தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூலை 14, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (6)


இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...

கோடரியாரே குருநாதரிடம் எம்மையும் பொய்யுரைக்க வைத்து விட்டீர்களே ? நியாயமா ? தர்மமா ? இது குருத்துரோகம் அல்லவா !
விட்டுத்தள்ளுங்கள் செந்து இதற்காக வருந்தலாமா ? இவரென்ன நமக்கு உறவினரா ? நமது கல்வி கற்றல் முடிந்ததும் வெளியேற்றி விடுவார்கள்.
அப்படியானால்... எம்மையும் இப்படித்தான் கருதுகின்றீர்களா ?
செந்து மறுமுறை இப்படியுரைக்காதீர்கள் நமது நட்புக்கும் இவர்களுக்கும் வேறுபாடுகள் இல்லையா ?

கோடரியாரே குருவையே தூக்கி எறிந்து இயம்பியதால் ? ஐயம் கொண்டேன் இருப்பினும் உதாசீனப்படுத்தாதீர்கள்.
விடுங்கள் செந்து குருவை மறந்த குசும்பனுக்கு குவைத்திலும் இடமில்லை என்பது யாம் அறியாததா ?
குவைத்தா ? இதென்ன கோடரியாரே புதுமையான சொற்களாக இருக்கின்றது ?
ஆம் செந்து குவைத் என்றால் சொர்க்கம் என்ற பொருளும் அடங்கும் என்று கானாடுகாத்தான் காது கடி காலிங்கானந்தா சுவாமிகள் இயம்பியுள்ளார்.

இதுவரை யாம் அறியாத சொல்லாடலாக இருக்கின்றது எமக்கென்னவோ தாங்களே புதுமையாக உருவாக்கியது போல் தோன்றுகிறது காரணம் தாங்களும் புதுமை விரும்பிதானே.....
ஆம் செந்து புதுமையான சொற்களை நாம் உருவாக்கி இந்த சமூகத்தில் உலவ விடுதல் அவசியம் நாளைய சரித்திரம் நம்மையும் அடையாளம் காட்டிடட்டுமே.
நிச்சயம் நாளைய சரித்திரம் தங்களை அடையாளம் காட்டும் கோடரியாரே.
நல்லது செந்து நாம் காப்பாளரிடம் செல்வோம் குருநாதர் இயம்பியதை சொல்லி விட்டு வாருங்கள் நாம் மூட்டையுடன் அருவிக்குச் சென்று அவலையும், சீடையையும் களிப்போம்.

கோடரியாரே காப்பாளரிடம் யாம் இயம்புகின்றோம் இருப்பினும் இந்த அவலை மற்ற மாணாக்கர்களுகளிடம் பக்குவமாக இயம்பி பகிர்ந்து உண்ணுவோமே இவை சுத்தமானவைகள்தானே...
இல்லை செந்து நாளை குருநாதர் அறிந்தால் ? தங்களுக்கும் பங்கம் மேலும் எமக்கு இந்த குருகுலத்தில் சத்ருக்கள் மிகுந்து விட்டார்கள் நிச்சயம் விடயத்தை வெளிப்படுத்தி விடுவார்கள் கலிகாலமாகி விட்டது.
கோடரியாரே தங்களுக்கு சத்ருக்கள் மிகுந்து வரக் காரணமென்ன ?
அறியவில்லையே... செந்து மாணாக்கர்களின் எண்ணங்கள் சரியில்லை.

தாங்கள் காலையில் எழுந்ததும் தங்களுக்கு பதநீர் எடுத்து வைக்க பிற மாணாக்கர்களை பயன்படுத்துதல் தவறில்லையா ? இது மட்டுமா ? உணவு வேளையில் பருப்பு உருண்டை செய்தால் மாணாக்கர்கள் சமையல்காரர் அறிந்திடாத வகையில் தங்களது கவலத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளது தவறில்லையா ? இப்படிச் செய்வதால்தானே தங்களை எதிர்க்க முடியாதவர்கள் சத்ருக்களாக உருவாகின்றார்கள் தவறுகளின் தொடக்கம் தாங்கள்தானே... தவிர பிறரில்லை.
செந்து எனக்கு பருப்பு உருண்டை பிடித்தமான உணவு என்பதை தாங்கள் அறியாதவரா ?

