வியாழன், அக்டோபர் 27, 2016

சங்கரன்கோவில், சந்தேகபுயல் சங்கரன்

எனக்கு நெடுங்காலமாகவே சந்தேகம்
அதாவது திரைப்படங்களில் கசாநாயகனை அடிப்பதற்கு சுமார் பத்திலிருந்து இருபது நபர்கள் வரை பைக்குகளில் வருவார்கள் அதுவும் இப்பொழுது ஐம்பது பேருக்குமேல் வருகிறார்கள் அவர்கள் கைகளில் அருவாள், கத்தி, கம்பு, கோடரி, ஈட்டி, சைக்கிள் ஜெயின் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் இருக்கும், போதாக்குறைக்கு அவர்கள் அனைவருமே 80 திலிருந்து 110 கிலோ வரை எடையுள்ள தடியன்களாகவும் இருப்பார்கள் இவர்கள் எல்லோருமே கசாநாயகனை சுற்றிக் கொண்டுதான் நிற்பார்கள் கையிலிருக்கும் ஆயுதத்தால் ஒரே அடியில் மண்டையில் அடித்து வீழ்த்தி விடலாம். ஆனால் செய்ய மாட்டார்கள் காரணம் ஐடியா இல்லை அறிவு வளர்ச்சி குறைவு. ஆனால் கசாநாயகனோ சாதாரண எடையுள்ள ஒரு மனிதராகத்தான் இருப்பார் கையிலும் எந்த ஒரு ஆயுதமும் இருக்காது, அடிக்க வரும் எதிரிகளை வெறும் கையால் அடிப்பார், மேலும் காலால் எதிரிகளை பந்து போல் எத்தி விடுவார் அந்த நேரங்களில் நான் ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன் இந்தக் கால்களுக்கு எவ்வளவு பலம் இருக்கிறது ?

அப்புறம் இன்னொரு சந்தேகம் ?
சாநாயகனை வில்லன் ஆட்கள் துப்பாக்கியோடு விரட்டுவார்கள் கசாநாயகனோ வீட்டின் ஓட்டு முகளில் ஓடிக்கொண்டு இருப்பார் இவர்கள் அனைவருடைய துப்பாக்கி குண்டுகளும் அவரின் காலின் பக்கத்திலேயே சுடுவார்கள், ஓடுகள்தான் வேஷ்டாகும். சட்டென ஒருவனுடைய துப்பாக்கியை பிடுங்கி ஓடிக்கொண்டே... ஆறு குண்டுகள் உள்ள, துப்பாக்கியிலிருந்து எட்டுப் பேரை சுடுவார், பிறகு கசாநாயகன் தரையில் ஜம்ப் பண்ணி ஜீப்பில் ஏறப்போகும் போது பக்கத்தில் உயரமான டவரிலிருந்து ஒருஆள் பாம் வீசுவார் ஓடிக்கொண்டே நமது கசாநாயகனும் அதை லாவகமாக பிடித்து அந்தத் டவரின் மீது மிகச் சரியாக வீசுவார் டவர் மீது நின்றவரும் கருகிச்செத்து விடுவார்.
(அப்போழுதெல்லாம் நான் நினைத்ததுண்டு கெடுவான் கேடு நினைப்பான்)

ஜீப்பில் ஏறிய பிறகும் விடமாட்டார்கள் கார்களிலும், லாரிகளிலும், பைக்குகளிலும் விரட்டி வருவார்கள் கசாநாயகனும் லொடக்கு ஜீப்பை வைத்துக் கொண்டே எல்லோரையுமே இடித்தும், அவர்கள் கையில உள்ள பாம்''மை பிடுங்கிவீசி கொன்று விடுவார். இவ்வளவும் செய்து விட்டு வில்லனின் மகளோடு கைகோர்த்துக் கொண்டு போய்க் கொண்டே...இருப்பார். அந்த உலுத்த சிறுக்கியும், நம்ம அப்பனோட சொத்தை எல்லாம் அழிச்சுட்டானே ! நாளைக்கு சோத்துக்கு என்ன செய்வது ? என்று நினைத்துப் பார்ப்பதில்லை போலீஸாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். சரி அது போகட்டும் அது வேற காரியம்.
அதாவது ஒருஆள் இத்தனை ஆபத்துகளையும் கடந்து இவ்வளவு பேரையும் கொல்ல முடிகிறது என்றால் உண்மையிலேயே அவர் மிகமிகத் திறமைசாலிதான்.
(அரசாங்கம் ஏன் ? இந்த மாதிரி வீரர்களை ராணுவத்துக்கு எடுக்ககூடாது)
இத்தனை பேர் சேர்ந்தும் கசாநாயகனை வீழ்த்த முடியவில்லையே... இதற்கு காரணம் என்ன ? நான் யோசித்துப் பார்த்தேன்
தேர்வுமுறை சரியில்லை. ஆம், தேர்வுமுறை சரியில்லை.
 தேர்வு செய்தது யார் ? நமது இயக்குனர்தான்.
அவர்தானே இந்த மாதிரி திறமையில்லாத தடியன்களை தேர்வு செய்தது. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது ஒரு திறமையான கசாநாயகனை சரியான முறையில் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

