திங்கள், செப்டம்பர் 19, 2022

ஆயிரத்தில் கில்லர்ஜி

ணக்கம் நட்பூக்களே எமக்கு இது ஆயிரமாவது பதிவு (1000) தங்களது பேராதரவே எமது இந்த சிறிய சாதனைக்கு சாத்தியமாயிற்று. இதில் உங்களுக்கு பயனாக  நான் என்ன செய்தேன் ? என்பதை தாங்களே சொல்ல வேண்டும். அப்படி நானென்ன எழுதி விட்டேன் ? என்னை நானே கேட்டு கேள்விக்கென்ன பதில் கிடைத்தவைகள் இதோ...

வெள்ளி, செப்டம்பர் 16, 2022

கண்ணாடித்திரை

01. இப்பொழுதெல்லாம் மகன்களுக்கு திருமணம் செய்த மறுநாளே தனிக்குடித்தனம் வைப்பதே மரியாதையாகிறது.

செவ்வாய், செப்டம்பர் 13, 2022

வெட்கத்தின் அழகே...

வெட்கம் என்றும் எனக்கில்லையே
வெட்கப்படும் வெங்கலச்சிலையே
வெள்ளை நிற வெள்ளிச்சிலையே
வெண்ணை வனப்பு வண்ணகலையே

வெள்ளி, செப்டம்பர் 09, 2022

எனது விழியில் பூத்தது (7)

  

  வணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஏழாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit)  செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி
 
வாருங்கள் ரசிப்போம்...

திங்கள், செப்டம்பர் 05, 2022

காந்தி சிலை அழுகிறது...

ணக்கம் நண்பர்களே... ‘’அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’’ என்ற வைரமுத்துவின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 

வியாழன், செப்டம்பர் 01, 2022

கொங்காமட்டை

வணக்கம் அண்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடா கொங்காமட்டை நல்லா இருக்கேன்டா... என்ன விசயம் ?
 
சில சந்தேகம் இருக்குணே அதான் கேட்கலாம்னு வந்தேன்.
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.

சனி, ஆகஸ்ட் 27, 2022

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2022

கன்னியும், கணினியும்


       01. அன்று பாடல்களில் தேனிசையாய் சந்தம் கொடுத்தார்கள்.
இன்று பாடல்களில் தேள் கடியாய் சத்தம் கொடுக்கிறார்கள்.

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2022

நெடும் பயணம்

 

நானும் பயணிக்க தொடங்கி விட்டேன்
என்னுடன் எனது நண்பனும் வருகிறான்
பெட்ரோலின் விலை நாளும் உயர்கிறதே

திங்கள், ஆகஸ்ட் 15, 2022

உண்மையான சுதந்திரமா ?

 

மது நாடு சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் (75) கடந்து விட்டது இருப்பினும் இன்றைய தினத்தை அரசு சுதந்திரமாக கொண்டாடுகிறதா ? பல்லாயிரம் காவலர்களை பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு தில்லியில் மட்டுமின்றி நாட்டின் தலைநகரங்கள் எங்கும் கொண்டாடுகிறது.

வியாழன், ஆகஸ்ட் 11, 2022

அண்ணன் நாகேந்திரன் (4)

 

முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
இஸா (1) டலுவா (2) தட்லூ (3)
 
முன்பு... காத்திருந்தேன் ரோஸ்லின் வரவுக்காக....
 
சிறிது நேரத்தில் ரோஸ்லின் வந்தாள்..
ஹாய் அத்தான் கொமஸ்தகே ?
ஹாய் அத்தான் சௌக்கியமா ?

திங்கள், ஆகஸ்ட் 08, 2022

அண்ணன் நாகேந்திரன் (3)

 
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
 
முன்பு... ம்ம்.. சிங்கம் போல் உட்காந்திருந்தேன்....
சொல்லுங்க கில்லர்ஜி... ?
இல்லைணே இனிமே உண்மையான பெயரையே சொல்லிடுறேன்.
இனி சொல்றது இருக்கட்டும் மேனேஜர் வரும்போது இவளுகள் இப்படி கூப்பிட்டால் ?
அவளுகள்ட்ட சொல்லுங்கண்ணே அப்படி சொல்லக் கூடாதுனு...

வியாழன், ஆகஸ்ட் 04, 2022

அண்ணன் நாகேந்திரன் (2)


முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக...
 
முன்பு... ஆங்... சூப்பர்வைசர் நாகேந்திரன் வந்து கொண்டிருந்தார்....
 
