இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 30, 2023

நீ சென்ற வானம்


நீ போன இடமும் எங்கே
வருவேனே நானும் அங்கே
பரிதவிப்பில் நாளும் இங்கே
 
எந்நாளும் வருவாய் கனவில்
உன்னால்தானே நினைவில்
நானும் வரணும் நனவில்
 
வாடுதே எனது மனமும்
மறக்கவில்லை தினமும்
நீயே ஒவ்வொரு கணமும்
 
முடியட்டும் நமது கணக்கு
வேண்டாம் இனி பிணக்கு
எதுவும் இல்லை எனக்கு
 
இன்றைய வாழ்வில் இருள்
இறைவன் அளித்த அருள்
தனிமையில் எனது குரல்
 
நம்மை விலக்கியது பணம்
ஆகவே நீ சென்றாய் வனம்
விரைவில் வருவேன் வானம்
 
சேனா, இன்று 30.05.2023 உனது 22-வது நினைவு தினம் நான் உன்னிடம் வருவதில் தயக்கம் இல்லை. ஒரு உறுதி தெரிந்து விட்டது மற்றொரு உறுதி தெளிந்தால் போதும்.
 
எக்கணமும் உன் நினைவால் உன்-அவன்.
 
என்னவளுக்கு நான் எழுதிய பிற பூமாஞ்சலிகளை காண கீழே சொடுக்குக...
 
மௌனமொழி & அந்தநாள் & திரு(மண்)நாள் & உன்னுடன் - 16 & தனி ஒருவன் & குறிஞ்சி மலருக்கு... & சந்தோஷப்பட முடியுமா ? & சேனா உனது நாளில்... & தியாகி தீயாகி & நிஜத்துடன் யுத்தம், நிழலுக்கு முத்தம்
 
தொடர்ந்து ஆறுதல் வார்த்தைகள் தரும் நட்புகளுக்கு எமது நன்றி - கில்லர்ஜி
 
Share this post with your FRIENDS…

14 கருத்துகள்:

  1. 22 ஆண்டுகள்..  ஒரு தவம் போல வாழ்ந்து வருகிறீர்கள்.  பாராட்டுகள்.  அஞ்சலி அருமை.

    பதிலளிநீக்கு
  2. கவிதையை படித்து மனம் கனத்து விட்டது.

    22 வருடங்கள் ! என்ன செய்வது! உங்கள் மனத்தின் பரிதவிப்பு புரிகிறது.

    இறைவன் தான் தவிக்கும் மனதுக்கு ஆறுதல் தர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. 22 வருடங்கள்.... நீங்கள் எத்தனை வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தீர்கள்?

    காலத்தைக் கடினமாக்க் கடக்க வேண்டிய நிலை. உங்களுக்கு என் ஆறுதல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்து வருடங்களில் சேர்ந்து வாழ்ந்த, இரண்டு வருடமும் போராட்டமாய் கடத்தி இருக்கிறோம்.

      இதில் ஆறு மாதங்கள் "வாழ்ந்து" இருக்கிறோம்... என்பது மூன்றாவதாய் இறைவன் மட்டுமே அறிந்த உண்மை. இந்த போராட்டத்தால் வாழ்வில் இனி பெண்களே வேண்டாமென்று தீர்மானம் ஆனது.

      இருப்பினும் அந்த ஆறு மாத வாழ்க்கையின் நினைவுகளே எங்கள் காதலை வளர்த்து வருகிறது இன்று வரையில்...

      நீக்கு
    2. கில்லர்ஜி.... நமக்குன்னு இருப்பது நம் துணை மாத்திரம்தான். பிள்ளைகள் அல்லர் (இதுபோலவே அவங்களுக்கும்...ஆனால் பெரும்பாலும் அவங்களுக்கு பிள்ளைகளின் அன்பு அதிகமாகக் கிடைக்கும். இதன் காரணம், நாம கண்டிப்போடு இருப்போம். அவங்க ரொம்பவே பசங்களுக்கு ஆதரவாகத்தான் இருப்பாங்க). அதனால்தான் துணை இழந்தால் வாழ்வு கடினம், ஆண்களுக்கு. உங்களுடைய சகோதரிவேறு இல்லை. உங்களுடைய இறை பணி உங்கள் மனதுக்கு ஆறுதலாக இருக்கும். பிறருக்காகச் செய்யும் உதவிகளும் உங்களுக்கு எப்போதுமே துணை வரும்

      நீக்கு
  4. அஞ்சலி வரிகள் அருமை, கில்லர்ஜி.

    என்னதான் மனிதர்கள் நாம் ஆறுதல் சொன்னாலும்.... அந்த மாபெரும் சக்தி உங்களின் மனதிற்கு ஆறுதல் தரட்டும்! வேறு என்ன சொல்ல? கில்லர்ஜி?

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வாழாத வாழ்க்கையால், வாழ்க்கையே இன்று தொலைந்து நிற்கிறதே, என்ன சொல்வது.. விதி பலமாக விழையாடுகிறது சிலரின் வாழ்க்கையில்... அவரின் ஆத்மா அமைதியாக இருக்கட்டும் எங்கிருந்தாலும்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அஞ்சலி கவிதை மனதை கனக்கச் செய்கிறது. மனதை தேற்றிக் கொள்ளுங்கள் என சுலபமாக வாய் வார்த்தையாக கூறி விடலாம். ஆனால் அது எவ்வளவு கடினமென்பதை உணர்வேன். இறைவன் தங்கள் மனதில், இது வரை தந்த ஆன்ம பலத்தைப் போலவே இனியும் ஆன்ம சக்தியை தரட்டும். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை...

    பதிலளிநீக்கு
  8. 22 வருடங்கள்....... ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பரே. கவிதாஞ்சலி நன்று.

    பதிலளிநீக்கு
  9. நேற்றுத்தான் நினைத்துக் கொண்டேன், இந்த வருடம் கில்லர்ஜி நினைவுப் பதிவு போடக்காணோமே என்று. போட்டிருக்கீங்க. இத்தனை வருடமாய் நினைத்துக் கொண்டிருக்கும் உங்களோடு வாழ அவங்களுக்குக் கொடுத்து வைக்கலையா? அல்லது உங்களுக்கானு புரியலை. மன ஆறுதல் கொள்ளுங்கள். உண்மையில் அவங்க நினைவைப் போற்றி வரும் நீங்கள் போற்றுதலுக்கு உரியவர்.

    பதிலளிநீக்கு
  10. வார்த்தைகளால் தங்களைத் தேற்ற இயலாது.
    அமைதி கொள்ளுங்கள்.
    நினைவைப் போற்றுங்கள்

    பதிலளிநீக்கு
  11. அஞ்சலி வரிகள் மனதைக் கனக்க வைத்தன. ஆறுதல் பெறுங்கள்.

    பதிலளிநீக்கு
  12. கவிதை வரிகளில் நெஞ்சம் கனத்து விட்டது..

    நான் என்ன சொல்வது..

    மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்..

    பதிலளிநீக்கு