வணக்கம் நட்பூக்களே... எமது பள்ளி நண்பன்
வருசைமுத்து வாழ்க்கையில் விரக்தியாக இருக்கிறது அதனால் எத்தனையோ சோசியர்களை
பார்த்து மனம் நொந்து விட்டேன் என்று என்னிடம் வந்து வருந்தினான். சரியென்று நம்ம
சோலந்தூர், சோசியர் சோனைமுத்து அவர்களிடம் அழைத்து போகலாம் என்று சொன்னேன்
அதற்கு...
அவன் கெடக்கான் வெளங்காமட்டை எத்தனை தடவை
பார்க்கிறது போன வருசம் வைகாசிக்குள்ளே எனக்கு புதையல் கிடைக்கும்னு சொன்னான் அவனை
நம்பி ஊரைச்சுத்தி கடன் வாங்கி செலவழிச்சுட்டேன் ஒரு எலவும் கெடைக்கலை வேற யாரும்
இருந்தால் சொல்லேன்.
சரி நம்ம உசிலம்பட்டி, உடுக்கையடி உலகநாதன்
அவர்களை பார்ப்போமா ?
நல்ல ஆளைச் சொன்னே.... அவன் பெரிய உலகப்பிராடு
அமெரிக்காவுலருந்து எனக்கு விசா வரும்னு சொன்னான் ரெண்டு வருசமாச்சு வரவேயில்லை.
ஏதாவது ஏஜண்டைப் பார்த்தியா... பணம் கட்டி
இருக்கியா ?
நான் யாரையும் பார்க்கலையே ?
பின்னே எப்படி விசா வரும் ?
அவருதான் சொன்னாரு வரும்னு...
ஏண்டா... நானாவது நாலாப்பு வரை படிச்சு இருக்கேன்
இங்கிலீஷ் எழுத்துக் கூட்டியாவது படிச்சுருவேன். நீ ரெண்டாவது படிக்கும் பொழுது
வசந்தி’’னு
எழுதச் சொன்னதுக்கு சிலேட்டுல வா சாந்தி’’னு எழுதி சாந்தி டீச்சருக்கு
காண்பிச்சதுக்குத்தானே டீச்சர் வச்ச அறையில ஓடுனவன் மழைக்குகூட பள்ளிக்கூடம்
ஒதுங்க மாட்டியடா.... எப்படி உனக்கு இப்படி எல்லாம் பேராசை வருது மதுரைக்கார
தமிழர்கள் யாராவது உனக்கு விசா அனுப்புறேன்னு சொன்னாங்களா ?
எனக்கு யாரும் மதுரைக்காரவுங்க பழக்கம்
இல்லையே....
சரி இப்ப என்னதான் யோசனையில இருக்கே ?
உடனே முன்னேறணும் அதுக்கு ஏதாவது சொல்லேன் ?
உழைக்கணும் அதுதான் வழி.
அது நமக்கு சின்ன வயசுலருந்து ஆகாதே...
இப்படியே காலம் பூராம் சோசியம் பார்த்துகிட்டே
இருந்தால் என்னாகும் ?
கோவில்பட்டியில் ஏதோ கோடாங்கி இருக்கிறதா
கேள்விப்பட்டேன் உனக்கு தெரியுமா ?
ஆமா நம்ம கோமுட்டிதான் இருக்காரு..
சரி அவரைப் போயி பார்த்து விட்டு வருவோம்.
அதன்படி கடந்த வாரம் நானும் வருசைமுத்துவும் கோவில்பட்டி
போனால் அங்கு வரிசையில் நின்றது கூட்டம் வேறு வழியின்று நானும், வருசையும்,
வரிசையில் நின்று எங்களுக்கான நேரம் வரும் பொழுது பார்த்தோம் வருசையின் எதிர்காலம்
குறித்து அவன் பக்கத்தில் அமர்ந்து கேட்டான்.
கோ.கோ.கோ- என்னடா பிரச்சனை ?
வ.மு- சீக்கிரம் முன்னேறுறதுக்கு ஒரு தொழிலை
சொல்லுங்க சாமி.
கோ.கோ.கோ- என்னடா படிச்சுருக்கே... ?
வ.மு- எதுவுமே படிக்கலை சாமி
மற்றவைகளை நீங்களே காணொளியில் பாருங்கள். ஆகவே
அடுத்த வருடம் 2018 முதல் எனது நண்பனின்
அதிரடி அரசியல் பிரவேசம் நடக்கலாம். நான் கோ.கோ.கோ.வின் எதிர்புறம் அமர்ந்து
அவருக்கே தெரியாமல் எனது பென் கேமராவில் நான் சுட்டது.
காணொளி