ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

ஈட்டி மரம்


இறைவன் இந்தப் பிறவியை எனக்கு இந்த தருணத்தில் கொடுத்தமைக்கு முதற்கண் நன்றி காரணம் நேற்று எனது தாத்தாவோ, எனது தந்தையோ, நாளை எனது மகனோ, எனது பேரனோ பெறாத பெரும்பேறை நான் பெற்றிருக்கிறேன் ஆம் எனது மூதாதையர்கள்
Flight டில் பறந்ததில்லை,
Cool drinks குடித்ததில்லை,
Pizza சாப்பிட்டதில்லை,
Pant-Shirt, Chudidhar போட்டதில்லை,
Fume மெத்தையில் படுத்ததில்லை,
Lift டில் ஏறிப்போனதில்லை,
3D Cinema பார்த்ததில்லை,
Weston Toiletடில் போனதில்லை,  
Computerரை தொட்டதில்லை,
Shaver pathதில் குளித்ததில்லை,
இதைப் போலவே.... நாளை எனது சந்ததிகள்....  
மாட்டு வண்டியில் போகப் போவதில்லை,
கம்மங்கூழு குடிக்கப் போவதில்லை,
கேப்பை ரொட்டி தின்னப் போவதில்லை,
வேஷ்டி-சேலை கட்டப் போவதில்லை, 
கயிற்றுக் கட்டிலில் படுக்கப் போவதில்லை,
ஏணிப்படி ஏறப் போவதில்லை,
தெருக்கூத்து பார்க்கப் போவதில்லை,
கம்மாக்கரையில் ஒதுங்கப் போவதில்லை,
அரிச்சுவடியை தொடப் போவதில்லை
ஊரணியில் குளிக்கப் போவதில்லை,
ஆயினும் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டு வாழ்வாதாரத்தின் முக்கியமாக கொடுக்க வேண்டியதை கொடுத்தெடுத்து ஈ கூட நெருங்காத ஈட்டி மரம் போல் உயிரற்ற ஜடமாக்கி விட்டாயடா சண்டாளா !

Chivas Regal சிவசம்போ- (தனக்குள்)

நடக்கும் போது பார்த்தேனே.... அப்படீனா இதுதான் நடைபிணமா ?

வெள்ளி, பிப்ரவரி 26, 2016

நான்தான் கடவுள்


கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்

கடவுளும், மனிதனும்.

நான் கடவுள் இந்த உலகத்தை நான்தான் படைத்தேன் உனக்கு என்ன வேண்டும் ?
உனக்கு என்ன வேண்டும் ?
(தனக்குள் என்ன இவன் ? தமிழ் தெரியாதோ சரி இங்கிலீஷ்ல கேட்போம்)
I am “God” I created this world what you want ?
What you want ?
(தனக்குள் கொல்ட்டியா இருப்பானோ ? தெலுங்குல கேட்போம்)

నేను దేవుడు లోకము చేసినాను నీకు ఏమి కావాలి ?

