சனி, ஜூலை 29, 2017

காதல் தோல்வி

காதலில் தோல்வியுற்ற தமிழன் தன்னை இப்படி வெளிப்படுத்துகிறான்.

சரி இவர்கள் எப்படி ?

10


09


08


07


06


05


04


03


02

01 

வெளிப்படுத்துவார்கள்.


मेरा प्यारा दोस्त्

வியாழன், ஜூலை 27, 2017

தூய்மை இந்தியா


தூய்மை இந்தியா என்று சொல்கின்றார்களே... இதுவும் இந்தியாதானே தமிழகத்தின் மாநகராட்சிகளில் ஒன்றான மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில்.

தெருக்கூட்டுகிறேன் என்று ஒருநாள் கூத்தாடினார்களே அவர்கள் இதை தூய்மை படுத்தமுடியுமா ? இன்னும் மக்(கு)கள் எப்படித்தான் இவர்கள்மீது நம்பிக்கை வைக்கின்றார்களோ... நிச்சயமாக நமது பிரதமர் சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுவார் அது உலகிலேயே அதிகமான நாடுகளுக்கு சென்று வந்த பிரதமர் என்ற சாதனையாளர் பட்டமே அவ்வகையில் நாம் பெருமை கொள்வோம் பிறநாட்டினரின் பார்வையில் இந்தியன் தனித்தன்மை வாய்ந்தவன் ஆம் உண்மைதானே... நல்லதோ, கெட்டதோ செயல் தனித்தன்மையை வெளிப்படுத்தி விடுகிறதே... நல்ல இடத்தை தேர்வு செய்து அதில் குப்பை போன்று பேப்பர்களை உருவாக்கி கொட்டி பரப்பி விட்டு வாசனைக்கு சந்தனத்தைக் கரைத்து ஊற்றி அடாடா புதுமை.

மறைந்த அக்னிப்பறவை திரு. அப்துல் கலாம் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னார் லோடு ஏற்றிப்போகும் லாரியில் பின்புறத்தில் எரியும் பல்ப்பில் சிவப்பு ப்ளாஸ்டிக் டப்பாவை கவிழ்த்தி விட்டு அதை அபாயகரமாக காண்பித்தவனைக்கூட அவனும் ஒரு விஞ்ஞானியே என்றார் அதைப்போலவே இவர்களும் விஞ்ஞானிகள்தானோ ? இனியேனும் இந்தியாவுக்கு நல்லவர்கள் ஆட்சி அமையுமா ?

இன்று உமக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

கானல் நீராய் வடிந்திடுமோ...
காலம் ஒருநாள் கூடிடுமோ...
காணும் நாளும் வந்திடுமோ...
கனவு காணச் சொன்னாய் நீ
கண்டோம் நாங்கள் எங்கே நீ
கடந்தாய் மண்ணை விட்டு நீ
காட்டிச் சென்றாய் லட்சியமே...
காலனை அகற்றிய ராஜ்சியமே...
காண்போம் நாங்கள் நிச்சயமே...

 -காணொளி-
தூய்மை இந்தியா அமைவது ஓட்டுப் பொறுக்கிகள் கையில் இல்லை மக்களின் கையில் மனம் இருந்தால் மலையையும் புரட்டலாம் 5 அறிவு ஜீவியே இப்படி வாழும் பொழுது நாமும் செல்வோம் அதன் வழியே...