எனது சந்தேகமே இனிமேல்தான்.
அதாவது ஒரு படத்தில்தான், இந்த மாதிரி திறமையில்லாத அடியாட்களை தேர்வு செய்து விட்டார்கள் சரி. அடுத்து வரும் படங்களிலாவது மற்ற இயக்குனர்கள் நல்ல திறமையான அடியாட்களையும், வில்லன்களையும் ஏன் தேர்வு செய்வதில்லை ?
இதுதான் எனது சந்தேகம்.

சாம்பசிவம்-
ஏலே யாருப்பா ? அங்கிட்டு இந்த ஆளைக் கொஞ்சம் கவனி''லே.
video
 காணொளி 

புதன், அக்டோபர் 26, 2016

காணிக்கை

தெய்வம் இருப்பது எங்கே ?
மனிதர்கள் பல தெய்வங்களை வகுத்து வைத்து கோவில்களை கட்டினார்கள் திருப்பதியில் இருக்கும் வெங்கடாசலபதியும் தெய்வம்தான், பழனியில் இருக்கும் முருகனும் தெய்வம்தான், சபரிமலையில் இருக்கும் ஐயப்பனும் தெய்வம்தான், முட்டுச்சந்தில் உட்கார வைத்த விநாயகரும் தெய்வம்தான் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் நிறுத்த முடியாது திருச்சியில் கட்டிய குஷ்பாம்பிகாள் கோயிலில் இருந்தது தெய்வமா ? (சமூகசேவகி, காங்கிரஸ் தியாகி திருமதி. குஷ்புவுக்கு கட்டியது பிறகு இடித்து விட்டார்கள்) இவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான சக்தி இருக்கின்றதா ? அல்லது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு இருக்கின்றதா ? ஏனெனில் திருப்பதிக்கு போனால் உண்டியலில் பெரிய அளவில் காணிக்கை இடுகின்றோம் ஏழையாக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த அளவில் அதாவது இதுவரை சென்ற மற்ற கோயிலுக்கு காணிக்கை செலுத்தியதைவிட கண்டிப்பாக கூடுதல்தான் திருப்பதியில் உண்டியலில் தங்கம், வெள்ளி என்று காணிக்கை செலுத்துபவர்கள் இதோ சென்னை கோடம்பாக்கம் ஆட்டோ நிறுத்தம் அருகில் இருக்கும் இந்த மரத்தடி தெய்வத்திடம் உள்ள உண்டியலில் வெறும் சில்லரை காசுகளை மட்டுமே இடுகின்றோமே ஏன் ?
சென்னை புலவர் திரு. நா. இராமாநுசம் ஐயா வீட்டின் அருகில் மரத்தடிசாமி