வேகமாக, நண்பர்கள் நிற்கும் இடத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தேன் நர்சிங் ஸ்டேஷன் வளைவில் சூப்பர்வைசர் நாகேந்திரன் கில்லர்ஜி என்று பக்கத்தில் ஸ்டோர் ரூமுக்குள் அழைத்தார்.

திங்கள், ஆகஸ்ட் 01, 2022

அண்ணன் நாகேந்திரன் (1)


உண்மைச்சம்பவம் 1996 அபுதாபி அல் முனியாண்டி மருத்துவமனை.
 
வார்டு மூன்று பேஷண்ட் ரூம் லேபர்கள் நான்கு பேருக்கும் ஏற்கனவே பிலிப்பைன்ஸ் (பெயர் லூஸ்வி மிண்டா) லேடீஸிடம் (Yours Hero) சொல்லி விட்டுச் சென்றதால் அவள் ட்ரேயில் கொண்டு வந்து தந்த ஐந்து தேநீரில் நான்கு பேரும் எடுத்துக் கொள்ள மீதம் ஒன்று இருக்க.... சூப்பர்வைசர் திரு. நாகேந்திரன் வந்து விடுகிறார் அவளிடம் ஆங்கிலத்தில் கேட்கிறார்...

புதன், ஜூலை 27, 2022

மறு கலை தாகம்

 

ணக்கம் நண்பர்களே... ‘’வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது’’ என்ற டி.ராஜேந்தரின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
 
இதோ எனது பாடல்...

சனி, ஜூலை 23, 2022

எலையை விட்டு எந்திரி...

 
நாம் எவ்வளவுதான் சிந்தித்து வாழ்க்கையை கடந்து வந்தாலும் ஒவ்வொரு தினமும் நாம் ஏதாவது பாடத்தை படித்துக் கொண்டே வருகிறோம். மேலேயுள்ள புகைப்படச்செய்தி எனக்கு மிகப்பெரிய தெளிவைக் கொடுத்தது. இதென்ன பெரிய விடயமா ? என்று சிலர் நினைக்க கூடும். இந்த வளையத்துக்குள் வந்து நிற்பவர்களுக்கு மட்டுமே இந்த எழுத்தின் வீச்சு புரியும், இதன் ஆழம் தெரியும் மற்றவர்களுக்கு இதுவொரு வாசகம் மட்டுமே

செவ்வாய், ஜூலை 19, 2022

சதிகள்

என்னடா மாப்ளே டாடா மாதிரி உள்ளவர் மகளைத்தான் கட்டுவேன்னு மும்பைக்கு போனியே என்னாச்சு ?
போடா அவள் டாட்டா காண்பிச்சுட்டு போயிட்டாடா.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

வெள்ளி, ஜூலை 15, 2022

கொடைக்கானல் கோரமண்டல்

டம் கொடைக்கானல் கோரமண்டல் ஹோட்டல் அறை எண் 1012 உள்ளே இயக்குனர் சாம்பசிவம், இசையமைப்பாளர் சிவாதாமஸ்அலி, பாடலாசிரியர் Chivas Regal சிவசம்போ, டைனிங் டேபிளில் பரிவாரங்களோடு... தி கிரேட் வொண்டர்ஃபுல் ப்ரொட்யூஷரின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

திங்கள், ஜூலை 11, 2022

பதிகள்

போலீஸ்காரரை திருமணம் செய்தது தப்பா போச்சா... ஏண்டி ?
ஆமாடி எதற்கெடுத்தாலும் லாக்கப்ல வச்சு கும்மிடுவேன்னு சொல்றார்டி.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

புதன், ஜூலை 06, 2022

டிக்கி லோனா

 

ஜனவரியில் ஜனித்த ஜனனியோ
பிப்ரவரியில் பிறந்த பிரியாவோ
மார்ச்சில் மாறிடாத மாலாவோ

ஞாயிறு, ஜூலை 03, 2022

வேட்டும், வேதமும்

ணக்கம் நண்பர்களே... ‘’பாட்டும் நானே பாவமும் நானே’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

புதன், ஜூன் 29, 2022

தைவான், தைமகள் தையல்நாயகி

சித்திரையில் உதித்த முத்திரை நிலவே
வைகாசியில் வளர்ந்த வைதேகி மலரே
ஆனியில் முளைத்த ஆசைக் குயிலே

சனி, ஜூன் 25, 2022

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (2)

முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக தேவகோட்டை இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

செவ்வாய், ஜூன் 21, 2022

நம்புவோருக்கு நாராயணன்

 

இரவு 11:15 மணி கல்லல் பேருந்து நிலையம் இரவு நேர ரோந்துப் பணியில் தனது பரிவாரங்களோடு வருகிறார் இன்ஸ்பெக்டர் நாராயணன்.
 
