தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 30, 2016

உன்னுடன் – 16


ண்மையானவன்
(From my Heart)

த்தமி துணையே என பாடினேன்
ன்னை நினைத்தே வாடினேன்
யிரே எனதுயிரே எனச் சொல்வேன்
லகமே நீதான் என நினைத்தேன்
ண்மையானவள் நீயென உரைப்பேன்
ள்ளத்தை உனக்கென கொடுத்தேன்
ரிமையுடன் உன்னைத் தொடுவேன்
னது நினைவுகளை மறவேன்
னக்காக கடைசிவரை வாழ்வேன்
றுதியாய் இறுதிவரை இருப்பேன்
னக்கென இறைவனிடம் தொழுவேன்
ன்னை நினைத்தாலே அழுவேன்
ன்னை நினைத்தே அழுதேன்
ன்னையன்றி யாரை நாடுவேன்
ன்னிடமே சரணடைய வருவேன்
யர்ந்த நாள் என அதை நினைப்பேன்

ண்மையுடன்
 ன்’’னை உண்ண’’உன்னவன்

இன்று 30.05.2016 என்னவள் வனவாசம் சென்ற16 ஆம் ஆண்டு நினைவு நாள் என்னவளுக்காக முன்பு நான் எழுதிய கவிதையை படிக்காதவர்கள் கீழே சொடுக்கி படிக்கலாம் - கில்லர்ஜி


மரியாதைக்குறிய திரு. சுப்பு தாத்தா அவர்கள் எனக்காக பாடிய எனது பழைய திரு (மண்) நாள் பதிவின் கவிதை இதோ கீழே.....

கேளொலி

24 கருத்துகள்:

  1. அன்புள்ள ஜி,

    ‘பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க...!’ என்று வாழ்த்துவார்கள். ஆனால் தாங்கள் இணையைப் பிரிந்து பதினாறு ஆண்டுகள்... உடலால் பிரிந்தாலும் உள்ளத்தில் உள்ளேயே என்றும் பிரியாமல் வாழும்... வாழ்ந்து கொண்டிருக்கும் இல்லாளுக்கு உண்மையானவனின் இனிய கவிதாஞ்சலி.

    ‘நினைத்தால் வருவதில்லை... இதயம் கனத்தால் வருவது கவிதை...!’

    த.ம. 1

    பதிலளிநீக்கு
  2. மனதைத் தொட்ட நினைவஞ்சலி!
    த ம 3

    பதிலளிநீக்கு
  3. நண்பரின் கவிதைகளை படித்தேன்...
    விழி வழி வழிந்தோடிய கண்ணீரையும் கண்டேன்...

    பதிலளிநீக்கு
  4. உண்மையான அஞ்சலி இதுதான்..

    பதிலளிநீக்கு
  5. முன்பும் படித்துள்ளேன். தற்போதும் படிக்கிறேன். மறக்கமுடியாதது.

    பதிலளிநீக்கு
  6. உள்ளம் வலிக்க மொழிந்த நினைவாஞ்சலிக் கவிதை....அன்பு அன்பு அன்பு....தான்

    பதிலளிநீக்கு
  7. உள்ளத்தில் வாழும் - தங்கள்
    உண்மையானவளை உருகி எழுதிய வரிகள்
    பதினாறு ஆண்டுகள் நினைவுகள்
    எல்லாம் - தங்கள்
    பிள்ளைகள் சிறப்பாக வாழ
    தாம் எடுக்கும் முயற்சிகள்
    எல்லாமே
    தங்களைப் புனிதர் என
    ஏற்றுக்கொள்ள வைக்கிறதே!

    பதிலளிநீக்கு
  8. முன்னரும் படித்தேன். இப்போதும் கனக்கும் நெஞ்சுடன் படிக்கிறேன். உங்களுக்கா, உங்கள் மனைவிக்கா? யார் அதிர்ஷ்டம் செய்யவில்லை என்பதே புரியவில்லை. இவ்வளவு அருமையான கணவனை விட்டுப் பிரிந்து சென்ற உங்கள் மனைவியா? இத்தனை வருஷமாகப் போற்றித் தன்னந்தனியாக மனைவியின் நினைவுகளிலேயே வாழும் நீங்களா?

    பதிலளிநீக்கு
  9. எனது மௌன அஞ்சலியின் மூலமாக அம்மாவை வணங்குகிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  10. நிகழ்வுகள் மனதில் நினைவாக விரிந்தோடும் சில சுகமானவை. சில துக்கமானவை இரண்டும் கலந்ததுதானே வாழ்க்கை. நினைக்கத் தெரிந்த மனதுக்கு மறக்கவும் தெரிய வேண்டும்

    பதிலளிநீக்கு
  11. உங்களது முந்தைய பதிவுகளும் வாசித்துள்ளோம் ஜி. கவிதை மனதைத்தொட்டது. காலம் செய்யும் கோலத்தை நாம் என்ன செய்ய முடியும் ஜி...இதுவும் கடந்து போகும் என்று வேண்டுமானால் ஆறுதல் சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம் என்னதான் மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டாலும்..சுப்புத்தாத்தாவின் பாடல் அருமை ..

    பதிலளிநீக்கு
  12. தங்களின் துணைவியாரின் நினைவு நாளில் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. மனதை தொட்டது தங்களது நினைவஞ்சலி....

    பதிலளிநீக்கு
  14. வனவாசம் கூட பதினான்கு வருடம் என்பார்கள் ,அதையும் தாண்டி உங்கள் உயிரில் வாழும் சகோதரி கொடுத்து வைத்தவர்தான் :(

    பதிலளிநீக்கு
  15. மனம் கனத்த பதிவு. கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்பார்கள். பிள்ளைகளுக்காக வாழும் உங்கள் வாழ்வில் துயரத்தை மறக்கவும்.

    பதிலளிநீக்கு
  16. மனம் அமைதி காண இறை அருளட்டும் கில்லர்!

    பதிலளிநீக்கு
  17. மனம் கசிந்தது
    வேறு என்ன சொல்ல ?

    பதிலளிநீக்கு
  18. முன்பும் படித்தேன். இப்போதும் பாடித்து மனது கனத்து விட்டது. மனைவியின் நினைவை போற்றும் உள்ளம் வாழ்க!

    பதிலளிநீக்கு
  19. சென்ற வருடமும் படித்தேன் சகோ. இந்த வருடமும் தங்கள் பதிவை படித்ததும் மனம் கனத்தது என்னவோ உண்மை.

    பதிலளிநீக்கு
  20. நான்காவது ஆண்டாக நான் அஞ்சலிப் பதிவு படிக்கிறேன். நாளிதழ்களில் பெட்டிச் செய்தியாகக் கொடுக்கப்படும் அஞ்சலிச் செய்திகளை விட இது மேலானது; ஈரமானது! என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே!

    பதிலளிநீக்கு