ஞாயிறு, ஜனவரி 31, 2016

தமிழ் எண்கள்

 
FACE BOOK கில் ஒரு நண்பர் மேற்கண்ட கடிகாரப் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் தமிழ் எண்களை படியுங்கள் என்று, இதை நாம் எங்கு படிப்பது ? யாரிடம் படிப்பது ? நாம் சிறுவயது தொடங்கி பள்ளிக்கூட ஆசிரியரிடம்தான் படித்து வருகிறோம் ஆனால் நமக்கு இந்தத் தமிழ் எண்களை சொல்லித் தரவில்லையே காரணம் என்ன ? முதல் காரணம் நமது அரசாங்கம் இந்த எண்களை அங்கீகரித்து நடைமுறை படுத்தவில்லை அதன் காரணமாய் நமது ஆசிரியர்களில் பெரும்பாலானோருக்கும் இந்த எண்கள் தெரியவில்லை


1985 ம் ஆண்டு தேவகோட்டையில் ஒரு பெரியவர் பாலபாடம் என்ற 1910 ம் ஆண்டு பழந்தமிழில் அச்சடித்த பெரும்பாலான எழுத்துக்கள் இப்பொழுது கிடையாது புரட்டும்போதே உடைந்து விடும் அந்த நிலையிலான பழங்கால நூல் ஒன்று வைத்திருந்தார் சுமார் 400 பக்கங்கள் இருக்கும் அவர் செல்வந்தரும்கூட நான் அடிக்கடி அந்த நூலை எடுத்துப் படிப்பேன் ஒருநாள் அவர் நூலை புரட்டிக் கொண்டே இருந்தார் நான் என்ன ஐயா தேடுறீங்க ? எனக்கேட்டேன் அதற்கு அவர் ''கள்ளுன்னலின் கொடுமை'' நேற்று படித்தேன் கொஞ்சம் பாக்கியிருக்கு அதான் தேடுகிறேன் என்றார் அதற்கு தலைப்பும் பக்கமும் போய்ப் பார்த்தால் உடனே கிடைத்து விடுமே என்றேன் எண்கள் தமிழில் இருக்கும் எப்படி பார்ப்பது ? எனக்கேட்டார் எனக்குத் தெரியும் என்றேன் எங்களுக்குள் தொடங்கிய விவாதம் சவாலாகி இரண்டு ரூபாய் பந்தயத்தில் வந்து நின்றது இரண்டே நிமிடத்தில் எண்களைப் பார்த்து பக்கத்தை விரித்து வைத்தேன் சொன்னபடியே இரண்டு ரூபாயை கொடுத்து விட்டு, இதுதான் பள்ளிக் கூடத்திலேயே கிடையாதே இத்தனை வயதான எனக்கே தெரியவில்லை உனக்கு எப்படித் தெரியும் ? நான் விவேகானந்தரிடம் (காலண்டர்) படித்தேன் என்றேன் அன்றே எனக்குள் தொடங்கிய முயற்சிதான் இன்றும் யாருடைய உதவியுமின்றி COMPUTER ரில் நானாகவே பல மொழிகளை படிக்கவும் TYPE செய்யவும் கற்றுக் கொண்டேன். இந்த தமிழ் எண்கள் COMPUTERரில் TYPE செய்யும் போது பூஜ்யம் மட்டும் ஆங்கில எண்களைப் போல் தான் வருகிறது உண்மையான தமிழ் பூஜ்ய எண் 90 % மலையாள எழுத்தான '''' வைப்போல் இருக்கும் (மலையாள() ஏனோ தெரியவில்லை COMPUTER ரில் வருவதில்லை மேலும் தமிழ் எண்களைப் போல் தெலுகு, ஹிந்தி, மலையாளம், அரபிக் மொழிகளிலும் எண்கள் உண்டு அதேபோல் மலையாளம், அரபிக் இரண்டு மொழிகளைத் தவிர மற்ற மொழிகளின் பூஜ்ய எண் ஆங்கிலத்தில்தான் வருகிறது ஆனாலும் சமீபத்தில் சில இடங்களில் பூஜ்யத்தை பார்த்தேன் அது எப்படியென தெரியவில்லை இதனைக் குறித்த எனது ஐயங்களை தீர்ப்பார் யாருமில்லை இன்றும் நம்மூரில் சில வாகனங்களில் இந்த எண்களை காணலாம், அப்பொழுது எனக்குள் ஒரு சந்தோஷம் தோன்றும்.