நேனு தேவுடு நீ ஈ லோகம் சேசினானு நீக்கு ஏமி காவாலி ?
నీకు ఏమి కావాలి ?
நீக்கு ஏமி காவாலி ?
(தனக்குள் கஞ்சியா இருப்பானோ ? மலையாளத்தில கேட்போம்)
ഞാൻ ദൈവമാന്നു ഈ ലോകത്തേ ഞാൻ ഉണ്ഡാക്കി നിനക്കു എന്താനു വേണ്ഡതു ?
ஞான் தைய்வமானு ஈ லோகத்தே ஞான் உண்டாக்கி நினக்கு எந்தானு ? வேண்டது
നിനക്കു എന്താനു വേണ്ഡതു ?
நினக்கு எந்தானு ? வேண்டது
(தனக்குள் ஆஹா வேற மாதிரியிலே போகுது... எதுக்கும் கன்னடத்துல கேட்போம்)
நேன்னு தெய்வா ஈ உலகனா நாதெ உண்டாக்கிதே நிங்கே யாத்துரு பேக்கு ?
நிங்கே யாத்துரு பேக்கு ?
(தனக்குள் ஒரு வேளை வடக்கே உள்ளவனோ ? ஹிந்தியிலே கேட்போம்)
मे भगवान हुं यि दुनिया मे बनाया मागो, तुमको क्या चाहिय ?
மே பஹ்வான் ஹூம் ஏ துனியா மே பனாயா மாஹோ தும்க்கோ க்யா ஸாகியே ?
तुमको क्या चाहिय ?
தும்க்கோ க்யா ஸாகியே ?
(தனக்குள் தாளன் கொம்பாவுல இருக்கு புலியா இருக்குமோ ? சிங்களத்துல கேட்போம்)
மம தேவிய மே லோகே அதுவே வாடே மொனவாத வோனே ?
வாடே மொனவாத வோனே ?
(தனக்குள் வடிவேலு சினிமா பார்த்திருப்பானோ ? ஏரியாவே வேற இருக்குமோ ? அப்ப பிலிப்பைன்ஸ் தகாலன் மொழியில் கேட்போம்)
Ako ang panginoon  Ginawa ang mundo  ano ang Gusto mo ?
அஹோ ஆங் பாங்கிநூன் கினவா ஆங் முண்டோ அனோ ஆங் குஸ்தோ மோ ?
Ano ang Gusto mo ?
அனோ ஆங் குஸ்தோ மோ ?
(தனக்குள் என்ன இது நமக்கே ஒன்னும் புடிபடலே ? சோனத்தாளனா இருக்குமோ ? அரபியிலே கேட்போமா ? வேண்டாம் இவன் பேச்சைப் பார்த்தால் தேவகோட்டைக்காரன் மாதிரி இருக்கு தமிழ்ல பேசி கொஞ்சம் விளையாண்டுதான் பார்ப்போமே)
ஏம்பா நீ எந்த ஊரு ?
யாதும் கோட்டை யாவரும் தேவா.
(தனக்குள்.... ஆஹா அவன்தானா ? இவன்)
ஏம்பா கேக்குறதுக்கெல்லாம் குண்டக்க மண்டக்க பதில் சொல்லுறியே நீ யாரு ?
பார்த்தீபம் தெரியவில்லை உனக்கு நான்தான் கடவுள்.
அய்யோ சாமி ஆள விட்றா.....

கடவுள் ஓடுகிறார்.... ஓடுகிறார்.... ஓடியே விட்டார்.
நண்பா நண்பி இந்த விசயத்தை அரபியில் எனக்கு சொல்லவும் தெரியும் எழுதவும் தெரியும் இருப்பினும் சொல்லவில்லை ஏனெனில் எனக்கு தமிழனைப் பற்றியும் தெரியும் ஆம் இந்த விசயத்தை அரபியில் சொல்லும்போது நான் ஒரு முரண்பட்ட விசயத்தை எத்தி வைத்ததைப் போல மதப் பிரச்சினையை கிளப்பி விடக்கூடும்.

Anyway...

அந்த விசயத்திற்க்கு சொல்லி விட்டேன்
مــــع الـسلامــــــة
 (மாசலாமாஹ் MEANING of GOOD BYE)
என்னால் ஒரு மதப்பிரச்சினைக்கு உதவ முடியுமானால் அதைவிட சந்தோஷம் இந்த உலகில் வேறென்ன ? இருக்க முடியும் அப்படிப்பட்ட நான் ஒரு மதப்பிரச்சினை உருவாக காரணமாய் இருக்க விரும்பவில்லை.
தூண்டி விட்ட முனைவர் அவர்களுக்கு நன்றி. 
சாம்பசிவம்-
சரி இந்த மதப் பிரச்சினையை தீர்க்கவே முடியாதா ?
Killergee-
முடியும்.
சாம்பசிவம்-
முடியுமா எப்படி ?
Killergee-
அது விஞ்ஞானிகளால் மட்டுமே முடியும்.
சாம்பசிவம்-
விஞ்ஞானிகளால்..... எப்படி ?
Killergee-
நிச்சயமாக முடியும். பிற்காலத்தில் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கும் வேறு வகையில் பயன் பெறக்கூடும்.
சாம்பசிவம்-
எப்படி ?
Killergee-
Wait & See…

குறிப்பு – வில்லங்கத்தார்களுக்கு மலையாளத்தில் சிறிய பிழைகள் உண்டு    காரணம் எனது பான்ட் கார்த்திகா.

