இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 29, 2018

ஆயிரம் அர்த்தங்கள்

வர்களை பார்த்தவுடன், சட்டென சிரிப்பவரா நீங்கள் ? அப்படியென்றால் உங்களுக்கு விரிவான, உயர்வான மனதை இறைவன் கொடுக்கவில்லை என்றே பொருள், மாறாக சிந்தித்து பார்த்தீர்களானால் நல்ல எண்ணமுள்ளவர், நன்றி மறக்காதவர், ஆம் சில விசயங்களை வைத்தே சிலரை கணிக்க முடியும் என்பது உண்மைதான், சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் கைபேசியின் ஒலியோசையை வைத்துக்கூட ஒருவரது குணதியசங்களை கணிக்க முடியும், என கசாநாயகி கசாநாயகனிடம், சொல்வார். ஆம் இதுவும் ஓரளவு உண்மையே உணர்வு என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் இறைவன் கொடுத்துள்ளான், அப்படியிருக்க இவர்களும் மனிதர்கள்தானே இவர்களுக்கும் ஒரு வாழ்க்கை வேண்டுமே...

வியாழன், ஜூலை 26, 2018

இறைவனை பார்த்தது யார் ?


சிவனை யாராவது பார்த்து இருக்கிறார்களா ? அவர் முறுக்கிய மீசையுடன் தமிழ் சினிமா, சீரியல் நாடகங்களில் வருகிறார் சரி. அதேநேரம் வடநாட்டு சினிமா சீரியல் நாடகங்களில் ஏன் மீசையில்லாமல் வருகிறார் ? வடநாட்டு தெய்வங்கள் எல்லா வகையிலும் அப்படியே வேறு படுகிறார்கள் தற்கால சராசரி மனிதர்கள் போலவே தலைமுடியை வெட்டாமல் அப்படியே வருகிறார்கள் சரி ஆனால் முகத்தை மட்டும் மீசையை ஒதுக்கி தாடியை மழித்து விட்டு வருகிறார்களே அப்படியானால் அவர்களுக்கும் ஷேவிங் செய்யும் பழக்கம் இருந்திருக்கிறதா ?

திங்கள், ஜூலை 23, 2018

நீ வாழ பிறரைக்கெடு


வணக்கம் நட்பூக்களே... சமீபத்தில் ஐயா திரு. டிராபிக் ராமசாமி அவர்கள் யூட்டியூபில் பேசியதைக் கேட்டேன் அதில் அவர் சொன்னது சென்னையில் ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ஒருமுறை சென்று இருந்தேன் அங்கு கடமையை செய், பலனை எதிர் பார் என்று ரஜினிகாந்த் எழுதி வைத்து இருக்கின்றார். என்றும் இவரால் எப்படி மக்களுக்கு நன்மையை செய்ய முடியும் ? என்று கேட்டு, அதன் பிறகு அந்த மண்டபத்துக்கு நான் செல்வதில்லை என்றும் சொல்லி இருந்தார்.

வெள்ளி, ஜூலை 20, 2018

தமிழனின் பண்பாடு

நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற முடிவுக்கு வந்தது ஒருக்கால் காணும் வாய்ப்பு கிடைத்தாலும் தவிர்ப்பேன் நான் தவிர்ப்பதால் இவரது புகழ் சரிந்து விடும் என்று மடத்தனமாக நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை நான் சந்திக்க நினைத்து நிகழாமல் போனது மறைந்த அக்னிப்பறவை திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள், துக்ளக் ஆசிரியர் திரு. சோ. அவர்கள், அதைப்போல் நான் சந்திக்க நினைக்கும் மனிதர்களில் ஒரு சிலர் உண்டு அவர்களில் முதலாமாவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. சகாயம் அவர்கள், பெங்களூருவில் இருக்கும் விந்தை மனிதர் திரு. சத்ய நாராயணா அவர்கள், (இவர் திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் உடன் பிறந்த சகோதரர் ஆவார்)

புதன், ஜூலை 18, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8)


இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...

து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ ? இதை கண்ட கோடரி வேந்தன்...
செந்து அச்சம் தவிர்த்தல் நலம் வதனம் மகிழ்ச்சி கொள்க.

திங்கள், ஜூலை 16, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (7)


இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...

செந்துரட்டியின் விவாகத்திற்கு இன்னும் ஐந்து தினங்களே இருக்கும் தருவாயில் குருநாதரிடமிருந்து கோடரி வேந்தனுக்கு அழைப்பு காப்பாளர் இயம்பியதை கேட்டு சென்றிட...

