வெள்ளி, ஏப்ரல் 28, 2017

Sir Small Smile

தலையிலே முளைச்சவன் மாதிரி பேசக்கூடாது.
படித்ததும் உணர்ந்து வருந்தினேன்.
ஆளுக்கொரு மரம் வெட்டுவோம்.
படம் எடுத்த Dr. B. ஜம்புலிங்கம் அவர்களுக்கு ஒரு சபாஷ்
முடி வெட்டிய முடுதாறுக்கும் ஒரு சபாஷ் போடலாமே...
மதம் மறந்தால் மனிதம் தளைக்கும்.
கொலையும் செய்வாள் பத்மினி
அடடே கண்டு புடிச்சிட்டாய்ங்களே...
கேள்விக்குறிபோல் முதுகு வளைந்தது தோழா எதற்காக...
ஹூம் எருமை மாடு நிற்கிறதை சொன்னேன்.
உள்ளே வாங்க சார் நம்ம வீடுதான்.
இந்த வருஷம் களரிக்கு பன்னி வெட்டணும்
நாம எந்த கட்சினு இதுகளுக்கு தெரியுமா ?
நம்ம தொண்டைக்கேத்த, கெண்டை.
கிரிஸ்டோபர் கிருஷ்ணவேணி வயிற்றிலும் பிறப்பான்.
சுற்றி நிற்பது மனிதநேயமிக்க MIONEYதர்கள்.
இவர்கள் வாங்க வேண்டிய ஊதியத்தை நடிகர்கள் பெறலாமா ?
விவசாயக்கடன் பெற்ற ஏழை விவசாயி.
நீங்க ரெண்டு பேரும் சுடுறதை நான் சுடுவேன்.
நடக்கா விட்டாலும் முயற்சி தம்பி.
அப்பத்தா வடை வியாபாரம் செய்யும்போது...
நிழலும் நிஜமும் மோதினால் ?
இதை செய்தவர்கூட விஞ்ஞானிதான்
இப்படியெல்லாம் கேவலப்படுத்தலாமா ?
   சீ... வெட்கம் கெட்டவனே... திரும்புடா...

புதன், ஏப்ரல் 26, 2017

சுயமரியாதை


நட்புகளே... ஆல்ப்ஸ் தென்றல் தளத்தின் நிர்வாகி ஸ்விட்சர்லாண்ட் திருமதி. நிஷா அவர்கள் இதோ
என்ற பதிவு எழுதி இருந்தார்கள் நானும் இதனைக்குறித்து எமது கருத்தை பதிவேன் என்று சொல்லி இருந்தேன் ஆகவே சற்றே தாமதமே இப்பதிவு.

வலைப்பதிவர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் எழுதிய பதிவு இவையும் இதன் பாதிப்புதான் இதோ கீழே அதன் இணைப்பு.


இவ்வுலகில் ஆணின்றி பெண்ணில்லை பெண்ணின்றி ஆணில்லை. 

நாங்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல விஞ்ஞானத்திலும் கூட நிரூபித்தது உண்மைதான் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் விளைவை பார்த்தீர்களா ? பெண்களுக்கு உள்ள பிரச்சனைகளை, வேலை செய்யும் இடங்களில், கல்லூரிகளில், பொது இடங்களில், பேருந்து பயணங்களில், எத்தனை வகையான பிரச்சனைகள், இதன் அடிப்படை காரணம் எங்கே தொடங்கியது ? உங்கள் மனதில்தான். இது இன்றல்ல, நேற்றல்ல பல மாமாங்கமாகி விட்டது இதன் விளைவு நீங்கள் பெற்ற குழந்தைகளையும் பாதிக்கிறதே என்பது உங்கள் கண்களுக்கு புலப்படவில்லையே அதுதான் வேடிக்கை. கணவன் வேலைக்கு போய் உழைத்து ஊதியத்துடன் வர, அதில் மனைவி சமைத்து தன் கணவன், குழந்தைகளுடன் தானும் உண்டு உறங்கி, குழந்தைகளின் வளர்ப்பில் முழுக்கவனம் செலுத்தி வந்தார்கள் வேலை முடிந்து களைத்து வீடு வந்த கணவனின் கால்களைப் பிடித்து விட்டு, சிற்றின்ப சுகம் கொடுத்து பேரின்ப சுகம் கண்டார்கள், அன்றைய பெண்கள் அவர்கள் வாழப்பிறந்தவர்கள் இது தவறு ஆணாதிக்கம், பெண்ணடிமை என்ற கோட்பாடு என்று உங்கள் மனதில் உதித்ததோ அன்று தொடங்கியது உங்களுக்கு பிரச்சனைகள்.

