திங்கள், நவம்பர் 28, 2016

(அ)சிங்கம்


ண்டி.... அலமேலு, ராத்திரி...
சாப்பாட்டுக்கு என் வைக்கட்டும் ?

எதையாவது குழைச்சு வையிடி.
தவிட்டை கொழச்சை வெக்கெவா ?

என்னடி... நக்கலா ?
சரி கிச்சடி வக்கிறேன்.

அதைத்தான் சொன்னேன்.
யேன், கிச்சடி வச்சா ஆடு கொலயே முழுங்கிறது மாதிரி முழுங்களே... ? 

என்னடி... அலமேலு ஆடுங்கிறே... ?
யேன்... ஒங்களைவிட அதுமேலுதான்.

அப்படியென்ன... மேலாப்போச்சு ?
அது காலையிலே பாலாவது கொடுக்குது.

யேண்டி, கூறுகெட்.. கூதரை மகளே.... அதுக்காக நானும் பால் கொடுக்க முடியுமா ?
ஒரு ஜோலிக்குப்போக துப்பில்லே, ஆமை மாதிரி வீட்டுக்குள்ளேயே கிடந்துக்கிட்டு.

ஆம்பளச்சிங்கம் எனக்கென்னடி ?
யேன்... சிங்கத்தை அசிங்கப்படுத்துறீங்க ? வீட்டுல ஒக்காந்துக்கிட்டு கலைக்கானம் பேசமட்டும் தெரியுது....

எம்பேரே... கலைஞானம்தானடி. கலைக்கானம் பேசாம இருப்பேனா ?
தண்டத்துக்கு ஒக்காந்துக்கிட்டு சோத்தைத் திண்ணுக்கிட்டு இருங்க...

அதுக்காக, பிரிண்டிங் ப்ரெஸுக்கு வேலைக்கு போனேன், அங்கே உள்ளவன் பூராம் முதலாளிக்கிட்டே கம்ப்ளைண்ட் கொடுக்கிறாங்கே..
பின்னே எதுக்கெடுத்தாலும் நாய் மாதிரி வள்’’ளுனு விழுந்தா, சொல்ல மாட்டாங்கெளா ?

சர்க்கஸ் கம்பெனிக்கு வேலைக்கு போனேன் கரடி வேஷம் போட்டுக்கிட்டு எவ்வளவு நேரம்தான் நிக்கிறது ?  
வேஷம் போடாமல் நின்னாலும் கரடி மாதிரித்தானே இருக்கும், சும்மாவே நிக்கலாமே.

விறகு கடைக்கு போனேன் ஒரு நிமிஷம் நிக்க விடமாட்றான்.
பின்னே, சண்டிமாடு மாதிரி நின்னா, விடுவாங்கெளா ? அரிசி குடோணுக்கு வேலைக்கு போனீங்களே அங்கேயாவது நிலைச்சு இருந்தீங்களா ?

அவன் என்னடி ஒரே நேரத்துல ரெண்டு மூடை ஏத்தி விடுறான்.
அதுக்காக, கழுதையா பொறந்துட்டு பொதிசுமக்க மாட்டேனா ? விட்ருவாங்கெளா ?

என்னடி... கழுதைங்கிறே.... ?
பின்னே, கழுதை எவ்வளவு பெரிய உழைப்பாளி.

அப்ப, நீ கழுதையவே கட்டியிருக்கலாமே...
இப்ப மட்டும் என்ன வாழுதாம் ?

உனக்கு வர, வர நாக்கு ரொம்பத்தான் நீளுதுடி...
பட்டவளுக்கானே தெரியும் கிளியை வளர்த்து பூனை கையிலே கொடுத்துட்டாங்கே...

ரொம்ப பேசுறடீ...
என்னத்தச் சொன்னாலும் எருமை மாட்டுல மழை பேஞ்ச கதைதான்.

நாளைக்கே ஊரெல்லாம் சுத்தி வேலை புடிக்கிறேன்டி..
நேந்து விட்ட, கோயில் மாடு மாதிரி சுத்துறதுக்கு அதையாவது செய்யுங்க...

