தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 29, 2019

மூஸாலி கோயில் (8)

முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

‘’ய்யோ... ஆத்தா...’’ சிவமணியின் அலறல் சத்தம் கேட்டு வடங்காடு கிராமமே எழுந்திருக்கும் அப்படியொரு அலறல் அவனது கயிற்றுக் கட்டிலுக்கு அருகில் பாயை விரித்து படுத்துக் கிடந்த அவனது ஆத்தா வீராயி திடுக்கிட்டு எழுந்து சிமிழி விளக்கை ஏற்றி விட்டு, ஏண்டா பேதியில போக பொழுது சாய்ஞ்சா கணாக் கண்டுக்கிட்டு கத்தி ஊரைக்கூட்டுறியே எருமை மாடு நல்லா பொழிகழுதை மாதிரி தின்னுப்புட்டு ஊரைச்சுத்துறியே... நான் காடு கரையில வேலை செஞ்சுட்டு வந்து ஒனக்கு கஞ்சி ஊத்துறேன்ல.. என்னைச் சொல்லணும் காலாகாலத்துல ஒனக்கு ஒரு கால்கட்டு போட்டாத்தான் நீ சரிப்பட்டு வருவே நாளைக்கே போறேன் வலசைக்காட்டுக்கு எந்தம்பி மக கோமளவள்ளிய பரிசம் போட...

திங்கள், ஆகஸ்ட் 26, 2019

மூஸாலி கோயில் (7)

முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

ந்தரத்திலிருந்து இறங்கிய தேவகோட்டை தேவையறிந்த தேவதை அம்மனைக் கண்டதும் மீண்டும் உயிர் வந்ததைப்போல் உணர்ந்தான் சிவமணி ஆஹா முகமே தெரியவில்லையே உடைகள் மட்டுமே பறக்கின்றது ஆண் முகம் போலவும் இருக்கின்றதே எப்படியோ இனி நமக்கு விடுதலை விடுதலை விடுதலை அனைவரும் நடுங்கிக் கொண்டு நின்றார்கள் தேவதை சிவமணிக்கு முன்னால் இறங்கி நின்றது சுடிதார் போன்ற உடையணிந்து எவ்வளவு அழகான முகம் தேவகோட்டை அல்லவா ஆணோ, பெண்ணோ எல்லோருமே அழகாகத்தானே இருக்கின்றார்கள் அப்படியானால் தெய்வமும் அழகாய்த்தான் இருக்கும் அதுவும் காக்கும் கடவுளாயிற்றே... கனிவான முகத்தைக் காட்டிய தேவதை சடக்கென்று திரும்பிக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டது...

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2019

மூஸாலி கோயில் (6)

முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

ட்டீரென முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட மயக்கத்திலிருந்த சிவமணி கண் விழித்தான் தாகம் எடுக்க முகத்தில் அடித்த தண்ணீரை நாவால் ஈரப்படுத்திக் கொண்டான் எதிரே ஒருவன் வேப்பங்கொத்தை வைத்து சிவமணி உடல் முழுவதும் நீவி விட்டு ஒதுங்கி நிற்க தலைவன் கத்தினான்.

செவ்வாய், ஆகஸ்ட் 20, 2019

மூஸாலி கோயில் (5)முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

சிவமணி பயந்து நடுங்கி கொண்டு இருக்க அந்த உருவம் அசைந்து அசைந்து அவனருகில் வந்தது அவனுக்கு முன்புறம் நின்று வானத்தை நோக்கி யானையைப் போன்றே பிளிர அந்த உருவத்துக்குப் பின்னால் வெள்ளையாக ஒளிவட்டம் சிவமணிக்கு சர்வநாடியும் ஒடுங்கி விட்டது அருகில் அவனின் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்தது

சனி, ஆகஸ்ட் 17, 2019

மூஸாலி கோயில் (4)

முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

குலவி பாடி முடிந்ததும் மேலும் சில சடங்குகள் நடந்தது திடீரென தலைவன் சொன்னான்...
ஃபயர் மிசாளு வருங்கா.... முஹி...
சொன்னதுதான் தாமதம் ஒருவன் வலையத்தில் தீ வைத்தான்.