அன்றைய காலங்களிலே தேவதாசிகளுக்கு பெண் குழந்தை பிறந்தால் பொக்கிஷம் போலபோற்றி வளர்ப்பார்கள் தங்களின் குலத்தொழிலுக்கு வேண்டி, அதேநேரம் ஆண் குழந்தை பிறந்தால் கொன்று விடுவார்கள் ஏன் தெரியுமா ? நாளை அவனை இந்த சமூகம் கையாலாகதவன் என்றோ ? கூட்டிக் கொடுப்பவன் என்றோ ? சொல்லக்கூடாது என்பதற்காக (அதற்காக குழந்தையை கொன்றது தவறில்லை என்று நான் சொல்வதாக அர்த்தமில்லை. தேவதாசிகள் தேவையா ? என்பதை வேறு SUBJECT டில் பார்ப்போம்) அன்று தேவதாசிகள் என்பது சிறு பாகமாக இருந்தது ஆனால் இன்று அந்தப் பாகத்திற்குள் கற்புக்கரசிகள் மட்டுமாகி விடுவார்களோ என அச்சமாக இருக்கிறது. பெண்களும் படிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும், என்றதின் நோக்கம், திரைப்படங்களிலும் நடிக்கலாம் என்பதில் நுழைந்ததின் காரணமாய் இன்று விவாகரத்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருகி விட்டது பெண்களை இந்த சமூகம் ஒரு போதைப் பொருளாகவே உபயோகப்படுத்துகிறது அதன் விளைவாய் விபச்சாரம் இன்று தலை விரித்தாடுகிறது, கடைசியில் இதன் முழுப்பலன் பெண்களின் சுயமரியாதை இழந்ததுதான் மிச்சம்.

பெண்ணினமே நீங்கள் வாழவில்லை என்பதற்கு ஒரு சான்று கூறட்டுமா ? உங்கள் பாட்டி, அப்பத்தா, அம்மாயி எத்தனை குழந்தை பெற்றார்கள் ? தெரியவில்லை எனில் உனது அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொள். இதிலேயே புரிந்து கொள்வாய் நீ எத்தனை சதவீதம் வாழ்ந்தாயென... இறைவன் மனிதனை படைத்தது வாழ்ந்து பயன் பெறவே அதற்காகத்தான் கொடுத்தான் இரவே மனிதன் உணர்ந்து வகுத்துக் கொண்டதுதான் கணவன்-மனைவி உறவே...

வெற்றி பெற்றதும் பெற்றுக் கொண்டிருப்பதும் உண்மையே ஆனால் அதற்கு தாங்கள் கொடுத்த விலை ? சுயமரியாதை.
கண்ணை விற்று சித்திரம் வாங்கி என்ன பயன் ?

ஒரு சில விடையறியா விட்டில் பூச்சிகளே ! உங்களால் பெண்ணினம் ஒட்டு மொத்தமாக களங்கமாகிறதே... இனியெனும் உணர்ந்து பாருங்கள்.

இவ்வுலகில் ஆணின்றி பெண்ணில்லை பெண்ணின்றி ஆணில்லை

- தேவகோட்டை கில்லர்ஜி -

திங்கள், ஏப்ரல் 24, 2017

திருமண வீட்டில்...


மரணபுரி என்ற ஊரில் மலங்கோலன் என்று ஒருவன் இருந்தான் அவன் என்ன பேசினாலும் எப்படி பேசினாலும் அமங்கலமான வார்த்தைகளையே உபயோகிப்பான்... திருமண வீட்டில் வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது எண்ணை கேன்களை தூக்கி கொண்டு போனவன்.. 

ச்சே எலவு வீட்டுல எவ்வளவுதான் சாமான்களை தூக்கிச் சாகுறது ?
திண்ணையில் உட்கார்ந்திருந்த பெரியவர் பொடுகு மலையான் கேட்டார்.

ஏண்டா கல்யாண வீட்டுல என்ன பேச்சு பேசுறே ? 
திண்ணையில உட்கார்ந்து கிட்டு பேசுவியல்ல தூக்கிப் பார்த்தாவுல தெரியும் ஒவ்வொண்ணும் பொணம் கனம் கனக்குது ?