அந்த கல் மேலே உட்கார்ந்து இருக்கிறவனை கூட்டிட்டு வாயா...
அருகில் வந்ததும் தலையில் கட்டிய துண்டை அவிழ்த்து விட்டு ஒரு கும்பிடு போட்டான்.

வெள்ளி, ஜூன் 17, 2022

ஆனந்தம் பொங்கட்டும்புதாபி நண்பர் குடும்பத்தோடு அங்கு வாழ்கிறார். இந்தியாவில் உள்ள தனது வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு மற்றும் வங்கிக்கான குறுஞ்செய்திகளுக்கு எனது அழைபேசிக்கு வருவது போல் செய்து விட்டு போய் விட்டார். அவரது குடும்பத்துக்கான சில செலவுகளை நான்தான் பார்த்துக் கொள்கிறேன். இருப்பினும் செலவு செய்ய வேண்டிய அவசியங்கள் பெரும்பான்மையாக வராது காரணம் குடும்பம் அங்கு இருப்பதால்...

திங்கள், ஜூன் 13, 2022

தர்மாவின் கர்மா

நீ செய்த பாவத்தை நீ கடந்தே தீரவேண்டும். நான் ஒரு பாவமும் செய்யவில்லையே என்று கதறலாம். பாவங்கள் உனது அகக்கண்ணுக்கும், முகக்கண்ணுக்கும் அறியாத Wi-Fi போன்ற ஊடல்கள். இதை இறைவன் மட்டுமே அறிவான். ஓர் தினம் நீயும் அதை காணவோ, உணரவோ வேண்டிய தருணம் வரும் அன்று நீ இறைவனின் திருப்பாதத்தில் இளைப்பாறளுக்கு வேண்டி நிற்பாய்.

வியாழன், ஜூன் 09, 2022

நாட்டுக்கோட்டை, நாட்டாமை நாதமுனி

ஊர் நாட்டாமை நாதமுனியின் மகன் மைனர் குஞ்சு ஊரில் இழுத்து வந்த ஏழரையால் ஊர் கூடி நாட்டாமையை பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள் அந்த வேதனையில் நமது நாதமுனி ஊடகழி கடந்து இருபது வருடங்களாக தான் பஞ்சாயத்து நடத்திய ஆலமரத்தின் கீழ் நின்று பாடுகிறார். இதை எந்த ராகத்தில் பாடினால் பொருந்தும் என்பதை திரு ஸ்ரீராம்ஜி அல்லது சகோ திருமதி கீதா ரங்கன் அவர்கள் இப்பொழுது மேடைக்கு வந்து சொல்வார்கள் என்று விழாக்கமிட்டியாரால் எதிர் பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, ஜூன் 05, 2022

ஐயா நீ சாப்பிட்டியா ?

வலையும், மகிழ்ச்சியும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது இதை சந்திக்காத மனிதர்களே கிடையாது இவைகளை இறைவன் கலந்தே கொடுக்கின்றான். ஆயினும் எனக்கு மட்டும் இறைவன் மகிழ்ச்சியை மிகவும் குறைந்த பட்சமாகவே அளித்துள்ளான். அதேநேரம் கவலைகளையும், வேதனைகளையும், துன்பங்களையும் நிறைவாகவே கொடுத்துள்ளான். இவைகளின் அடிப்படை எனது நேர்மையான வாழ்க்கையே...

புதன், ஜூன் 01, 2022

இறந்தவனும், சுமந்தவனும்ணக்கம் நண்பர்களே... இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான்’’ என்ற கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் இது திரைப்பட நடிகர் திரு. எஸ்.ஏ.அசோகன் அவர்கள் நான் எனது அப்பா வயிற்றில் இருக்கும்போதே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

திங்கள், மே 30, 2022

சென்று வா அம்மா

 

னது அம்மா கடந்த செவ்வாய்க்கிழமை காலை மரணம் அடைந்து விட்டார்கள். ஒரு மாதமாக உடல் நலமில்லாமல் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு இறந்து விட்டார்கள். எனது அம்மா விரைவில் இறந்து விடவே இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன் காரணம் அவர்கள் பட்ட சிரமத்தை என்னால் காண முடியவில்லை.

