தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

குடும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 21, 2025

சுட்டிக்கு அகவை தினம்

Shivanya 

குறும்புக்கார 
குட்டிப்பயலுக்கு
குதூகலமான 
ஐந்தாம் அகவை
தின வாழ்த்துகள்.

சனி, ஜூலை 23, 2022

எலையை விட்டு எந்திரி...

 
நாம் எவ்வளவுதான் சிந்தித்து வாழ்க்கையை கடந்து வந்தாலும் ஒவ்வொரு தினமும் நாம் ஏதாவது பாடத்தை படித்துக் கொண்டே வருகிறோம். மேலேயுள்ள புகைப்படச்செய்தி எனக்கு மிகப்பெரிய தெளிவைக் கொடுத்தது. இதென்ன பெரிய விடயமா ? என்று சிலர் நினைக்க கூடும். இந்த வளையத்துக்குள் வந்து நிற்பவர்களுக்கு மட்டுமே இந்த எழுத்தின் வீச்சு புரியும், இதன் ஆழம் தெரியும் மற்றவர்களுக்கு இதுவொரு வாசகம் மட்டுமே

ஞாயிறு, ஜூன் 05, 2022

ஐயா நீ சாப்பிட்டியா ?

வலையும், மகிழ்ச்சியும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது இதை சந்திக்காத மனிதர்களே கிடையாது இவைகளை இறைவன் கலந்தே கொடுக்கின்றான். ஆயினும் எனக்கு மட்டும் இறைவன் மகிழ்ச்சியை மிகவும் குறைந்த பட்சமாகவே அளித்துள்ளான். அதேநேரம் கவலைகளையும், வேதனைகளையும், துன்பங்களையும் நிறைவாகவே கொடுத்துள்ளான். இவைகளின் அடிப்படை எனது நேர்மையான வாழ்க்கையே...

திங்கள், மே 30, 2022

சென்று வா அம்மா

 

னது அம்மா கடந்த செவ்வாய்க்கிழமை காலை மரணம் அடைந்து விட்டார்கள். ஒரு மாதமாக உடல் நலமில்லாமல் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு இறந்து விட்டார்கள். எனது அம்மா விரைவில் இறந்து விடவே இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன் காரணம் அவர்கள் பட்ட சிரமத்தை என்னால் காண முடியவில்லை.

செவ்வாய், டிசம்பர் 21, 2021

பெயர்த்தி ஷிவாண்யா

ணக்கம் நட்பூக்களே... எனது இரண்டாவது பெயர்த்தி ஷிவாண்யாவுக்கு இன்று முதலாவது பிறந்தநாள் அவளது வாழ்வு என்றென்றும் வளம் பெற அனைவரது வாழ்த்துகளையும் வேண்டுகிறேன். என்றாவது ஓர்தினம் என் பெயர்த்திகள் என்னை நாடி வருவாள்ர்கள் என்று நம்பி காலத்தை கடத்துகிறேன்.

சனி, நவம்பர் 06, 2021

பெயர்த்தி க்ரிஷண்யா

 

ணக்கம் நட்பூக்களே... எனது மூத்த பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு இன்று இரண்டாவது பிறந்தநாள் அவளது வாழ்வு என்றென்றும் வளம் பெற அனைவரது வாழ்த்துகளையும் வேண்டுகிறேன். என்றாவது ஓர்தினம் என் பெயர்த்தி என்னை நாடி வருவாள் என்று நம்பி காலத்தை கடத்துகிறேன்.

புதன், டிசம்பர் 25, 2019

கனவு மெய்ப்பட்டது



  அபுதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார் அதன் காரணமாக நானும் சில காலம் மதுரையில் தங்கி இருந்தேன் இதன் காரணமாகவே பதிவுகளுக்கு உடனுக்குடன் வர இயலாத சூழல் தீபாவளிக்கு முதல் வாரம் ஐந்து தினங்கள் குடும்பத்துடன் விடுமுறையில் வந்து வீடு கிரஹபிரவேசம் முடிந்து பிறகு தீபாவளியையும் புதிய வீட்டில் என்னோடு கொண்டாடி விட்டு மறுநாள் மதுரையிலிருந்து அபுதாபி பறந்து விட்டனர்.

வெள்ளி, டிசம்பர் 06, 2019

குயிலகம் (4)



பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
முகிலன் வருங்கால மாமனார், மாமியார், மைத்துனர்களிடம் கும்பிட்டு சொல்லி விட்டு நேராக ஜனனி அருகில் போனான் பக்கத்தில் நின்றிருந்த தோழிகள் சற்றே விலகி நின்றார்கள்

ஞாயிறு, டிசம்பர் 01, 2019

குயிலகம் (3)


பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
வெள்ளி மீசை சொன்னது
என்னப்பா இது மாப்ளேதான் பெண்ணுகிட்டே தனியா பேசுவார்னு பார்த்தால் மாமியாரும், மாமனாரும் பேசுறாங்க ஹா... ஹா... ஹா... மாப்ளே நல்லா ஜாலியான ஆளுதான்
மரகதவள்ளி தட்டில் பஜ்ஜியை மீண்டும் எடுத்து வைத்து...
தம்பி சாப்பிடுங்கப்பா
இல்லை போதும் நிறைய சாப்பிட்டாச்சு
தம்பி நீங்களும் சாப்பிடுங்க

திங்கள், நவம்பர் 25, 2019

குயிலகம் (2)


பதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக...
‘’ஜனனி’’

ஜனனி சட்டென நிமிர்ந்து பார்த்தாள் அவன் தனது பெயரை முதன்முறையாக அழைத்தது ஒரு பரவசத்தை தூண்டியது காரணம் அவளும் முகிலனை கணவனாகவே ஏற்றுக்கொண்டு விட்டாள் இனி வேறொரு ஆடவன் வேண்டாம் மேலும் தனது குடும்பத்தில் அப்பா, அம்மா, பாசமான அண்ணன்கள், அண்ணிகள், தம்பி அப்பத்தாள் அனைவருக்கும் மகிழ்ச்சி என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே...

