தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 30, 2020

தியாகி தீயாகி


கண்ணுக்குள் நிலவாகி
மனதுக்குள் நிலையாகி
என்னுடலில் உறவாகி
எனக்கும் உரமாகி

முத்துக்கள் கருவாகி
உன்னுள் உருவாகி
எனக்கே தாரமாகி
சேய்களுக்கு தாயாகி

மண்ணுக்குள் நிலமாகி
என்னை விட்டு தூரமாகி
ஆதலால் நான் பாரமாகி
விழிகள் இரவில் ஈரமாகி

நீ உறங்கி விட்டாய் நான் உறங்கும் நாளெது நிலமகளே...  ?
என்னவளுக்கான எனது பிற கவிதைகளை படிக்க கீழே சொடுக்கலாம்.


19-ஆம் ஆண்டு எமது பூமாஞ்சலி
இறுதி மூச்சுவரை உறுதியுடன்
உண்ண’’வன்

காணொளி

27 கருத்துகள்:

  1. இவ்வகை பதிவுகளுக்கு நான் மறுமொழி தருவதில்லை மன்னிக்கவும் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. நெஞ்சம் மறப்பதில்லை நினவை இழப்பதில்லை

    பதிலளிநீக்கு
  3. நினைவினில் என்றும அவர் உங்களுடன் இருப்பார்.

    பதிலளிநீக்கு
  4. என்றும் உங்கள் நினைவுகளில் உறைந்து இருப்பவருக்கு அஞ்சலிகள்.
    என்றும் உங்கள் நினைவுகளில் இருப்பார்.
    காணொளி பார்த்து மனம் கனத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  5. அஞ்சலிகள். அவர் நினைவுகள் என்றும் உங்களுடன்....

    பதிலளிநீக்கு
  6. அவர் நினைவே என்றும் உடனிருந்து உங்களைக் காக்கும்.

    பதிலளிநீக்கு
  7. ஒளியாக என்றும் உங்கள் உள்ளத்தில் இருப்பார்

    பதிலளிநீக்கு
  8. என்றும் நிழலாக நினைவுகள்..

    தங்களுக்கு ஆறுதல் சொல்கும் திறன் எனக்கில்லை..

    பதிலளிநீக்கு
  9. பசங்களை வளர்க்க, மணமுடித்த பிறகு அவங்களை (அதிலும் பெண்ணை) பார்த்துக்க மனைவி மிக அவசியம். அவங்களுக்கும் தாய் மிக அவசியம்.

    இறைவன் உங்களுக்கு இப்படி விதித்திருப்பதை எண்ணி வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. ஒவ்வொரு வருடமும் பார்த்துப் பார்த்து வியப்பும் அளவு கடந்த வருத்தமும் அடைந்திருக்கிறேன். இது தீராத துக்கம். என்னதான் எழுதினாலும் உங்களால் மறக்கவே முடியாது. காலம் உங்கள் மனப்புண்ணை ஆற்றட்டும்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவை படிக்கையில் மனது பாரமாகிறது.காலம்தான் மன பாரத்தை குறைக்கும் வல்லமை உடையது. காலம் உங்களை மெள்ள மெள்ள சமாதான படுத்தட்டும். வேறு என்ன சொல்ல முடியும்? நீங்கள் தைரியமாக இருந்ததால்தான் உங்கள் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி அவர்கள் வாழ்வில் அவர்களை காலூன்ற வைக்க முடிந்தது.அந்த தைரியத்தை தந்த தங்கள் துணைவியார் இன்னமும் நல்லதுதான் செய்வார்.எனவே மன தைரியத்தை என்றும் விடாமல் இருங்கள்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. கடைசி வரைக்கும் உங்கள் உண்மையான பெயரை எங்கும் எழுதும் எண்ணம் இல்லையோ?

    பதிலளிநீக்கு
  13. காலமே ஆறுதல் தரட்டும், தங்களுக்கு!

    பதிலளிநீக்கு
  14. என்னத்தைச் சொல்பது.... சொல்லித்தான் என்ன ஆகப்போகிறது.... அவரவர் வேதனையை அவரவர்தான் சுமக்க முடியும்...
    உங்கள் இனி வரும் காலங்களாவது மகிச்சியாக அமையோணும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

    /உண்ண’’வன்///
    இது எழுத்துப்பிழையோ கில்லர்ஜி... உன்னவன் என வந்திருக்கோணுமெல்லோ... அல்லது எனக்குத்தான் புரியவில்லையோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொல்லும் 'உன்னவன்' உன்னுடையவன் ஆகும்.

      நான் சொல்லிய உண்ண'வன் உண்டவன் ஆகும் நன்றி.

      நீக்கு
  15. சில விஷயங்கள் நடப்பதற்கு ஏன் என்பதற்குப் பதில் கிடைப்பது கஷ்டம். நினைவுகள் உங்களுடன் இருந்து வழி ஆறுதல் அளிக்கட்டும் வேறு என்ன சொல்ல?

    துளசிதரன்
    கீதா

    பதிலளிநீக்கு
  16. அண்ணி உங்கள் நினைவில் வாழ்வதால் அஞ்சலி செலுத்த மனம் வரவில்லை...

    பதிலளிநீக்கு
  17. இவ்வாறான நினைவுகூறல் உங்களின் மனப்பாரத்தைக் குறைக்க உதவும்.

    பதிலளிநீக்கு
  18. என்ன சொல்லி தேற்ற? காலம் தான் தங்களின் வேதனையை குறைக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. மனதை தொட்டது . என்றும் நீங்கா நினைவு.

    அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  20. நெஞ்சம் மறப்பதில்லை...அவை நினைவை இழப்பதில்லை..........

    பதிலளிநீக்கு
  21. எனது அஞ்சலியையும் பதிவு செய்கின்றேன் .இறைவன் உங்களுடன் இருந்து வழி நடத்தட்டும் என பிரார்த்திக்கின்றேன் 

    பதிலளிநீக்கு
  22. உடலை விடுத்து பிறர் மனதில் புகுந்து அங்கு நிலைத்து வாழும் தன்மையுடையவன் ஆதலால் மனிதன் என பெயர் பெறுகிறான் .... அவர்கள் இன்றும் உங்கள் மனதில் உயிர்ப்புடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ... வருந்தற்க ...

    பதிலளிநீக்கு
  23. தங்கள் உள்ளத்தில் இருக்கின்றார்
    தங்கள் கலைச்செல்வி - என்றும்
    வருந்தாது வாழ்க.

    பதிலளிநீக்கு