புதன், பிப்ரவரி 24, 2016

வீராணம், வீச்சருவாள் வீராயி


எனக்கு யாரையாவது காதலிக்க வேண்டுமென ஆசை வந்து விட்டது இதனால் டிப்-டாப்பாக ட்ரெஸ் செய்து கொண்டு காலேஜ் வாசலில் போய் நின்று கொண்டேன் ஒருத்தியை மட்டும் இரண்டு வாரமாக தொடர்ந்து கொண்டே இருந்தேன் சட்டென நின்றவள்...
என்ன ?
இல்லை.... அது... வந்து உங்களை எனக்கு பிடிச்சுருக்கு நாம கல்யாணம் செய்துக்கிறலாமா ? 
சட்டென கேட்டு விட்டேன் ஒரு கணம் என்னை தீர்க்கமாக பார்த்தவள்.
பரவாயில்லையே நேரடியா கல்யாணத்துக்கே போயிட்டே ஆமா... பேரென்ன ?
அ............
ச்சூ சரியா வராது.
ஏன் ?
நாம ரெண்டு பேருமே வேற மதம் எங்க வீட்ல ஒத்துக்கிற மாட்டாங்க அதனால இனிமே என் பின்னால வரவேண்டாம்.
ஏங்க அது வந்து..
இதோ பார் முடிஞ்சுருச்சு இனிமே என் பின்னாலே வந்தே செருப்படி விழும்.
அவள் போய்க் கொண்டே... இருந்தாள் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் ச்சே என்ன இது... சட்டுனு இப்படிச் சொல்லி விட்டாளே.... சரி போகட்டும் வேற எவளையாவது பார்க்கலாம் இனிமே நேரடியாக பேசவேண்டாம் லட்டர் கொடுத்துருவோம் சரியென அடுத்த ஒரு வாரத்துக்குள் ஒருத்தியை தேர்வு செய்தேன் லட்டரில் எனது பெயர் விபரங்களை எழுதி அவளிடம் கொடுத்து விட்டு சட்டென போய் விட்டேன் மறுநாள் அவளுக்காக மரத்தடியோரம் நின்றிருந்தேன் அவளும் நேராக என்னிடம் வந்தாள் அவள் கையில் லட்டர் இருந்தது என்னிடம் கொடுத்தாள் நானும் சந்தோஷமாக வாங்கி பிரித்தால் ? நான் கொடுத்த அதே லட்டர்
என்னங்க இது நான் கொடுத்ததையே திருப்பித் தர்றீங்க ?
என்ன இது ?
ல... லவ் லட்டரு
யாருக்கு ?
உங்களுக்குதாங்க...
இங்கே பார் இந்த விசயமெல்லாம் எங்க வீட்டுக்கு பிடிக்காது.
இல்லேங்க நான் உண்மையிலேயே காதலிக்கிறேன்.
நீங்க என்ன ஆளுக ?
என்னது ?
என்ன ஜாதினு கேட்டேன் ?
கௌதாங்கி.
அதுசரி இது வேறயா.... நாங்க சங்குனி ஜாதி எங்க குடும்பத்துல எதுக்கெடுத்தாலும் ஆச்சாரம் பார்ப்பாங்க சரியா வராது.
இல்லே நான் உங்களை கல்யாணம் செய்துக்கிறேன்.
இதோட நிறுத்திக்க ஏதோ சங்குனி ஜாதிக்காரிதானே மங்குனி மாதிரி இருப்பான்னு கணக்கு போடாதே சங்கே அறுத்துப்புடுவேன் ஓடிரு.