தமிழ் வாழ ! அந்த தமிழோடு நாமும் வாழ !

காணொளி 

வெள்ளி, ஜனவரி 29, 2016

உசிலம்பட்டி, உடுக்கையடி உலகநாதன்


இந்தப்பதிவுக்கு முதன் முதலாக வருபவர்கள் இதன் தொடர்பான கீழ்காணும் பதிவுகளை படித்த பிறகு தொடர்ந்தால் பதிவின் காரணங்கள் விளங்கும் இதில் கொக்கி போட்டு தொடர் பதிவாக்கிய அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி


பக்கத்தில் வந்து நின்ற திருமுருகன் டிரான்ஸ் போர்ட்டில் மொக்கைராசுவை மந்தக்கட்டியும் சடையாண்டியும் மெதுவாக ஏற்றினார்கள் இவர்களின் சூழலை கண்ட நல்ல மனம் படைத்த இருவர் இருக்கையை காலி செய்து கொடுத்தார்கள் நடத்துனர் வரவும் சங்ககிரி மூணு என்று டிக்கெட் எடுத்தான் சடையாண்டி.
தூரத்தில் தன் கணவன் மொக்கைராசுவை கைத்தாங்களாக கொண்டு வரவும் பதறியடித்து ஓடி வந்தாள் மொக்கையின் மனைவி மொடிச்சியம்மாள்.
அட நாசமாப் போறவங்களா... எம் புருஷனை தெனம் தண்ணியடிக்க வச்சு இப்படி குடும்பத்தைக் கெடுக்குறீங்களே... அறிவு இருக்கா ? நீங்க நல்லாயிருப்பியளா...
கீழே குனிந்து மண்ணை வாரி இறைத்தாள் மண் மூவர் முகத்திலும் அடிக்க... மந்தக்கட்டியும், சடையும் மொக்கையை விட்டு விட்டு விஜயகாந்த் மாதிரி ப்தூ... ப்தூ.. என்றனர் சட்டென கீழே விழுந்தான் மொக்கை.
இஞ்சே பாருத்தா.. ஒம் புருஷனை நாங்க ஒண்ணுஞ் செய்யலை..
ஒண்ணுஞ் செய்யாமே... எங்கே கூட்டிப்போயி இப்படி தூக்கிட்டு வாறீயே...
சொன்னவள் புருஷன் எங்கோ பார்த்துக்கொண்டு கிடக்க... வீட்டுக்குள் ஓடி சருவப் பானையை தூக்கி வந்து தண்ணீரை தலையில் ஊற்றினாள்... அப்பொழுதும் சவளைப் புள்ளையைப் போலவே கிடந்தான்....
பாவி பரப்பாங்கே... தெனம் வந்து உயிரை எடுக்குறாங்கே...
இஞ்சே பாருத்தா மரியாதையா... பேசு.
ஒனக்கு என்ன ? மரியாதை வேண்டிக்கிடக்கு..
நாங்க சடையங்காடு வரைக்கும் போனோம் அங்கே மயங்கி விழுந்துட்டான்.
அங்கே எதுக்கு ? புடுங்குறதுக்கா போனீங்கே.... எம் புருஷனை எதுக்கு ? கூட்டிப் போறீங்கே... இனிமே இந்த வீட்டுப்பக்கம் வந்தீங்க.. வெளக்கமாத்தாளை அடிப்பேன். தூ....... (பீப் போட்டுக்கொள்ளவும்) மயங்களா...
ஏதோ வாயெடுத்த மந்தக்கட்டியை கையைப்பிடித்து அழுத்தி கண்ணால் சாடை காட்டிய சடை இழுத்து வந்து...
என்னபா நீ அவதான் பேசுறானா... நீயும் பதில் சொல்லிக்கிட்டு இருக்கே...
அதுக்காக... மரியாதையில்லாமே.. பேசுறா.. அறிவு இருக்கானு கேட்கிறா... இளையராஜா மாதிரி....
விடப்பா நமக்கு எவன்தான் மரியாதை கொடுத்தான்... இவ மட்டும் கொடுத்துடப்போறா... எல்லாம் (கில்லர்ஜி) நம்ம தலையில எழுதுனது போலதான் நடக்கும் எதையும் வெளியே சொல்ல முடியுமா ? திருடனுக்கு தேள் கொட்டுன கதையா போச்சுப்பா... வா... வா... ஒரு வாரத்துக்கு யேஞ் சகலை வீட்டுக்கு தேவகோட்டை நாடி போயிட்டு பெரச்சனை ஓஞ்சதும் வருவோம்பா...
