என்னவளே...
நாம் இருக்கும்போது... ’’அப்படி’’ இருந்ததில்லை,
நீ இறந்த போதும்... நான் ’’அப்படி’’ இருந்ததில்லை,
நான் இறந்திட்டாலும் ’’அப்படி’’ இருக்க சாத்தியமில்லை,
இருக்கும்போது... நாமேன் இணையவில்லை இனியவளே...
கண் போனபின்னே சூரியநமஸ்காரமா ? சூரியபுத்ரி
நானாவது புரிந்து கொண்டேன் நீ புரியாமலே,
புதைந்ததேனோ பூமியிலே பூவிழியே
நானாவது புரிந்து கொண்டேன் நீ புரியாமலே,
புதைந்ததேனோ பூமியிலே பூவிழியே
நம்மை EGO என்னும் ஈக்களை மொய்க்க விட்டு,
நம் மனதில்
கருங்கல்லை காய்க்க விட்டோம்
மரங்கொத்தியாய்...
நானிருந்தும், உன் மனங்கொத்த,
எம்மை
தடுத்ததேனோ காலமெனும் நதியினிலே...
கண்ணீரை
கரைத்து விட்டு கரையேறும்போது மட்டும்,
சதி-பதியாய்
படமெடுத்தோம், நமக்குள் சதி செய்தோம்
மனதை
புகைக்க விட்டு புகைப்படம் எடுத்ததென்ன ?சமூக பார்வைக்காக, நாம் சந்ததியை துளிர்க்க விட்டோம்,
சந்தோச தருணங்களை சன்னியாசம் ஆக்கி விட்டோம்.
இந்த குற்றங்களின் தொடக்கத்திற்கு யார் பொருப்பு ?
இறைவனா... இடைத்தரகர் மனிதனா... இல்லை நாம்தானோ ?
முன்னுரையை நீ தொடுக்க முடிவுரையை நான் கொடுக்க...
முன்னுரையை நீ தொடுக்க முடிவுரையை நான் கொடுக்க...
இன்று கல்லறையில் நீ துயில... கடற்கரையில் நான் துவல
புதைந்தது உன் உடல் மட்டுமல்ல ! நம் உணர்வுகளும்தான்,
பட்டினியாய் போட்டிருந்தாய், பத்தினியாய் வாழ்ந்திருந்தாய்,
உன்னைத் தொட்ட தருணங்களே எமக்கு பிறவிப்பயனடி,
இந்த நினைவோடு கடந்தது பதிமூன்று ஆண்டுகளடி,
எமது கடைசிப்பயணம் வரை இந்த நினைவே போதுமடி,
நமக்கு மீண்டுமொரு பிறவியிருந்தால் மீண்டு பிறந்து
வருவோமடி நாம் மீண்டும் இணைய வேண்டுமடி
இப்பிறவியில் நம்மை நாமே ஏமாற்றியதை,
மறுபிறவியில் மாற்றியமைத்து பத்துச் செல்வங்களை,
பெற்றிடுவோம் மகிழ்வுடனே வாழ்ந்திடுவோம்,
இந்த ஆசையாவது நிறைவேற வேண்டுமெனில்,
இன்றே என்னவன் இறக்க வேண்டும் என,
இறைவனிடம் சொல்லி விடு நாளையே நான்,
மேலோகம் வந்து உன்னைத்தேடி வந்திடுவேன்,
பேசாதா விசயங்களும், பேராசை எண்ணங்களும்,
உடன் நான் திரும்பி வந்து பூமியிலே பிறந்திடுவேன்,
பூமிக்கு நீ வரும் வேளையிலே, சிவப்பு கம்பளம்
நாம் மணம் புரியும் காரணத்தால், குழந்தை முதல்
தொடங்கிடுவோம், நம் காதலை வளர்த்திடுவோம்
காதலை வளர்த்த, மோகத்தால் நீ விரைவாக
குமரியாகி, நான் விவேகமான குபேரனாகி,
விரைவாக விவாகமாகி, பெற்றிவோம் பேரின்பம்...
உனை பெறவைப்பேன் பேறுகாலம் நாம் பெற்ற
செல்வங்களும், பேறுகாலம் கண்டு களித்து,
பெற்றெடுப்பர் நமக்கு பேரன்-பேத்திகளை
நாம் சந்தோஷமாய் திளைக்கும் தருணத்திலே,
சட்டென உயிர் பிறிய வேண்டுமடி ஒரே நாளில்,
நம் இருவரையும் ஒரே குழியில் கிடத்தி வைக்க,
அருகருகே நாம் கிடந்தே பேசிடுவோம் மௌனமொழி...
இது பேராசை இல்லையடி நாம் பெறாத ஆசையடி,
இந்த ஆசை உனக்கும் இருந்தால் ? ? ?
இன்றே என்னவன் இறக்க வேண்டும் என,
இறைவனிடம் சொல்லி விடு, நாளையே நான்
மேலோகம் வந்து, உன்னைத்தேடி வந்திடுவேன்.
இதை கவிதையாக வடித்தேனா... கட்டுரையாக குழைத்தேனா... கதையென திரித்தேனா... யாமரியேன் பராபரமே... எங்களது Wetting Day’ யான இந்த வெட்டிநாள்’லில் என்னவளின் ஆன்மாவுக்கு இது அர்ப்பணம் பிறகே தங்களின் பார்வைக்கு சமர்ப்பணம்.
அன்புடன்
Killergee
(பழமையை விரும்பும், புதுமைச்சித்தன்)
30.08.2014
காணொளி