சொல்லி விட்டு நடையை கட்டி விட்டாள்... ச்சே என்ன இது இவ்வளவு மோசமா பேசிட்டுப்போறா.. என்ன செய்யலாம் ? மதமும் பிரச்சனை ஜாதினு வந்தாலும் பிரச்சனை பொறுமையாத்தான் கையாளனும் பெயரை மாற்றியாகணும் அப்பத்தான் சரியா வரும். வேற காலேஜ் பக்கமா போயிடுவோம் புதுசாபோன காலேஜ்ல முதல் நாளிலிருந்து ஒருத்தி என்னையே பார்த்துக்கிட்டு இருந்தாள் சரி இவளும் நல்லாத்தான் இருக்காள் நேராக அவளிடம் போய்...
ஐ லவ் யூ 
என்றேன் அவள் சிரித்து விட்டு போய் விட்டாள் மறுநாள்
ரெஸ்டாரண்ட் போகலாமா ? 
எனக்கேட்டேன் தலையாட்டி விட்டு கூடவே வந்தாள்.
என்ன சாப்பிடலாம் ஐஸ்க்ரீம் ?
ம் தலையாட்டினாள்.
பேரர் இரண்டு வெண்ணிலா கொண்டு வாங்க 
ஆர்டர் கொடுத்து விட்டு
உன் பேரென்ன ?
வெண்ணிலா.
நான் பேரைக் கேட்டேன் ?
அதான்...
பேரே வெண்ணிலாவா எனக்கு பிடிச்சுருக்கு.
ம்... உங்க பேரென்ன ? 
என்றாள் நான் சுதாரித்துக் கொண்டு
சிவாதாமஸ்அலி 
என்றேன் அவள் என்னைப் பார்த்து மிரண்டாள்.
என்ன ஒரு மாதிரியா... பார்க்கிறே ?
ஒண்ணுமில்லே... ஒரு நிமிஷம் கை கழுவிட்டு வர்றேன்.
ரெஸ்ட்ரூம் போனவள் கால்மணி நேரமாச்சு வரவில்லை போய் பார்த்தால் ? யாரும் இல்லை ஆர்டர் கொடுத்ததை நானே தின்று விட்டு வெளியே வந்தேன் மறுநாள் அவளுக்காக காத்திருந்தேன் என்னைக் கண்டதும் ஒதுங்கினாள் நான் நேரே போய் கேட்டேன்
என்ன நீ திடீருனு காணாம போயிட்டே ?
இங்கே பாருங்க இனிமே எம்பின்னாலே வராதீங்க.
ஏன் ?
உங்ககிட்ட நிறைய குழப்பம் இருக்கு, பேரே சரியில்லே.
அது வந்து... நான் ஏன்.. அப்படிச்சொ....
வேண்டாம் அடுத்து எங்கிட்டே பேசினே எங்க அப்பா தெரியுமா ? உலியாசாரி அவர்ட்ட சொன்னா குத்த மாட்டாரு கொத்திடுவாரு ஜாக்கிரதை.
போய் விட்டாள் பேரைக் கேட்டதும் கிலியாகி விட்டது இவள் உலியாசாரி மகளா ? பேரை மாற்றியும் பிரச்சனையா ? நமக்கு இந்த காதலே வேண்டாம். நம்ம வீராணம் அத்தை மகள் வீராயியை கட்டிக்கிட்டா கருதறுத்தாவது கஞ்சி ஊத்துவா போதுமடா சாமி. 

CHIVAS REGAL சிவசம்போ-
காதல்ல இவ்வளவு சமாச்சாரம் இருக்கா... நம்ம அந்த ரூட்ல போகாததுனால ஒண்ணும் தெரியாமே போச்சே....

