.jpg)
மதுரை பதிவர் விழாவில் கலந்து கொண்டதே ஒரு மகிழ்ச்சியான விசயம் அதில் பெரும்
மதிப்பிற்குறிய ஐயா ஜியெம்பி அவர்களை சந்தித்து
பேசியதும், அவரிடம் பெற்ற ஆலோசனைகளும், தன்கைப்பட ஒப்பமிட்டு கொடுத்த ‘’வாழ்வின்
விளிம்பில்’’ என்ற நூலை தந்தது ஒரு அளப்பெரிய பொக்கிஷம்
பெற்றதைப் போன்ற உணர்வைப் பெற்றேன் இதை எழுத்துக்களில் தங்களிடம் விவரிக்கும்
பக்குவம் இந்தக் கத்துக்குட்டிக்கு போறா.... இதை படித்து முடித்து விட்டேன்.
ஐயாவைப் பாராட்டி எழுதப்போகிறேன் என்று நினைத்து விடாதீர்கள் அந்த வேலையை நான்
செய்தால் மெர்க்குரி
லைட்டுக்கு மெழுகுவர்த்தி பிடித்தவன் நிலையாகி விடும் ஆகவே
எமக்கு அது தேவையில்லாத வேலை சரி, வேறு எதற்கு ? இந்தப்பதிவு ஐயாவின் கருக்களில் கிடைத்த பொன்மொழிகளை தங்களுடன் பகிரவே யாம்
பெற்ற இன்பம் இவ் வலையகமும் பெறட்டுமே இந்த பதிவு 10 சிறு தொகுப்புகளில் நமக்கு வகுப்பு நடத்தி
இருக்கிறார், முதல் தொகுப்பில் வந்த வாழ்வின் விளிம்பில் எமக்கென்னவோ சொந்த
அனுபவத்தை எழுதியுள்ளார் என்றே தோன்றியது இருக்கட்டும் அதில் வரும் ரங்கசாமியின்
கதாபாத்திரத்தில் நானும் 10 % இருக்கிறேன்
என்பதை உணந்ததும் குற்ற உணர்ச்சியில் நூலை மூடிவிட்டேன்.
மீண்டும் மறுநாளே படிக்கத்
தொடங்கினேன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாழ்வியல் உண்மையை கொடுத்தது இடையில் கேரளத்து
கதை அதில் வரும் மலையாள வார்த்தைகள் வித்தியாசமாக இருந்தது ஐயா அந்த வார்த்தைகளை
மலையாளத்திலேயே தட்டச்சு செய்திருந்தாலும் படித்திருப்பேன் ஆனால் நூல் நம் இனிய
தமிழ் அல்லவா !
எம்மை, ஈர்த்த ஐயாவின் பொன்வரிகள்.
\\\எந்த எண்ணம் வரக்கூடாதோ அந்த எண்ணம்தானே வரும் அதுதான் மனித மனம்\\
\\அறிவுக்கும்,
உணர்வுக்கும் போராட்டம் நடந்தால் அறிவு தோற்று உணர்வுதான் வெல்லும் இது
எப்போதைக்கும் பொருந்தும் உண்மை\\
\\நிலையான
வருமானம் இல்லாதவனுக்குப் பணம் கொடுப்பதை விட நிலையான வருமானத்துக்கு வழி செய்வது
சிறந்தது\\
\\வாழ்க்கையில்
முன்னேறத் துடிப்பு உள்ளவர்களுக்கு கஷ்டங்கள் தடைக்கற்கள் அல்ல, படிக்கட்டுகளே\\
\\எப்பவுமே
ஆண்களையே சார்ந்திருக்கும் பெண்கள் அவர்களின் நலனுக்காக என்னவெல்லாமோ
செய்கிறார்கள். சோமவார விரதம், காரடையான் நோன்பு, ரக்ஷ் பந்தன், இத்தியாதி
இத்தியாதி... ஆனால் இந்த ஆண்கள் பெண்களின் நலன் வேண்டி ஏதாவது செய்கிறார்களா ?
(ஒரு பெண்ணின் நிலைப்பாட்டிலிருந்து
ஐயா கேட்டிருப்பது எம்மை பிரமிக்க வைத்து கண்ணம்மாவின் காதலனை நினைவு படுத்தியது)
அரண்டவன்
கண்ணுக்கு.... என்ற சிறு தொகுப்பில் நகைச்சுவை கொடுத்த விதம் நன்று.
\\குருட்டுக்
கண்களானாலும் கண்ணீருக்குப் பஞ்சமா ?
\\நினைவுகள்
போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. சில அந்தரங்கமானவை. வாய்விட்டுக் கதற
முடியவில்லை\\
ஒரு
தொகுப்பில்...
மனைவி கேட்கிறாள் கணவனிடம்... \\வாழ்க்கையில் வேறு பெண்ணை
நினைத்திருக்கிறீர்களா ?