இந்த தெய்வங்களால் நமக்கு கூடுதல் பலனை கொடுக்க முடியாதா ? காணிக்கை என்பதே லஞ்சம்தானே லஞ்சம் கொடுக்காமல் நாம் தெய்வத்திடம் பலன் பெறமுடியாதா ? தேவகோட்டையில் வெள்ளையன் ஊரணி காய்கறி மார்க்கெட் அருகில் இரண்டு கோயில்கள் அடுத்தடுத்து இருக்கின்றன இரண்டுமே பெருமாள் கோயில்கள் பெயரில் ஒரு வித்தியாசமும் உண்டு ஒன்று பணக்கார பெருமாள் மற்றொன்று ஏழைப் பெருமாள் இதில் நாம் யாரை வணங்கினால் ? பலன் கிடைக்கும் நான் அந்த வழியில் போகும் போதெல்லாம் சற்று நேரம் நின்று யார் வணங்குகின்றார்கள் ? என்று பார்ப்பேன் இருவரையுமே பலரும் வணங்குவார்கள் நான் அவர்களை பார்ப்பேன் காரணம் யாரை வணங்கினால் நமக்கு உடனடி பலன் கிடைக்கும் என்று யாரிடமாவது கேட்போமா ? ‘’சட்டீர்’’ என்று விழுந்து விட்டால் ? இதை நினைத்து நானும் இன்றுவரை கேட்காமல் காலத்தை ஓட்டுகின்றேன். சமீபத்தில் நானும், எனது அன்பு மகளும் இந்தக் கோயிலின் வழியே நடந்து போகும் பொழுது எனது மகளுக்கு தேவகோட்டை கோயிலைப்பற்றி தெரியாததால் நான் விபரம் சொன்னேன் உடன் நான் சாமி கும்பிட்டு விட்டு வருகிறேன் என்று முதலில் ஏழைப் பெருமாள் கோயிலுக்கு சென்றது நானும் சரியென வெளியில் நின்று சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு இருந்தேன் மகள் வந்தவுடன் பணக்காரப் பெருமாளை கும்பிடவில்லையா ? என்று கேட்டேன் எல்லாம் கல்லில் வடித்த ஒரே தெய்வம்தானே ? நான் பதில் ஏதும் சொல்லாமல் வந்து விட்டேன்.

சரி அவர்கள் தெய்வங்கள் அதில் நுழைந்து கணிப்பது நமது சிற்றறிவுக்கு எட்டாது விட்டு விடுவோம் இதோ கீழே பாருங்கள்
ஐயகோ ஸ்வாமி ஜி
பிரேமானந்தா ஸ்வாமி ஜி
ஸ்டைல் மன்னன் வாசுதேவானந் ஸ்வாமி ஜி
இது நம்ம ஆளு ஸ்வாமி ஜி
கிளியோ பாரட் ஸ்வாமி ஜி
கில்ஜியானந்தா ஸ்வாமி ஜி

ஹஸ்பெண்ட் அன்ட் வைஃப் சென்டர் ஸ்வாமி ஜி
போஸ்கோ ரிஷி குமார ஸ்வாமி ஜி
சங்கராச்சாரியார் ஸ்வாமி ஜி
ஹேண்ட்ஸ்-அப் ஸ்வாமிஜிகள்
லேடிஸ் அன்ட் ஜென்டில் மேன் ஸ்வாமி ஜி
பல்லக்கு ஸ்வாமி ஜி
ராமன் ஸ்வாமி ஜி
ராம நவமி ஸ்வாமி ஜி
குத்து வில'க்கு ஸ்வாமி ஜி
ஹி இஸ் லேடி ஸ்வாமி ஜி
ஸ்ரீ ஸ்வாமி ஜி
ராமச்சந்திர புராமுத் ஸ்வாமி ஜி
ஞான பூதா சதா ஸ்வாமி ஜி
பக்தி முக்தி சக்தி

இவர்கள் அனைவருமே சராசரி மனிதர்களைப் போல சோத்தை தின்று விட்டு மலத்தை கழிப்பவர்களே இவர்களையும் தெய்வத்தைப் போலவே வணங்கி காலில் விழுகின்றார்களே இவர்களுக்கும் தெய்வத்தைப் போல் சக்தி இருக்கின்றதா ? இந்தக் குழப்பமான கேள்விகளுக்கு விடை தெரியாமல் பெயரிலேயே தெய்வத்தை வைத்திருக்கும் இனிய நண்பர் திரு. பகவான்ஜி அவர்களிடமும், பக்திப்பழம் திரு. வலிப்போக்கன் அவர்களிடமும் கேட்கலாமா ? என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன் என்ன செய்வது ? நீங்களே சொல்லுங்கள் நட்பூக்களே...
Related Posts Plugin for WordPress, Blogger...