இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
▼
புதன், டிசம்பர் 26, 2018
வெள்ளி, டிசம்பர் 21, 2018
திருப்புவனம், திருவாளர். திலீப்
தினேஷுக்கு வேலையில் கவனம் சிதறியது...
இது நடந்தது கடந்த வருடமாக...
இன்று...
இதை இப்படியே தொடர விடுவது தவறு
மாற்றுத்தீர்வு காணவேண்டும்.
ஞாயிறு, டிசம்பர் 16, 2018
Honey என்ற அனிதா
தினேஷ் திருமணம் முடிந்த
கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும்
குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர் என்பதால் அடிக்கடி பக்கத்து
நாடுகளான ஓமன், குவைத், பஹ்ரைன், கத்தாரில் உள்ள ஃப்ராஞ்களுக்கு போக
வேண்டியதிருக்கும், சில நேரங்களில் அங்கேயே தங்கி விட்டு மறுநாள்கூட
வரவேண்டியதிருக்கும் தினேஷுக்கு காலேஜில் படிக்கும் காலம் தொட்டே பலவகையான கலை
ஆர்வம் உண்டு இங்கு வந்தும் பனிரெண்டு ஆண்டுகள் ஆனாலும் பலமுறை கச்சேரிகளில்
கலந்து கொண்டுதான் இருக்கிறான் ஓரளவு நன்றாக பாடவும் செய்வான் இன்னும் குழந்தை
இல்லையே என்ற குறையே தவிர வேறொன்றுமில்லை அனிதாவும் இவன் ஊரில் இல்லாவிட்டால்
கணினியில் மூழ்கி கில்லர்ஜியின் வலைப்பதிவுகளை படிப்பாள், வதனநூல் நண்பர்களோடு
அரட்டை அடித்துக் கொண்டு பொழுதை கடத்துவாள் அல்லது பக்கத்து ஃப்ளாட்டில் வசிக்கும்
தமிழ் ஃபேமிலி வீட்டியிருக்கும், அஞ்சு வயது அஞ்சுவை அழைத்து வந்து கொஞ்சிக்
கொண்டு இருப்பாள் குழந்தை என்றால் இவளுக்கு இஷ்டம். வாழ்க்கை அழகாக நகர்ந்து
போய்க் கொண்டு இருந்தது....
செவ்வாய், டிசம்பர் 11, 2018
வியாழன், டிசம்பர் 06, 2018
கோவிந்த ஹரிமேலி
சனி, டிசம்பர் 01, 2018
விமான நிலையத்தில், கில்லர்ஜி
தமிழ் வளர்த்த மதுரை விமான
நிலையம்
பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து
மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சுமைகள் குறைவாகவே இருக்கும், நானும்
எனது சுமையை லக்கேஜில் சேர்த்து விட்டு வழக்கம்போல் எனது கைக்குழந்தை எனது
கழுத்தில் தொங்கி கொண்டு இருந்தது, சுங்க அதிகாரிகளின் சோதனை முடிந்து,
கடவட்டையில் முத்திரை குத்தி, விமானச்சீட்டை பரிசோதித்து இருக்கை எண் அட்டையும்
வழங்கி விட்டார்கள் அனைத்தும் முடிந்தது அடுத்து செல்ல வேண்டியது விமானத்தின்
உள்ளேதான் ஒரு அதிகாரி என்னை நிறுத்தினார் கடவட்டையை கேட்க கொடுத்தேன்.
திங்கள், நவம்பர் 26, 2018
புதன், நவம்பர் 21, 2018
சுமார் 847 ½ அடி
பதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே
சொடுக்குக...
இதைப் பார்த்து விட்டு அங்கிட்டுப்
போனதும் கைத்தடிகள் கூடவே போவார்களே அவர்களிடம் கேட்பார்கள்.
இவன் யாரு ?
நம்ம மீசைக்காரர் இருக்காருல அவரு மகன் இவன் ஒரு
வீணாப் போனவங்க.... வெத்து வேட்டு.