குடோணுக்கு பக்கத்து கடைகாரன் கூப்பிட்டான் நாளைக்கு, அங்கே போறேன்டி.
அங்கேயாவது நிரந்தமா வேலை பாருங்க, குரங்கு மாதிரி தாவிக்கிட்டு திரியாமே...

ஹூம் அடுத்த ஜென்மத்துலயாவது நான் கழுதையாப்பொறந்து நீ யேங்கிட்டே மாட்டுவேடி.
யேன... கெரகமா ... ஒங்களை கட்ட அப்பவாவது, எங்க மச்சான் மச்சக்காளையை கட்டிக்கிற மாட்டேன்.

அப்பக்கூட நீ காளையைத்தான் கட்டிக்கிருவியா ?
இஞ்சே பாருங்க, ஏதாவது இளக்காரமா பேசிக்கிட்டு திரிஞ்சீங்க, சோத்துல அரளியை கரைச்சு ஊத்திப்புடுவேன்.

நீ செஞ்சாலும் செஞ்சிடுவே உள்ளதை வையிடி, வெந்ததை தின்னுப்புட்டு விதி வந்தா சாகுறேன்..

சாம்பசிவம்-
ரம்பத்துலயே, கேட்டதுக்கு கிச்சடி வையினு சொல்லியிருந்தா...  இவ்வளவு பஞ்சாயத்து வருமா ?

CHIVAS REGAL சிவசம்போ-
இவன் பதிவர்கள்ட்ட அசிங்கப்படணும்னு விதி

நட்பூக்களே... இனி நக்கல், நையாண்டி, நெய்தல், நையப்புடைத்தல், நிலக்கரி, நீலகிரி, விக்கல், விருமாண்டி, குத்தல், குடைச்சல், கேலி, கிண்டல், வெட்டு, வேட்டு, கோடரி, கோதாவரி, தர்பார், தார்பாய், பீர்பால், மோர்பால், வித்தை, மோடிவித்தை, மோசடிவித்தை, எத்தன் வேலை, சித்தன் வேலை, எடக்கு, எகத்தாளம், மடக்கு, மத்தாளம், கைகலப்பு, கலகலப்பு, அதில் சலசலப்பு பிரச்சனைக்குறிய பிரச்சனைகள் பிரித்து மேய்ந்து மீண்டும் வேயப்படும் என்னுள் கொழுந்து விட்டு எரிந்தவை இனி கொளுத்தீப் போடப்படும் அதில் சிக்கி சீரழிந்து, சின்னாபின்னமாகி சீக்கு பிடித்து சீரழிபவர் சீர்காழியோ, சீக்காளியோ, முடுமையோ, முடுதாருவோ, கலைஞானமோ, அலமேலுவோ இல்லை அதுக்கும் மேலுவோ யாரோ... யாரறிவாரோ.... இனி அதிர்வேட்டுகள் ஆரம்பம் காரணம் குரு எட்டாம் ஸ்தானத்திலிருந்து இடப்பெயர்ச்சி கொண்டு விட்டான்.நாரதரின் கலகம் நன்மையில் முடியும்.
நாரதர் வருகிறார் பராக்.... பராக்.... பராக்....


டண்ட னக்கும்... டணக்கும் னக்கும்...
டண்ட னக்கும்... டணக்கும் னக்கும்...
டண்ட னக்கும்... டணக்கும் னக்கும்...
டண்ட னக்கும்... டணக்கும் னக்கும்...

அன்புடன்
தேவகோட்டையிலிருந்து... கில்லர்ஜி

வெள்ளி, நவம்பர் 25, 2016

இன்றே கடைசி


வனவாசமா ? பணவாசமா ?
எதுவாயினும். இன்றே கடைசி ஆம் எனக்கு U.A.E இன்றே கடைசி

U.A.E யில் கால் வைத்த தேதி 26.01.1996

U.A.E யை விட்டு கால் எடுத்த தேதி 25.11.2016

இந்த நாள் வரை சுமார் இருபது ஆண்டு காலம், என் இனிய INDIA வை விட்டு பணவாசம் வந்திருந்தேன் இப்பொழுது இந்த U.A.Eயை விட்டு சந்தோஷமாகப் போகிறேன்.

இந்த U.A.E க்கு வந்ததால் நான் பெற்றவை, பணம், பணம். முடிவில் போனஸாக பெற்றது மனஅழுத்தம் (PRESSURE) Extra & Extcetra.

