வணக்கம் கடந்த எனது பதிவு பேராசை பெருநஷ்டம் அதில் ஆண் குழந்தைகள்
மட்டும் எனக்கு ஐந்து பிறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு எழுதி இருந்தது
வில்லங்கத்தாருக்கும், திருச்சி பி.ஜே.பி அவர்களுக்கும் நான் பெண் குழந்தைகள்
வேண்டாமென்று சொன்னது போல் புரிதலைக் கொடுத்து விட்டது காரணம் நான் சொன்ன விதமும்
அவ்வண்ணமே இருந்தது உண்மையே... வருந்துகிறேன். அதோடு அதிராம்பட்டணத்துக்காரர்களும்
ஊரணியில் நின்று கொண்டு கொதித்து விட்டார்கள். ஆகவே இந்த தன்நிலை விளக்கம் பெண் குழந்தைகள்
மூன்று வேண்டும் என்பதும் எமது அவா இத்தனை குழந்தைகள் பெற்றால் கிடைக்குமா புவா ? என்று கேட்டு விடாதீர்கள் நமது மோடி அரசை நம்பி எத்தனை குழந்தைகள்
வேண்டுமானாலும் பெறலாம் என்று உகாண்டாவில் நள்ளிரவில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்று
புள்ளி விபரங்கள் கொடுத்து இருக்கிறது. அதாவது நான் எனது குழந்தைகளுக்கு எனது
பதினைந்தாவது வயதிலேயே பெயர்கள் தேர்வு செய்து விட்டேன் இதுதான் உண்மை அவைகளில்
தமிழ் இணைந்து பிண்ணிப் பிணைந்து வரவேண்டும் என்பதற்காகவே இப்பெயர்கள் இதோ...
TAMILVANAN
AABAVANAN
MATHYVANAN
INBAVANAN
LALVANAN
அமலா
ரூபலா
விமலா
எமது வீட்டில் தமிழ்
அருவியாய் கொட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெயர்களை தேர்வு செய்திருந்தேன்
இவைகளில் தற்போது மகன் தமிழ்வாணனும், மகள் ரூபலாவுமே செல்வங்கள். முதலில் அமலா
பெயர் வைக்காமல் ரூபலா வைத்தற்கான காரணமும் உண்டு.
சிவாதாமஸ்அலி-
காரணம்கூட
பதிவாகுமோ...
சாம்பசிவம்-
அதையும் எழுதிக் கொல்ல’’ட்டும்
Chivas Regal சிவசம்போ-
எட்டு
குழந்தைகளா....? கெட்டவனுக்கு எட்டுனு சொல்வாங்களே...