திங்கள், ஜூலை 24, 2017

வரலாறு முக்கியம்


     டந்த வாரத்தில் ஒருநாள் காலை பத்து மணி காளையார் கோவில் பேருந்து நிலையம் தேவகோட்டையிலிருந்து பரமக்குடி போவதற்காக சிவகங்கை பேருந்தில் ஏறியவன் வழியில் காளையார் கோவிலில் இறங்கி பரமக்குடி பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தவனின் விழிகளில் முதலில் தென்பட்டது விமானம் ஆம் காளையார் கோவிலின் கோபுரக் கலசத்தின் விமானம் சட்டென உடன் நினைவில் வந்தவர் சரித்திர பதிவர் இனிய நண்பர் திரு. கரந்தையார் அவர்கள் அவர் எழுதியிருந்த மன்னர் முத்து வடுகநாதர் வேலு நாச்சியார் மற்றும் குயிலியைப்பற்றிய பதிவின் நினைவோட்டங்கள் இதோ இந்த இடத்தில்தானே வெள்ளையர்கள் அவரை சுட்டு வீழ்த்தியதாக குறிப்பிட்டு இருந்தார் இதோ இந்த இடத்திலிருந்து சுமார் முப்பது அடி தூரமிருக்குமா ? இதே இடத்தில் நாம் கடந்த காலங்களில் ஐநூறு முறையாவது நின்று இருந்திருப்போமா ? நமக்கேன் உள்ளே சென்று வரவேண்டுமென்று தோன்றவில்லை இதோ நண்பரால் தோன்றி விட்டதே... பரமக்குடிதானே போகிறோம் ஒரு பேருந்தை விட்டால் மறு பேருந்தில் போவோமே உடன் கோவிலை நோக்கி நடந்தேன்.
வாயிலில் நுழைந்தவுடன் இந்நாட்டு மன்னர்கள் ஆம் ஐயா தர்மம் பண்ணுங்க சாமி... என்ற குரலோரையை கடந்து வாழ்வில் முதல் முறையாக உள்ளே காலை வைத்தேன் கையில் சிறிய சூட்கேஷ் வைத்திருந்தேன் வாயிலில் மேஜையைப் போட்டு உட்கார்ந்து இருந்த பெரியவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்து...


