்கு
 21. பொன்மனத்தாள் மென்மனத்தாள் !அன்னை என்னும்
  புகழ்மனத்தாள் பூமனத்தாள் ! பொறுமை காக்கும்
  புன்னகையாள் புதிருடையாள் ! தெய்வம் போன்று
  பொறுமையுளாள் புதுமறையாள் ! இன்னல் போக்கும்
  நன்மனத்தாள் நறுமணத்தாள் ! தேவர் போற்றும்
  திருமனத்தாள் தீந்தமிழாள் ! ஒப்பீ டற்ற
  இன்மனத்தாள் இறைமனத்தாள் ! எல்லாம் ஆகி
  இருக்கின்ற அன்னையரே வாழ்க வாழ்க !

  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே கவிதையாக தந்த கருத்துக்கவி நன்று.

   நீக்கு
 22. தங்கள் அன்னையின் நினைவாய் படைத்த அஞ்சலி கவிதை மனதை தொட்டது. அன்னையர் நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் நண்பரே...

   நீக்கு
 23. பொருத்தமான அஞ்சலி. நல்ல பகிர்வு. உங்களுடைய கவிதைப்பதிவுகளுக்கு இது முத்தாய்ப்பாகவும் முதல் பதிவாகவும் அமையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வருகைக்கு நன்றி முயல்கின்றேன்.தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் .

   நீக்கு
 24. உங்கள் அன்னைக்கு என் அஞ்சலி! கவிதையில் எழுத வல்லமை பெற்று விட்டீர் !நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா எனது தாயார் நலமுடன் இருக்கின்றார்கள் குறிப்பில் நான் கொடுத்த சிறிய தவறு பலரையும் தவறாக நினைக்க வைத்து விட்டது வருந்துகிறேன்.
   கவிதையை வாழ்த்தியமைக்கு நன்றி முயல்கிறேன் ஐயா.

   நீக்கு
 25. இம்முறை உண்மையாகவே என் தாமத வருகையை மன்னியுங்கள் நண்பரே!

  தாயன்பின் ஈரம் சொல்லுதிர்க்கும் கவிதை...!

  உருகி நிற்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் கவிஞரே...

   நீக்கு
 26. தங்கள் தாய்க்காக தாங்கள் இயற்றிய கவி அருமை. ஒவ்வொரு வார்த்தையும் அதன் உயிர்உருக்கும் அன்பு. அருமை.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் சகோதரரே.

  அன்னையை பற்றி தாங்கள் எழுதிய கவிதை அற்புதம். வாழ்த்துக்கள். தாங்கள் தங்கள் அன்னையிடம் வைத்திருக்கும் நல்லதொரு அன்பிற்கு பணிவுடன் தலை வணங்குகிறேன்.
  தங்களுக்கும் என் உளமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
  என்தளம் வந்து வாழ்த்தியமைக்கும் நன்றி!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 28. கவிதை நல்லாவே வருது கில்லரே! டி.ஆரை விட்டு வெளியில் வந்தால் இன்னும் நல்ல கவிதையாக வரும். நம்பிக்கை வைத்துத் தொடருங்கள். வாழ்த்துகள்.
  தங்கள் அன்னையார்க்கு என் அன்பான வணக்கத்தையும் தெரிவியுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கவிதையை வாழ்த்தியமைக்கு நன்றி தங்களின் யோசனையை ஏற்கிறேன் இருப்பினும் நான் விபரம் தெரிந்த நாள்முதல் யாரையும் நினைவில் கொண்டு எழுதுவதில்லை எனது போக்கில் எழுதுபவன்.

   நீக்கு
 29. பதில்கள்
  1. என்றாவது வருகின்றீர்களே அ(இ)ந்த வருகைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 30. நேரில் கடவுளைப் பார்க்கிறோம்
  எங்கள் அன்னை வடிவிலே - அந்த
  அன்னையை எண்ணிப் பாடிய
  தங்களின் பாவரிகள் - எங்கள்
  உள்ளத்தைத் தொட்டுச் செல்கிறதே!
  அன்னை, தந்தை மகிழ்ச்சியிலே தான்
  எங்கள் ஆயுள் நீளும் என்பேன்
  அன்னை, தந்தை பணிக்குப் பின்னே
  நாம் இறைபணி எதுவும் செய்யலாம்!

  தம்பி கில்லர்ஜிக்கு எனது பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜியை வாழ்த்திய அண்ணாஜிக்கு நன்றியும், அன்னையர் தின வாழ்த்துகளும்.

   நீக்கு
 31. அன்னையை நிணைப்பதற்கு அன்னையர் தினம்..அன்னையர் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீள் வருகைக்கு நன்றி நண்பரே தங்களுக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 32. தங்கள் அன்னைக்கு என் அன்பு வணக்கங்கள் . தாமதத்திற்கு மனிக்கவும்.
  அட கவிதையையும் விட்டு வைக்கவில்லையா நீங்கள் ம்..ம்..ம் அப்போ இனி நாம பெட்டி படுக்கயை கட்ட வேண்டியது தான் போல ஹா ஹா ....அருமையா வருது ஜி போட்டுத் தாக்குங்க. பதிவுக்கு நன்றி ! கவிதைப் போட்டி பற்றி அறியத் தந்தமைக்கும் நன்றி ஜி தொடர வாழ்த்துக்கள் ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க லேட்டா வந்ததோட நக்கல் வேற... ம்ம்...ம்

   நீக்கு
 33. அழகான கவிதை ஜி! இப்படி நீங்கள் வலை உலகில் வலம் வந்து ஒளிர்வீர்கள் என்று உங்கள் அன்னை அன்று கனவு கண்டிருப்பாரோ? ஏனென்றால் ஒரு அன்னை தன் மகனை/மகலை நினைத்துக் காணும் கனவுகள் மிகவும் நேர்மையாக இருந்தால் அது பலிக்கும் என்று சொல்லுவதுண்டு!

  தங்கள் அன்னைக்கு எங்கள் மனமார்ந்த வணக்கங்கள்! என்றுமே அன்னையர் தினம் தான்.

  தாய் என்பதை விட....தாய்மை உணர்வுதான் மிகவும் முக்கியம். தாய் என்றால் தனது குழந்தைகளை மட்டுமே சிந்திப்பாள். தாய்மை என்பது இந்த உலகம் முழுவதற்கும் சொந்தம்...அன்னை தெரசா போன்று! எனவே தாய்மை உணர்வு வந்து விட்டால் எல்லா குழந்தைகளையும் தன் குழந்தைகளாக பாவிக்கும் உள்ளம் மலர்ந்து அன் கண்டிஷனல் லவ் எனும் ஒரு அற்புதமான உணர்வுக்கு வழி வகுத்து மனித நேயத்திற்கு வித்திட்டு விருக்ஷமாக்கி விடும்.

  தாய்மைக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரை கண்டு உணர்ச்சிப் பெருக்கால் கண்கள் கசிந்து விட்டன... வேறொன்றும் சொல்வதற்க்கில்லை.

   நீக்கு
 34. அன்னையென்றதும் அருவியென கொட்டிய சொற்கள்... வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் சகோ....

   நீக்கு