தங்களுக்கு எந்த உணவுதான் பிடிக்கவில்லை என்று ஒதுக்கி வைத்தீர்கள் ? மழைக்காலத்தில் பிறக்கும் ஈசலைக்கூட விடுவதில்லையே...
விட்டுத்தள்ளுங்கள் செந்து இதனைக் குறித்து வாதாடினால் நமது நட்புக்கு களங்கம்தான் வரும்.
இப்படியே எமது வாயை அடைத்து விடுகின்றீர்கள்.
சரி காப்பாளரிடம் சென்று இயம்புவீர்.

செந்துரட்டி குருநாதர் உத்தரவிட்டதை காப்பாளரிடம் இயம்பி அவரும் பிற மாணாக்கர்களிடம் விடயங்களை அறிவிக்க மூட்டை கோடரி வேந்தனிடம் அளிக்கப்பட காப்பாளர் தூ என்று வெளியேறினார்.
மூட்டையைப் பெற்றுக் கொண்ட கோடரி வேந்தன்,
செந்து யாம் அருவிக்குச் செல்கிறோம் வாருங்களேன்
என்று பிறர் அறியாமல் விழிகளை சிமிட்ட இருவரும் அருவிக்கு புறப்பட்டு வெளியேறியதும் அதுவரை அச்சத்தில் அடக்கி வைத்திருந்த மாணாக்கர்கள் கெக் கெக் கெக் கே... எனச் சிரித்தனர்.
அருவியில் நீர்வீழ்ச்சியை ரசித்துக் கொண்டு கோடரி வேந்தனும், செந்துரட்டியும் அவல் உண்டு களித்து சீடையில் இரண்டை செந்துரட்டிக்கு கொடுத்து இரண்டை கோடரி வேந்தன் உண்ணும் பொழுது...

கோடரியாரே மற்ற இரண்டு சீடைகளை எலி களித்திருக்குமா ?
விடுங்கள் செந்து அதனைப்பற்றி விவாதித்தால் ? நமது நட்புக்குத்தான் களங்கம் என்ன செந்து மௌனமாக நகைக்கின்றீர்கள்.
இப்படியே எமது வாயை கடந்த௰ ஆண்டுகளாக அடைத்து விட்டீர்களே...
ஆம் செந்து நமது நட்பு தொடங்கி௰ வருடமாகி விட்டதா ? என்றால் இந்த வருடம் தங்களுக்கு ௧௨ நிறைவடையுமே...

ஆம் கோடரியாரே தாங்கள் எமக்கு௰ வருடங்களாக துன்பத்தையே கொடுத்திருந்தாலும் வாழ்வில் மறக்க முடியாதவர் இன்னும் இரண்டு மாதங்களில் யாம் தஞ்சம் புகுந்தோர் பட்டணத்துக்கு திரும்ப வேண்டியது வரும் தங்களின் பிரிவு மனதுக்கு வேதனையாகின்றது.
என்ன செய்வது ? செந்து தாங்கள் இல்லாமல் எமக்கு இன்னும் இரண்டு வருடங்கள் எப்படிச் செல்லப் போகின்றதோ... தாங்கள் நிச்சயம் விவாகம் செய்யவேண்டும் எம்மையும் அழைப்பீர்கள்தானே... ?
தவறான சொல்லாடல் இனியொரு முறை இப்படி இயம்பாதீர்கள் கோடரி.
இல்லை செந்து மன்னியுங்கள் நகைப்புக்காகத்தான் யாம் வராமல் தங்களது விவாகம் நடக்குமா ?
நல்லது குருகுலம் திரும்புவோம் கோடரியாரே...