சார்..... கொஞ்சம் வரமுடியுமா ?
என்ன ?
உங்கள் பெட்டியில் என்ன இருக்கு ?
உள்ளே உடைகள் இருக்கிறது
சரி போயி சாமி கும்பிட்டு வாங்க
வேணும்னா பெட்டியை திறந்து காண்பிக்கட்டுமா ?
பரவாயில்லை கேட்கிறது எங்களோட கடமை தவறா நினைக்காதீங்க...
நல்லது புகைப்படம் எடுக்கலாமா ?
கூடாது பாத்துக்கங்க...
நன்றி. உள்ளே பயபக்தியுடன் சென்றேன் எப்பொழுதுமே சிறு வயதிலிருந்தே கோவில்களுக்கு சென்றால் சிலைகளை பார்த்து அதன் வடிவமைத்த விதங்களை ஆராய்ந்து ரசிப்பது எனது வழக்கம் இதோ நீண்டகால இடைவெளிக்குப் பிறகு நண்பரால் இன்று இங்கு முதல்முறையாக. வெளிக்கூடாரத்தில் யானை நின்று கொண்டு இருந்தது அந்த யானை மலையாளி என்பதை அறிந்து கொண்டேன் எப்படி என்பதை பிறகு சொல்கிறேன். உள்ளே சென்றேன் நடக்கும் பொழுது சட்டென யாருக்கும் தெரியாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டேன் அர்ச்சகர் வந்திருந்த சிறிய கும்பலுக்காக தீபாராதனை காண்பித்து அவருடைய காரியத்தை நிறைவேற்றிக் கொண்டு இருந்தார் கோவிலைச்சுற்றி வந்தேன் கோவிலுக்கு வந்தால் உட்கார வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தது ஞாபகம் வர கீழே உட்கார்ந்திருந்தேன் மனதில் ஏதோ ஒரு அமைதி கிடைக்கத்தான் செய்கிறது வெளியில்தானே வாகன இரைச்சல்கள், வேகமாக இடித்துக்கொண்டு எதையோ தேடி ஓடும் இயந்திர மனிதர்கள் முடிவில் எதைப் பெறுகிறார்கள் ? மரணம்தானே இதனால்தான் சன்னியாசிகள் காவி உடையணிந்து கோவிலில் காலத்தை கடத்தி வாழ்கின்றார்கள் அப்படியானால் நித்தியானந்தா மட்டும் ஏன் திருமிகு. ரஞ்சிதாவுடன் துறவரம் பூண்டார் ? நண்பர் திரு. பகவான்ஜி அவர்களிடம் கேட்டால் விடை கிடைக்கலாம் ?  இங்கு வந்து ஏனிந்த குழப்பம் சிந்தனையை கலைத்தது. ஒரு பெரியவரின் குரல் தம்பி என்றதும் எழுந்து என்ன ஐயா என்று கேட்டதுதான் தாமதம் சட்டென எனது நெற்றியில் விபூதியை பூசி விட்டு குங்குமத்தையும் அப்பி விட்டார். என்ன செய்வது ? என்ன சொல்வது ? ஏதோ எதிர் பார்த்தார்... நிறைவேற்றவும் நூறு வயதுவரை மகிழ்வாய் வாழ்வாய் என்று வாழ்த்தி விட்டு சென்று விட்டார் நண்பர் திரு. பசி பரமசிவம் நினைவுக்கு வந்தார் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் இந்த நிமிடம்வரை கிடைக்காத மகிழ்வு இனிமேல் கிடைத்து யாருக்கு பயன் ? ஹூம் அதுவும் நூறு வயசுவரை ஒருவேளை அவரை நான் திருப்தி படுத்தாமல் விரட்டி விட்டிருந்தால் ? இன்றே போய் விடுவாய் என்று சாபம் விட்டிருப்பாரோ ? நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்கள் இருந்தால் கேட்கலாம். சரியென்று எழுந்தேன் காளையார் கோவிலின் உள்ளே இன்று காலை கில்லர்ஜி உட்கார்ந்து இருந்தான் என்பதை வரலாறு எழுதிக்கொண்டது. எழுந்து யானை நிற்குமிடத்துக்கு வந்தேன் பார்க்க வேதனையாக இருந்தது காரணம் அதன் உடலில் நிறைய சிறாய்ப்புகள் இருந்தது கவனிப்பு சரியில்லை என்பதை பறைசாட்டியது யானைப்பாகன் சற்று தூரத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான் நான் யானையிடம் நினக்கு ராவுல பட்சணம் கிட்டியோ ? என்றதை சற்றும் மதிக்காமல் நின்றது எனக்கு சந்தேகம் யானைப்பாகன் மட்டும் மலையாளத்தில் இவிடே வன்னு நிக்கு என்றதும் கேட்டுக்கொண்டதே ஒருவேளை நாம் தமிழன் என்பதால் கேட்கவில்லையோ... பாகன் சிறிய வயதுக்காரன் பேசியதில் அவன் யானையைப் போலவே மலையாளியே என்பதை அறிந்தேன் பிறகு புறப்பட்டு வாசலுக்கு வந்தேன் பெரியவருக்கு மீண்டும் நன்றி சொல்லி விட்டு கோவில் உண்டியலில் போட நினைத்ததை கவனமாக போடாமல் இங்கு வாசலில் இருக்கும் உழைக்க இயலாத சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து காணிக்கை செலுத்தினேன் இவர்களின் வாழ்த்து நிச்சயம் பலிக்கும் காரணம் ஒருவேளை உணவுக்கு சிறிய அளவில் உதவுகிறதே நமது பணம். அப்படியானால் இவர்களின் வாழ்த்துகளை வாங்குவதற்காகத்தான் தர்மமா ?  அப்படியானால் இதுவும் பண்டமாற்று முறைதானோ ?  நல்ல மனதுடன் தர்மம் செய்யவில்லையா ?  மனக்குழப்பத்தை யாரிடம் கேட்கலாம் ?  அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களிடம் கேட்டால் ?  சரியான விளக்கம் கொடுப்பார் என்ற நினைவுகளோடு கோவிலை விட்டு வெளியே வந்து உச்சி வெயில் மண்டையை பிளக்க மோடி ஸ்டைலில் செல்ஃபி எடுத்தேன் இதோ...


