தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 12, 2012

ஆதாம்-ஏவாள்.



12/12/12 - 12:12:12 am
அபூர்வமான, இந்த தேதியில் நானும் இந்தபூமியில் வாழ்ந்திருக்கிறேன் என்பதில் பெருமைப்பட்டுக்கொண்டு, இதற்க்கு வாய்ப்பளித்த இந்த உலக மேலாளருக்கும், அடிப்படை காரணகர்த்தாவாகிய எனது தாய்-தந்தையர்க்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நேற்று மரணமடைந்தவர்களுக்கு இந்தவாய்ப்பு கிடைக்கவில்லை, நாளை பிறக்கும் குழந்தைகளும் இதைகாண வாய்ப்பில்லை, ஏனெனில் அடுத்து இந்ததேதியை காண 100 வருடமாகும், அதேநேரம் இன்று பிறந்த குழந்தைகளுக்கு அற்புதமான பிறந்ததேதி கிடைத்திருக்கிறது இனி அடுத்த சந்ததிகள் எப்போது காணமுடியும் ? அடுத்த 75  ஆண்டுகள் கழித்து பிறக்கும் குழந்தைகளுக்குத்தான், இந்தவாய்ப்பு கிடைக்கும், ஏனெனில் 100 வயதுவரை வாழ்ந்தவர்களை நாம் கண்டு இருக்கிறோம், இன்று அது அரியதான விசயமாகி விட்டது, நாளை காணவேமுடியாது காரணம் மனிதனின் ஆயுட்காலம் 50 ஆககுறைந்து விட்டது, அடுத்த சந்ததியினருக்கு அது 25 ஆககுறைந்து விடும் இதில் துளியளவும் ஐயமில்லை. இதன் அடிப்படை காரணம் என்ன ? விஞ்ஞானவளர்ச்சி, மனிதன் அற்பவிசயங்களுக்கு ஆசைப்பட்டு அற்புதமான வாழ்வை இழந்துகொண்டு இருக்கிறான் இல்லை, இழந்து விட்டான். 25 க்குபிறகு என்ன ஆகும் ? கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதைதான் கடைசியில் மனிதஇனமே அடியோடு அழிந்துவிடும் பிறகுதான் உலக மேலாளர் தனது ஆதாம்-ஏவாள் வேலையை PART No: 2 வென்று தொடங்குவார் என நினைக்கிறேன். 

சாம்பசிவம்-
ஒருவேளை மேற்படியாரு, PART No: 2 வைத்தொடங்கினா ? எல்லாமனிதனையும் பேசமுடியாத ஊமையாக படைக்கட்டும், அப்பத்தான் மனிதன் மதங்களை உருவாக்கி, ஜாதிவாரியாக பிரிக்கமாட்டான், வாய்தானே இத்தனை சீரழிவுக்கும் காரணம்.