சனி, நவம்பர் 17, 2018
செவ்வாய், நவம்பர் 13, 2018
வெள்ளி, நவம்பர் 09, 2018
செவ்வாய், நவம்பர் 06, 2018
வெள்ளி, நவம்பர் 02, 2018
திங்கள், அக்டோபர் 29, 2018
வெள்ளி, அக்டோபர் 26, 2018
ஆ(ட்)சீர் வாதம் 2
விழாவுக்கு வந்தவர்கள் பேச
வேண்டுமே காரணம் இனி அடுத்த தேர்தல் வரும்வரை பேசுவதற்கு மேடை கிடைக்க
சாத்தியமில்லை மேலும் பேசுவதை நிறுத்திக்கொண்டால் பேசுவது எப்படி ? என்பது மறந்து போகவும் கூடும்
பேச்சுத்திணறினால் சில நிருபர்கள் அவசியமற்ற கேள்விகளை தொடுத்து மூஞ்சியில் தூ
என்று துப்பும் அளவுக்கு கோபத்தைக் கிளறி விடுபவர்களும் உண்டு சிலர் கடைசி
காலம்வரை கல்யாணமே செய்யாமல் வாழும் கண்ணகிகளாககூட இருப்பார்கள் சரி விடயத்துக்கு
போவோம். பிறகு விழா மேடைக்கு வருவார்கள் சிலர் மேடைக்கு வராமலேயே பேசுபவர்களும்
உண்டு
செவ்வாய், அக்டோபர் 23, 2018
ஆ(ட்)சீர் வாதம் 1
நட்பூக்களே... எனக்கு நீண்ட
காலமாகவே மனதில் ஒரு சந்தேகம் இருக்கின்றது அது அரசியல் தலைமைகள் கலந்து கொள்ளும்
திருமண விழாவில் சராசரி திருமண சடங்குகள் எப்படி நடக்குமோ ? அது
அங்கு மாற்றி அமைக்கப்படுகின்றது அங்கு மேடை போட்டு இருக்கும் பேசுவதற்கு ஒலி
பெருக்கி இருக்கும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை உண்மை மனதுடன் வாழ்த்துச்
சொல்ல வந்திருக்கும் சொந்த பந்தங்கள் மூன்றாம் நிலைப்பாட்டில் காவல் துறையினரால் சோதனை
செய்யப்பட்டு நிறுத்தப்படுவார்கள் சூழ்நிலையின் காரணமாக மணக்கோலத்தில் இருக்கும்
மணமக்களை ஆசீர்வாதம் செய்ய அவர்களுக்கு அனுமதி இருக்காது மறுநாள் வீட்டில்
செய்யலாம் என்பது வேறு விடயம்.
சனி, அக்டோபர் 20, 2018
படிக்காதவன்
மனித
வாழ்வில் ஒருவன் முன்னுக்கு வருவதற்கும், பின்னுக்கு போவதற்கும் காரணகர்த்தாவாக
கண்டிப்பாக இன்னொரு மனிதர்ன் இருக்க வேண்டும் இது
எல்லோருடைய வாழ்விலும் உண்டு. தனது வாழ்க்கைக்குகூட பிரயோசனம் இல்லாதவன் என்று
முத்திரை குத்தப்பட்டவன் மற்றவருடைய உயர்வுக்கு காரணமாக இருப்பான் இதில் பலரும்
அனுபவப்பட்டு இருக்கலாம். எனது அபுதாபி வாழ்விலும் பலரும் வந்து இருக்கின்றார்கள்.
சாதாரண சம்பளத்தில் இருந்த என்னை உயர் வழிக்கு கொண்டு வந்த பெருமை அபுதாபியில்
இருக்கும் நான் வேலை செய்த அலுவலகத்தில் இருந்தவர் ஒரு அரபி
செவ்வாய், அக்டோபர் 16, 2018
குடிகாரனின் வில்லுப்பாட்டு
நட்பூக்களே... தொங்குணான்டி பாளையம்
கோவில் திருவிழாவில் குலசை முத்தாரம்மன் முத்துலட்சுமி குழுவினரின்
வில்லுப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யதிருந்தார்கள் அவர்கள் வந்த விமானம் டயர் பஞ்சரான
காரணத்தால் தாமதமானதோடு தங்களால் வர இயலாது என்பதை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்க, வேறு
வழியின்றி அவசரத்துக்கு உள்ளூர் வில்லுப் பாட்டுக்காரன் விடியாமூஞ்சி விருமாண்டியை
அழைத்து வந்து பாடச் சொன்னார்கள் அது மாலையானாலே மலையேறி விடும் இதோ அது பாடிய
வில்லுங்கப்பாட்டு... அவசரம் என்பதால் அவரது குழுவினர்
கிடைக்காத காரணத்தால் பின்னணி நாமும் சேர்ந்தே பாடுவோம்.
சனி, அக்டோபர் 13, 2018
இந்தப்படை போதுமா ?