இருவரும் குருகுலம் திரும்பிட செந்துரட்டியின் தந்தையார் கொடுத்தனுப்பிய இரண்டு ஓலைகளில் ஒன்று செந்துரட்டிக்கும் கிடைத்தது அதில் சேமம் நிறைந்த செந்துரட்டிக்கும், உமது சினேகிதர் கோடரி வேந்தன் மற்றும் உமது அனைத்து மாணாக்கர்களுக்கும் ஆசிகள் உமது கல்வி பயிலல் நிறைவடைந்ததாக குருகுலத்திலிருந்து அனுப்பிய ஓலை மூலம் தகவல் அறிந்து மகிழ்கின்றோம் அடுத்த நாமும் உமது அன்னையாரும் உம்மை அழைத்து வர இருக்கின்றோம் சுபம்.

இங்னனம்
உமது தந்தையார்
அருள் நடை நம்பி

மறுமாதம் செந்துரட்டியின் தந்தையார், தாயார், தாத்தா, மற்றும் அப்பத்தா அனைவரும் ஊமையனார் கோட்டை குருகுலம் வந்து செந்துரட்டியை உச்சி முகர்ந்து முத்தமிட்டு குருநாதருக்கு தட்சிணைகள் வைத்த தாம்பாளத்தை குருவுக்கு காணிக்கை கொடுத்து காலில் விழுந்து ஆசி பெற்று பிற மாணாக்கர்களிடம் விடை பெற்று கோடரி வேந்தனும், செந்துரட்டியும் விடை பெற முடியாமல் கட்டிப் பிடித்து நெடுநேரம் கதறிக்கொண்டு இருந்ததை காண இயலாமல் குருநாதரே தனது இருப்பிடம் சென்று விட, ஒன்றும் இயம்ப முடியாத செந்துரட்டியின் குடும்பத்தார் கோடரி வேந்தனுக்கு ஆறுதல் அளித்து பிரித்து விட, குருநாதரின் இருப்பிடம் சென்ற செந்துரட்டியின் தந்தையார் தமது மகனுக்கு வரும் ஆவணி விவாகம் வைத்திருக்கும் தகவலை அறிவித்து தாங்களும் கலந்து கொள்ள அழைப்பு வரும் என்றதை கேட்டு மகிழ்ச்சியும் ஆசிகளையும் வழங்க...

குருவே தயை கூர்ந்து எமது கோரிக்கை.
இயம்பு செந்துரட்டி.
எமது உயிர் சினேகிதர் கோடரி வேந்தன் எமது விவாகத்தில் கலந்து கொள்ள தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்.
நல்லது செந்துரட்டி கோடரி வேந்தனும், நீரும் எவ்வளவு தூரம் சினேகிதர்கள் என்பதை யாம் நன்கு அறிந்துள்ளோம் எதற்குமே கலங்காத கல்லுளி மங்கன் கோடரி வேந்தனின் விழிகளில் உமது பிரிவு நீரை வரவழைத்து விட்டதை கண்டு யாமே கலங்கி விட்டோம் உமக்காக கோடரி வேந்தனை விவாகத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கின்றோம் வாழ்க வளமுடன்.
மிக்க மகிழ்ச்சி குருவே நன்றி மறவேன் என்றென்றும்.

பிறகு செந்துரட்டியின் தந்தையார் கோடரி வேந்தனிடம் தம்பி விவாகத்துக்கு௰ தினங்களுக்கு முன்பே நீர் தஞ்சம் புகுந்தோர் பட்டணத்துக்கு வர வேண்டும் யாம் வண்டி அனுப்பி வைக்கின்றோம்.
நல்லது மிக்க மகிழ்ச்சியோடு வருவேன்.
கோடரி வேந்தன் வாழ்வின் முதன் முறையாக வெளி நபர்களான அவர்கள் குடும்பத்தினர் நால்வரின் காலில் விழுந்து வணங்கிட...
எமது மனப்பூர்வமான ஆசிகள் என்று விடை பெற்றனர். 