ஏண்டா நீ இப்படிப் பேசுறதை எப்ப நிறுத்துவே ?
ம்... என்னைக் கொண்டி குழியில வச்சதுக்கு பொறகு.

உன்னை எப்ப குழியில வெப்பாக ?
ம் உன்னைக் கொண்டி குழியில வச்சதுக்கு அப்புறம்.

அத்துடன் பெரியவர் வாயை திறக்கவில்லை அரிசி மூடைகளை எண்ணிக் கொண்டிருந்த சடகோபன் சொன்னான்.

இவனை வச்சுவேலை வாங்குறதுக்குள்ளே... யேன் ஆவியும், ஜீவனும் போயிடுச்சு.
அப்ப நீ என்ன செத்த பொணமா ?

சடகோபனின் ஆத்தா கோமளவள்ளி இதைக் கேட்கவும் கோபம் வந்து விட்டது.

ஏண்டா தாலியறுப்பா மவனே எம்புள்ளைய என்னடா கேள்வி கேட்கிறே..? கட்டையிலே போறவனே... 
ஆமா நாங்க மட்டும் கட்டையிலே போறோம் நீ மட்டும் இரும்பு மேலயா போகப்போறே ?
றே
ஆமாடா நாங்களெல்லாம் தேர்ல போன பரம்பரைடா...
எது.... மார்ச்சுவரி வண்டியிலேயா ?
யா
டேய்... எங்க ஆத்தாவை பத்தி இதுக்குமேலே பேசுனே.. உனக்கு காசுவெட்டி போட்டுருவேன்.
ஏண்டா.. சடகோபா என்னடா சொன்னான் என்னை..?.

அது... வந்து... ஆத்தா நீ பொணம் ஏத்துற வண்டியிலே போவியாம்... 
அப்படியா... சொன்னான்..? ஏண்டா பேதியில பெரண்டு போக நாசமாப்போக உன்னை அந்தக்காளி கேட்பா... 

மண்ணை அள்ளி தூற்ற விபரம் அறிந்து அடுத்த தெருவிலிருந்து மலங்கோலன் ஆத்தா மொடிச்சியம்மாளும் வந்து விட்டாள்..

ஏண்டி.... தாலியறுத்த முண்டே யாரைப்பாத்து தாலியறுப்பானு சொல்லுவே எம்புருஷன் இன்னும் முப்பது சந்தைக்கு இருப்பாருடி... ஒம்புருஷன் மாதிரி குடிகார மட்டைனு நெனைச்சியா ஏண்டி தூ.... 
யாரு... ஒம்புருஷனா..... சீக்குப்புடிச்ச கோழிடி....

இருவரும் குடுமியை பிடித்து வீதியில் உருண்டு கொண்டிருக்க... எப்படியோ... தகவல் அறிந்து 12 B - Police station னிலிருந்து Sub inspector ரங்கநாயகி பெண் காவலர்கள் ஐந்து பேருடன் வந்து கோமளவள்ளியையும், மொடிச்சியம்மாளையும் பிரித்து பிடித்துக் கொண்டு போனார்கள் பிரித்து மேய.

அதுக்குப் பிறகு என்னாச்சோ... யாருக்குத் தெரியும் ? - கில்லர்ஜி

சனி, ஏப்ரல் 22, 2017

காதல் படும் இதயங்களே... காதில் இடுங்கள்


காதல் வயப்படும் ஆணோ, பெண்ணோ முதலில் பார்வைகளால் வசப்படும்போது இது நமக்கு சரியாக வருமா ? என்று இருவருமே நினைத்துப் பார்ப்பதில்லை வயதின் கோளாறு காரணமாக தாறுமாறாக முடிவெடுக்கின்றார்கள் இதற்கு இன்றைய ஊடகங்கள் முக்கிய காரணகர்த்தாவாக இருக்கின்றது முதலில் ஆணோ, பெண்ணோ காதலிக்க தொடங்கும் முன் தைரியமாக தனது பெற்றோர்களிடம் நான் எனக்குப் பிடித்தவரை தேர்ந்தெடுத்தால் எனக்கு திருமணம் செய்து வைப்பீர்களா ? எனக்கேட்டு வைத்துக்கொண்டு அவர்களின் எண்ணங்களை மனதில் வாங்கிய பிறகே காதலைப்பற்றிய சிந்தனைக்கு வரவேண்டும்.

வெள்ளி, ஏப்ரல் 21, 2017

புதன், ஏப்ரல் 19, 2017

புது மருமகள்


ஏம்மா இப்படி அழுவுறே மாமாவும், அத்தையும் என்னை நல்லவிதமா பார்த்துக்கிருவாங்க...
நான் உன்னை நினைச்சு அழுவளடி ய்யேன் அண்ணன் மகனை நினைச்சு அழுவுறேன்.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

ஏண்டி செங்கமலம் நீ வாக்கப்பட்டு போன இடத்திலே உன் மாமியார் நல்லா வச்சுக்கிறாங்களா ?
ஏய் கிழவி அவுங்க என்ன என்னை வச்சுக்கிறது நான் ஒழுங்கா வச்சுக்கிறனானு கேளு...
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *

மருமகளே நீ எனக்கு முதல் குழந்தை பேரனைத்தான் பெத்துத் தரணும்.
அப்ப நீங்க மட்டும் ஏன் பொம்பளைப் புள்ளையை பெத்தீங்க ?
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *

ஏண்டி, பார்வதி நீ வாக்கப்பட்ட மாமியார் குடும்பத்தை ரெண்டாப் பிரிச்சுட்டியாம்.
நான் அந்தக் குடும்பத்துக்கு போனதே அதுக்குத்தானே...
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *

நீ எந்த நேரம் இந்த வீட்டுக்குள்ளே விளக்கு ஏத்துனயோ  எம்புருஷன் கண்ணை மூடிட்டாரு...
ஏற்கனவே உங்க புருஷன் குருடன்தானே... அவரு எப்ப... கண்ணைத் திறந்தாரு ?
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *

ய்யேன் மவனை மயக்கி தனிக்குடித்தம் கொண்டு போயிட்டியடி நீ நல்லாவே இருக்க மாட்டே...
நீ மட்டும் ய்யேன் மாமனாரை மயக்கி தனிக்குடித்தனம் கொண்டு போயி நல்லா இருக்கலையா ?
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *

உன்னாலதான் எம் மகன் குடிகாரனாகி டாஸ்மாக்கே கதினு கெடக்குறான்டி...
ய்யேன் டாஸ்மாக் கடையைத் திறந்த கவர்மெண்ட்டை போயி கேளேன் பார்ப்போம்.
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *

ஏத்தா, குஞ்சரம் புதுசா வீட்டுக்கு வந்த ஒம் மருமவ எப்ப பாத்தாலும் புருஷங்கூட மினுக்கி கிட்டுல போறா....
ய்யேன் நீ மட்டும் ஓம் புருஷங்கூட எப்படிப்போனே ?
உள்ளேதான் இருக்கியா ? ? ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *

ய்யேன் மயேன் துபாயிலேருந்து சம்பாரிச்சுக் குடுக்குறான்ல அந்தப் பகுசியிலதான்டி நீ இப்படியெல்லாம் பேசுறே...
ய்யேன் ஓம் புருஷனையும் துபாய்க்கு அனுப்பி வெச்சுட்டு பகுசியிலே பேசேன்... யாரு... புடிச்சுக்கிட்டு இருக்கா ?  
? ? ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *

ஓவ் வயித்துலே ஒரு புழு, பூச்சி உண்டானா... பேரன் பேத்தியை பாத்துட்டு கண்ணை மூடிருவேன்...
நீ போறதுனா போயித்தொலைய வேண்டியதானே எனக்கு எதுக்கு வயித்துலே புழு, பூச்சி வெக்கணும்... ? ஹூம் நல்ல குடும்பத்துல வாக்கப் பட்டருக்கேன்...
? ? ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *

-Chivas Regal  சிவசம்போ

இருந்தாலும் மாமியாரு, மருமகள் வயித்துல புழு, பூச்சி வெக்கணும் சொல்றது நல்லாயில்லை.

திங்கள், ஏப்ரல் 17, 2017

ஜீவன்

நானொரு ராசியில்லாதவன் என்று எல்லோருமே என்னை ஓரங்கட்டியே வந்தார்கள் என்மனம் வேதனைப்படுமென யாருக்குமே கவலையில்லை இருப்பினும் என்னைப்பற்றி கவலைப்படவும், கலங்காதே உனக்கும் ஒருகாலம் வருமென, என்னை சமாதானப்படுத்தவும் ஒரு ஜீவன் இருந்தது ஆதலால் சமாதானப்பட்டு காலம் இன்றுவரை ஓடிவிட்டது...

ஒருமுறை நண்பனுக்கு பெண் பார்க்க போனோம் நான் மறுத்தும் நண்பன் என்னைத்தான் வரவேண்டுமென கட்டாயமாக அழைத்துப் போனான் காரணம் பாசம் அல்ல மற்ற நண்பர்கள் எல்லாம் அவனைவிட அழகானவர்கள் ரயில் நிலையத்திற்க்கு போனால் ரயில் ரத்து யாரோ தீவிரவாதகும்பல் தண்டவாளத்தில் ஃபாம் வைத்ததால் கடைசி நேரத்தில் அறிந்து அப்புறப்படுத்தி விட்டார்கள், பேரூந்தில் போகலாம் எனநான் சொன்ன, யோசனையை நிராகரித்தார்கள் காரணம் அபச குணமாகி விட்டதாம் அதற்கு காரணம் நான்தான் என்று, என் காதுபட முணுமுணுத்தார்கள்... நான் மனதுக்குள் சந்தோஷப்பட்டேன் நல்லவேளை ரயில் விபத்துக்குள்ளாகாமல் பலருடைய உயிர் பாதுகாக்கப்பட்டது.

ஒருமுறை பக்கத்து வீட்டு பவானிக்கு இடுப்புவலி உடனே ஓடிப்போய் டாக்ஸி பிடித்து வா என்றார்கள் நான் உடனே ஸ்டாண்டுக்கு போய் தெரிந்த டாக்ஸியை அழைத்து வந்தேன்... பவானியும், கூடுதலாக மூன்று பெண்களும் ஏறிக்கொள்ள சுகந்தி நர்ஸிங் ஹோம் விடு எனச்சொல்ல டிரைவர் சரியான வழிக்கு வண்டியை திருப்ப, நான் கண்ணாடியார் வீதி வழியா போ என்றேன் இந்தவழி நேரமாகுமே என்ற டிரைவரை நான் முறைக்க.. அந்த வழியே போனால் மோகனா வீட்டு வாசலில் நிற்பாள் நாம் காரில் போவதை அவளும் பார்க்கட்டுமே சரியாக வலைவில் மோகனா வீட்டருகே வரும்போது திடீரென வழி மறித்த ரவுடிக் கும்பலொன்று தலைவர் இறந்துட்டாரு வண்டி எல்லாம் ஓடக்கூடாது போ போ திரும்பிப்போ எனவிரட்ட... எவ்வளவோ கெஞ்சியும் திருப்பி விட்டார்கள், டிரைவர் என்னை முறைத்து அட மூதேவி தொண்டியார் வீதி வழியா போயிருந்தால் இந்நேரம் ஆஸ்பத்திரிக்கு போயிருக்கலாமே ஏண்டா இங்கிட்டு கூட்டி வந்தே ? இந்த தரித்திணியம் புடிச்சவனை கூட்டி வந்தாலே ஏடாகூடமா ஆகுமே எல்லா பெண்களும் என்னைத் திட்டினார்கள், நிலைமை விபரீதமாக பவானிக்கு இடுப்புவலி முற்றி காரிலிருந்து இறங்கவும் வேறு வழியில்லாமல் மோகனாவின் வீட்டுக்குள் நுழைந்ததுதான் தாமதம் அடுத்த கால்மணி நேரத்தில் சுகப்பிரசவம் ஆண் குழந்தை பிறந்து விட்டது சுற்று வட்டார பெண்கள் எல்லோரும் பிரசவத்தை குறித்து பொரணி பேசிக்கொண்டிருக்க... டிரைவர் வண்டியில் பாணட்டை திறந்து ஏதோ செய்து கொண்டிருக்க... நானும் மோகனாவும் கண்களால் மௌனமொழி பேசிக்கொண்டிருந்தோம்... எப்படியோ சுகந்தி நர்லிங் ஹோம் போகாமல் சுகப்பிரசவம் இருபதாயிரம் ரூபாய் லாபம் அதே டாக்ஸியில் வீட்டுக்கு வந்தோம்...