வந்ததிலிருந்து... தனது கணவன் மொக்கைராசு அப்படியே வெறித்த பார்வையுடன் இருப்பதால் சந்தேகித்த மொடிச்சியம்மாள் அடுத்த தெரு பூசாரி புல்லாலங்கடியிடம் விபூதி வாங்கி வந்து பூசி விட்டாள் நாட்கள் 2 கடந்தும் இதே நிலை நீடிக்க... பக்கத்து தெரு நல்லவர் ஒருவர் வந்து தனக்குத் தெரிந்த பூசாரி உலகநாதன் இருக்கின்றார் என்று சொல்லியனுப்ப.... டாக்ஸி ஒன்றை அமர்த்தி மொக்கையை கிடத்தி துணைக்கு தனது தம்பி வடுகமுத்துவை கூட்டிக்கொண்டு உசிலம்பட்டி போனாள் மொடிச்சியம்மாள்.
உசிலம்பட்டியில் பூசாரி உலகநாதன் உடுக்கையுடன் தெய்வீகமாக காணப்பட்டார் அவரின் காலைத் தொட்டு வணங்கிய மொடிச்சிய.ம்மாளும், வடுகமுத்துவும் 2 பேர் சடையங்காடு கூட்டிப்போனதும், அங்கு மயங்கி விழுந்து விட்டதாகவும் எல்லாம் விபரமாக சொன்னாள்.
நிதானமாக கேட்ட பூசாரி கொலைதெய்வத்தை SORRY குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு கண்களை மூடி சோவியை குலுக்கிப் போட்டார்...
கீழே மல்லாந்து விழுந்த சோவிகள் எத்தனை என்று கேட்டார் கோபமாக... வடுகமுத்து பயந்து நடுங்கி உடனே எண்ணி 7 சாமி என்றான்.
ஹா...ஹா..ஹ்..ஹா... அவரது சிரிப்பைக் கேட்டதும் சிறிது தூரத்தில் Waiting List டில் உட்கார்ந்து இருந்த 13 பேரும் கண்ணத்தில் போட்டுக் கொண்டார்கள்.
திடீரென கத்தினார் பூசாரி...
அடியே... சடையங்காட்டு சண்டாளி எதுக்காக... என்னோட குழந்தை மேலே பாஞ்சே.. ? சொல்லு உனக்கு வேண்டியது... என்ன ?
...........................................
முடியாது உனக்கு காவு தர முடியாது... இப்போ போறியா... ? இல்லை சவுக்காலே... அடிக்கவா ?
.....................
என்ன ? போகமாட்டியா ?
சொன்னவர் சட்டென பக்கத்தில் கிடந்த சாட்டையை எடுத்து மொக்கைராசுவின் தொடைப்பாகத்தில் விட்டு விளாச... ஏழெட்டு அடி விழுந்ததும் மொக்கைக்கு லேசாக உடல் அசைந்தது....
போ... போ... போ.... சண்டாளி...
விபூதியை எடுத்து மொக்கையின் முகத்தில் ஊதினார்... தலையும் முகமும் விபூதியால் மூடிய மொக்கையைப் பார்த்த மொடிச்சியம்மாளுக்கு தனது கணவன் சைத்தானைப்போல தோன்ற சிறிது நடுங்கினாள்...
ம்.. கூட்டிட்டுப் போங்க... இந்த எழுமிச்சம் பழத்தை வீட்டு வாசல்ல கட்டு எந்த தீயசக்திகளும் அண்டாது...
மீண்டும் பூசாரியின் காலில் விழுந்து வடுகமுத்தும், மொடிச்சியம்மாளும் விபூசி பூசிக்கொண்டு தட்சிணையாக 501 ரூபாய் தட்டில் வெற்றிலை பாக்குடன் வைத்துக் கொடுத்து விட்டு டாக்ஸில் மொக்கையை உட்கார வைத்து சங்ககிரிக்கு திரும்பினார்கள்.
மறுநாள் மிரண்டு கால் நீட்டி உட்கார்ந்திருந்த மொக்கையின் சவுக்கடி வாங்கி சிவந்து போன தொடையில் வெண்ணீரால் ஒற்றி எடுத்துக்கொண்டு கூரையில் தொங்கி நின்று கொண்டு ‘’யாமிருக்க பயமேன்’’ என்று சொன்ன முருகனை மனதுக்குள் இந்த வருசம் உன் வாசலுக்கு பாதயாத்திரை வர்றேன் என்று வேண்டிக் கொண்டாள் மொடிச்சியம்மாள்.

