தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

என் எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 26, 2024

இஸ்ரோவின் ஊதியங்கள்

 
ணக்கம் நண்பர்களே.. இவ்வுலகில் மிகச்சிறந்த அறிவாளியாக யார் இருக்க முடியும் ? முதல் ரகம் விஞ்ஞானிகள் காரணம் அவர்களின் கண்டுபிடிப்புகள். அவ்வகையில் நாமெல்லாம் சாதாரணமானவர்கள். மனிதனின் சிந்திக்கும் திறன் இதுவரையில் 12 சதவீதமே எட்டி இருக்கிறது. மீதியும் நெருங்கினால் ? ஆனாலும் அவைகள் மனிதர்களுக்கு அழிவுதான் என்பது வேறு விடயம். இந்த சதவீத்த்தை எட்டியவர்கள் விஞ்ஞானிகள் மட்டுமே...

வெள்ளி, நவம்பர் 15, 2024

உணர்---ஓம்


ணக்கம் நட்பூக்களே... கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் வரிகள் ஒன்று நம்மில் பலரும் கேட்டு இருப்போம். ’’தென்னையை பெத்தா இளநீரு பிள்ளையைப் பெத்தா கண்ணீரு பெற்றவன் மனமே கல்லம்மா பிள்ளை மனமே கல்லம்மா’’ என்ற பாடல் இன்றைய வாழ்வில் பலரும் கண்ணீர் வடித்தே வாழ்கின்றனர் ஆயினும் நமக்கு ஒரு பிள்ளை வேண்டும் அதுவும் ஆண் பிள்ளை அவன்தானே ஆப்பு வைப்பான்.

சனி, ஆகஸ்ட் 31, 2024

எனக்கு அகவை முந்நூறு


ண்பர்களே... மேலே மேற்படியார் சொல்லி இருப்பதை பார்த்தீர்களா ? இவர் நூற்றி ஐம்பது வருடம் வாழ்வாராம். இருக்கட்டும் நானும்கூட முந்நூறு வருடம் வாழப்போகிறேன் அதற்கான ஆய்வை முடித்து விட்டேன். அந்த ஆய்வு ரகசியம் எமது சீடர்களால் எப்படியோ கசிந்து இவரது கைக்கு போய் விட்டது போல... பரவாயில்லை எனது ஆய்வில் பாதிதான் கிடைத்து இருக்கிறது ஆகவே நூற்றி ஐம்பது வருடம். நான் முந்நூறு அல்லவா...

புதன், ஆகஸ்ட் 21, 2024

வள்ளியை கிள்ளியபோது...

 

01.  மளிகை கடை வேலை செய்து மாளிகை வீடு கட்டியவர்களும் உண்டு.
மாளிகையில் வாழ்ந்து கெட்டு மளிகை கடை வேலை செய்பவரும் உண்டு.

ஞாயிறு, ஜூலை 21, 2024

பொன்மொழியும், என் வழியும்

றுமை வந்தால் வாடாதே
வசதி வந்தால் ஆடாதே
 
நான் வசதியில் ஒருக்காலமும் ஆடியதில்லை ஆனால் வறுமையில் வாடி இருக்கிறேன் காரணம் நான் வசதியிலும் வாடிக் கொண்டுதான் வாழ்கிறேன் இது எனது சாபக்கேடு போலும்.
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

வெள்ளி, ஏப்ரல் 19, 2024

விந்தை மனிதர்கள்

01.  தனது மகளுக்கு திருமணம் முப்பது பவுன் நகை போடுவதாக வாக்கு, சற்றே பற்றாக்குறை மனைவியிடம் கொஞ்சம் நகைகள் கேட்ட கணவனிடம் என்னோட நகையை நான் தரமாட்டேன் என்று சொன்ன பெண்மணியை கண்டு விட்டேன்.

சனி, மார்ச் 30, 2024

நேர்மையற்ற சிந்தை

மது மக்களிடம் எவ்வளவு முரண்பட்ட சிந்தனைகள் காரணம் என்ன ? இறை பயம் இல்லை ஆகவே நேர்மையற்ற சிந்தை. எல்லோருக்கும் நியாய தர்மங்கள், தவறு எது ? சரி எது ? என்பது நன்றாகவே தெரிகிறது இருப்பினும் செயல்பாட்டில் பேச்சில் முழுக்க, முழுக்க தவறுகளே செய்கின்றனர்.

சனி, அக்டோபர் 14, 2023

மனம் விட்டு மணம் பெறுங்கள்

மேலே உள்ள வாசகம் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது மறுப்பு சொல்ல முடியாதுதான் ஆனால் வேலை செய்யும் இடமோ, வாடகைக்கு குடியிருக்கும் இடமோ, அல்லது சொந்த வீடோ அது மனதுக்கு இஷ்டப்படாமல் இருந்தால் ஒதுங்கி மாற்றிக் கொள்ளலாம், நண்பர்களோ, சொந்தங்களோ, மனஸ்தாபம் வந்தால் ஒதுங்கி விடலாம்.

வியாழன், செப்டம்பர் 21, 2023

நடந்தது நன்றாகவே நடந்தது

   னிதர்களுக்கு, சந்தோஷங்களும் கவலைகளும் இணைந்து இருப்பதுதான் வாழ்க்கை மகிழ்ச்சிகளை ஏற்றுக் கொள்ளும் மனது, கவலைகளை ஏற்பதில்லை. ஒரு மனிதன் இறுதிவரை சந்தோஷமாக வாழ்ந்து கழிக்க வேண்டுமெனில் பணம் இருந்தால் மட்டும் போதும் என்று நினைப்பது அறிவீனம். எத்தனையோ செல்வந்தர்கள் மகிழ்ச்சியை இழந்து நிற்பதற்கு காரணம் என்ன ?

