ஞாயிறு, அக்டோபர் 29, 2017

சந்தோஷம் – சந் = தோஷம்


தோஷம் என்னை சந்திப்பதால் சந்தோஷம் என்னை சந்திக்க மறுக்கிறது சந்தோஷம் என்பது இந்த ஜென்மத்தில் எனக்கு இல்லை என்றாகி விட்டது அடுத்த ஜென்மத்தில் நிறைவாக கிடைக்குமோ ஒருவேளை அடுத்த ஜென்மமே இல்லை என்றால் எந்த ஜென்மத்து பாவம் எனக்கு இந்த வாழ்க்கை இதற்கு காரணகர்த்தா யார் நிச்சயமாக நானில்லை

வெள்ளி, அக்டோபர் 27, 2017

நண்பேன்டா...


டேய்... கதவைத்திறடா...
இந்த நேரத்திலே யாருடா ?
நான்தான்டா...
மணிக்குமார்ராயா... என்னடா ?
மச்சான் கவுத்திப்புட்டாடா...
என்னடா... ஆச்சு சொல்லுடா.. ?.
அவ எனக்கு டாட்டா காமிச்சுட்டாடா...
யாருடா... ?
அவதான்டா..
எவடா... ?
என்னைக் கவுத்திப்புட்டாடா...
சொல்லித் தொலையேண்டா... ?
அவளுக்கு கல்யாணமாம்மாடா...
எவளுக்குடா... ?
இதோ மொபைல்ல இருக்கிறவதான்டா..
மாப்பிள்ளை யாருடா... ?
அவன்தான்டா...
எவன்டா... ?
அந்த மாடசாமிதான்டா...
யாரு... மேலத்தெருக்காரனாடா...?
ஆமாடா...
சரி காலையில பார்க்கலாம் போடா...
இல்லடா...
வேறென்ன செய்ய... விடுடா...?
அவ வீட்டுக்கு போனேன்டா...
என்ன... நடந்துச்சுடா...?
பாட்டா செருப்பெல்லாம் கேட்டாளேடா...
அதனால என்னடா...
வாங்கி கொடுத்தேனடா...
அதுக்கு இப்ப என்னடா...?
பாட்டா செருப்பால அடிச்சிட்டாளேடா...
சரி சரி விடுடா...
விட மாட்டேன்டா...
அதான் அடிக்க விடுட்டியேடா..?
நான் டால்டா கம்பெனி ஓனர்டா...
நீ டாட்டா இல்லையேடா...?
அவளை கொல்லப் போறோம்டா...
நான் வரலைடா...
ஏண்டா...?
நேத்து ராத்திரி வந்தியேடா...?
அதுக்கு என்னடா...?
பேசிப்பேசி விடிஞ்சு போச்சேடா...
அப்படீனா... புறப்படுடா...
எனக்கு வேலையிருக்குடா...
நீ நண்பனாடா...?
இன்னைலருந்து இல்லடா...
நான் உன் நண்பேன்டா...?
இப்ப வம்பு ஏண்டா...?
அப்ப நான் போறேன்டா...
எங்கேடா...?
டாஸ்மாக்குடா...
சரி தொலைஞ்சு போடா...


மணிக்குமார்ராய் போகவும், சனியன் தொலைஞ்சான்டா என கதவைப் பூட்டி விட்டு தூங்கப் போன மணிஷ்கர், மணியைப் பார்த்தான் மணி 06:00am இருக்கும் ஆனால் உகாண்டா கடிகாரம் காட்டியது இப்படி...

செவ்வாய், அக்டோபர் 24, 2017

வலையபட்டி, வலைப்பதிவர் வளையாபதி


வணக்கம் ஐயா மக்கள் பிரச்சனைகளை தாங்கி வரும் எங்கள் ஓங்கி பத்திரிக்கைக்கு பேட்டியளிக்க வந்திருக்கும் எதற்குமே வளைந்து கொடுக்காத வலையபட்டி, வலைப்பதிவர் வளையாபதி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் பேட்டியை துவங்கலாமா ?
ஓங்கி பத்திரிக்கை இன்னும் உயரம் தொட்டு ஓங்கி ஒலிக்க எமது வாழ்த்துகளோடு நன்றிகளும் துவங்கலாம்.

