தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 30, 2020

மகா நடி’’கண்


ட்பூக்களே... மேலே புகைப்படத்திலிருக்கும் இந்த நடிகனின் நடிப்பாற்றல் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்து இருக்கிறது அதாவது இவருக்கு வசனம் கொடுக்கப்படவில்லை. கொடுத்தால் சிறப்பாகவே செய்திருப்பார்.

வெள்ளி, ஜனவரி 24, 2020

செங்கல்பட்டு, செங்கல்சூளை செங்கல்வராயன்வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு ? எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னிடம் நிரந்தரமாய் இருந்ததில்லை. கல்யாணத்திற்குப் போனால் திரும்பும்போது செருப்பு இருக்காது. இதனாலேயே எனக்கும், மனைவி செங்கமலத்துக்கும் தினம் சண்டை வரும். ஆத்திரமாய் வந்தது. இந்தச் செருப்பாலே என்னோட சொத்தில் பாதி அழிந்திருக்கும். நான் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறேன். நானும் மனைவியும்தான் பார்த்துக் கொள்கிறோம். திடீரென்று எனக்கு ஒரு யோசனை வந்தது. செங்கமலமும் சரி என்றாள்.

சனி, ஜனவரி 18, 2020

மலேஷியாவில், மகிழ்ச்சியாய்...


2013 - Emirates Etihad Airways-ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்கு ஃபிளைட் டிக்கெட் கொடுத்தார்கள் என்ன அதிசயம் கில்லர்ஜி பெயர் வந்து விட்டது சந்தோஷமாக புறப்பட்டு போய் ஊர் சுற்றினேன்... மலேசியாவில் யாரை பார்க்கலாம்... என யோசிக்கும்போது... ஆஹா நமது இலங்கை நண்பர் ரூபன் அவர்களை சந்திக்கலாமே... ஹோட்டலில் இருந்து நண்பர் ரூபனை தொலைபேசியில் அழைத்தேன்...

திங்கள், ஜனவரி 13, 2020

நிறுத்திக்கொள்


கீழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதரனாக இருந்தாலும் எனது கருத்து இதுதான் இதில் மாற்றுக்கருத்து இல்லை அதேநேரம் நான் வேறு வகையில் வேதனைப்படுகின்றேன் இவனையும் மனிதனாக மதித்து இவனுக்கும் ஒரு பெண்ணைக் கொடுக்கின்றார்களே அந்த சகோதரியை நினைத்து வேதனைப்படுகின்றேன்.

செவ்வாய், ஜனவரி 07, 2020

டால்மியாபுரம், டவுட்டு டவுசர்


ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே ?
வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன்
ஏண்ணே அந்தப் பலகையில் கடை ரோஸ்ட்'னு போட்ருக்காங்களே இது எப்படிணே ?
அடமூதேவி அது கடை ரோஸ்ட் இல்லைடா, காடை ரோஸ்ட்

புதன், ஜனவரி 01, 2020

நல்வாழ்த்துகள் 2020


அன்பு வலைப்பூ நட்பூக்களுக்கு எமது உளம் கனிந்த 2020 புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வருடம் தங்கள் அனைவருக்கும் தொடர்ந்து நல்ல மகிழ்ச்சிகளை அள்ளித்தர வேண்டுமென்று உலக மேலாளரிடம் உள்ளம் உருகி வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் நாளும் நலமுடன்.