தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், நவம்பர் 24, 2020

களவு வாழ்க்கை

 

ணக்கம் நட்பூக்களே... நீங்கள் கேட்டவை (1984) என்ற திரைப்படத்தின் பாடலான கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் பாடல் குடும்ப சோகமானது இது சமூக அவலத்தை வைத்தே எழுதப்பட்டது பாடல் எழுதியவர் திரு. வைரமுத்து இசை திரு. இளையராஜா பாடியவர் திரு. கே.ஜே.யேசுதாஸ் கீழே பாடலின் அசல் வரிகளை நீல நிறத்தில் தந்து இருக்கிறேன் - கில்லர்ஜி

சனி, நவம்பர் 21, 2020

நான், நீ(நா)யாக...

 

உனக்கு கிடைத்த வாழ்க்கை
எனக்கு கிடைக்கவில்லை.
அடுத்த பிறவியிலாவது
நான் நீ(நா)யாகவும், நீ ஏதேனும்
பிறக்க வேண்டும். முக்கியமாக...
இதேபோல் அதிபருடன்...

செவ்வாய், நவம்பர் 17, 2020

எனது விழியில் பூத்தது (2)


  ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த இரண்டாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit)  செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி

சனி, நவம்பர் 14, 2020

இன்டா பச்சாய் கிலிகோரு...

ஒருநாள் பொழுது போகாமல் இணையத்தில் உலாவினேன் ஏதாவது திரைப்படத்தின் பாடலை உல்டா செய்து எழுதிக் குதறுவோம் என்று... நான் நீதியை மதிப்பவன் இல்லையா... ஆகவே நீதிக்கு தலைவணங்கு என்ற திரைப்படத்தின் பாடலை தேடிப்போனேன். அங்கு போனால் அதில் எழுதி இருப்பது தமிழ்மொழியா ? இல்லை தாய்லாந்து மொழியா ? என்ற குழப்பம் வந்து விட்டது அம்பூட்டு லந்து பண்ணி வச்சு இருக்காங்கே....

திங்கள், நவம்பர் 09, 2020

ருசியான வசியம்


மருமகனுக்கு மாமியார் வீட்டில்
ருசியா விருந்து வைத்தது அந்தக்காலம்
வசிய மருந்து வைப்பது இந்தக்காலம்.

தனது மகளை மாப்பிள்ளைக்கு
வாஞ்சையோடு கட்டிக் கொடுத்தார்கள் அன்று
வஞ்சகத்தோடு கூட்டிக் கொடுக்கின்றார்கள் இன்று.

வியாழன், நவம்பர் 05, 2020

முதலாளியும், தொழிலாளியும்


01. பிறவியை பலனுள்ளதாக ஆக்க வேண்டுமென்ற ஞானம் இருபது வயதில் தோன்றினால் பயனுண்டு

02. பிறவியை பாழாக்கி விட்டோமே என்ற புத்தி ஐம்பது வயதில் வந்தால் பயனில்லை

ஞாயிறு, நவம்பர் 01, 2020

சேவலும், கோழியும்


ம்ம ரங்கதுரை, செல்லத்துரை மேல வழக்கு போட்டுட்டானாமே ஏண்ணே ?
ஆமாடா தம்பி செல்லத்துரை கோழி வளர்க்கிறான் பக்கத்து வீட்டுல இருக்கிற ரங்கதுரை சேவல் பண்ணை வச்சு இருக்கிறான்ல... இதுல செல்லத்துரை கோழிகள் ரெண்டும் பண்ணையில் உள்ள சேவல்களோட கொஞ்சம் அப்படி, இப்படி இருந்துருக்கும் போல... இதுல செல்லத்துரைக்கு தினம் இரண்டு முட்டை கிடைச்சு இருக்கு. இது எங்க சேவலோட முட்டைனு சொல்லி ரங்கதுரை கேட்டு இருக்கான்.