ஞாயிறு, அக்டோபர் 22, 2017

அர்த்தமென்ன ?


ம் நாட்டில் பெரும்பாலானவர்கள் இறைவணக்கம் செய்கின்றார்கள் அப்படி என்றால் இறைவனை நம்புவதாகத்தானே அர்த்தம் கோயிலுக்குப் போகின்றார்கள் அங்கு சாதி அடிப்படையில் தனக்குத்தான் முதல் மரியாதை தரவேண்டுமென பிரச்சனையை கிளப்பி அடி, உதை, வெட்டு, குத்து என்று போய் பல உயிர்கள் கொலையில் வந்தும் முடிகிறதா ? இல்லை மீண்டும் அதையே காரணமாக வைத்து தொடர்கிறது.... பல ஊர்க்கோயில்களில் தேரோட்டம் நிறுத்தப்பட்டு இறைவனையே பல வருடங்களாக சிறை வைத்தும் பூட்டி இருக்கின்றார்கள் உண்மைதானே.... இதை சமூகத்தை சாக்கடையாக்கிய திரைப்படங்களிலும் கூட நாம் கண்டு இருக்கின்றோம்.

இந்த இடத்தில்தான் நாம் சிந்திக்க வேண்டிய விடயம் இருக்கிறது இறைவனிடம் பயமில்லாமல் மனிதன் இத்தனை ரத்தக்களரி விளையாட்டு விளையாடுகின்றான், இறைவனும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்ன் நண்பர்களுக்கு... அரசன்.சே அன்று கொல்வார் தெய்வம் நின்று கொல்லும் அப்படினு வசனம் சொல்லக்கூடாது இந்தக் கொலைகள் தொடர்கதை ஆவதற்கு இறைவனும் ஒரு காரணமே ஆம் தேவர் பிலிம்ஸ் திரைப்படங்களில் வந்தது போல... அரபு நாட்டில் பொது இடத்தில் நடந்த கொலைக் குற்றவாளிக்கு மூன்றே வாரங்களில் வழக்குகளை முடித்து தூக்குத்தண்டனை கொடுத்ததுபோல... இறைவனும் இதை செய்திருந்தால் ? ? ? அன்றே திருவிழாக் கொலைகள் மட்டுமல்ல இதர தெருக்கொலைகளும் நடக்காது ஏன் ? மதவாதக் கொலைகளும் நடக்காது மதக்கொள்கைகளும் ஒரு மூட்டைப்பூச்சி மாதிரிதான் மதச்சாயத்தை பூசிக்கொண்டால் அவை நமது ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து விடும்.


இன்றளவும்கூட மும்பையில் வெறும் பத்து ரூபாய்க்காக கொலைகள் நடந்திருக்கின்றது... நடக்கின்றது ஆம் தவறான கணிப்பில் இவனிடம் பணமிருக்கும் என்று கருதி கொலை செய்து விடுகிறான் பிறகு சோதித்துப் பார்த்தால் வெறும் பத்து ரூபாய் இதற்காக அவன் வருந்தப் போகின்றானா ? இல்லை திருந்தப் போகின்றானா ? பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று என ரயில் தண்டவாளத்தில் கிடத்தி விட்டு போய் விடுகிறான் அது தற்கொலைக் கணக்கில் மூடப்படுகிறது உண்மைதானே... நண்பர்களுக்கு இது கலிகாலம் என்று சொல்லக்கூடாது கொலையாளிக்கு மறுநாள் முதல் சிறையில் உணவு களிதான் என்ற நிலைப்பாடு இருந்தால் இந்தக் கொலைகள் மட்டுமல்ல எந்தக் கொலைகளும் நடக்காது. இங்குதான் பணத்தை அடித்தால் ஷாப்பிங் போய் வரமுடிகிறதே... ஆக தடுக்க வேண்டிய இறைவனும் தடுக்காமலிருக்கும் சூழலில் நிறுத்த வேண்டிய மனிதனும் நிறுத்தாமலிருக்கும் இந்த வேளையில் இறை வணக்கத்தின் அர்த்தம் என்ன ? (அவ்வ்வ்வ்வ்வ் தலைப்பு வந்துடுத்து) எனக்கு இந்தக் குழப்பம் விபரம் அறிந்த 2 ¾ வயதிலிருந்தே இருக்கிறது.


