முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...
‘’அய்யோ... ஆத்தா...’’ சிவமணியின் அலறல் சத்தம் கேட்டு வடங்காடு கிராமமே எழுந்திருக்கும் அப்படியொரு
அலறல் அவனது கயிற்றுக் கட்டிலுக்கு அருகில் பாயை விரித்து படுத்துக் கிடந்த அவனது
ஆத்தா வீராயி திடுக்கிட்டு எழுந்து சிமிழி விளக்கை ஏற்றி விட்டு, ஏண்டா பேதியில
போக பொழுது சாய்ஞ்சா கணாக் கண்டுக்கிட்டு கத்தி ஊரைக்கூட்டுறியே எருமை மாடு நல்லா
பொழிகழுதை மாதிரி தின்னுப்புட்டு ஊரைச்சுத்துறியே... நான் காடு கரையில வேலை
செஞ்சுட்டு வந்து ஒனக்கு கஞ்சி ஊத்துறேன்ல.. என்னைச் சொல்லணும் காலாகாலத்துல
ஒனக்கு ஒரு கால்கட்டு போட்டாத்தான் நீ சரிப்பட்டு வருவே நாளைக்கே போறேன்
வலசைக்காட்டுக்கு எந்தம்பி மக கோமளவள்ளிய பரிசம் போட...