செவ்வாய், நவம்பர் 19, 2019

குயிலகம் (1)



ந்த நடுத்தர வர்க்கமான வீடு சந்தோஷத்தில் குளிதித்துக் இருந்தது காரணம் ஜனனியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளை முகிலனோடு முறையாக வந்து பந்துக்களோடு ஹாலில் உட்கார்ந்து இருக்கின்றார்கள். முகிலன் டி.சி..சி வங்கியில் மேலாளராக நல்லதொரு சம்பளத்தில் இருக்கிறான் அழகானவன் அவனுடைய மீசையை ஒரு சாயலில் பார்க்கும்போது வலைப்பதிவர் கில்லர்ஜியைப் போலவே இருப்பான்.

ஞாயிறு, ஜூன் 09, 2019

பணயம் வைத்த பயணம்


நான் இரண்டு குதிரைகள் பூட்டிய ஸாரட் வண்டியில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்பவன் இரண்டு குதிரைகளையும் வெவ்வேறு திசைகளை நோக்கி செலுத்துவேன், ஆயினும் எனது பயணம் நான் போகின்ற இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்கும்.

வெள்ளி, மே 24, 2019

செல்வியின் கணவன்



முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக...

தெருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந்நேரம் கேட்கின்றதே... பக்கத்து வீட்டு பரிமளாவுடன் பேசிக்கொண்டு இருந்த செல்வி வெளியே வந்து எட்டிப் பார்க்க, தனது கணவர் வருவதைக் கண்டதும் பரிமளாவிடம் சொல்லி விட்டு தனது வீட்டின் கேட்டைத் திறந்து விட்டு வீட்டைத்திறந்து உள்ளே சென்றதும் ஆச்சரியமாக...
என்னங்க அதிசயமா இருக்கு சீக்கிரமே வந்துட்டீங்க.... ?
இல்லை செல்வி தலை வலிச்சது அதான் சொல்லிட்டு வந்துட்டேன்.

சரி ட்ரெஸ் மாத்துங்க காஃபி போட்டு வாறேன்.
வேண்டாம் காஃபி அப்புறமா சாப்பிடலாம் ராஜு வரலையா ?

சனி, மே 18, 2019

பாலனின் மனைவி



லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே.....
பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க ?
பதினெட்டு வருசம் ஆச்சு என்ன விசயம் திலீபன் திடீர்னு...

நான் இங்கே வந்து ஏழு வருசம் ஆச்சு எனக்குத்தெரிய நீங்க லஞ்சம் வாங்கியதே இல்லை இது எப்படி சார் சாத்தியம் ?
எனது மனைவிதான் காரணம்.

புதன், பிப்ரவரி 20, 2019

மீண்டும் இனிய விழா




 தேவகோட்டையில்

வணக்கம் நட்பூக்களே... சற்றே நீண்ட இடைவளி நலம்தானே ?
இறையருளாலும், தங்களது ஆசீர்வாதத்தாலும் நலமுடன் எமது செல்வங்கள் தமிழ்வாணன் – பிரியங்கா திருமணம் பரமக்குடியில் நலமுடன் நிகழ்ந்தது. அலைபேசியிலும், கட்செவி வழியாகவும் வாழ்த்திய உள்ளங்களுக்கு எமது நன்றிகள் கோடி. எனது இரண்டாவது கடமையும் செவ்வனே முடிந்தது என்றே கருதுகிறேன்.

சனி, ஜனவரி 26, 2019

மகனுக்கு திருமணம்...



வணக்கம் வலைப்பூ நட்பூக்களே...
எனது மகனுக்கு திருமணம் வைத்து இருக்கிறேன் தைமாதம் 25 ஆம்தேதி வெள்ளிக்கிழமை (08.02.2019) அன்று பரமக்குடி, மதுரை-இராமேஸ்வரம் சாலையில் உள்ள ராஜா மஹாலில் திருமணவிழா நிகழ்வுகள் ஏற்பாடாகி இருக்கின்றது. மணமக்கள் தமிழ்வாணன்-பிரியங்கா இருவருக்கும் தங்களது ஆசிகளையும், வாழ்த்துகளையும் வேண்டி நிற்கிறேன்

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2018

எமது இனிய விழா




ணக்கம் இனிய நட்பூக்களே... கடந்த 23.08.2018 வியாழக்கிழமை அன்று எனது மகள் ரூபலாவுக்கும், எனது அன்புத்தங்கையின் மகன் விவேக்கிற்கும் மேலக்கொடுமலூர் குமரய்யா கோவிலில் மாங்கல்ய திருப்பூட்டும், மற்ற திருமண வைபவங்கள் பரமக்குடி ஐந்துமுனை லேனா மஹாலில் இறையருளாலும், தங்களது வாழ்த்துக்களாலும் சிறப்புடன் இனிதே நடைபெற்றது.

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2018

மகளுக்கு திருமணம்...



லைப்பூ உறவுகளுக்கு எனது மகள் ரூபலாவுக்கும், எனது அன்புத் தங்கையின் மகன் விவேக்கிற்கும் கொடுமலூர் குமரய்யா கோவிலில் திருமணம் மற்ற வைபவங்கள பரமக்குடி லேனா திருமண மஹாலில் சிறப்புற நடக்க இருக்கிறது. தங்களது மனப்பூர்வமான ஆசிகளை வேண்டி....