எனது வாழ்க்கையில் நான்
விபரம் தெரிந்த நாட்களிலிருந்து எல்லா விடயங்களிலும் தோல்வியைத்தான் சந்தித்து
இருக்கிறேன். தோல்வி என்பது எனக்கு மரத்துப் போன ஒன்று. ஆனால் ஒரேயொரு விசயத்தில்
நான் மாபெரும் வெற்றி அடைந்து இருக்கிறேன். அந்த வெற்றிதான் என்னை வாழ்வு
முழுவதும் நிரந்தர கவலை கொள்(ல்லு)ளும் நிலையாக்கி விட்டது.
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், அக்டோபர் 04, 2023
செவ்வாய், டிசம்பர் 27, 2022
இசை ஞானம்
எல்லா மனிதர்களும்
ஏதோவொரு வேலை செய்கிறோம், அவரவர்களின் முயற்சியோ, விருப்பமோ, அல்லது விதி என்றும்
குறிப்பிடலாம். இதில், கவிஞர், இசையமைப்பாளர், பாடகர் என்பது இறைவனின் ஆசீர்வாத்
ஆட்டோ மாவு இருந்தாலே அதில் வெற்றி காண முடியும். சங்கீதம் என்பது உணர்வுப்
பூர்வமான விடயம் இது எல்லா மனிதர்களுக்கும் வந்து விடாது. எனக்கு சிறிய
அகவையிலிருந்தே இசை ஞானம் உண்டு. ஆனால் ஆசை மட்டுமே இருந்தது ஆனாலும்
முயற்சிகளும், அதற்கான சூழல்களும் அமையவில்லை.
திங்கள், ஜூன் 07, 2021
வாழ்க நீவீர் எம்மான்...
அபுதாபி நண்பரது வீட்டுக்கு வழக்கம் போல் ஓர்தினம் சென்றேன். நண்பர் கணினியில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டு இருந்தார். தங்கை கொடுத்த காஃபியை அருந்தி விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த நான்...
சனி, மே 22, 2021
மகிழுந்து गाड़ी سيارة CAR కారు കാർ
கோவை பிரமாண்டமான மகிழுந்து விற்பன்னர் நிறுவனம்.
இங்கு மகிழுந்து வாங்கும் உறுதியான எண்ணங்களோடு உள்ளே நுழைந்தேன். காரணம் ஏற்கனவே ஊரிலுள்ள எல்லா நிறுவனங்களிலும் ஏறி, இறங்கியாகி விட்டது. இனி மிதிவண்டி நிறுவனமே பாக்கி.
வெள்ளி, ஜனவரி 29, 2021
சனி, அக்டோபர் 17, 2020
பெரியகுளம், பெரியவர் பெரியசாமி
துபாய் ஷேக் ஸாயித் பின் சுல்த்தான் அல் நஹ்யான் சாலையில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியேறி எனது சீரூந்துக்குப் போகும் பொழுது இனிமையான குரல்
எஸ்க்யூஸ் மீ
திரும்பிப் பார்த்தேன் அழகிய தேவதையொன்று நின்று கொண்டு இருந்தது.
யூ ஆஸ்க் மீ ?
ஆமா உங்களைத்தான்...
அழகியின் அழகிய உதடுகளிலிருந்து அழகிய தமிழ் வார்த்தை அடடே..
திங்கள், செப்டம்பர் 21, 2020
போக்கு மாறிய நாக்குகள்...
1999 அபுதாபி நான் அன்று அரபி பேசிப்பழகிய காலம் பால் வடியும் குழந்தை முகமாக இருந்ததால் அலுவலக பையனாக வேலை கிடைத்து செய்து கொண்டு இருந்தேன். அரபு எழுதப்படிக்க தெரியாது தெரிந்து இருந்தால்... இந்தப்பதிவும் வந்து இருக்காது. காலையில் காஃபி, டீ, காவா, துர்கீஷ் என்று அரேபியர்களுக்கு போட்டுக் கொடுக்க வேண்டும்.
திங்கள், ஆகஸ்ட் 31, 2020
செவ்வாய், ஜூலை 14, 2020
மொழியின் அழகு
மொழிகளில் பல வகைகள் உண்டு அரபு மொழி எழுத பழகுவது மிகவும் கடினமானது என்று பலரும் நினைக்கின்றார்கள். உண்மையில் வெகு சுலபமானது அரபு மொழியை தமிழர்கள் எழுத பழகி விடலாம் ஆனால் தமிழ் மொழியை அரேபியர்கள் எழுத பழகுவதுதான் கடினம். நான் ஒரு சில அரபிகளிடம் எழுதச் சொல்லி சவால் விட்டு இருக்கிறேன். அவர்களால் அவ்வளவு சுலபமாக எழுத முடியவில்லை. இதற்கு நான் தமிழில் தேர்ந்தெடுத்த எழுத்து என்ன தெரியுமா ?