சனி, மே 21, 2022

பேரறிவாளன் விடுதலை

பேரறிவாளன் அழகிய பெயர் செயல்தான் சரியில்லை மிகப்பெரிய கொலைக் குற்றத்தின் முக்கிய குற்றவாளி. இவரை விடுதலை செய்தது (18 May 2022) சரி என்றோ, தவறு என்றோ வாதம் செய்யும் பதிவல்ல இது முப்பத்தி ஒன்று (31) ஆண்டு காலம் சிறை இது முறையா ? அன்றே இவரை தூக்கிலிட்டு இருந்திருந்தாலும் அவர் மறுபிறவி எடுத்து பிறந்துகூட இருக்கலாம்.

செவ்வாய், மே 17, 2022

எனது விழியில் பூத்தது (6)

 

  ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஆறாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி

வெள்ளி, மே 13, 2022

உபத்திர புத்திரன்

ணக்கம் நண்பர்களே... முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’’ என்ற கவிஞர் அ.மருதகாசியின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

திங்கள், மே 09, 2022

கூத்தாடிகள், காத்தாடட்டும்

   ணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? இந்த விபச்சார ஊடகங்களின் வார்த்தை பிரயோகத்தை எவன் இங்கே அதிர்ச்சி அடைஞ்சு இருக்கான் ? பெத்த தகப்பன் செத்துப் போயிட்டதாக சொன்னாக்கூட அப்படியா ? என்று சாதாரணமாக கேட்கிறான். இங்கே என்னடான்னா.. இவங்கே பகுசிக்கு பஞ்சர் பார்க்கிறாங்கே...

வியாழன், மே 05, 2022

சர்வதேச உதவி

ட்பூக்களே... வணக்கம் நாம் மாரியம்மன், காளியம்மன், முனியய்யா கோயில்களில் பக்தர்கள் பூக்குழி (தீமிதித்தல்) இறங்குவதை பார்த்து இருக்கிறோம். அதில் பல நூறு நபர்கள் நடப்பார்கள் அதாவது ஓடுவார்கள் என்பதே உண்மை. காரணம் தீயின் உக்கிரம் மேலும் இத்திருவிழாக்கள் நிகழ்வது கத்திரி வெயில் காலமாகத்தான் இருக்கும்

ஞாயிறு, மே 01, 2022

உள்ளதெல்லாம் பொய்

  நான் பல பெண்களிடமும் பார்த்து விட்டேன் தனக்கு அகவை கூடுவதை ஏற்றுக் கொள்வதேயில்லை. இந்த எண்ணம் எல்லா வயது பெண்களிடமும் இருக்கிறது. ஒரு பெண்ணின் வயதை பார்வையிலேயே கணித்து விடலாம் மேலும் அவர்களது மக்கள், பெயரன், பெயர்த்திகள் இருந்தால் அதனை வைத்தும் ஓரளவு கணித்து விட முடியும்.

வியாழன், ஏப்ரல் 28, 2022

அதிர்ஷ்டசாலி


ஒரு பேரழகியை கண்டு...
 
ஓவியம் தீட்டுகின்றான் ஓவியன்
கவிதை வடிக்கின்றான் கவிஞன்
சிலை செதுக்குகின்றான் சிற்பி

ஞாயிறு, ஏப்ரல் 24, 2022

ராயபுரம், ராயல்டி ராயப்பன்

திரைப்படத் துறையில் எத்தனையோ தொழில் நுற்ப கலைஞர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் அனைவருக்குமே சம்பளம் கொடுக்கும் முதலாளி தயாரிப்பாளர்தான். மிகப் பெரிய திறமை வாய்ந்த நடிகர்கள், நடிகைகள், கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒப்பனையாளர்கள், இறுதியில் லைட்பாய்கள் என்று சொல்லப்படும் விளக்குப் பிடிப்பவர்கள் வரையில்... சம்பளம் கொடுக்கும் பிரம்மன் தயாரிப்பாளர்தான்.

புதன், ஏப்ரல் 20, 2022

வேண்டும் உங்கள் உறவு


ணக்கம் நண்பர்களே... வேண்டும் வேண்டும் உங்கள் உறவு’’ என்ற கவிஞர் வாலியின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 
Related Posts Plugin for WordPress, Blogger...