கணவன் மனைவியிடம் சொல்லும் பதில்... \\என் மனம் ஒரு ஃபிலிம்
நெகட்டிவ் போன்றது. ஒரு முறைதான் எக்ஸ்போஸ் ஆகும். நீதான் எக்ஸ்போஸான அந்த படம்\\
நான்
என்னையறியாமல் மீண்டும் நூலை மூடிவிட்டேன், என்ன ? இவர்
கதைதான் எழுதினாரா ? 19 ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டை நோக்கி ஓடியது
எனது நினைவோட்டங்கள், உவமைகள் மாறிய வேற்று வார்த்தைகள் இதெப்படி சாத்தியம் ? என்னை நானே கேட்டு பழமைகளில் மூழ்கி
உறங்கிப்போய், மீண்டும் மறுநாளே தொடர்ந்தேன்....
\\என்
குழந்தையும், உன் குழந்தையும், நம் குழந்தையோடு விளையாடுகிறார்கள் என்று சொன்னால்
அது நிதர்சனத்தை உணர்த்துவதாக இருக்கும்\\
\\காலா உனை
நான் சிறு புல்லென மதிக்கிறேன், என்றன் காலருகே வாடா... சற்றே உனை மிதிக்கிறேன்
என் காலால்\\
இப்படி
எம்மை கவர்ந்த வார்த்தை ஜாலங்களை மட்டுமல்ல ! தனிப்பட்ட எமது வாழ்வோடும் ஒன்றியவை
கண்டு மயங்கினேன் மதுவை அருந்தி மாதுவை கண்டவனாய்... இந்த போதை சுகம் நீங்களும் காண்பீர்
என தங்களை கேட்டுக்கொண்டு ஐயா அவர்கள் மதுரையில் எம்மிடம் சொன்ன அவரது நூல்களான ‘’முதுமை
ஒரு பரிசு’’ மற்றும் ‘’முதுமை
ஒரு தண்டனை’’ இரண்டையும் தேடுகின்றேன் எதிர் வரும் முதுமை
எமக்கு பரிசா ? தண்டனையா ?
தேடலில் தேவகோட்டை கில்லர்ஜி
இனிய நண்பர் திரு. கரந்தையார் அவர்களை மதுரை விழாவில் சந்திக்கும்போது...
அன்புடன் கையொப்பமிட்டு கொடுத்த ’’கரந்தை மாமனிதர்கள்’’ என்ற நூல் படித்தேன் படிக்க, படிக்க
ஆச்சர்யமும், ஆனந்தமுமாய் இருந்தது. காரணம் இன்றைய மனிதர்கள் பெரும்பாலும் பிறந்த
மண்ணை விட்டு அயல் தேசங்களில் வாழ்ந்து கொண்டு அதில் மூழ்கி தனது நாட்டையும்,
கலாச்சாரங்களை மறப்பதோடு இல்லாமல் தனது சந்ததிகளுக்கும் எதையுமே
சொல்லிக்கொடுக்காமல், இனிய மொழியாம் நம் தமிழ் மொழியை கற்றுக்கொடுக்காமல், ஏன் ? சிலர் தனது தாய்நாட்டையே காண்பிக்காதவர்களும் உண்டு (விதிவிலக்கு ஆஸ்திரேலியாவில் குடும்ப சகிதம் இருக்கும் காரைக்குடி எமது இனிய நண்பர்
திரு. சொக்கன் சுப்பிரமணியன் அவர்கள்) ஆனால் ? மனிதர் தனது மண்ணின் மணத்தை ஆழ்ந்த மனதுடன் எவ்வளவு நேசித்து வாழ்கிறார்
என்பதை ஒவ்வொரு வரியிலும் செதுக்கி இருக்கிறார். அவர் பிறக்கும் முன்பே உள்ள
சரித்திரங்களை அவர் எப்படித் தோண்டி எடுத்தார் ? மஹாத்மா காந்தி அவர்களால் இந்தியா சுதந்திரம் பெற்றது அதாவது நான் பிறக்கும்
முன்பே இது உலகறிந்த சரித்திரம் ஆனால் ? இவர் சொல்வது தமது சொந்த மண்ணின் உலகறியப்படாத சரித்திரம் அதுவும் 100 ஆண்டுகளுக்கு முன்பு 1910ல் நடந்தவை இது எப்படி ? இந்தக்கேள்வி எமது மனதை வருடிக்கொண்டே இருந்தது... இல்லை இருக்கிறது... இந்தத்
தேடுதலுக்கான இவரின் சிரத்தையை கண்டு அதிசயித்தேன் பொருத்தமான ஐந்து மாமனிதர்தளை
தேர்ந்தெடுத்து தனது பிறந்த மண்ணை மணம் விச செய்துள்ளார். எமது மண்ணுக்கு நான் என்ன
செய்தேன் ? என்னை நானே கேட்டுக்கொண்டேன். எமது கடைசிகாலம் வரை எமது
புத்தக அலமாரியை இந்நூல் அலங்கரிக்கும் அவரை எமது நண்பர் என்று சொல்லிக்கொள்வதில்
பெருமைப்படுகிறேன். பலரும் படித்திருக்கலாம் படிக்காதவர்கள் வாங்கிப் படிக்க
வேண்டுகிறேன்.
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி.
தொடரும்
எமது நூல் அகத்தில் வருவது....
ஒரு கோப்பை மனிதம்
துளிர் விடும் விதைகள்
சரிதாயணம்
ஆவிப்பா.
காணொளி கேட்பீரே...