மறு தினத்திலிருந்து.... செந்துரட்டியின் நினைவிலேயே வாழ்ந்த கோடரி வேந்தன் ஓய்வு நேரத்தில் ஒரு வேலையைத் தொடங்கிட மறுமாதம் தஞ்சம் புகுந்தோர் பட்டணத்திலிருந்து செந்துரட்டியின் தந்தையார் குருகுலம் வந்து குருநாதரையும், கோடரி வேந்தனையும் விவாகத்துக்கு வெற்றிலை-பாக்கு வைத்து அழைத்து விட்டு செல்ல... தொடங்கிய வேலை முற்றுப்பெற வருவதில் கோடரி வேந்தனுக்கு மகிழ்ச்சியாய் கடந்தன...

விவாக தினத்தை நோக்கி...
தொடரும்...

இந்தப்பதிவு உருவான காரணக் கதையை படிக்க இதோ
என்னை F m E சொடுக்க.

46 கருத்துகள்:

  1. ஆவ்வ்வ்வ்வ் இன்று மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஉ:) துரை அண்ணன் இல்லை:)).. கடவுளே இன்னும் தொடருமோ?:)) தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது உணர்வுப் பூர்வமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  2. ஒரு வழியாக கல்யாணத்துக்கு நாள் குறித்தாயிற்று...

    சாடூர் சவுக்குத் தோப்பு அடுப்பானந்தசாமி தான் நளபாகமாம்..

    கோடரியாருக்குப் பிடித்தமான பருப்பு உருண்டைக் குழம்பு விருந்து உபசரிப்பில் இடம் பெறுவதாகக் கேள்வி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி இவர் ரொம்ப பிரபலமானவராயிற்றே...

      நீக்கு
    2. அவர் பருப்பு உருண்டை என்றுதானே இயம்பினார். குழம்பு எங்கிருந்து வந்தது?

      நீக்கு
    3. பருப்பு உருண்டை குழம்பில் போடுவதுதானே...

      நீக்கு
  3. கலியாணம் வரைக்கும் வந்தாச்சா...
    இனி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என
    நீளும் என நினைக்கிறேன்.
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. பருப்புருண்டைக் குழம்பில் அவ்வளவு விசேஷமா? திருமணம் நெருங்குகிறது. கோடரி அங்கு வந்து இன்னும் என்னென்ன விஷமங்கள் செய்வாரோ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்ஜி கோடரிவேந்தனை வில்லனாகவே ஆக்கி விடுவீர்களோ...

      நீக்கு
  5. பருப்புருண்டைக் குழம்புன்னா அவ்வளவு பிடிக்குமா? ஒரு வழியாச் செந்துவுக்குக் கல்யாணம் நடக்கப் போவது குறித்து சந்தோஷம். கோடரியார் கலந்து கொண்டாரா என அறிய ஆவல்! தொடரக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பருப்பு உருண்டை குழம்பு எனது அம்மா நல்ல முறையில் செய்வார்கள்.

      நீக்கு
    2. கில்லர்ஜி.. இரண்டு நாட்களுக்குள் நான் செய்வதாக இருக்கும் பருப்புருண்டைக் குழம்பு இடுகையில் இடம் பெற்றிருக்கிறதே (நான் சோம்புலாம் போடமாட்டேன்)

      நீக்கு
    3. அப்படியே பருப்பு உருண்டை குழம்பு ஒரு கப் தேவகோட்டை பார்....சல்...

      நீக்கு
  6. செந்துர்ட்டியின் விவாகம் நிச்சயிக்கப்பட்டு நாளும் குறிக்கப்பட்ட்விட்டதே! விவாகம் அடுத்தும் வந்துவிட்டது. சரிதான் கோடரிவேந்தன் என்ன வேலையில் இறங்கியிருக்கிறார்....கொஞ்சம் கலங்கத்தான் செய்கிறது...ஹா ஹா ஹா ஹா கோவே எப்போதுமே ஏதேனும் குண்டக்க மண்டக்கானு செய்யுறாரே அதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோடரிவேந்தனை எல்லோருமே சந்தேக கண்ணோடத்தில்தான் பார்க்கின்றீர்கள்.