சனி, ஜூலை 22, 2017

தூக்குல செத்தவனுக்கு, நாக்குல சனி

முன்குறிப்பு - பலவீனமான இதயம் உள்ளவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்

எமனே எருமையே உனக்கு தன்மானம்
உண்டெனில் என் வீட்டுக்கு வராதே

மரணமே உனக்கு சூடு சொரணை
உண்டெனில் என்னை நெருங்காதே

தாம்புக்கயிறே என்னை தூக்கிலிட்டால்
வீம்பு பண்ணாமல் நீயே அறுந்து விடு

என்னை தலையை வெட்டபோனால்
வாளே நீ சட்டென மறைந்து விடு

விஷமே ஒருவேளை உன்னை கொடுத்தால்
உள்ளே போனாலும் பின்புறமாய் ஓடி விடு

தீயே நீ சத்தியத்துக்கு கட்டுப்பட்டது
உண்மையெனில் என்னை தீண்டாதே

மண்ணே நீ தர்மத்திற்கு கட்டுப்பட்டது
உண்மை எனில் என்னை மூடாதே

வெட்டியானே கடமை தவறாத நீ
வெட்டியாக எனக்கு குழி வெட்டாதே


சாம்பசிவம்-
தூக்குல செத்தவனுக்கு நாக்குல சனியாம் என்னத்த சொல்ல ?

CHIVAS REGAL சிவசம்போ-
என்னையா கவிதை இது செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்தது மாதிரியிருக்கு

சிவாதாமஸ்அலி-
கெட்டவனுக்கு எட்டுனு சொன்னது போல இருக்கு ஏண்டா பேதியில பெரண்டு போவியலா உங்களைக்கொண்டி குழியில வெக்கே எவனாவது நல்லதா நாலு வார்த்தை சொன்னீயலாடா

பின்குறிப்பு – சும்மாதானே இருக்கோம் கவிதையாவது எழுவோமேனு பேனாவை கழுத்தை பிடித்து திருகினேன் அது சட்டென கத்திபோல துருத்திக் கொண்டு என்னை குத்தி விட்டது கோபங்கொண்டு அந்தக் குருதியை கொண்டுதான் வடித்தேன் இதை அதனால்தான் ரத்தச்சிவப்பு - கில்லர்ஜி

வியாழன், ஜூலை 20, 2017

கேள்விக்கென்ன பதில்

பல மனிதர்கள் தான் நியாயமானவன் என்பதால் மற்றவர்களும் நியாயமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இந்த எண்ணம் பிறரின் பார்வையில் அவரை கோமாளியாக்கி விடுகிறது.
சில மனிதர்கள் தான் நஷ்டப்பட்டு கெட்டுப் போனதால் மற்றவர்களும் கெட்டுப்போக வேண்டுமென நினைத்தால் நாட்டில் தொழில் வளர்ச்சியின் நிலையென்ன ?

பல மனிதர்கள் தான் மதவாதி என்பதால் மற்றவர்களும் அதேபோல் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள் இந்த எண்ணம் பிறரின் பார்வையில் அவரை மதவெறியனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள் தான் திருடன் என்பதால் மற்றவர்களும் திருட வேண்டுமென நினைத்தால் நாட்டில் திருட்டுத் தொழில் நலிந்திடுமோ ?

பல மனிதர்கள் திடீரென பக்திமான் ஆகி விடுவதோடு மற்றவர்களும் அதேபோல் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள், இதுவும்கூட பிறரின் பார்வையில் அவரை கேலிக்குறியவனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள் தான் பணக்காரன் என்பதால் மற்றவர்களும் பணக்காரனாக வேண்டுமென நினைத்தால் நாட்டில் தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்களோ ?

