ஞாயிறு, மார்ச் 06, 2011

உயிர்“தீ”க்குஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் குஸ்தான் வயது 38 கொ.இ.க.வை சேர்ந்த இவர் நேற்று பந்த் என்பதால் தனது சைக்கிள் கடையை மூடிவிட்டு காந்திரோடில் அமர்ந்திருந்தார். பகல் 1.05 மணிக்கு ---- வாழ்க, ---- வாழ்க என கத்தியபடி தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தீயை அணைத்து அவரை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.இதுகுறித்து கொ.இ.க தலைமை வெளியிட்ட அறிக்கையில், குஸ்தான். மரணச் செய்தி நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது ? அவரது குடும்பத்திற்கு கட்சியின் சார்பில், குடும்ப நல நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் ? என அறிவித்துள்ளது.

Thanks for one india.com.


நான்காணா நண்பா.....

நீ இப்படி இறந்து உனது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறாய் ? அதற்கு கௌரவமாய் உனது சிறுநீரகத்தை விற்று உனது குடும்பத்தை வாழவைத்திருக்கலாம் ? நீ இறந்தும் வாழ்ந்திருக்கலாம் உன் குடும்பத்தார் மனதில்.

மானிடா உன்னைப்போன்றவர்கள் இருந்தென்ன ? இறந்தென்ன ?

உன் சந்ததியினருக்கு நீ கொடுத்து விட்டுச்செல்லும் பாடம் இதுதானோ ?

தன்னைப்பெற்ற தாய்க்காக தீக்குளித்தோர் உண்டோ ?

தன்னை நேசித்த மனைவிக்காக தீக்குளித்தோர் உண்டோ ?

தாய்நாட்டு மண்னுக்காக தீக்குளித்தோர் உண்டோ ?

தாய்மொழி தமிழுக்காக தீக்குளித்தோர் உண்டோ ?

உண்டு என்று பொய்யுரைக்காதே அவை தமிழுக்காக கொடுத்த உயிர்கள் அல்ல தமிழுக்காக கொளுத்தப்பட்ட உயிர்கள்.


குறிப்பு-

மரணத்திற்கு தீக்குளிப்பை தேர்ந்தெடுத்தவர்கள் தான்தவறு செய்து விட்டோம் என்று உணர்திருக்கிறார்கள் எப்போது தெரியுமா ? தீயின் ஜூவாலைகள் தன்உடலை சுவைக்கும்போது மட்டுமே....கண்போனபின்னே சூரியநமஸ்காரமாம்.


அடிக்குறிப்பு-

என்னைப்பொருத்தவரை அரசியல்வாதிகளுக்காக, சினிமாக்காரர்களுக்காக, கிரிக்கெட் வீரர்களுக்காக தீக்குளிக்கமுயன்றவர்கள் காப்பாற்றப்படவேண்டும். ஆனால் அது முடியாத காரியம்தான் ஏன் தெரியுமா ? அவர்கள் அரையும்குறையுமாய் வெந்து இந்த சமூகத்துடன் வாழவேண்டும் மற்றவர்கள் பார்வையில் ஒதுக்கப்பட்டவனாய், ஒருபெண்னை பார்த்துரசிக்க முடியாதவனாய் வாழவேண்டும் இவர்களின் யதார்த்த வாழ்க்கையை காண்பவர்கள் நிச்சயம் இப்படிச்செய்யக்கூடாது என்று முடிவுசெய்வதுடன், இவர்கள்கூறும் அனுபவஅறிவை நிச்சயம் கேட்பார்கள்.


இதன்மூலம்

லாபம் பலகோடிமக்களுக்கு

நஷ்டம் சிலஆயிரம் மனிதஉருவில் உள்ளவர்களுக்கு

சிந்திப்பீர் இல்லையேல் சந்தியில்நிப்பீர்.சாம்பசிவம்-

அண்ணாரின் ஆன்மாசாந்தியடையவும், இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காதிருக்கவேண்டியும் உலகோனிடம் பிரார்த்திக்கின்றேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...