புதன், ஆகஸ்ட் 14, 2019

மூஸாலி கோயில் (3)முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

ண் விழித்த சிவமணிக்கு கண்கள் கூசியது காரணம் சூரிய ஒளி. விடிந்து விட்டது திறந்த வெளியில் தன்னை தரையில் பரப்பி படுக்க வைத்து கை கால்களை கட்டியிருந்தார்கள் உடம்பு முழுவதும் கருப்பு நிறத்தில் மையை தடவி இருந்தார்கள் எதிரே பார்த்தான் இதுதான் மூஸாலி கோயிலோ கையெடுத்து வணங்கி வேண்ட வேண்டும் போல் இருந்தது கைகள் கட்டப்பட்டு இருக்கிறதே.. பக்கத்தில் வெள்ளை உடையணிந்த ஒருவன் ஏதோ செய்து கொண்டிருந்தான் சூழ்நிலையை பார்க்கும் பொழுது இரவு முழுவதும் ஏதோ பூஜை நடந்திருக்கின்றது என்பதை உணர முடிந்தது நேற்றிரவு நமது குருதியைக் குடிக்க சண்டை போட்டவர்களில் ஒருவனைக் காணோமே ஒருவேளை அவனை இவன் கொன்று விட்டானோ ?

ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2019

மூஸாலி கோயில் (2)


முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

வசியைக் காணவில்லை சிவமணிக்கு உடல் முழுவதும் ஒரு நொடியில் வியர்த்தது தவசி தவசி என்று அலறி விட அந்த சத்தம் மலையில் எதிர் முகட்டிலிருந்து எதிரொலித்து மீண்டும் இவன் காதுக்கே வந்து பயமுறுத்த என்ன செய்யலாம் யோசித்தவன் அப்படியே கீழே உட்காரந்து கண்களை மூடிக்கொண்டு தனது குலதெய்வம் குலோத்துங்கன் சாமியை வேண்டினான் சாமி நீ என்னை மட்டும் வீட்டுக்கு பத்திரமாய் கொண்டு போயிட்டா இந்த வருஷம் களரிக்கு கிடா வெட்டுறேன்... மனதுக்குள் இப்படியே நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு திடீரென தூக்கி வாரிப்போட்டது காரணம்.

வியாழன், ஆகஸ்ட் 08, 2019

மூஸாலி கோயில் (1)வெள்ளிக்கிழமை அமாவாசை இருட்டு காட்டுப் பாதையில் சிவமணியும், தவசியும் தூரத்தில் தெரியும் இரவேசி மலையின் முகட்டில் இருக்கும் மூஸாலி கோயிலை நோக்கி கையில் அரிக்கேன் விளக்குடன் நடந்து சென்றார்கள் சிவமணி கையிலிருந்த தூக்குச் சட்டியில் கெட்டிச்சோறு இருந்தது

சனி, ஆகஸ்ட் 03, 2019

சென்னை, செம்மொழி செண்பகவள்ளி


செண்பகவள்ளி இவளை நல்ல அழகி என்று சொல்ல முடியாது, அழகி இல்லை என்றும் சொல்லி விடமுடியாது பெயருக்கு ஏற்றாப்போல அவள் மேலிருந்து பூவின் மணம் வரும் அதை வாசம் என்றும் சொல்ல முடியாது அல்லது மினி கூவம் என்றும் சொல்லி விடமுடியாது யாராக இருந்தாலும் சரி பேசும் பொழுது மட்டும் கொஞ்சம் ‘’வள்’’ என்று இருக்கும் அதிலும் கணவன் கண்ணப்பன் என்றால் கொஞ்சம் இரண்டொரு அறைகளோடு இருக்கும் ஆனால் ஒன்று மாமியார் மாசாணியை மட்டும் அடிக்க மாட்டாள் அதற்கு ஈடாக வார்த்தைகளில் வசை பாடி விடுவாள் அந்தப் பாட்டுகல்ள் பீப் பாடல் மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது அதேநேரம் பீப் பாடல் மாதிரி இல்லை என்றும் சொல்லி விடமுடியாது