பல மனிதர்கள் தான் ஆத்திகன் என்பதால் மற்றவர்களும் அதனைபோல் இருக்க வேண்டும் எனநினைக்கிறார்கள் இது அவன் அயோக்கியன் ஆயினும் அவனை நல்லவனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள் தான் வாக்களிப்பதில்லை என்பதால் மற்றவர்களும் வாக்களிக்ககூடாது என நினைப்பதுபோல் எல்லோரும் இருந்தால் நாடு
முன்னேற சாத்தியமுண்டா ?

பல மனிதர்கள் தான் நாத்திகன் என்பதால் மற்றவர்களும் அதனை போலவே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இது அவன் நல்லவன் ஆயினும் அவனை கெட்டவனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள் உலக நாடுகள் அனைத்தும் நமது கைக்குள் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென நினைப்பதுபோல் நடந்து விட்டால் அவனது ஆசைகள் இத்துடன் தீர்ந்து விடுமா ?

கில்லர்ஜி தேவகோட்டை

திங்கள், ஜூலை 17, 2017

என் நினைவுக்கூண்டு (4)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


தேவகோட்டை நமது வீட்டுக்கு நீ வாழ்ந்த வீட்டில் உன்னை கொண்டு வந்து இரவு முழுவதும் உறங்க வைத்ததில் அந்நிலையிலும் எனது மனதில் சிறிய நிறைவு ஏற்பட்டது.

   னிதா காலன் மிதிக்காத வாயிற்படிகளே இல்லை என்பார்கள் ஏன் நமது வீட்டிலும் மிதித்து இருக்கிறான் பலமுறை வென்றும் இருக்கின்றான் ஆனால் உன்னைக் கொண்டு செல்வதை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உன்னை அசைவற்ற சடலமாக பார்க்க, பார்க்க என்னால் இயலவில்லை இன்றோடு உன்னை காண முடியாதே, பேச முடியாதே என்ற எனது சிந்தனை ஓட்டத்தில் நான் நடப்பதை ஜீரணிக்க முடியாமல் பதட்டமாகவே இருந்தேன் உனக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நானே செய்யவேண்டும் என்று நினைத்தேன் அதை எனது கடமையாகவும் நினைத்தேன் உனது நெற்றியில் வைக்கப்படும் ஒரு ரூபாய் நாணயமும் என்னுடையதாக இருக்க வேண்டும் என்பதில் அந்நிலையிலும் கவனமாய் இருந்தேன் நமது வீட்டில் 24 மணிநேரமும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும் எந்த நேரமும் அண்டா தொடங்கி குண்டாவிலிருந்து சிறிய கிண்ணம் வரை தண்ணீர் பிடித்து வைப்பாய் இதன் காரணமாக ஈரமாகவே இருக்கின்றாயே.... என்று அனைவரும் உன்னை பேசுவோம் உன் வசதிக்காகவே வீட்டிற்குள் தண்ணீர் பிடிக்க ஐந்து இடத்தில் பைப்புகள். தண்ணீர் பஞ்சமே வராத நம் வீட்டில் அன்று தெரு முழுவதுமே தண்ணீர் வராமல் உன்னைக் குளிப்பாட்டுவதற்கு பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் அதிசய நிகழ்வு அது மட்டுமல்ல இன்னொன்றும் நடந்தது.