திங்கள், பிப்ரவரி 22, 2016

கண்டனப்பேரணி


நண்பர்களே... நண்பிகளே... இந்தமுறை நாட்டுக்கு வந்திருந்த பொழுது நானும் தொலைக்காட்சி நாடகத்தை கண்டே தீரவேண்டும் என்ற துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டேன் இவைகளை வருடக்கணக்காக இழுத்துக் கொண்டு போவதின் மர்மம் எனக்கு பிடிபட்டது அதாவது ஒரு பெண் அவள் வயது 28 இருக்கலாம் அந்த வீட்டின் மொட்டை மாடியில் இரு ஆடவர்களுடன் அவர்களுக்கும் தலா 35 முதல் 37 வரை இருக்கலாம் அவள் தனது கடந்த காலத்தில் நடந்த கோல்மால்களை இவர்கள் இருவருக்கும் எடுத்துச் சொல்கிறாள் அதொன்றும் நான் கண்டவரை பெருமைப்படும் விடயங்கள் இல்லைதான் மகா கேவலமான விடயமே அதனால் அதைப்பற்றி நான் விவரிக்க வேண்டாமென நினைக்கிறேன் பிறகு தொடரும் போட்டு விட்டார்கள் பிறகு மற்றொரு நாடகம் ஆரம்பிக்கிறது எப்படியோ பொழுதைப் போக்கி...

மறுநாள் கோவை போனேன், பிறகு, புதுக்கோட்டை, சென்னை, மதுரை, திண்டுக்கல், கீழக்கரை, பாம்பன், பரமக்குடி, இப்படி பதிவர்கள் சந்திப்பு சொந்த பந்தங்கள் வீட்டுக்கு எல்லாம் போய்விட்டு மீண்டும் தேவகோட்டை வந்து விட்டேன் மாலை வழக்கம் போல அம்மா நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் உள்ளே வந்து தொலைக் காட்சியைப் பார்த்த எனக்கு வந்ததே கோபம் சுமார் 12 நாட்கள் கடந்திருக்கும் அந்தக் கேடுகெட்ட சிறுக்கி இன்னும் அதே மொட்டை மாடியில் நின்றுகொண்டு கதை சொல்லிக் கொண்டு இருக்கின்றாள் எனது அம்மாவின் முகத்தைப் பார்த்தேன் எந்த சலனமும் இல்லாமல் கதையில் ஒன்றிப் போய் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்னையா ? இது ஒரு வரைமுறை வேண்டாமா ? அடராமா இவர்கள் ஒரு வாரமாக மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்தால் பார்க்கும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன நினைப்பார்கள் சரி ஒரு வாரமாக இவர்கள் சாப்பிட வில்லையா ? குளிக்க வில்லையா ? மற்ற காலைக்கடன்கள் தீர்க்க வில்லையா ? நல்ல குடும்பத்துப் பெண்கள்கூட இந்த வகையான காட்சிகளை பார்த்துதான் நாமும் இதுபோல் மொட்டை மாடியில் நின்று பேசலாம் தவறில்லை என்று நினைப்பதுடன் வெளியிடங்களுக்குப் போனால் நாமும் இதுபோல் தங்கி விட்டு வரலாம் என்ற சிந்தனையை கொடுக்கிறது இவ்வகையான காட்சிகள் சமூக நலனுக்கு கேடுகளை விளைவித்து எதிர்கால இளம் தலைமுறைகளை தவறான வழியில் இழுத்துச் செல்கிறது.

ஆகவே இதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு மாபெரும் கண்டன பேரணியை இம்மாதம் பிப்ரவரி 31-ஆம் தேதி இந்தியாவின் தலைநகர் டெல்லி பாராளுமன்றத்தின் முன்பு நமது வலைப்பூ நண்பர்களை ஒன்று திரட்டி நடத்தலாம் என திட்டமிட்டு அதற்காக நமது டெல்லி வலைப்பதிவர் உயர்திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் தலைமையில் நடக்கிறது பதிவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொல்கிறேன்.

அன்புடன் 
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
Related Posts Plugin for WordPress, Blogger...