திங்கள், ஜூன் 22, 2020
ஜெர்மனியில் ஜெமினியோடு ஜெயமாலினி
நான் ஜெர்மனி போயிருந்த போது சாலைகளில் குறுக்கே நதிகள் ஓடிக்கொண்டு இருக்கும் அதில் படகுகளில் மக்கள் உல்லாசமாக பயணிக்கின்றார்கள். இதில் பாலங்கள் தோறும் நான் கண்டது அதன் குறுக்கு கம்பிகளில் விதவிதமான பூட்டுகள் தொங்கின... அதில் தேதிகள் அல்லது காதலர்களின் பெயர்கள் செதுக்கி இருக்கும் அல்லது வண்ணங்களில் எழுதியிருக்கும் இவைகளைப்பற்றி நண்பர்களிடம் விசாரித்தேன்.
வெள்ளி, மார்ச் 27, 2020
மொழியில், கலந்திரு(ற)ப்பேன்
அபுதாபியில்
நான் அரசாங்க வேலை வாங்குவதற்கு முன்பு சாதாரண நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து
வந்தேன் ஆயிரக்கணக்கான பணியாளர்களில் நானும் ஒருவன் இதில் எனக்கு எப்பொழுதுமே
உடன்பாடு இருந்ததே இல்லை தனித்து காணப்படும் மனிதனாக இருக்கவேண்டும் என்ற சிந்தை
எனது அப்பா வயிற்றில் இருக்கும் பொழுதே தோன்றிய நீண்டகால எண்ணமாக இருந்திருக்க வேண்டும்.
செவ்வாய், அக்டோபர் 22, 2019
கல்வியும், கலவியும்
மதுரை, அழகர்கோவில்
பதிவின் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகள்பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன்
அல்லவா அவைதான் இந்த கல்வியும், கலவியும். இவர்கள் அந்த சாமியார்களைப் போல்
சோம்பேறிகள் அல்லர் உழைப்பாளிகள் என்றே சொல்லலாம் காரணம் இவர்கள் காசிமணி, ஊசி
முதல் திருஷ்டி பொம்மைகள் வரை விற்பனை செய்பவர்கள் இவர்களில் நரிக்குறவர்களும்
உண்டு தெலுகு பேசுகிறவர்களும் உண்டு.
வியாழன், அக்டோபர் 17, 2019
அழகர்மலையிலிருந்து...
மதுரை, அழகர்கோவில்
சென்றிருந்தேன் உறவினர்கள் சாமி கும்பிடுவதற்காக எனது மகிழுந்தில் போயிருந்தோம்..
மருமகள் எட்டு மாதமாக இருந்ததால் மலைக்கோவில் போகக்கூடாது என்ற ஐதீகத்தை மதித்து
நான் மேலே போகவில்லை //இல்லாட்டாலும் கொச்சிக்கு போக கொடிகட்டித்தான் நிற்பே//
என்று முணங்குவது கேட்கிறது. ஆகவே கீழே மலையடிக் காட்சிகளை தங்களிடம் பகிரலாமே
என்று எமது விழிகளால் ஸ்கேன் செய்யத் தொடங்கினேன்.
புதன், ஜூன் 19, 2019
உஜாரஹ் அல்தர்பீய வஜீர் வடுகநாதன்
இப்பதிவின் முன் பாகத்தை படிக்க கீழே சொடுக்குக...
லேடரை ஓரமாக நிறுத்தி விட்டு ஸூட்கேஷை கீழே
வைத்து விட்டு வந்தவன் கேட்பான்... (வரவைத்தவன் பேசத்தெரியாத அப்பாவி அதிராவைப் போல்
ஓரமாய் நின்று கொள்வான்)
அரபாப் அதா ஸூரா ஒயின் ரெக்கப் ?
முதலாளி இந்த படத்தை எங்கே வைக்க ?
அதா மக்கான் ஃபோக் ரெக்கப் மர்கஷ்
அந்த இடத்தில் மேல் மையமாக வை
வெள்ளி, ஜூன் 14, 2019
அர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும்
அன்பு
நெஞ்சங்களே....
முட்டாப்
பயல்களையும் தாண்டவக்கோனே...
காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே...
இந்தப்பாடலை அனைவருமே கேட்டிருபீர்கள் நான்
அரபு நாடு வந்ததும், அரேபியர்களைப்பற்றி தெரிந்து கொண்டதும் இந்தப்பாடல் நினைவுதான்
அடிக்கடி நினைவுக்கு வரும் எவ்வளவு பொருத்தமாக எழுதியிருக்கின்றார்கள் நமது அன்றைய
கவிஞர்கள். அரேபியர்கள் சர்வ சாதாரணமாக பிற நாட்டவரை முக் மாபி (மூளை இல்லை) என்று சொல்லி விடுவார்கள் இந்த வார்த்தை
சாதாரணமாக ஆச் என்று நாம் தும்முவோமே அதனைப்போல வந்து கொண்டே இருக்கும் இதை
ஆதிகாலம் தொட்டே பிழைப்புத்தேடி வந்த நமது முன்னோர்களும் கேட்டு வாழ்ந்து பழகி
நமக்கும் அதனை கற்றுக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள்.