   நேரம் கடக்க, கடக்க இனி உன்னைக்காணவே முடியாது என்ற உணர்வு வரும் பொழுதெல்லாம் என்னை மறந்தே பலமுறை அழுதேன் நான் மட்டுமல்ல உனக்காக எவ்வளவு நபர்கள் அந்த தெரு மட்டுமல்ல நமது ஏரியாவைக் கடந்து அடுத்த ஏரியாவில் முஸ்லீம் பெண்கள் வரை நீ பழக்கம் பிடித்து வைத்திருக்கின்றாய் என்பதை அன்றே அறிந்தேன் அவர்கள் அனைவரும் நீ வாசலில் கோலமிடுவதை பார்த்து நீ அவர்களிடம் கோலம் நல்லாருக்கா ? என்று கேட்டதை சொல்லிச் சொல்லி அழுதனர் உனக்குத்தான் எவ்வளவு மாலைகள் உனக்கு எந்த நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை என்பதால் உனது மரணத்துக்கு இறைவன் பிரமாண்டத்தை கொடுத்து விட்டானோ... ? ஒரு வழியாக வாகனத்தில் நீ அமரர் பூங்கா பயணத்திற்கு ஆயத்தமானாய்....

   அமரர் பூங்காவில் ஒவ்வொரு நொடியும் எனக்கு பித்துப்பிடிப்பது போன்ற நிலை கோவை தனியார் மருத்துவமனையில் நீ ஐசியூவில் இருக்கும் பொழுது உனது கழுத்திலிருந்து ஊக்கு ஒன்றை எடுத்துக்கொடுத்து வச்சுக்க என்றாய் யாருமே உன்னிடமிருந்து ஊக்கு வாங்க முடியாது அப்படியே வாங்கினாலும் மறுநாள் காலையில் எழுப்பி ஊக்கை தா என்று வாங்கி விடுவாய் அப்படிப்பட்ட நீ தானே முன் வந்து கழட்டிக் கொடுத்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்த விடயம் இதோ இப்பொழுது ஞாபகம் வந்தது எனது வாழ்வில் பலமுறை நான் தனிமையில் மௌனமாய் அழுதிருக்கின்றேன் நமது வீட்டு மரணங்களும் என்னை அழ வைத்திருக்கின்றது. ஆனால் பொதுவெளியில் முதன் முறையாக நான் கதறியது எனது வாழ்வில் உனக்காக அன்றுதான் என்பது நானே அறிந்து கொண்ட உண்மை ஏனோ தெரியவில்லை குழியில் கிடத்திய உனது முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன் உனது நெற்றியில் இருந்த நாணயத்தை நீ எடுத்துக்கண்ணே என்று சொல்வது போல் மீண்டும், மீண்டும் ஒரு உணர்வு, பிரம்மை ஆகவே... பலர் தடுத்தும் மரபு மீறி எனக்கு வேண்டும் என்று பாஸ்கரன் சித்தப்பாவிடம் கதறி அழுது பொக்கிஷம் போல் பெற்றுக்கொண்டேன். உறவினர்கள் கூடாது என்று சொல்லியும் உன்னை போர்த்தி இருந்த புதிய உடைகளை வருத்தத்தோடு கத்திரிக்கோலால் கிழித்து, கிழித்து இடச் சொன்னேன் காரணம் ஆறறிவு இந்த திருட்டு சமூகம் மட்டுமல்ல ஐந்தறிவு பிராணிகளும்கூட காரணத்தை பிறகு விளக்குவேன்.