இந்த U.A.E-க்கு வந்ததால் நான் இழந்தவை...

01. எங்கும், எதிலும் என் இனிய தமிழ் எழுத்துக்களை காண்பது.
02. பிறவிப்பயன் (தாம்பத்யம்)
03. என் உயிரினும் அரிய என் குழந்தைகளின் அரவணைப்பு.
04. உயிர் கொடுத்த தாயின் கையில் உணவருந்துவது.
05. சுற்றத்தாருடன் கூடி வாழும் வாய்ப்பு.
06. அறிந்தோரின், தெரிந்தோரின், திருமண வைபவம்.
07. சுற்றத்தாரின், அறிந்தோரின் கடைசி யாத்திரை.
08. காதுகுத்து.
09. சடங்கு.
10. இனிய தீபாவளி.
11. பொங்கல்.
12. புது வருடப்பிறப்பு.
13. ஆயுதபூஜை.
14. ரம்ஜான்.
15. பக்ரீத்.
16. கிரிஸ்துமஸ்.
17. கோவில் கும்பாபிஷேகம்.
18. திருவிழாக்கள்.
19. முளைக்கொட்டு.
20. வேஷ்டி உடுத்துவது.
21. வெடி போடுவது.
22. கொண்டக்கடலை.
23. கொழுக்கட்டை.
24. பாணக்கம்.
25. மோர்.
26. பதனீர்.
27. நுங்கு.
28. முந்திரிப்பழம்.
29. நவாப்பழம்.
30. கரும்பு.
31. பனங்கிழங்கு.
32. பழைய கஞ்சி.
33. துவையல்.
34. கம்மங்கஞ்சி.
35. கேப்பக்கூழ்.
36. நோன்புக்கஞ்சி.
37. சந்தனக்கூடு.
38. தேர்தல்.
39. பாட்டுக்கச்சேரி.
40. கரகாட்டம்.
41. தெருவில் சினிமா.
42. நாடகம்.
43. பட்டி மன்றம்.
44. மஞ்சு விரட்டு.
45. மாட்டு வண்டியில் பயணம்.
46. பிஞ்சுக் குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது.
47. மழலைமொழி கேட்டல்.
48. மாமன் மகள், அத்தை மகளுடன் கேலிப்பேச்சு.
49. மல்லிகைபூ மணம்.
50. கதிர் அறுப்பது.
51. களை எடுப்பது.
52. முளைப்பாரிபாட்டு.
53. தாலாட்டுப்பாட்டு.
54. ஒப்பாரிச்சத்தம்.
55. நாதஸ்வர ஓசை.
56. மார்கழி மாத கோலங்கள்.
57. ரயில் பயணங்கள்.
58. மழை.
59. தவளைச்சத்தம்.
60. ஓணான் பிடிப்பது.
61. தட்டாண் பிடிப்பது.
62. கண்மாயில் மீன்பிடிப்பது.
63. ஊரணியில் குளிப்பது.
64. இத்துடன், எனது நீண்ட கரிய ஹிப்பிமுடி.சாம்பசிவம்-
கண்ணை விற்று சித்திரம் வாங்குறவன்தான் நிறையபேர் இந்த சமூகத்துல வாழ்ந்துக்கிட்டு இருக்கான், அதுல நீரும் ஒருத்தரு U.A.E-யை விட்டு வெட்டிக்கிட்டு போறீரு இனியாவது ஊரோடு ஒட்டிக்கிட்டு வாழும் கண்போன பின்னே சூரிய நமஸ்காரமாம்.

Chivas Regal சிவசம்போ-
ஆயக்கலையும் 64 தான் ஜொள்ளு’’வாங்க...

காணொளி

நட்பூக்களே... இப்பதிவு உங்கள் பார்வைக்கு கிடைத்த இந்த நொடிதான் நான் இந்த நாட்டை விட்டு என் இந்தியாவை நோக்கி விமானத்தில் பறக்க தொடங்கிய நொடி 12.32 am

- விமானத்தின் உள்ளிருந்து... தேவகோட்டை கில்லர்ஜி
Related Posts Plugin for WordPress, Blogger...