      நீக்கு
  7. செந்துரட்டியின் கல்யாணத்தில் எங்களுக்கும் சாப்பாடு உண்டல்லவோ?!!! ஓ!! இது அந்தக்காலம் டைம் மெஷினில் போனால்தான் விருந்து கிடைக்கும் போல...ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்விடேஷனை காண்பித்தால் செக்யூரிட்டி மெட்டல் டிடெக்டர் செக்கிங் செய்து டெம்பிளுக்குள் நுழைய அனுமதிப்பார்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    நலமா? அருமையாக தமிழ் மணம் வீச பழங்காலத்தமிழில் கதை நன்றாக நகர்ந்து செல்கிறது. தமிழ் எண்களையும் அவ்வப்போது கதையில் குறிப்பிடுவது சிறப்பு. நல்ல உரையாடல்களுடன் கதையை மிகச்சிறப்பாக எழுதி வரும் தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுடன் கூடிய வாழ்த்துக்கள்.

    நான் முந்தைய பதிவுகளையும் படித்து விட்டுத்தான் தொடர்கிறேன். இதுவரை கோ. வேந்தரின் அமைதியான குறும்பு செயல்கள் ரசிக்க வைத்தன. ஆனால் பொறுமையாக அதை உடனிருந்து ரசித்து விடாமல் இணைந்திருக்கும் செந்துவையும் கண்டிப்பாக பாராட்டித்தான் ஆக வேண்டும்.
    அவருக்கு திருமணமாவது மிகவும் சந்தோஷம். ஆனால் கோ. வேந்தர் தான் தொடங்கிய ஏதோவொரு வேலையை (குறும்பை) அங்கு சென்று அந்த திருமணத்தில் முடிக்காமல் இருக்க வேண்டும். அது இருவருக்குமே நன்மையாக அமைந்து விட வேண்டுமென வேண்டிக் கொண்டு கதையை தொடர்கிறேன். மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விடுபட்ட அனைத்து பகுதிகளையும் படித்து கருத்திட்டு பாராட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  9. சுபமாக முடியுமா...? காத்திருக்கிறேன்...

    இந்த தொடரால் சரித்திரம் உங்களையும் பேசும் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வாழ்ந்ததில் ஏதாவது அடையாளம் காட்ட வேண்டுமே... நன்றி.

      நீக்கு
  10. உங்கள் பதிவையும் மற்றவர் கருத்தையும் படிக்கும் போது கோடாரி வேந்தன் எதிர்மறை நாயகன் தானோ என்று ஐயம் எழுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்ல மனிதர்களோடு கெட்ட மனிதர்களையும் இணைத்து வாழவிடுவதே இறைவனின் செயல்பாடு.

      நீக்கு
  11. //செந்து புதுமையான சொற்களை நாம் உருவாக்கி இந்த சமூகத்தில் உலவ விடுதல் அவசியம் நாளைய சரித்திரம் நம்மையும் அடையாளம் காட்டிடட்டுமே.//

    சரித்திரத்தில் இடம் பெற்று விட்டீர்கள்.

    பருப்பு உருண்டை, ஈசல் எல்லாம் பிடித்த உணவா?

    கல்யாணவிழா களைகட்டி விட்டது.
    தொடர்கிறேன் திருமணவிழா காண.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ எனது சிந்தை எப்பொழுதும் புதுமையை சிந்திப்பவையே....

      ஈசல் ஐயோ இதைப் பிடித்து தின்பவர்களை கண்டாலே நான் காததூரம் ஓடி விடுவேன்.

      பருப்பு உருண்டை மிகவும் பிடித்த உணவு.

      திருமணவிழா காண ஆர்வம் கொள்வதில் மகிழ்ச்சி.

      நீக்கு
    2. கோடரியாருக்கு இன்னும் இரண்டாண்டுகள் குருகுல வாழ்க்கை எஞ்சியிருப்பது நினைவுக்கு வருகிறது.