நட்புகளே நமது நல்லரசு ஆட்சியின் மகிமையால் குடியால் இந்த நிலைக்கு வந்த மொக்கைராசு விரைவில் பூரண நலம் பெற்று குடியை மறந்து இதுவரை குழந்தைச் செல்வம் இல்லாத மொடிச்சியம்மாளுடன் 6 குழந்தைகளாவது நலமுடன் பெற்று சந்தோஷமாய் பல்லாண்டு வாழ வேண்டி நானும் எனது நண்பர்கள் திரு, பகவான்ஜி அவர்களும் திரு. வலிப்போக்கன் அவர்களும் குன்னக்குடிக்கு அன்னக்காவடி எடுப்பதாக நேர்த்திக்கடன் வைத்துள்ள எங்களை வாழ்த்துவீராக...

குறிப்பு எனது மினரல் வாட்டர் பதிவுக்கு வந்து கருத்துரையில் கொக்கி போட்டு அதன் காரணமாய் தொடராக 9 பதிவுகள் எழுதக் காரணமாய் இருந்த அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி சொல்ல உமக்கு வார்த்தை எமக்கு என்று கூறி விடை பெறுகிறேன்.
அன்புடன் கில்லர்ஜி.

முற்றியது (மொக்கைராசுக்கு பைத்தியம் அல்ல) பதிவு.
காணொளி

புதன், ஜனவரி 27, 2016

என் நூல் அகம் 6


வணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்கள் வீட்டில் புதுக்கோட்டை பதிவர்களை சந்தித்தேன் என்று சொன்னேன் அல்லவா அப்பொழுது பதிவரும், கல்வி அதிகாரியுமான திருமதி. ஜெயலட்சுமி அவர்கள் திரு. வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் எழுதிய ‘’துரோகச் சுவடுகள்’’ என்ற நூலும் அன்புடன் எனக்கு பரிசளித்தார்கள் அதனைப்பற்றிய எனது பார்வையில் இதோ....

// எவ்வளவு நம்பினேன் ஏமாற்றி விட்டானே ! என்று புலம்புகிறவர்கள் இருக்கிறார்கள். நம்பினால்தான் ஏமாற்ற முடியும் என்பதை அவர்கள் அறிவதில்லை பகையாளி செய்தால் குயுக்கி, பங்காளி செய்தால் துரோகம், எதிரி செய்தால் உத்தி, நண்பன் செய்தால் துரோகம் // என்ற முதல் பாராவிலேயே நம்மை விழிப்புணர்வுடன் படிக்க வைத்து விடும் அந்த நடையழகு என்னை மிகவும் கவர்ந்தது ஒரு இடத்தில் மனிதர்களின் துரோகம் சங்கிலித் தொடராக வருகின்றது எப்படி ? என்பதை ஆப்பிரிக்க நாட்டுப்புறக்கதை ஒன்றில் மனிதன் பாம்பு, கொக்குகளுடன் பேசுவதுபோல் சொல்வது நம்பும்படி இல்லாவிடினும் சொல்லப்படும் காரணங்கள் (நமது முன்னோர்கள் கூடத்தான் கதைகள் திரித்தார்கள் எமன் உயிரைப் பறிக்க வருவது மாடுகள் கண்களுக்கு தெரிவதாகவும் உடனே மாடுகள் சத்தமிட்டு மனிதர்களிடம் பேசி தப்பிக்க வைத்து விடுவதாகவும் இதனால் கோபப்பட்ட எமன் நண்பர் தனபாலனிடம் திண்டுக்கல் பூட்டு வாங்கி மாட்டின் வாயை பூட்டி விட்டதாகவும் இதன் காரணமாகத்தான் மாடுகள் பேசும் சக்தியை இழந்தன என்றும்) ஆப்பிரிக்கா மட்டுமல்ல உலகெங்கிலும் வாழும் மனிதர்களின் உள்ளத்தை வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றது.

