தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூலை 09, 2019

தேர்தல் முடிவு கண்டதால்...

 இவளது வார்த்தைக்காக காத்திருக்கின்றன
போராடுவதற்கு இடமே இல்லையா ?..
தேர்தல் முடிவு கண்டு தற்கொலை
ஒரு காலத்தில் சுமனோடு கேஸட்டில் சிக்கியவள்
சமீபத்தில் கடையில் ரசித்தது
தமிழக அறிவுக் கொழுந்துகளும், கொழுந்தியாளும்
வீழும்வரை நிழல் தருவேன்
 இதற்கு ஏண்டா பதினேழு வருசம்
ஏற்கனவே பதவியில் இருந்தபோது இப்படி
இனி நீ பாராளுமன்றத்தையே வாங்குவாய்
 நீ நின்றாலும் ஓட்டுப் போடுவாய்ங்கே...
ஏங்க மூத்தவன் உங்களை மாதிரியே இருக்கான்
இவருக்கும் சாம்ராஜ்யம் இருக்கிறதா ?
 எங்கும் சாமியார்களுக்கே வாழ்வு
தமிழகத்தை யாரும் ஆளலாம் என்று சொன்னவனுக்கு ஆப்பு
சிலிண்டர் விலை ஏறினால் இப்படித்தான்.
அப்பாவி மக்களை கொல்லும் இதுதான் வீரமா ?
இவனுகள் மொட்டைப்பயல்களா... முட்டாப்பயல்களா ?
இந்த மான் குட்டிக்கு ஏனிந்த சோதனை ?
எங்கள் பிளாக் வாசகர்கள் வீடு கட்டவேண்டுமா ?

42 கருத்துகள்:

  1. கில்லர்ஜி பேசாமல் நீங்களும் சாமியாராக ஆகிவிடுங்கள் நான் உங்கள் மேனேஜராக ஆகிவிடுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனக்கு விலங்கு மாட்டிவிட ஆசையா ?

      நீக்கு
  2. கேஸ் அடுப்பு யோசனை நன்றாயிருக்கிறது. மான் எப்படி தப்பிக்க வழியிருக்கிறது என்று கொஞ்சம் யோசனை ஓடியது. அரசியவாதி ஆகலாமா சாமியார் ஆகலாமா என்று கொஞ்ச நேரம் யோசித்தேன்.​ மூத்தவன் உங்களை மாதிரியே இருக்கான் புன்னகைக்க வைத்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்ஜியின் விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  3. அடுப்பு - நல்ல யோசனை மட்டுமல்ல.
    புகை படத்தை கண்டு நீண்ட நேரம் சிரித்து கொண்டிருந்தேன்.நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்து சிரித்தமைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  4. ஒரு இடத்துக்கு இந்தப் பெயர்தான் வைக்கவேண்டும் என்று சொல்வது, அதிலும் சாதித் தலைவர்கள் சொல்வது, அந்த அந்தத் தலைவர்களை, சாதிக்குள் அடைக்க முயற்சிக்கும் குறுகிய மனப்பான்மையல்லவா?

    தேர்தல் முடிவு கண்டு தற்கொலை - இது தமிழ்நாட்டிலா இல்லை அதைத் தவிர்த்த பிற பகுதிகள்லயா?

    ஒரு காலத்தில் சுமனோடு - இதை மாதிரி தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் பழைய கதைகளைத் தோண்டி எடுத்தால், கூவத்தைவிட மோசமாக இருக்குமே.... அவர்களில் எத்தனைபேர் மகளிர் அணிச் செயலர், கட்சி கொள்கை பரப்புபவர், மந்திரி, பெண்கள் அணித் தலைவர்........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எல்லா மனிதர்களுமே தனது ஜாதியை உயர்த்திப் பிடிக்கவே ஆயத்தமாகின்றனர்.

      தற்கொலை செய்து கொண்ட பல்லவராயன் குஜராத்தி என்று கேள்வி.

      ஆம் நீங்கள் சொல்வதுபோல் யார் இங்கு யோக்கியவான்.

      நீக்கு
  5. இந்த மான் குட்டிக்கு - சில நாட்களுக்கு முன் நான் அனிமல் பிளானட்டில் பார்த்தது. இளம் மான். சிறிய மண் மேட்டில் இருக்கிறது. சுற்றிவரத் தண்ணீர். இரண்டு பக்கங்களிலும் முதலைகள், அது எப்போ தண்ணீரில் இறங்கும் என்று காத்திருக்கிறது. தண்ணீருக்கு வெளியே ஒரு மேட்டுப் பகுதியில் பெண் சிங்கம் ஒன்று, மான் எப்போ கரை ஏறும் என்று காத்திருக்கிறது... கடைசியில் மான், முதலையிடமிருந்து தப்பி அடுத்த கரையில் ஏறி தப்பிக்கும் காட்சி.

