ஞாயிறு, நவம்பர் 17, 2013

ஆணா ? பெண்ணா ?


கிளி, மாதிரி இருக்காளே
மயில், போல ஆடுறாளே
குயில், போல பாடுறாளே
மான், போல ஓடுறாளே
பெண்களைப்பற்றி, இப்படி நாலுவார்த்தை கௌரவமாக சொன்னவன் ஆண்களை மட்டும்,
யானை, போல நடந்து வர்றான் பாரு
குள்ளநரி, போல தந்திரக்காரன்
நாய், போல நன்றியானவன்
சிங்கம், போல தைரியமா போவான்
கழுதை, போல சுமக்கத்தான் லாயக்கு
மாடு, போல நல்லா உழைப்பான்
கழுகு, மூக்கு வேர்த்தது போல வருவான்
பன்றி, மாதிரி திங்கிறான் பாரு
குதிரை, மாதிரி நல்லா ஓடுவான்
ஒட்டகச்சிவிங்கி, மாதிரி வளந்திருக்கான்
ஆமை, மாதிரி நுளைஞ்சிட்டான்யா
நல்லபாம்பு, கிட்ட பழகுறமாதிரில இவண்
பச்சோந்தி, மாதிரி மாறிக்கிட்டே இருப்பான்
தேள், கொட்டுற மாதிரி பேசுவான்யா
காக்கா, பிடிக்கிறதுல சரியான ஆளுய்யா
கோழி, தவிட்டை முழுங்குறது மாதிரி முழுங்குவான்
ஆந்தை, போல முழிக்கிறான் பாரு
உடும்பு, பிடில பிடிக்கிறான்
திமிங்கலம், மாதிரி உடம்பை வளத்துருக்கான்
குரங்கு, மாதிரி தாவுறானே
என, ஏன் இப்படி கேவலமா சொல்லி வச்சான்  ?  ஒருவேளை இதையெல்லாம் சொல்லிவச்சது பெண்ணாக இருக்குமோ ?

Related Posts Plugin for WordPress, Blogger...