      சிறப்புறக் கல்வி பயின்று முதல்நிலை மாணாக்கனாகத் தேர்ச்சி பெற்றிட வாழ்த்துகள்.

      நீக்கு
    3. வருக நண்பரே கோடரிவேந்தனின் சார்பாக நன்றி.

      நீக்கு
  12. கோடரி வேந்தன் என்னதான் கோக்குமாக்கான[கொஞ்சம்] பேர்வழியாக இருந்தாலும், பிரிவுத் துயரில் அவர் கலங்கிக் கண்ணீர் சிந்தியது, செந்துரட்டி மீது அவர் கொண்டிருந்த அளவுகடந்த பாசத்தை வெளிப்படுத்தியது.

    செந்துவுக்குத் திருமணம் உறுதியாகிவிட்ட நிலையில், கோடிரிக்கு எப்போது மண வாழ்க்கை அமையும்? அவரின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையுமா?

    அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரது வருகைக்கும், ஆர்வமான எதிர்பார்ப்புகளுக்கும் நன்றி.

      நீக்கு
  13. கதையை நினைவில் இருத்துவதே சிரமமாக இருக்கும்போதுதமிழ் எண்கள் வேறு குழப்புகிறது தமிழெண்கள் பற்றிய என் அறிவு பூஜ்யம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்குதான் இரண்டையும் புகைப்படத்தில் விளக்கி வைத்தேன் ஐயா.

      நீக்கு
  14. பெயரில்லா7/14/2018 6:19 PM

    செந்துவுக்குத் திருமணம் .ஆஹா. கோடரியார் எதோ ஏற்பாடுகள் செய்கிறார். சுபமாகத் திருமணம் நடக்க வேண்டும்.

    பருப்புருண்டை பலம் பெற்றுவிட்டது. கதானாயகன் கோடரியின் விருப்பத்தால்.
    அற்புதமான சரித்திரம். அழகான தமிழ்.
    மற்ற கிழமைகளின் பெயர்களையும் சொல்வீரோ. ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
      கிழமைகளில் எழுவன்கிழமை, அறிவன்கிழமை இரண்டைத் தவிர மற்றவை ஞாபகத்தில் இல்லை அதனைத் தேடித்தருகிறேன்.

      நீக்கு
  15. அருமை நீங்கள் சரித்திர நாவல் எழுதலாம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே அப்படி நினைத்துதான் முன்னோட்டம் விட்டுப்பார்த்தேன் ஆனால் ???

      நீக்கு
  16. எழுத்து நடை ரசிக்கும்படி இருக்கு. செந்து அப்பாவியாகவும் கோடரி நம்பிக்கைக்குரியவராக இல்லாமலும் காலைவாரிவிடுபவராகவும் சித்தரிக்கிறீங்க."தமிழ் என் உயிர் மூச்சு" என்று கோஷம் போடுபவர்கள்கூடச் செய்யாத, தமிழ் எண்களை உபயோகப்படுத்தியதற்கு பாராட்டுகள்.

    திருமணத்தில் என்ன களேபரம் கோடரியால் வரப்போகுதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பாராட்டுகளுக்கு நன்றி தமிழரே...

      எல்லோருமே என்னை ஸாரி கோடரிவேந்தனை தவறாகவே நினைக்கின்றீர்கள்.

      நீக்கு
  17. கோடாரியார் வாழ்த்த செந்துவின் திருமணம் இனிதே நடைபெற முன்னதாகவே வாழ்த்துக்கள்.....!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  18. அடுத்ததாக என்ன.... காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. எந்த நடையாகட்டும், எந்த நிகழ்வாகட்டும் அதிலும் ஒரு டிவிஸ்ட் வைத்துச் செல்லும் உங்கள் பாணியை ரசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கும், ரசனைக்கும் நன்றி.

      நீக்கு
  20. விவாகத்தன்று கோடரியாரின் திருவிளையாடல் என்னவாயிருக்கும் என அறிய தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு