தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 02, 2020

தமிழுக்கு அஞ்சலி


திருச்சி என்றால் வலைப்பதிவர்களுக்கு நினைவில் வருவது புகைப்படச்சித்தர் திருமிகு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்தான் இன்று (02.02.2020) அவர் மறைந்து முதலாம் ஆண்டு நினைவு தினம். அவர்தம் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வோம்.

செவ்வாய், மார்ச் 07, 2017

கண்மணிக்கு கண்ணீரஞ்சலி


இன்னும் நம்ப முடிய வில்லையடா
உனக்கு மரணம் வந்து விட்டதடா
எனக்கு கனவு போன்றே உள்ளதடா
இதற்குத்தான் நான் இந்தியா வந்தேனாடா

வியாழன், ஜூலை 14, 2016

சொல்லத்தான் நினைக்கிறேன்...

14.07.2016 இன்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

நட்பூக்களே வெகு காலமாக நான் எழுத வேண்டும் என்று நினைத்த விடயம் ஒன்று நான் கணினியில் உலாவும் போது எனது கண்ணில் கண்டதை இங்கு அப்படியே தருகிறேன் கீழ்காணும் விடயம் அனைத்தும் என்னுடையது அல்ல ! கீழே குறிப்பு மட்டும் எனது - கில்லர்ஜி

சனி, ஏப்ரல் 23, 2016

நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் தந்தையாருக்கு அஞ்சலி


வணக்கம் நட்பூக்களே நமது எங்கள் ப்ளாக் நண்பர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் எழுத்தாளர் திரு. பாஹே அவர்கள் (ஹேமலதா பாலசுப்ரமணியன்) நேற்று மரணம் அடைந்து விட்டார்கள் என்னவோ தெரியவில்லை தொடர்ந்து பதிவுகம் பல கெட்ட நிகழ்வுகளையே சந்தித்து வருகின்றது இத்துடன் நிற்கட்டும் நண்பரின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வோம்
வேதனையுடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

கவிஞர் வைகறை அவர்களுக்கு அஞ்சலி...


வலையுலக நட்பூக்களுக்கு... புதுக்கோட்டை கவிஞர் திரு. வைகறை அவர்கள் மரணமடைந்து விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே இவருடன் நான் ஒருநாள்தான் பழகினேன் மென்மையாக பேசியவர், அன்பானவர் இவருடைய நூல் வெளியீட்டு விழாவுக்கு எனக்கு அழைப்பிதழ் கொடுத்தார் ஆனால் அந்த தேதியில்தான் நான் அபுதாபி திரும்ப வேண்டியநிலை ஆகவே கலந்து கொள்ள முடியவில்லை இந்த இளம் வயதில் இவருக்கு மரணம் வந்தது நம்பமுடியாத உண்மை இவரின் இழப்பை சகோதரி ஜோஸ்ஃபின் தனது 4 வயது மகனுடன் எப்படித்தான் தாங்கி கொண்டு வாழப்போகின்றாரே... அவருக்கு இறைவன் மன தைரியத்தை கொடுத்து தனது மகனில் நண்பர் வைகறையை காணும் பாக்கியத்தை கொடுப்பாராக... மரணம் தவிர்க்க இயலாதது ஆனால் இந்த மரணம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
வேதனையுடன்...
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
01.திரு. தி. தமிழ் இளங்கோ, 02.திரு. கரந்தை ஜெயக்குமார் ஆசிரியர்,
03.முனைவர், திரு. B. ஜம்புலிங்கம், 04.கவிஞர் திரு. சோலச்சி
05.திரு. கில்லர்ஜி, 06.கவிஞர் திரு. நா. முத்து நிலவன்
07.கவிஞர் திரு. வைகறை, 08.கல்வி அதிகாரி திருமதி. ஜெயா
09.திருமதி. மீனா, ஆசிரியர் 10.திருமதி. மாலதி, ஆசிரியர் 
11.கவிஞர் திருமதி. மு. கீதா அவர்கள் இடம் புதுக்கோட்டை.