நூல் முழுவதுமே துரோகங்களைக் குறித்த 300 வருடங்களுக்கு முன்பான வரலாற்றுச் சான்றுகளை நம் கண் முன் நிழலாட வைக்கின்றார் ஆசிரியர் //விசுவாசிகள் குறிஞ்சியைப் போலவும், துரோகிகள் நெருஞ்சியைப் போலவும் இருகிறார்கள் // என்பது போன்ற பல வார்த்தை சொல்லாடலை நான் ரசித்தேன், ரசித்தேன், ரசித்துக் கொண்டே படித்தேன் நாம் எல்லா ரகசியங்களையும் அப்பட்டமாக பகிந்து கொண்டால் இன்றுவரை நண்பனாக இருப்பவன் நாளை எதிரியாக மாற மாட்டான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை உணர வேண்டும் என்ற அற்புதமான வாழ்வியல் உண்மையை அழகாக சொல்லி இருக்கிறார் துரோகச் செயல்களின் சம்பவங்களை உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றைய அரசியல்வரை அனைத்து மதங்களிலிருந்தும் சான்றுகளாக பல விடயங்களை பட்டியலிட்டு இருக்கின்றார்.
 
// கைக்குள் கத்தி வைத்திருப்பவனைக் கண்டு பிடித்து விடலாம் புன்னகைக்குள் பிச்சுவாளை வைத்திருப்பவனை அடையாளம் காண்பதுதான் கடினம் // 1984 அக்டோபர் 31-ம் தேதி 33 குண்டுகளால் சுடப்பட்டு 23 குண்டுகள் உடலைத் துளைத்து வெளியேறி சல்லடையாக்கப்பட்டு குருதி சிதறி உயிர் நீத்த திருமதி. இந்திரா காந்தி அவர்கள் முதல் நாள் 1984 அக்டோபர் 30-ம் தேதி தனது கடைசி பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தைகளை கேட்கும் பொழுது மனம் கனத்து விடும் அன்று வருந்தாத நான் உண்மையிலேயே இன்று வருந்தினேன் அந்த வார்த்தைகள்  // நான் இன்று உயிருடன் இருக்கிறேன், நாளை நான் இல்லாமல் போகலாம், என் கடைசி மூச்சுவரை சேவை புரிவேன், நான் இறந்தால் என் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை பலப்படுத்தி ஒருமித்த பாரதத்தை உருவாக்கும் //  இவைதான் அது இதில் திருமதி. இந்திரா காந்தி அவர்களின் உயிர் இழப்பைவிட இன்று அந்த இடத்துக்கு வர ஆசைப்படும் திருமதி. குஷ்புவை நினைத்து சுவற்றில் முட்டி வேதனித்தேன் என்றால் நம்புவீர்களா ? ஒரு வி.....சாரி என்பதை தமிழன் மறந்து விடுகின்றானே.

// இந்தியா அந்நியர்களுக்கு அடிமைப்பட்டது வீரக்குறைவால் அல்ல விசுவாசக் குறைவால் என்பதுதான் உண்மை //
// பதவியில் இருப்பவர்களைவிட அவர்களைச் சுற்றி இருப்பவர்களே அதிகம் அதிகாரம் செய்கிறார்கள் //
// தவறு செய்கிற யாரும் தன் தவறை ஒத்துக்கொள்ளாத சமுதாயத்தில்தான் நாம் இருக்கிறோம் என்பதுதான் வேதனையான உண்மை //
துரோகிகள் வாழும் சமூகத்தில் சில அரிய மனிதர்களும் வாழ்கிறார்கள் என்பதை பட்டியலிட்டு சொல்பவர்களில் நான் படிக்கும் பொழுது எனது நினைவுகளையும் பின்னோக்கி மீட்டிச் சென்றவை இதோ...
// பத்தாண்டுகள் படுத்த படுக்கையாய்க் கிடக்கும் மனைவியின் கழிவுகளைக்கூட முகம் சுழிக்காமல் அள்ளிப்போடுகிற கணவன்மார்கள்//
// பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவனுக்குச் சிறிதும் கோபப்படாமல் பல ஆண்டுகளாகப் பணிவிடை செய்யும் பத்தினிகள் //

