தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 30, 2019

வாழ்த்துப்பா


வதனம் வளம் பெறவே
வசந்தம் வழி வரவே
வளமை வரும் பெறவே
வலிமை வலம் வரவே

மங்கா மனம் பெறவே
மனதில் மழை வரவே
மனையாள் மகிழ் பெறவே
மகன்/ள் மனை வரவே

ஞாயிறு, மார்ச் 24, 2019

ஸ்காட்லாண்டில், ஸ்வாஹா


ஸ்காட்லாண்ட்
ஸ்வாகத்
ஸ்டார் ஹோட்டல்
ஸ்விம்மிங் ஃபூல்
ஸ்வாமிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கையில்
ஸ்காட்ச் கிளாசுடன்
ஸ்மார்ட் போனில் பேசிக்கொண்டிருந்தார்
ஸ்வாமிகள் கிஸ்ஸியானந்தா அருகில்

புதன், மார்ச் 20, 2019

தியாகங்கள்


தியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை
மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது.

தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை
மாறாக எழுதிக் கொடுக்கப்படுகிறது.

சாபங்கள் இங்கு பலிக்கப்படுவதில்லை
மாறாக பாவங்களாக பிரதிபலிக்கிறது.

மனக்காயங்கள் இங்கு ஆற்றப்படுவதில்லை
மாறாக மேலும் விரிவாக மாற்றப்படுகிறது.

வாக்குகள் இங்கு வழங்கப்படுவதில்லை
மாறாக இருபது ரூபாயால் வாங்கப்படுகிறது.

வெள்ளி, மார்ச் 15, 2019

சற்றே சிரிக்கலாமா ?

 ஊரின் பெரிய மனிதர்கள்
இந்தியனுக்கு தெரியலை இந்தோனிஷியாக்காரனுக்கு தெரியுது.

ஞாயிறு, மார்ச் 10, 2019

அபிநந்தனுக்கு அபிநந்தனம்


ணக்கம் நட்பூக்களே... முதலில் திருமிகு. அபிநந்தன் அவர்களுக்கு எமது வணக்கங்களையும், வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன். மேலும் இவர் தமிழன் என்று அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியும் கொள்கிறேன்.

செவ்வாய், மார்ச் 05, 2019

காது குத்தும்போது...ணக்கம் நட்பூக்களே... கடந்த ஜனவரியில் உறவினரின் குலதெய்வக் கோவிலுக்கு (சகோதரியின் பெயர்த்திக்கு) காது குத்த வரச்சொன்னார்கள். எனக்கு அல்ல குழந்தைக்கு காது குத்தல் அவ்விழாவுக்கு எனக்கும் அழைப்பு. இடம் சாயல்குடி அருகில் எட்டு கி.மீ தூரத்தில் எஸ்.தரைக்குடி என்ற கிராமம் இருக்கிறது. அழகிய கிராமம் என்றே சொல்லலாம். சாயல்குடி என்ற ஊர் பரமக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஐம்பதாவது கி.மீ.ரில் இருக்கிறது..