நட்பூக்களே... இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் இன்னும் பல
இன்னல்களை சந்திக்க வேண்டியது வரும். ஆம் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில்
பிள்ளையாரை கட்டிட அளவு உயரத்துக்கு வடிவமைத்து அதை தெருக்களில் கொண்டு சென்று
மக்களுக்கு பல இடையூறுகளை கொடுக்கின்றனர். நண்டு முதல் சிண்டுவரை தலையில் ரிப்பன்
போன்ற காவி துணிகளை கட்டிக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர் அந்த ஆட்டமும் நாக்கை
துறுத்திக் கடித்துக்கொண்டு, இலவு வீட்டில் போடும் குத்தாட்டம் போலவே இருக்கிறது
அனைவருமே ஃபுல் போதை இதுவா பக்தி ?
புதன், அக்டோபர் 10, 2018
சாத்தான்குளம், சாமியார் சாரங்கபாணி
இப்பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
எமராத் லைசென்ஸ் இண்டர்நேஷனல்
லைசென்ஸுக்கு இணையானது இதை வைத்து நான் ஜெர்மனி, ஒமான் நாடுகளில் விசிட்டிங்கில்
ஓட்டியிருக்கிறேன். அதன் பிறகு கார் வாங்குவதற்காக ஆறு மாதம்
காத்திருந்தேன் காரணம் லைசென்ஸ் எடுத்து ஆறு மாதங்களுக்குள் ஏதாவது சிறிய விபத்து
நடந்தாலும் லைசென்ஸ் மீண்டும் பறிக்கப்பட்டு ஸ்கூலில் போய் படித்து வா என்று
அனுப்பி விடுவார்கள் பிறகு கார் வாங்கி ஓட்டிய பிறகுதான் நம்மிடமும் இவ்வளவு திறமை
இருக்கின்றதே... என்ற நம்பிக்கை வந்தது காரணம் நான் சிறிய வயதில் நாற்பது K.M வேகத்தில் நடைவண்டி ஓட்டியவன்.
ஞாயிறு, அக்டோபர் 07, 2018
அந்த தருணங்கள்
இப்பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
என்னை இவன் போலீஸ்
டெஸ்டுக்கு ரெடியா ? என்ற டெஸ்டுக்கு அனுப்பி வைத்தார்கள் அதற்கு வந்த மாஸ்டர் பாக்கிஸ்தானி அடி வயிறுவரை
தாடி வைத்திருந்த அவனைக் கண்டதுமே எனக்கு அடி வயிற்றைக் கலக்கியது பயமில்லை
இருப்பினும் எனது குடுமி இன்று இவனது கையில்தானே இவன் என்ன நினைக்கின்றானோ ? அதுதானே நடக்கும்.
வியாழன், அக்டோபர் 04, 2018
உலகம் தோன்றியதிலிருந்து...
இப்பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
மறுநாள் முதல் எஜிப்திய
மாஸ்டர் வந்தார் பொதுவாக எஜிப்தியர்கள் அதிகம் பேசுவார்கள் இது அவர்களின்
ரத்தத்துடன் கலந்த பிறவிக்குணம காரணம் வாய் காதுவரை இருக்கும் ஏதாவது தவறுகளால்
போலீஸார் காரைப்பிடித்து நிறுத்தினாலும் பேசிப் பேசியே அவர்களைக் கொன்று
விடுவார்கள் இதன் காரணமாகவே பல போலீஸ்காரர்கள் அபராதம் எழுத வேண்டியவர்களைகூட
என்னை விடுடா சாமி என போய் விடுவார்கள்.
திங்கள், அக்டோபர் 01, 2018
நீயும், நானும் பொணம்டா...
இப்பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
எனக்கு ஃபைல் ஓஃபன் செய்ய டிராஃபிக்
டிபார்ட்மெண்ட் போனேன் எனது பொச்ஷிசன் Filing Clerk என்பதால் பிரச்சனை இல்லாமல் வேலை முடிந்தது பணத்தைக்
கட்டி தியரி க்ளாஸ் போனேன் எக்ஸாமில் பாஸாகினேன் ஸ்கூலின் உள்ளேயே ஆறு நிலைகளையும்
பழகி கொடுத்தது பாக்கிஸ்தானியரும், எஜித்தியரும் எல்லாம் கடந்து வெளியே பழகிக்
கொடுக்க மாஸ்டரோடு வந்தேன்
வியாழன், செப்டம்பர் 27, 2018
ச்சீ இந்த ஜூஸ் புளிக்கும்
இப்பதிவின்
முந்தைய தொடர்ச்சி கீழே சொடுக்குக...
