தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 27, 2019

சீர்காழி, சீக்காளி சீதாலட்சுமிமீபத்தில் சீர்காழி போய் மூன்று தினங்கள் தங்கினேன் அப்பொழுது நானும் தொ.கா.நாடகம் பார்க்கும் துர்பாக்கிய நிலைப்பாடு வேறு வழியின்றி பார்த்தேன். அப்பொழுது அவளுக்கு, இவளும் இவளுக்கு அவனும், அவனுக்கு இவளும் என்ன உறவு முறை ? என்பதை வீட்டிலிருந்த எனது அப்பத்தாள் சீதாலட்சுமி எனக்கு மிகவும் பொருப்புணர்வோடு புளியைப்போட்டு விளக்கினார்கள்.

ஞாயிறு, செப்டம்பர் 22, 2019

ஒண்ணுமே புரியலே உலகத்திலே...செருப்பை கண்ணாடி கூண்டுக்குள்ளும், உணவை தெருவில் ஓடும் சாக்கடையோரமும் வைத்து நடக்கும் வியாபாரம் எனக்கு விளங்கவில்லை.

சோற்றில் சிறிய கல் கிடந்தால் மனைவியை ஏசும் மனிதர்கள் பக்தி என்ற பெயரில் கோவிலில் மண்சோறு சாப்பிடுவது ஏனென்று எனக்கு புரியவில்லை.

புதன், செப்டம்பர் 18, 2019

மேலூர், மேலாளர் மேகநாதன்வணக்கம் நட்பூக்களே கடந்த வருடம் இதேநாளில் இக்கதை எங்கள் ப்ளாக்கில் வெளியாகியது சரியாக ஓராண்டு கடந்தும் இன்றைய தேதிவரை கதைக்கு பேசி தீர்மானித்த எழுபத்தி மூன்று லட்சத்து, பதினாறு ஆயிரத்து, நானூற்றி எண்பத்து இரண்டு ரூபாய், ஐம்பது காசுகள் (73,16,482.50) இதுவரை தரப்படவில்லை என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன். இதைப்படிப்பவர்கள் நல்ல தீர்மானமாக எடுத்துச் ஜொள்ள’’வும்.

மேகலா ஓர் தீர்மானத்துடன் நடந்தாள் இன்று அலுவலக மேலாளர் மேகநாதனிடம் சொல்லி விடுவதுதான் சரி இனியும் பொறுமையாக இருப்பது சரியாக வராது நாமும் எவ்வளவு காலம்தான் கஷ்டப்படுவது ? பாவனா போன வருடம் வேலைக்கு சேர்ந்தவள் எத்தனை வேகமாக பதவி உயர்வு பெற்று இன்று வங்கியில் கடன் பெற்று வீடு கட்டிக்கொண்டு இருக்கின்றாள் நான் இங்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. வாடகை வீட்டைக்கூட கூடுதலான வாடகையில் பிடிப்பதற்கு வழியில்லை நமது பொருளாதாரம் உயர்வுக்கு வழியில்லை கணவன் முகுந்தனை நம்பி இனி பயனில்லை,

வெள்ளி, செப்டம்பர் 13, 2019

தேவநாடு


ண்ணே தேர்தல்ல எந்த மோசடியும் செய்யாமல் மோடி மறுபடியும் பிரதமர் ஆயிட்டாரே இனிமேலும் உலகம் சுற்றுவாராண்ணே ?
அடேய் மாங்கா மடையா அவரு இதுவரை 86 நாடுகளுக்குதான்டா போயிக்காரு சீக்கிரமே செஞ்சுரி அடிச்சு அடுத்த தேர்தலுக்குள்ளே டஃபுள் செஞ்சுரி அடிக்கிறதா... சபதம் எடுத்து இருக்காராம்டா...

திங்கள், செப்டம்பர் 09, 2019

கெரகாட்டக்காரன்வணக்கம் நட்பூக்களே கரகாட்டக்காரனின் மாங்குயிலே பூங்குயிலே என்ற பாடலின் மெட்டில் பாடிப்பாருங்களேன்...

மடப்பயலே மக்குப்பயலே புத்தி சொல்றேன் கேளு
மறுபடியும் செருப்படிதான் வாங்கும் நாளு இந்த நாளு

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

முகம் மறைத்து...எனது கடந்த
காலத்தில் அறியாத
வயதில் நான் செய்த
சிறிய தவறுகள்
அவ்வப்போது எனது
நினைவுக்கு வந்து
என்னை முகம் மறைத்து
மனம் கூசச் செய்கிறது.

திங்கள், செப்டம்பர் 02, 2019

அரியவை அறிக...ணக்கம் வலையுலக உறவுகளே... எனது நட்புக்காக... பதிவுக்கு வந்த ஐயா திரு. சென்னை பித்தன் அவர்கள் அதிகமான புகைப்படங்களை வெளியிட்ட திரு. கில்லர்ஜி அவர்கள் மீண்டும் அவரே இதனை முறியடிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது என்று சொல்லி விட்டு போனது எனது தேடுதல் பணியை துவங்கி விட்டது.