இவை போன்ற உணர்ச்சிகரமான வரிகள்100க்கு100 உண்மையானதே இந்நூலுக்கு மதிப்புரை நீதியரசர் திரு. மு. கற்பகவிநாயகம் அவர்கள் எழுதியுள்ளார் இந்நூலின் விலை ரூ. 80.00 நூல் கிடைக்குமிடம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை - 600 098
தொலைபேசிகள் – 26359906, 26251968, 26258410
அற்புதமான நூலை எனக்கு பரிசு தந்த சகோ திருமதி. ஜெயலட்சுமி (கல்வி அதிகாரி) அவர்களுக்கு கில்லர்ஜியின் நன்றி.
இந்நூல் ஆசிரியர் திரு. வெ. இறையன்பு (I.A.S) அவர்களை பாராட்ட எமக்கு தகுதியில்லை ஆகவே அவர் இன்னும் சமூகப் பயனுள்ள நூல்கள் எழுத வேண்டுமென்ற கோரிக்கையுடன் விடை பெறுகிறேன் அன்புடன் - கில்லர்ஜி.

எனது முந்தைய விமர்சனங்கள் படிக்காதவர்கள் கீழே சொடுக்க...

தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

செவ்வாய், ஜனவரி 26, 2016

இந்தியா கிளர்ச்சியுடன் முன்னேறும்

                   
            
நாம் கடந்து வந்த பேரிடர் நமக்கு கஷ்டத்தை மட்டுமல்ல, நல்லதொரு பாடத்தையும் தந்து இருக்கின்றது என்பதை நாம் நினைவில் நிறுத்தி ஆகவேண்டும் ஆம் அரசியல்வாதிகளின் முகத்தை தோலுறித்து காண்பித்து இருக்கின்றது இந்த முகங்களை நாம் கடைசிவரை மறந்து விடக்கூடாது மறக்கும் பொழுது நாம் மீண்டும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியது வந்த பேரிடரால் சென்னையில் எத்தனையோ உயிர்கள் போயிருக்கிறது.

ஆனால்  அரசியல்வாதிகள் யாராவது போயிருக்கின்றார்களா ? சிந்திக்க வேண்டிய விடயமிது ஆம் அவர்களுக்கே முதலுதவி வழங்கப்பட்டு இருக்கின்றது ஆகவே அவர்களில் யாருமே இறக்கவில்லை இதுதான் யதார்த்த உண்மை தேர்தல் வருகின்றது பேசியே நம்மை ஓய்த்தவர்களை இனியும் பேசவிடக்கூடாது இவர்களை பேசவிடாமல் தடுப்பது எப்படி ? வெகு சுலபம் கூட்டம் நடத்துவதற்க்கு எந்த அணியில் இருந்து வந்தாலும் சரி யாருமே போககூடாது போகாமல் இருப்பதால் நாம் செத்து விடமாட்டோம் போவதால்தான் அன்றைய வருமானம் இழந்து நமது குழந்தைகள் சோறு கிடைக்காமல் பசியால் செத்து விடவாய்ப்புண்டு குறிப்பாக திரைப்பட நடிகர்கள் வந்தாலும் மனம் மாறி போய் விடக்கூடாது அவர்களும் நம்மைப்போன்று சோறு களித்து மலம் கழிக்கும் ஜாதிதான் இவர்கள் தேவலோகத்து தூதர்கள் அல்ல

உங்களுக்கு சிறிய விளக்கம் தருகிறேன் எத்தனை திரைப்படங்களில் பார்த்து இருப்பீர்கள் ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் மனிதர்களை இந்த காவல்துறையினரையும், ஏன் ? ராணுவ வீரர்களையும்கூட ஓரம்கட்டி விட்டு சும்மா வேலையின்றி கசாநாயகியை டாவடித்துக் கொண்டு இருந்த கசாநாயகர்கள் மட்டும் மிகவும் சுலபமாக காப்பாற்றி கொண்டு வந்து உயிருடன் மீட்டு விடுவார்கள், தீ எரிந்து கொண்டு இருக்கும் வீட்டுக்குள் ரோபோட் மாதிரி பாய்ந்து சென்று கிழவிகளைக்கூட தூக்கி வந்து உயிருடன் மீட்டு விடுவார்கள் இது எப்படி ? இப்பொழுது மட்டும் ஏன் ? சன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும் குதித்து களம் இறங்கியிருக்க வேண்டாமா ? 