    இந்த 'வீடு கட்டுவதற்கும்' 'ஊடு கட்டிடுவேன்' என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கா?

    அனைத்தும் நான் பார்க்காத படங்கள். ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறை படைப்பு ஒன்றை ஒன்று உண்டு வாழும் முறையே...

      படங்களை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  6. // வீழும்வரை நிழல் தருவேன்... //

    சிறப்பு ஜி...

    பதிலளிநீக்கு
  7. கேஸ் அடுப்பு நல்ல யோசனை.
    துணிப்பை சுமந்து செல்லாம் நன்றாக இருக்கிறது.
    பல்லி படமும் அதற்கு ஏற்ற வரிகளும்.
    மான் சிங்கம் மான் தப்பி இருக்குமா? இறை ஆகி இருக்குமா?
    எங்கே இருந்து படம் தேர்ந்து எடுக்கிறீர்கள் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  8. சிந்திக்கவும், சீற்றம் கொள்ளவும், சிரிக்கவும், சிந்தை கலங்கவும் தூண்டுகிற அற்புதமான படங்கள்.

    நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. மானைப் பார்த்தால் பரிதவிப்பாக இருந்தது. ஆனால் எப்படியும் தப்பித்துவிடும் என்றும் தோன்றியது. நெல்லைத் தமிழர் சொன்னதைப் பார்த்ததும் அதே மாதிரி இந்த மானும் தப்பி இருக்கும் என நம்புகிறேன்.

    கட்சிக்காரங்க எல்லாம் சம்பாதிப்பது அதிசயமா என்ன? அவங்களுக்குத் தான் கட்சியை வளர்க்க அதிகமாய்ப் பணம் தேவையா இருக்கு! ஓடும் விமானத்தில் கோஷம் போட்டு போராட்டம் நடத்தியது நம் தமிழர்களால் மட்டுமே முடியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழர்களுக்கு என்று ஓர் குணமுண்டே...

      நீக்கு
  10. இம்மாதிரி எரிவாயு அடுப்பு இருக்கும் இடத்தில் இரண்டு மண் அடுப்புக்களை வைத்துச் சமைத்திருக்கிறேன். ஒரு பக்கம் கொடி அடுப்பு என்பார்கள். அதில் பருப்பை வேகப் போடுவது உண்டு. பெரிய அடுப்பில் வெண்கலப்பானையில் சாதம். குமுட்டியில் ரசம், காய் வேக வைத்தல்! இது எல்லாம் எண்பதுகளில் நடந்தது. 81,82 ஆம் ஆண்டுகளில் சிலிண்டர் தீர்ந்து போனால் திரும்ப வர ஒரு மாதம் ஆகி விடும். இன்னொரு சிலிண்டருக்கும் பதிவு செய்து கொள்ள முடியாது. ஒரே சிலிண்டரில் நாங்க சுமார் 12 பேருக்கு தினசரி காலை காஃபியில் இருந்து இரவு வரை சமைக்கணும். ஆனால் அப்போ மண்ணெண்ணை கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
    2. அன்பு தேவ கோட்டைஜி,
      படங்களின் வழி ஒரு கதையே செல்கிறது. வஞ்சம்,சூழ்ச்சி,பயங்கரம்
      எல்லாம் கலந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு இத்தனை படங்களும். நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்புகளும் வெகு சுவை.
      அந்த மான் தப்பினால் நம் சமுதாயமும் தப்பிக்கும்.
      இத்தனை நாட்கள் எங்கள் வீட்டையும் அண்டை வீடுகளையும் சிதைக்கும் ஒரு திட்டம்
      வரவிருந்தது. அதற்கு ஒரு தடை விதித்திருக்கிறது நீதி மன்றம்.
      இந்த நன்மை தொடர புத்தியுள்ள,நல்லவர் ஆட்சி வேண்டும்.
      எல்லோரும் பணத்துக்காக்ப் பறப்பவர்களாக இருந்தால்
      எப்போ விடிவு.

      நீக்கு
    3. வாங்க அம்மா மக்கள் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றினாலே மாற்றம் வரும்.

      தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  11. நல்ல தொகுப்பு.! குறிப்பாக, மண்ணை காப்பாற்ற துணிப்பையை சுமக்க சொன்ன வேண்டுகோள் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  12. நாடு வல்லராச மாறிகிட்டு வருவதற்கு அடையாளம்தான் தண்டனை ரெண்டு வருசம் விசாரிக்கிறது 1பதினேழு வருசம் என்பது.... தேர்தல் தோல்வியால் தற்கொலை செய்யாமல்..இருக்கும ரெண்டுகால் பிராணிகளைப் பார்த்து வெட்கப்பட்டு நாலுகால் பிராணி தற்கொலை செய்து கொண்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லரசு ஆகிடுச்சா ?
      வெசயகாந்து ஆச்சியை புடிச்சுட்டாரா...

      இனி நமக்கு கவலையில்லை.

      நீக்கு
    2. விசயகாந்து வாய் பேசமுடியாத நிலைக்கு போயிட்டாரு...

      நீக்கு
    3. மனைவி மங்காத்தாளே துணை.

      நீக்கு
  13. துணிப்பை விளம்பரம் சூப்பர்...

    மான் பாவம் எப்படித் தப்பிக்கும் என்று யோசனை ஓடியது.

    நானும் அரசியல்வியாதியாகவோ இல்லை சாமியாரிணியாகவோ மாறிடலமா என்று மகனும் நானும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறோம் பல வருஷமா..ஆனா நம்மால முடியலியே ஹா ஹா ஹா ஹா ஹா என் பையன் சொல்லறான் இப்ப இருக்கற காலகட்டத்துல சாமியார் தான் ஈசியாம்ல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    நிழல் தரும் மரம் சூப்பர் !!!!

    கேஸ் அடுப்பு யோசனை பிரமாதம்!!!!

    ஊழலும் தீர்ப்பும் தெரிஞ்ச விஷ்யாம்தானே...

    அனைத்தும் ரசித்தோம் ஜி.

    பல்லி மட்டும் தான் பாவமா வருத்தமா இருந்துச்சு ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக விரிவாக அலசியமைக்கு நன்றி

      பல்லவி பதிவின் ரோசக்கார நாயகி.

      நீக்கு
  14. சிந்தனையைத் தூண்டும் படங்கள்...

    ஆனால் சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க மாட்டார்கள்..

    அது இந்நாட்டின் சாபக்கேடு...

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    அத்தனை படங்களும் நன்றாக கருத்துடன் பொருத்தமாக இருக்கிறது. படங்கள் ஓவ்வொன்றுக்கும் அருமையான கருத்துக்களை தந்த தங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்.

    வீழும் வரை நிழல் தருவேன். என்ற தன்னம்பிக்கை மரத்திற்கு வணக்கங்கள்.

    கேஸ் ஸ்டவ் படம் நகைக்க வைத்தது. முன்பு மண்ணாலான அடுப்புகளை இந்த முறையில் தயாரித்து (கொடி அடுப்பு எனப் பெயர்.) நம் வீட்டுப் பெரியவர்கள் உபயோகித்து வந்தார்கள்.இது அந்த மாடலாக ஆகி விட்டது.

    நாம் பிறந்த மண்ணிற்கு பலன் தரும் துணிப்பை விமர்சனம் மிக நன்று.

    மாட்டிக்கொண்ட மான் பாவம். அது இன்னல்களிலிருந்து தப்பிக்க வீடு வாசல் கட்டி முடிக்க உதவி செய்தபடி கீழேயிருக்கும் கணபதிதான் இதற்கும் உதவ வேண்டும்.

    எல்லாமே நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவாக அலசி கருத்துரை இட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  16. ஊறுகாயில் கதம்ப ஊறுகாய் என்று உண்டு. அதில் எல்லா காய்களையும் போட்டிருப்பார்கள். காரமும் தூக்கலாக இருக்கும். அதுபோல பலதரப் பட்ட செய்திகளை தங்களுடைய பொருள் பொதிந்த கருத்துகளுடன் இணைத்து சுவையான, காரமுள்ள கதம்ப தகவல்களாக்கித் தந்தமைக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரது விரிவான பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  17. இவ்வளவு செய்திகளை எப்படித் தொகுத்தீர்கள்? வியப்பாக இருக்கிறது. ஆங்காங்கே உங்களின் கருத்து பதிவிற்கு செறிவூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. அருமை .... சில சிரிக்கவும் பல சிந்திக்கவும் வைத்தன ... நன்றி Killergee ஜி !!!

    பதிலளிநீக்கு