மன எண்ணங்களில் அழுக்கோடும் நடைமுறை வாழ்வில் அக்கிரமங்களோடும் இறைவனை வணங்கி வாழும் மனிதன், என்னை சோதிக்கின்றாய் என்று இறைவனிடம் போய் பொய் சொல்கின்றான், இது முரண்பாடு இல்லையா ? இந்தக் காரணங்களே என்னை ஆத்திகத்திலும் நாத்திகத்திலும் சேர்க்காத விசித்திகனாக வாழவைத்துக் கொண்டு இருக்கின்றது இறைவணக்கம் செலுத்தாதவன் எப்படியும் வாழட்டும் இறைவனை வணங்குபவன் மனிதநேயமுள்ள அப்பழுக்கற்றவனாக ஒழுக்கசீலனாக வாழவேண்டும் அவனே மனிதனாக இறைவனிடம் சரணடைய முடியும்.

நல்லதை நினை நன்மை நடக்கும்
தொண்டு செய் மேலான நிலை அடைவாய்.
- சிவமுத்தர் ஸாது ஸ்வாமிகள் குடமுருட்டி

1988-ல் தேவகோட்டை சகோதர நண்பர்கள் தெய்வத்திரு. தி. முத்துச்செழியன், திரு. கோ. கணேசன் அவர்களுடன் பரமக்குடி அருகிலுள்ள அபிராமம் மேலக்கொடுமலூர் என்ற ஊருக்கு அடுத்து இருக்கும் குடமுருட்டி என்ற சிறு கிராமத்தில் ஒரு வித்தியாசமான அரிஜனர் வகுப்பைச் சேர்ந்த அர்ச்சகரோடு வினோதமான ஐயப்பன் கோயிலில் நான் கண்ட பொன்மொழி அன்றுமுதல் இதை ஆத்மார்த்தமாய் உணர்ந்து இதன் வழியே இன்றுவரை நான் நடைபோடுகின்றேன்... நடைபோடுவேன்... கடைசிவரை...

காணொளி

வெள்ளி, அக்டோபர் 20, 2017

கடமை கண்ணியம் கட்டுப்பாடு


அண்ணே அண்ணா கடமை கண்ணியம் கட்டுப்பாடுனு சொன்னாரே இதுக்கு என்னண்ணே அர்த்தம்
அடேய் அண்டாச்சட்டி தலையா... நமக்கு அம்மா அப்பா கல்யாணம் செய்து வைக்கிறாங்கள்ல... அது அவங்களோட கடமை.
சரிண்ணே கண்ணியம்
அதாவது கல்யாணம் செய்து வச்ச மனைவிக்கிட்டே கண்ணியத்தோட நடந்துக்கிறணும்.
அது எப்படிண்ணே... அண்ணிகிட்டே நீங்க கண்ணியத்தோட நடந்துக்கிட்டா குழந்தை பிறக்காதேண்ணே
அடேய் விளங்கா மடையா.... கண்ணியம்னா.... நீ சொல்றது இல்லைடா... அப்படி இப்படி நடந்து மனைவிக்கு துரோகம் செய்யாம நடந்துக்கிறணும் முதல்ல நீ அண்ணிக்கிட்டே கண்ணியம் தவறக்கூடாது
சரிங்கண்ணே.... அப்படினா.... கட்டுப்பாடு
கல்யாணம் முடிஞ்சு மனைவிகூட சந்தோஷமா வாழ்ந்து ரெண்டு குழந்தை பெத்துக்கிட்டதும் குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிறணும் இதத்தான் அண்ணா கடமை கண்ணியம் கட்டுப்பாடுனு சொன்னாரு
இப்ப புரிஞ்சுக்கிட்டேண்ணே
சரி இதை புரிஞ்சு கல்யாணம் செய்துக்கிட்டு இரண்டு குழந்தை பிறந்தவுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்துக்கிட்டு கண்ணியம் தவறவிடாமல் வாழ்ந்து கடமையை நிறைவேற்று
இப்ப விற்கிற விலைவாசியில கல்யாணம் செய்து மனைவியை வாழ வைக்கிறதே கஷ்டமாக இருக்கு இதுல குழந்தை எதுக்குணே
அப்படீனாக்கா நம்ம மோடி மாதிரி கல்யாணம் செய்யாமல் இரு பிரமச்சாரியாக சந்தோஷமாக வாழலாம்
அப்படினா... சம்பாரிச்ச காசு மிஞ்சிப்போகுமேண்ணே
அந்தப்பணத்தை வச்சு வெளிநாடு சுற்றிப்பாருடா
நல்லதுண்ணே நீங்க சொன்னதுபடியே செய்யிறேன்