அட மடையா... அது சினிமா, நடைமுறை வாழ்க்கையில் அப்படியெல்லாம் செய்ய முடியாதுடா... என்று என்னை சொல்கின்றீகளா ? இதையேதான் நானும் சொல்கிறேன் சினிமாதானே பிறகு எதற்கு ? திரைப்படங்களில் அவர்களின் விரல் அசைவுக்குகூட அர்த்தமற்ற வகையில் உணராமல் கை தட்டுகின்றீர்கள் ? அவர்களின் பதாகைகளுக்கு கடவுள் நிலைக்கு பாலாபிஷேகம் செய்கின்றீர்கள் ? கேள்வி புரிந்ததா ? அதேநேரம் ராணுவ வீர்ர்களான நமது சகோதரர்கள் மட்டுமல்ல சாதாரண கூலித் தொழிலாளிகளால் கூட உதவி செய்ய முடிந்தது எப்படி ? 

இதுதான் நண்பர்களே நடைமுறை யதார்த்தம் ஆனால் இவர்களுக்கு சம்பளம் கோடிகள் ஆனால் நமக்காக மட்டுமல்ல, இந்த கோடிகள் சுலபமாக சம்பாரிக்கின்றார்களே நடிகர்களுக்காக மட்டுமல்ல, நம்மை காலம் முழுவதும் ஏமாற்றி வாழும் அரசியல்வாதிகள் இவர்களுக்காகவும் எந்த நொடியும் உயிர் துறக்கும் ராணுவ வீர்ர்களுக்கு சம்பளம் எவ்வளவு ? இதற்கு காரணம் யார் ? வெகு சுலபமாக பணம் உண்டாக்கினார்கள் இவர்கள் வெள்ள நிவாரணத்துக்கு அள்ளிக் கொடுத்தால் குறைந்து விடுவார்களா ? ஆகவே இவர்களையும் நாம் ஓரங்கட்டுவோம் எப்படி ? இவர்களின் திரைப்படங்கள் வெளியானதும் தியேட்டருக்கு போககூடாது சினிமா பார்க்காமல் இருப்பதால் செத்து விடமாட்டோம் அதற்கு செலவழிப்பதால் நமது குழந்தைகள் சோறு கிடைக்காமல் பசியால் செத்து விடவாய்ப்புண்டு.

மக்களிடையே மதவாதத்தை தூண்டி விட்டு குளிர் காய்ந்தவர்களின் முகத்தில் கரியை பூசியிருக்கின்றார்கள் மக்கள். மசூதிகளில் ஹிந்து பெண்களும், கோயில்களில் இஸ்லாமிய ஆண்களும் நடமாட்டம் இது வந்ததெப்படி ? பேரிடர் தந்த பெருமை என்றே நாம் கருதுவோம் நம் முன்னோர்கள் எது நடந்தாலும் நன்மைக்கே என்பார்களே... இதனால்தானோ... இந்த ஒற்றுமை என்றும் தொடர வேண்டும் நம்முள் இருந்த வேற்றுக்கருந்து அழிந்து விட்டது என்றே கருதுவோம் அவரவர் மதக்கொள்கைகள் அவரவர்களுக்குள் இருக்கட்டும் அதில் யாரும் நுழைய வேண்டாம் மதம் தவிர்த்து நமக்குள் வாழும் மனிதத்தை மட்டும் பகிர்ந்து கொள்வோம்.

குடியரசு தினமான இன்று முதலாவது மதம் மறந்து மனிதம் வளர்க்க சபதம் எடுப்போம் வளரட்டும் மனிதநேயம் ஒளிரட்டும் 
மனிதவாழ்வு
.
இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

இனியெனும் ந்துவும், கிருஸ்தியரும், முஸ்லீமும் தொடர்ந்து 
சகோதரர்களாய் இணைந்திருப்போம் இனி...

ந்தியா கிளர்ச்சியுடன் முன்னேறும்


தேவகோட்டை கில்லர்ஜி  அபுதாபி

காணொளி
Related Posts Plugin for WordPress, Blogger...