   அமரர் பூங்காவில் நான் நிலை மறந்து நடந்து கொண்டதாக மறுநாள் பிறர் சொல்லி அறிந்தேன் அன்று மட்டுமல்ல வனிதா இந்நொடிகூட உனது நினைவு வந்தாலும் ஏதோ சொல்ல முடியாத படபடப்பு இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லையடா... எல்லாம் முடிந்து வீடு வந்தாலும் மனதில் ஏதோ ஒரு பாரம் அதிசய நிகழ்வுகளில் மற்றொன்று மாலையில் வீட்டின் பின்புறமுள்ள வேப்பமரத்தில் ஒரு காகம் அதிசயமாக கரைந்தது உறவினர்கள் உள்பட அதிசயமாக பார்த்தோம் காரணம் யாராலும் நம்ப முடியவில்லை இதைப் படிப்போர் நம்புவார்கள் என்ற நம்பிக்கைகூட எனக்கு இல்லை அந்த காகம் வினோதமாக அக்க்கா, அக்க்கா என்றும், பிறகு வ்வா, வ்வா என்றும் அழுத்தமாக ஒரு குழந்தை கத்தினால் எப்படி இருக்குமோ ? அப்படியே இருந்தது இது சுமார் ஒரு மாத காலமாக ஒரேயொரு காகம் மட்டும் காலை வந்து விட்டு மாலையில் போய் விடும் அந்த நேரத்தில் தில்லை அகத்து சகோ திருமதி. கீதா ரெங்கன் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது ஸ்பீக்கரில் போட்டு கேட்கச்சொன்னேன்.

  அன்றைய இரவு உன்னை கிடத்தி இருந்த அதே இடத்தில் உறங்கினேன் நீ கனவில் வருவாய் என்ற நினைவுகளோடு உறங்கினேன் ஆனால் நீ அன்று வரவில்லை. கடந்த மூன்று இரவுகளாக உறக்கம் இல்லாத காரணத்தாலோ, என்னவோ நானும் உறங்கி விட்டேன் மறுநாள் விடிந்தும் விடியாமலும் இருந்த அதிகாலையில் எழுந்து தம்பி கண்ணனிடம் வண்டியை வாங்கி கொண்டு நீ உறங்கும் இடத்துக்கு வந்தேன் உள்ளே நுழைந்தவுடன் உன்னை அடக்கம் செய்திருந்த இடத்தில் கண்ட காட்சியால் அதிர்ச்சி. ஆனாலும் ஆச்சர்யமான சந்தோஷமே...

கூண்டுகள் சுழலும்...

சனி, ஜூலை 15, 2017

புரியாத புதிர்


இது எப்படி சாத்தியம் ? தன் உடம்பை உலகிற்கு காண்பிப்பவர்களுக்கு நடந்து வர சிவப்பு கம்பளம் விரிப்பது இவர்கள் என்ன தியாகிகளா ? இந்த மரியாதையை இவர்களுக்கு கொடுக்க தீர்மானித்தது இந்த சமூகம்தானே... அப்படியானால் இந்த சமூகம் இளைஞிகளுக்கு என்ன சொல்கிறது ? விபச்சாரிகளுக்கு மரியாதை கிடைக்கும் என்றா ?

நாட்டில் பெண்களை சினிமாவில் நடிக்கும் ஆசையை தூண்டுவதற்கும் அதன் விளைவாய் சில பெண்கள் நல்ல வாழ்க்கையைக்கூட இழந்து போவதற்கும் காரணம் இந்த சமூகம்தானே ! இந்த சமூகம் என்று சொல்கிறோமே இது யார் ? இதற்கு உருவம் இருக்கிறதா ? இல்லை நாம் தான் சமூகம் எனக்கு முன்னால் உள்ளவர்கள் எனக்கு சமூகம் அதில் நீயும் இருக்கிறாய். உனக்கு முன்னால் உள்ளவர்கள் உனக்கு சமூகம் அதில் நானும் இருக்கிறேன். ஆக சமூகம் என்பது உணர்வு பந்தப்பட்ட மனிதப்பிண்டம். இவனுக்கும் குடும்பம்தானே இருக்கிறது நாளை தனது சந்ததிகள் இப்படி வருவதை இவன் விரும்புகின்றானா ?

நான் கேட்பது ஆங்கிலேயனை அல்ல !
என் இனத்தமிழனை மட்டுமே !  

சாம்பசிவம்-
தமிழன் ஒருபடி மேலே போயி கோயிலும் கட்டிட்டானே இந்த பாவத்தை எங்கே போயி தொலைக்க ?

காணொளி
Related Posts Plugin for WordPress, Blogger...