நண்பர்களே இவைகளை எல்லாம்
கடந்து நாம் இந்த நாட்டில் லைசென்ஸ் வாங்கி விட்டோம் என்றால் அது மிகப்பெரிய
சாதனைதான் நம்நாட்டில் கல்லூரிப் படிப்பை முடித்து சான்றிதழ் வாங்கியவன் நிலையே
என்றால் அது மிகையாகாது இதற்கான கால அளவுகள் ஒரு வருடத்தையும் தாண்டலாம் செலவுகள்
எமராத் திர்ஹாம்ஸ் நான்காயிரத்திலிருந்து ஆறாயிரம்வரை ஆகலாம் அதையும் கடந்தும் போகலாம்.
திங்கள், செப்டம்பர் 24, 2018
பதினெட்டாம்படி கருப்பர் துணை
U.A.E
Emirates Driving Company (Government) 2000-ல் தொடங்கியது இதில் தான் பழகி டிரைவிங் லைசென்ஸ் எடுக்க
முடியும் முன்பு பாக்கிஸ்தானியர்கள் வாடகை கார் வைத்து சாலைகளில் பழகிக் கொடுப்பார்கள்
பிறகு போலீஸ் டெஸ்ட்டில் பாஸானால் ? லைசென்ஸ் கிடைக்கும் இதில் விபத்துக்கள்
அதிகமாகிக் கொண்டே வருவதால் அரசாங்கமே இதைப் பழகிக் கொடுக்கும் நிலையை
பிரகடணப்படுத்தினார்கள் சட்ட திட்டங்கள் கடுமையாக வகுக்கப்பட்டு அபுதாபி நகரின்
வெளிப்புறத்தில் ஏக்கர் கணக்கில் ஒரு சிட்டியை உருவாக்கினார்கள்.
வெள்ளி, செப்டம்பர் 21, 2018
கேப்பையில் டால்டா
தமிழ் திரைப்படங்களில்... கதைக்காக கசாநாயகனா ? கசாநாயகனுக்காக கதையா ? என்பது இதுவரை விளங்கவில்லை கசாநாயகன் ஒரு போலீஸ்
அதிகாரி என்றால் காவல்துறை மிகமிக கண்ணியமாக, நியாயமாக, காவலர்கள் மிகப்பெரிய
வீரர்களாக, பொதுமக்கள் கசாநாயகனை கண்டால் மரியாதை கொடுக்கிறார்கள் ரௌடிகள்
பயப்படுகிறார்கள் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறது.
திங்கள், செப்டம்பர் 17, 2018
பழனியாண்டி
இப்பதிவின் தொடர்பான முந்தைய பதிவுகளை
படிக்க கீழே சொடுக்குக...
என் இனிய இந்தியா 1983 மே மாதம் அப்பொழுது எனது அகவை பதினைந்து பழனி முருகன் கோவிலில் எல்லோரும்
வணங்குகின்றார்களே என்று நானும் வரிசையில் போய் கருவறையருகில் நிற்கிறேன் யாரையும்
கை கூப்பி வணங்க விடாத அர்ச்சகர்கள் தள்ளிக்கொண்டே இருக்கின்றார்கள் இல்லாவிட்டால்
யார்தான் இடத்தை காலி செய்வார்கள் நிற்க அதற்குத்தக பலன் என்று நிற்பார்களே...
சனி, செப்டம்பர் 15, 2018
தன்வினை
இப்பதிவின் தொடர்பான முந்தைய பதிவுகளை
படிக்க கீழே சொடுக்குக...
முன்குறிப்பு –
இதைப் படிக்கப்போகும் சில நண்பர்களுக்கு என்மீது மனவருத்தம் நேரிடலாம் நான் என்
வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் எழுதுகின்றேனே
தவிர வேறு நோக்கமில்லை இது மட்டுமல்ல 1983-ஆம் ஆண்டு பழனி
முருகன் கோவில் கருவறையருகில் எனக்கும், கோவில் அரச்சகருக்கும் நடந்த வாக்கு
வாதத்தையும் எழுதப்போகிறேன் அன்று எனது அகவை பதினைந்து அதன் பிறகு இறைவழிபாடு
தேவையில்லை என்பதை உணர்ந்து இறைபக்தியை மனதார ஏற்றுக்கொண்டு மனசாட்சிக்கு பயந்து
இந்த நொடிவரை நியாயமாக வாழ்ந்து மேலும் கடைசிவரை வாழ முயற்சிப்பவன் நான் நன்றி.