-சிவாதாமஸ்அலி
அவரு சொல்லிட்டு போனது தலைகீழா வந்துடுச்சே

-Chivas Regal சிவசம்போ

அந்தப் பணத்துலதான் மோடி ஊர் சுத்துறாரா... நான்கூட மோசடி பணத்துல சுத்துறாரோன்னு நினைச்சிட்டேன்

குறிப்பு கேள்விக்குறி இடமுடியவில்லை மன்னிக்கவும்

திங்கள், அக்டோபர் 16, 2017

நையாண்டி தர்பார்

வடிவேலு கிணற்றைக் காணோம்னு
சொன்னதை உண்மை ஆக்கிட்டீங்களேடா...
நாந்தேன் ரெண்டு பேருக்கும் வாடகைக்கு விட்டேன்.
எவன் தலையில் விழுந்தால் எனக்கென்ன ?
ஒதுக்கிய பணத்தில் சாதாரணமாக கட்டுங்கடா போதும்.
இருபது வருடங்களுக்கு முன்பு நான் ஊரணியில்
குளிக்கும்போது தாத்தா பின்னாலிருந்து எடுத்த படம்.
இதற்குதான் பெயிண்டரிடம் பேரம் பேசக்கூடாது
மனுஷன் கேள்வி கேட்டது தப்பா ?
இந்த இனியாவை கரைக்ட் பண்ணவே முடியலையே...
 (சிறிய திருத்தம் மட்டுமே எனது)
திருச்சிகாரவுங்க சண்டைக்கு வந்தா அழுதுடுவேன்.
வாய் கூசாமல் பொய் பேசுறீங்களேடா...
எதைத்தான் நம்புவதோ... பேத்தை நெஞ்சம்.
முடி வெட்டிய முடுதாறுக்கு ஒரு சபாஷ்
சுளையில் சுளை குத்திடுச்சோ...
இனி எழுத்துக்கூட்டி படிச்சு என்ன செய்ய ?
இங்கிலீஷ்காரன் எது செய்தாலும் தவறில்லையோ...
இதுவும் வேண்டுமடா உமக்கு இன்னமும் வேண்டுமடா
கலைத்தாகம் கட்டவுட்டை கிழிக்கும்
புதிய டீலக்ஸ் கோச் டெல்லியிலிருந்து இறக்குமதி.
பதிலுக்கு பதிலடி கொடுப்பேன்.
மதம் மறப்போம், மனிதம் காப்போம்.

 என்னிடம் பேரம் பேசாமல் ஒரு படம் அனுப்பி வைத்த நண்பர் திரு.வே.நடனசபாபதி அவர்களுக்கு நன்றி

சனி, அக்டோபர் 14, 2017

கலிகாலம்


கலிகாலமாகிப் போச்சு, உலகம் அழியத்தான் இந்த மாதிரியான அக்கிரமங்கள் நடக்குது என பெரியவர்கள் சொல்வதற்கு தகுந்தாற்போல இன்றைய விஞ்ஞான வளர்ச்சியும் அதைதானே நமக்கு காட்டுகிறது, எங்கு நோக்கிணும் அழிவு சுனாமி, பூகம்பம், நிலநடுக்கம், பனிக்கட்டி மழை, சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு, எரிமலை வெடிப்பு, புயல், எங்கும் மனித உயிர்கள் பலி புதிது புதிதாக ஏதேதோ வருகிறது. இந்த அழிவிற்கு நாங்கள்தான் பெயர் சூட்டுவோம் என ஒவ்வொரு நாடுகளும் போட்டி போடுகின்றன... இதை என்னவென்று சொல்வது ?
Related Posts Plugin for WordPress, Blogger...