சனி, ஜூலை 14, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (6)


இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...

கோடரியாரே குருநாதரிடம் எம்மையும் பொய்யுரைக்க வைத்து விட்டீர்களே ? நியாயமா ? தர்மமா ? இது குருத்துரோகம் அல்லவா !
விட்டுத்தள்ளுங்கள் செந்து இதற்காக வருந்தலாமா ? இவரென்ன நமக்கு உறவினரா ? நமது கல்வி கற்றல் முடிந்ததும் வெளியேற்றி விடுவார்கள்.

புதன், ஜூலை 11, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (5)


இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...

றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே சற்று கூடுதலாக துயில் கொள்ள அனுமதியுண்டு முந்தைய தினம் அதிக தூரம் நடந்து வந்ததின் களைப்பில் செந்துரட்டி தனது மூட்டையை சிரத்துக்கு முண்டு கொடுத்தபடி துயில் கொண்டு விழித்து எழ, தன்னைச்சுற்றி தனது மாணாக்கர்கள் அனைவரும் நாடியில் கை வைத்து அமர்ந்திருப்பதை கண்ட செந்துரட்டி பதறி எழுந்து...

திங்கள், ஜூலை 09, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (4)


இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...

சாலையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த ஆருடரைக் கண்ட செந்துரட்டி இருகைகளாலும் வணங்கி நமச்காரம் ஐயன்மீர் தங்களது ஆசிகள் வேண்ட, கோடரி வேந்தன் நமச்காரம் என்று ஒரு கையில் இயம்பியதைக் கண்ட ஆருடர் செந்துரட்டியை கையை உயர்த்தி நீடூழி எம்பெருமான் ஐயன் துணை என்றும் கிட்டும் என்றுரைத்து கோடரி வேந்தனை ஒரு மாதிரி பார்த்து....
(உலகுக்கு முதன் முதலாக ஒரு கையில் நமச்காரம் வைக்கும் புதுமையை புகுத்தியது கோடரி வேந்தனே என்பதை வரலாறு பின்னால் எழுதிக் கொண்டது என்பது வேறு விடயம்)

வெள்ளி, ஜூலை 06, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (3)


இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...

தொடக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங்கால மருமகளுக்கு என்றுரைக்கவும் எமது அன்னையாருக்கு மகிழ்ச்சி, எமது மனதுக்கும் இனம் புரியாத இன்பம் பெறுக்கெடுத்து ஓடியது.
ம்

செவ்வாய், ஜூலை 03, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (2)


இப்பதிவின் தொடக்கத்தை படிக்க கீழே சுட்டியை சொடுக்குக...

செங்கமலம் அழகி அவள் எமது தூரத்து உறவுக்காரியாயினும் எமது இல்லத்தின் எதிர்புற இல்லத்துக்காரி யாம் தினமும் கோயில் திடலில் சடுகுடு விளையாடி வந்ததும் அந்தி வேளைகளில் நாங்களிருவரும் இல்லத்தின் முன்பே பாண்டி விளையாடுவோம் அவள் பட்டுப்பாவாடை சட்டையில் ஒரு காலை உயர்த்திக் கொண்டு வெள்ளிக் கொலுசு சலசலக்க அவள் பாண்டி விளையாடும் அழகே அழகு அவளின் அன்னையார் தினமும் அவளுக்கு முருக்கு, அதிரசம், தேன்குழல், சீடை, எள்ளுருண்டை இப்படி திண்பண்டங்கள் செய்து கொடுப்பார் நல்ல சுவையாகவும் இருக்கும்.

ஞாயிறு, ஜூலை 01, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (1)


ருத்ரோத்காரி வருடம் 1576 சுமார் 400 ஆண்டுகளுக்கும் முன்பு...

பாரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும் மாணாக்கர்கள் செந்துரட்டியும், கோடரி வேந்தனும் உழுவனூர் நாட்டாமை திருவாளர். மோகனரங்கம் அவர்களின் அரண்மனையின் பின்புறமுள்ள மாட்டுத் தொழுவத்தில் கிடந்த சாணங்களை அள்ளி சிறிதே தூரமுள்ள குப்பை மேட்டில் கொண்டு வந்து கொட்டிக் கொண்டு இருந்தனர் இன்னும் இரண்டு தொழுவங்களை சுத்தம் செய்தால் போதுமானது இவர்களின் தண்டனைகள் முடிவுக்கு வரும்.