செவ்வாய், ஜூன் 04, 2019
அவன் நினைத்தால் ?
எனக்கு அரேபியர்களிடம்
ஆச்சர்யமாக நிறைய விசயங்களிருக்கிறது அதில் ஒன்று அரசாங்க அலுவலகத்தில் வாரத்தில்
ஐந்து நாட்கள் வேலை இதில் எப்படியும் நான்கு நாட்கள் மீட்டிங் நடக்கும் காலை
வந்தவுடன் மீட்டிங் தொடங்கி விடுகிறது. பேசுகிறார்கள், பேசுகிறார்கள், வேலை
முடியும் நேரம்வரை பேசுகிறார்கள். பிறகு மறுநாள் மீண்டும் அதே பிறகு மறுநாள்
மீண்டும் அதே பிறகு இரண்டு நாட்கள் விடுமுறை இதில் இன்னுமொரு ஆச்சர்யம் என்னவென்றால்
அலுவலகத்தில்
பேசியது போதாதென்று விடுமுறை நாட்களில் வெளியிடங்களில் ஸ்டார் ஹோட்டல்களில் அருசுவை
உணவுகளோடு மீட்டிங். நான் பலமுறை இவர்களிடம் ஆச்சர்யப்பட்டு
கேட்டிருக்கிறேன் இப்பொழுது பேசியவை எல்லாம் எப்போது நடைமுறைப்படுத்துவது ? அதற்கு இவர்கள் சொல்லும் ஒரே பதில்.
வியாழன், டிசம்பர் 06, 2018
கோவிந்த ஹரிமேலி
சனி, டிசம்பர் 01, 2018
விமான நிலையத்தில், கில்லர்ஜி
தமிழ் வளர்த்த மதுரை விமான
நிலையம்
பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து
மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சுமைகள் குறைவாகவே இருக்கும், நானும்
எனது சுமையை லக்கேஜில் சேர்த்து விட்டு வழக்கம்போல் எனது கைக்குழந்தை எனது
கழுத்தில் தொங்கி கொண்டு இருந்தது, சுங்க அதிகாரிகளின் சோதனை முடிந்து,
கடவட்டையில் முத்திரை குத்தி, விமானச்சீட்டை பரிசோதித்து இருக்கை எண் அட்டையும்
வழங்கி விட்டார்கள் அனைத்தும் முடிந்தது அடுத்து செல்ல வேண்டியது விமானத்தின்
உள்ளேதான் ஒரு அதிகாரி என்னை நிறுத்தினார் கடவட்டையை கேட்க கொடுத்தேன்.
புதன், அக்டோபர் 10, 2018
சாத்தான்குளம், சாமியார் சாரங்கபாணி
இப்பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
எமராத் லைசென்ஸ் இண்டர்நேஷனல்
லைசென்ஸுக்கு இணையானது இதை வைத்து நான் ஜெர்மனி, ஒமான் நாடுகளில் விசிட்டிங்கில்
ஓட்டியிருக்கிறேன். அதன் பிறகு கார் வாங்குவதற்காக ஆறு மாதம்
காத்திருந்தேன் காரணம் லைசென்ஸ் எடுத்து ஆறு மாதங்களுக்குள் ஏதாவது சிறிய விபத்து
நடந்தாலும் லைசென்ஸ் மீண்டும் பறிக்கப்பட்டு ஸ்கூலில் போய் படித்து வா என்று
அனுப்பி விடுவார்கள் பிறகு கார் வாங்கி ஓட்டிய பிறகுதான் நம்மிடமும் இவ்வளவு திறமை
இருக்கின்றதே... என்ற நம்பிக்கை வந்தது காரணம் நான் சிறிய வயதில் நாற்பது K.M வேகத்தில் நடைவண்டி ஓட்டியவன்.
ஞாயிறு, அக்டோபர் 07, 2018
அந்த தருணங்கள்
இப்பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
என்னை இவன் போலீஸ்
டெஸ்டுக்கு ரெடியா ? என்ற டெஸ்டுக்கு அனுப்பி வைத்தார்கள் அதற்கு வந்த மாஸ்டர் பாக்கிஸ்தானி அடி வயிறுவரை
தாடி வைத்திருந்த அவனைக் கண்டதுமே எனக்கு அடி வயிற்றைக் கலக்கியது பயமில்லை
இருப்பினும் எனது குடுமி இன்று இவனது கையில்தானே இவன் என்ன நினைக்கின்றானோ ? அதுதானே நடக்கும்.


















