கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும்
இருப்பார் என்று கல்லிலான கடவுளுக்கு பாலாபிஷேகம் செய்யும் பலரும் ஏழையின்
சிரிப்பிலும் இருப்பார் என்பதை நம்பி அவர்களுக்கு தர்மம் கொடுக்காமல்
உதாசீனப்படுத்தி பேசுகின்றார்களே... இது நியாயமா ?
* * *
* * * * * * * 01 * * * * * * * * * *
தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள் என்று
அவர்கள் வீட்டில் தண்ணீர் வாங்கி அருந்துவதைக்கூட நாம் ஒதுக்கி வைப்பவர்கள்
அதேநேரம் உயர்ந்த ஜாதியில் பிறந்தவர்கள் தாழ்ந்த ஜாதியில் பிறந்த மருத்துவர் தன்னை
பரிசோதிக்கும் பொழுது விட்டுக் கொடுக்கின்றார்களே... இது நியாயமா ?
* * *
* * * * * * * 02 * * * * * * * * * *
தனது இளவயது மனைவி இறந்து விட்டதால் அவள்
உடுத்தியிருந்த உடைகளை சொந்த பந்தங்களுக்கு கொடுத்தால் வாங்க மறுப்பவர்கள் அவள்
போட்டிருந்த தங்க நகைகளை மட்டும் மறுக்காமல் வாங்கி கொள்கிகின்றார்களே...
இது நியாயமா ?
* * *
* * * * * * * 03 * * * * * * * * * *
தான் தமிழ்நாட்டை ஆளும் மந்திரிகளில் ஒருவராக
இருந்தும் பொது இடத்தில் வயதின் தன்மையைக்கூட மறந்து ஊடகங்கள் புகைப்படம் எடுப்பது
தெரிந்தும் காலில் விழுபவர்கள் தனது தலைமையில் நடக்கும் விழாக்களுக்கு வரும்
பொழுது மேடையில் பந்தாவாக உட்கார்ந்து பேசுகின்றார்களே... இது நியாயமா ?
* * *
* * * * * * * 04 * * * * * * * * * *
கணவனே கண்கண்ட தெய்வம் என்றும் கணவர்களின்
நல்வாழ்வுக்கு வேண்டி என்ற பெயரில் பெண்கள் ஆண்களை ஒதுக்கி ஏமாற வைத்து செவ்வாய்க்
கொழுக்கட்டை அவித்து தனியாக அவர்கள் மட்டும் சாப்பிடுகின்றார்களே... இது நியாயமா ?
* * *
* * * * * * * 05 * * * * * * * * * *
தமிழ் நாட்டில் பெரும்பாலான அரசியல்வாதிகள்
தமிழைக் கையில் எடுத்துக்கொண்டு அரசியல் நடத்தும் அனைவருமே வேற்று மொழிக்காரர்களாக
இருக்கின்றார்களே இது தெரிந்திருந்தும் உண்மையான தமிழர்கள் அவர்களுக்காக வாழ்க
கோஷம் போடுவதோடு உயிரையும் கொடுக்கின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
தெருவுக்குள் வறுமையின் காரணமாய் தனது
குழந்தைகளை காப்பாற்ற தன்னைக் கொடுத்தவளை விபச்சாரி என்று ஒதுக்கி வைக்கும் சமூகம்
திரைப்படத்தில் நடித்தால் மட்டும் கோவில் கட்டுவதோடு காலில் விழுந்து வணங்குகின்றார்களே இது நியாயமா ?
* * *
* * * * * * * 07 * * * * * * * * * *
தமிழ் நாட்டில் பல தாய்மார்கள் தனது மகனை தமிழ்
பேசும் பக்கத்தில் இருக்கும் சென்னைக்கு தனியாக அனுப்புவதற்கு எம்புள்ளை அப்பாவி
என்று மறுப்பவர்கள் வேற்று மொழி, வேற்று மதம், வேற்று உணவு உள்ள வெகுதூரத்தில்
இருக்கும் துபாய்க்கு மட்டும் தைரியமாக அனுப்புகின்றார்களே... இது நியாயமா ?
* * *
* * * * * * * 08 * * * * * * * * * *
தமிழ் மொழிக்காக எனது உயிரையும் கொடுப்பேன்
என்று சொன்ன அரசியல் தலைவர்கள் பலரும் ஒரு முறையாவது தூக்குப்போட்டு காண்பிக்காமல்
மீண்டும், மீண்டும் அதே வார்த்தையை சொல்லி பாமர மக்களை ஏமாற்றுகின்றார்களே... இது
நியாயமா ?
* * *
* * * * * * * 09 * * * * * * * * * *
நமது கழிவுகளை உண்பதால் பன்றிகளை ஈனப்பிறவிகளாக
நினைத்து ஒதுக்குகின்றோம் அதேநேரம் தேனீக்கள் தனது கழிவுகளை ஒதுக்கும் பொழுது அதை
தேன் என்றும், அமிர்தம் என்றும் நினைத்து வழித்து நக்குகின்றோமே... இது நியாயமா ?
* * *
* * * * * * * 10 * * * * * * * * * *
Chivas Regal சிவசம்போ-
…. ? ? ?
அனைவருக்கும் விநாயகர்
சதுர்த்தி வாழ்த்துகள் – கில்லர்ஜி
புகைப்படங்கள் எதிர்வரும் 99 வருடங்களுக்கு ஓசி கொடுத்த சகோ திருமதி. ராஜி அவர்களுக்கு நன்றி