ஒருமுறை நண்பர்கள் ஐந்துபேர் சேர்ந்து ஊட்டி சுற்றுலா போனோம், மொத்தமாக பணத்தை என்னிடம் கொடுத்து செலவு கணக்கை என்னை கவனிக்க சொல்லி விட்டார்கள், லேக்கில் குதிரை சவாரி போனோம் குதிரைக்காரனுக்கு பணம் வாங்கும்போது பாக்கி ஐந்து ரூபாய் இல்லை அண்ணே அஞ்சு ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கிகங்கண்ணே.. என்றான் சரியென வாங்கி கொண்டேன் கவனமாக நண்பர்கள் நம்பரை குறித்துக் கொண்டார்கள் காரணம் பொதுப்பணமாம் அடுத்து தொட்டு உள்ள தொட்டபெட்டா போனோம் நான்கு நாள் கோலாகலாமாக கழித்து திண்டுக்கல் வழியாக வரும்போது தலைப்பாக்கட்டு பிரியாணி ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது ஐயா தர்மம் பண்ணுங்கசாமி... ஒரு பெரியவர் கேட்கவும் பாக்கெட்டில் சில்லரையில்லை மற்றவர்களிடம் சுத்தமாக எதுவுமே இல்லை எனக்கு பாவமாக இருந்தது கையில் வந்த லாட்டரிச் சீட்டை விழுந்தா எடுத்துக்கங்கய்யா... எனச்சொல்லி விட்டு வந்தேன் இரண்டு பேர் திட்டினார்கள் ஏண்டா சில்லரை இல்லைனா வரவேண்டியதுதானே... என்னமோ வள்ளல் பரம்பரை மாதிரி கையில உள்ளதை கொடுக்குறே ? ஊரும் வந்துவிட்டோம் ஒருவாரம் கழித்து பரசுராமன் வீட்டுக்கு வந்தான், ஏண்டா வீணாப் போனவனே லாட்டரிச் சீட்டுக்கு ஒரு லட்சம் விழுந்துருக்கு அதை தூக்கி கொடுத்துட்டியேடா... ? சிறிது நேரத்தில் மற்ற மூவரும் அம்மை-அப்பனோடு எனது வீட்டாரும் சேர்ந்துகொண்டு தருத்திணியம் புடிச்ச மூதேவி இனி அந்த ஆளை எங்கே போயி... புடிக்கிறது திண்டுக்கல்ல இருக்கானோ இல்லை நாமக்கல்லுக்கு போயிட்டானோ ? எப்படியோ எங்க புள்ளைங்களுக்கு நாமம் போட்டுட்டான் உங்கபுள்ளை. தாண்டவமூர்த்தி அப்பா தாண்டவமாடினார், எல்லோரையும் சமாளித்து அப்பாதான் மன்னிப்பு கேட்டு அனுப்பி வைத்தார், நான் அந்த பெரியவருக்கு நல்லதுதானே செய்தேன், எல்லோரும் ஏன் என்னை திட்டுகிறார்கள்.?.

இருப்பினும் எனக்காக அந்த ஜீவன் மட்டும் ஆறுதல் கூறியது கவலைப்படாதே அந்தப் பெரியவர் உனக்காக இறைவனிடம் பிரார்த்திப்பார் அதன் மூலமாகவாது உனக்கும் ஒரு காலம் வரும், அந்த ஜீவன் யார் தெரியுமா ? என் மனசாட்சி

வியாழன், ஏப்ரல் 13, 2017

சரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா


ரியான நேரத்தில்
ரிப்பன் வெட்டி
டையைத் திறந்தார்
ந்திரி மாதவன்
ளீரென்று விளக்குகள்
க தகவென ஜொலிக்க
நின்று கொண்டிருந்தவர்கள்
ட சடவென கை தட்டினர்
* * * * * * *
ட்டென்று சந்தோஷ் மனைவி
நின்று கொண்டு இருந்தவர்களை
யவு செய்து உட்காருங்கள் என்றாள்
ல பிரமுகர்களும் வந்திருந்தார்கள்
திய விருந்து பரிமாறப்பட்டது
டையின் முதலாளி சந்தோஷ் மனதுக்கு
ரிதமாக சங்கீதத்தை முழங்க விட்டான்
ந்தோஷமாய் திறப்பு விழா நடந்தது.

நண்பர்களே... இதை நான் எழுதி சுமார் 25 வருடங்கள் இருக்கலாம் ஒலி நாடா பதிந்து கொண்டு திரிந்த காலங்களில் ராணி வார இதழுக்கு எழுதி அனுப்பியது முகவரி தவறாகி திசைமாறி மளிகைக்கடைக்கு போயிருக்கலாம் அதை மீண்டும் நினைவில் கொண்டு வந்து எழுதினேன் தற்போது சிறிய மாற்றமும் இருக்கலாம் முதன் முறையாக கணினியில் ஏற்றுகிறேன் - கில்லர்ஜி

ராகம்
ச...ரி...க...ம...ப...த...நி...ச... ச...நி...த...ப...ம...க...ரி...ச...
கேளொலி
Related Posts Plugin for WordPress, Blogger...