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2023

ஆரியபவனில் சூடான தோசை

01. தேர்தலில் வாக்கு செலுத்த மூன்று
புறமும் பணம் வாங்குவது தப்பா ?
 
02. மளிகைக்கடையில் போய் குழம்பு
வைப்பதற்கு புலி கேட்டால் தப்பா ?

வெள்ளி, ஜூலை 21, 2023

வீரத்தின் அடையாளம்


யானை வளர்த்தால் பல்லக்கு தூக்கிட வாடகைக்கு விடலாம்.
குதிரை வளர்த்தால் விஷேசங்களுக்கு வாடகைக்கு விடலாம்.

திங்கள், ஏப்ரல் 24, 2023

கடவுளிடம் கேள்வி கேளுங்கள்

 

ன்று பகலில் ஓர் குட்டித்தூக்கம் கனவு வந்தது, அது கனவென்று விழித்த பிறகே எனக்கு விளங்கியது என்பதையும் இங்கு விளக்குகிறேன். கனவில் நான் கடவுளைக் கண்டேன் ஆம் அவர் கடவுள் என்பதும் பிறகே விளங்கியது, அதாவது நான் விழித்த பிறகு. இருப்பினும் அவரிடம் நான் உரையாடும் பொழுதே இவர்தான் இறைவனோ என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது.

செவ்வாய், டிசம்பர் 06, 2022

மறுமுகங்கள்

 

01. வாழும்போது எட்டிப்பார்த்து நலம் விசாரிக்காத உறவுகள் இறந்தவுடன் மாலையோடு வந்து நிற்பது ஏன் ?
 
02. மனதுள் சபித்துக் கொண்டு இருந்தவன் மரண வீட்டுக்கு வந்ததும் சோகமாக முகம் காட்டுவது ஏன் ?

வெள்ளி, செப்டம்பர் 16, 2022

கண்ணாடித்திரை

01. இப்பொழுதெல்லாம் மகன்களுக்கு திருமணம் செய்த மறுநாளே தனிக்குடித்தனம் வைப்பதே மரியாதையாகிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2022

கன்னியும், கணினியும்


       01. அன்று பாடல்களில் தேனிசையாய் சந்தம் கொடுத்தார்கள்.
இன்று பாடல்களில் தேள் கடியாய் சத்தம் கொடுக்கிறார்கள்.

திங்கள், ஜூன் 13, 2022

தர்மாவின் கர்மா

நீ செய்த பாவத்தை நீ கடந்தே தீரவேண்டும். நான் ஒரு பாவமும் செய்யவில்லையே என்று கதறலாம். பாவங்கள் உனது அகக்கண்ணுக்கும், முகக்கண்ணுக்கும் அறியாத Wi-Fi போன்ற ஊடல்கள். இதை இறைவன் மட்டுமே அறிவான். ஓர் தினம் நீயும் அதை காணவோ, உணரவோ வேண்டிய தருணம் வரும் அன்று நீ இறைவனின் திருப்பாதத்தில் இளைப்பாறளுக்கு வேண்டி நிற்பாய்.

திங்கள், மே 09, 2022

கூத்தாடிகள், காத்தாடட்டும்

   ணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? இந்த விபச்சார ஊடகங்களின் வார்த்தை பிரயோகத்தை எவன் இங்கே அதிர்ச்சி அடைஞ்சு இருக்கான் ? பெத்த தகப்பன் செத்துப் போயிட்டதாக சொன்னாக்கூட அப்படியா ? என்று சாதாரணமாக கேட்கிறான். இங்கே என்னடான்னா.. இவங்கே பகுசிக்கு பஞ்சர் பார்க்கிறாங்கே...

செவ்வாய், ஏப்ரல் 12, 2022

பெருமையும், சிறுமையும்


01. பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக வாழ்ந்து பிள்ளைகளுக்காக இறந்தால் வாழ்க்கைக்கு பெருமை. பிள்ளைகளுக்காக வாழ்ந்து பிள்ளைகளால் இறந்தால் வாழ்க்கையே சிறுமை.

செவ்வாய், பிப்ரவரி 22, 2022

ஜாதிகள் உள்ளதடி டாப்பா 2

முந்தைய பகுதியை படிக்க  என்னை  சொடுக்குக..

எனது அலுவலகத்தில் நடந்த அனுபவம் ஒன்று.
 
அல்ஜாஆஃபி ஜாதியைச் சேர்ந்த துணை மேலாளர் என்னிடமிருந்து ஓய்வூதியம் அனுப்ப பெறப்பட்ட முப்பது கோப்புகளை மற்ற ஊழியர்களிடம் வேலைக்கு பிரித்து கொடுக்கின்றாள் அல்காத்ரி எட்டு, அல்ஹமாதி ஐந்து, அல்ருமேத்தி இரண்டு, மற்றவள் பதினைந்து, என்றவாறு சரி மற்றவள் யார் ?

புதன், பிப்ரவரி 16, 2022

ஜாதிகள் உள்ளதடி டாப்பா 1

மது தமிழ்ப்பெண்கள் தனது பெயருக்கு பின்னால் தந்தையின் பெயரையும், திருணத்திற்குப் பிறகு கணவனின் பெயரையும் சேரத்துக் கொள்வது வழக்கம் இது சட்டப்படி சான்றிதழ்களிலும் சேர்ந்து விடுகின்றது ஆனால் அரேபியப் பெண்கள் கடைசிவரை தந்தையின் பெயரையே வைத்துக் கொள்கின்றார்கள் இந்த மாறுதலுக்கு காரணமென்ன ? என்று நான் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக்கொண்டு எனது மொட்டைத் தலையை தடவிக்கொண்டே யோசித்தேன் கிடைத்த விடை இதுவே.