வியாழன், பிப்ரவரி 26, 2015

கக்கு Soap

 
T.V. விளம்பரம்
உங்கமேல ஊழை நாத்தம் நாறுதா ?
ஆ.. ஆமா லேசா...
நீங்க உபயோகிக்கிற சோப்புல புளிப்பு இருக்கா ?
சோப்புல புளிப்பா ?
ஆமா, இப்ப வர்ற கக்குசோப்புல புளிப்பு இருக்கு இதுல உள்ள பித்தளைச்சத்து, உங்கமேனியை பளப்பளன்னு தங்கம்போல ஜொலிக்க வைக்கிறதோட உங்க மேனியில சந்தனவாசத்தையும் கொடுக்குது இப்பவே முந்துங்க,
 
ஒருசோப்பு வாங்கினா 10 ரூபா
ரெண்டுசோப்பு வாங்கினா 20 ரூபா
மூணுசோப்பு வாங்கினா 30 ரூபா
நாலுசோப்பு வாங்கினா 40 ரூபா
அஞ்சுசோப்பு வாங்கினா 50 ரூபா
மொத்தமாக 6 சோப்பு வாங்கினா ஒரு SCRAPPER இலவசம் இச்சலுகை இம்மாதம் பிப்ரவரி 31 ந்தேதி முதல். 
 
ஆம், இந்தியாவில், இப்பொழுது 100 ரில் ஒருடாக்டர் அரைமனதுடன் சிபாரிசு செய்வது கக்கு சோப்பு மட்டுமே.
 
திரைப்படநடிகர் விவேக் -
அடப்பேதியில ஓயிறுவியலா... இரும்புச்சத்து இருக்குறதாலே பித்தளைச்சத்தும் இருக்குனு சொல்றியலடா, உங்க விளம்பரத்தைத் பார்த்துப்புட்டு எம்பொண்டாட்டி கொழம்பு வைக்கும்போது புளி இல்லாததால, கக்கு சோப்பை கரைச்சுப்போட்டு வைச்சிட்டாலேடா அதனால தானடா நான் இப்ப பேதி வந்து ஆஸ்பெட்டல்ல கெடக்கேன் இப்பவே பாதி  உயிர்போயிருச்சே... இதவிட்டு வெளியே போறதுக்குள்ள மீதி உயிரு போயிரும் போலயே, இதகேக்க ஒருநாதியும் இல்லையா ? எஞ்ஜாதிசனத்துட்ட சொல்லி உங்களை என்ன செய்யுறேன் பாருங்கடா...
 
நண்பர்களே... மேலே உள்ளதை படித்து சிரிப்பு வரவில்லையெனில் கீழே காணொளி கண்டு சிரியுங்கள்.
Video


செவ்வாய், பிப்ரவரி 24, 2015

என் நூல் அகம் 4

 
மதுரை பதிவர் விழாவில் ஆவியைப் பார்த்தேன் பயந்து விடாதீர்கள் வலைப்பதிவர் கோவை ஆவி அவர்களைத்தான் சிறிய வயதிலும் யாரிடமும் பழகத் தெரிந்த பெரிய மனிதர் எனக்கு தனது ‘’ஆவிப்பா’’ என்ற தனது நூலை கையொப்பமிட்டுத் தந்தார் படித்தேன், தேன், ஆம் அனைத்தும் தேன் ஹைக்கூ கவிதைகள் குயிலைப்போல் கூக்கூக்வென கூவியிருக்கிறார் இந்த ஆவி.
 நான் மிகவும் ரசித்தவை பல அதில் தங்களுக்குத் தருகிறேன் சில...
ஒற்றை வார்த்தையில்
ஒரு பாடல்
சரிகமபத நீ
என்இனிய செந்தமிழ் குடித்த காலம் தொட்டு நான் கேட்டு வளர்ந்த வார்த்தை இது சரிகமபதநி ஆவி ஒருநொடியில் தனது காதலிக்கு தாரை வார்த்து விட்டாரே... இனி சங்கீத வித்துவா(ன்)ர்கள் கத்துவார்களே ! அய்யகோ நான் என்ன ? பதிலுரைக்க... பதிலறியா பாவியானேனே இந்த ஆவியால்.
என் சக போட்டியாளன்...
நீ கிடைக்காத வருத்தத்தில்
உன் காபியில் விழுந்து
உயிர் விட்ட ‘’’’
‘’’’ கூடப் போட்டியா ?
உன் இரக்ககுணத்திற்க்கு
அளவே இல்லையா ?
இரண்டாய் வெட்டப்பட்ட
வெங்காயத்திற்க்கு கூட
கண்ணீர் அஞ்சலி செய்கிறாய் !
ஆவியே, இது அயல் தேசங்களில் வாழும் பேச்சளர்களுக்கும் பொருந்துமா ?
அவள் முகம் காட்டினாள்
என் காய்ச்சல் பறந்தது...
அவள் புன்னகை சிந்தினாள்
என் நிம்மதி தொலைந்தது...
ஆவியே, இது உங்களுக்குமா ?
கோலமயில் நீ
கோலம் போடும்
கோலத்தை காண
கண்ணுறக்கமில்லாமல்
அலங்கோலமாய் நான் ! !
ஆவியே, அலங்கோலமா ?
எழுத்தாணி தோன்றி
டெக்னாலஜி தோன்றா காலத்தே
முன் தோன்றிய பா
இந்தக் காதல்ப் ‘’பா’’
படிக்கும் நமக்கும் ஆமாப்பா என்று சொல்லவைக்கிறது இன்னும் எழுதவே ஆசை இது ஆவிப்பா ஆகிவிடக்கூடாதே.. போதும்ப்பா என நினைக்கிறேன். (ஆமாப்பா, ஆளவிடப்பா... யாரப்பா ? அது இடையிலே, கருப்பா)
‘’ஆவி’’க்கும் காதல் வருமா ? எமக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அத்தனையும் கவித்தேன் சொந்த அனுபவத்தில் நொந்த அனுபவமோ என்னவோ படிக்கும்போது... எமக்கு அந்த உணர்வு வந்த-து. எந்த உணர்வும் வரவில்லையென்று யாரும் சொல்லமுடியாது சொன்னால் சொன்னவர் ஆவியே அந்த அளவுக்கு ஆவி, ச்சே மனிதர் உணர்ந்து எழுதி இருக்கிறார்.
 
மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் ‘’காதல் மன்னன்’’ பட்டம் ஏன் ? சும்மா கிடப்பில் கிடக்கின்றது அதை எடுத்து நமது கோவை ஆவிக்கு கொடுத்தால் என்ன ? வாத்தியாரே சரிதானே....
 
 ஆகவே ஆவியின் ஆவிப்பாவை படிக்க ஆத்மார்த்தமாய் ஆவண செய்யும் உங்கள்.
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
எனது மற்ற விமர்சனங்களை படிக்க கீழே இணைப்புகளை சொடுக்குக...
 
 

சனி, பிப்ரவரி 21, 2015

My, Long Time Confusion ?

 

எனது நீண்டகால குழப்பம்.


இந்த சமூகத்திலே பொண்டாட்டி செத்துட்டா புருஷன் புதுமாப்பிள்ளை ஆகிடுறான் ஆனால் புருஷன் செத்துட்டா பொண்டாட்டி புதுப்பெண்ணா ஆகுறது இல்லையே ஏன் ?


மனைவியை இழந்தவனிடம் கடைசி காலத்தில் உனக்கு ஒரு துணை வேண்டுமென சொல்வது ஏன் ?


கணவனை இழந்தவளிடம் கடைசி காலத்தில் உனக்கு ஒரு துணை வேண்டுமென சொல்லாதது ஏன் ?


தனது மகளின் கணவன் குடிகாரனாய் இருப்பதைப் பார்த்து வேதனைப்படும் மனிதன் தனது மருமகளின் கணவன் குடிகாரனாய் இருப்பதைப்பற்றி கவலைப்படுவதில்லையே ஏன் ?


ஏதோ ஒரு சூழலில் தனது மகள் இறந்து விடுகிறாள் கண்னை மூடிக்கொண்டு அந்தச் சாவுக்கு காரணம் தனது மருமகன் தான்யென சொல்வது ஏன் ?


ஏதோ ஒரு சூழலில் தனது மருமகள் இறந்து விடுகிறாள் கண்னை மூடிக்கொண்டு அந்தச் சாவுக்கு காரணம் தனது மகன் தான்யென சொல்வதில்லையே ஏன் ?


மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்து கொள்கிறான் இதை மனைவியர்கள் ஏற்றுக் கொள்வது ஏன் ?


கணவன் இருக்கும்போது மனைவி தனக்கு இன்னொரு திருமணம் வேண்டுமென்றால் அந்த வார்த்தையைக்கூட கணவன் ஏற்று கொள்வதில்லையே ஏன் ?


தனது மகள் திருமணத்திற்கு வரதட்சினையை குறைத்து பேசுபவர்கள் தனது மகனுக்கு பேசும்போது குறைத்து பேச தயங்குவது ஏன் ?


திருமணத்திற்கு ஜாதி, மதம் பார்க்கும் மானிடன் விலைமாதரிடம் போகும்போது பார்ப்பதில்லையே ஏன் ?


குடும்ப சூழ்நிலைக்காக சிறு வட்டத்திற்குள் தன்னை இழப்பவளை வேசியென சமூகம் கோயிலுக்குள் வரவிடாதது ஏன் ?


அதே சமூகம் உலகறிய தன்னை இழந்த நடிகைகளுக்கு மட்டும் கோயிலே கட்டுவது ஏன் ?


கட்டிய கோயிலுக்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் கும்பாபிஷேகம் நடத்தினார்களே ஏன் ?


குஷ்பாம்பிகாலே போற்றி... என்று சரணமும் சொன்னார்களே ஏன் ?


பின்நாளில் அதை இடித்தும் விட்டார்களே, இந்த தண்டச்செலவு ஏன் ?


கல்லிலான கடவுளுக்கு பாலாபிஷேகம் எதற்கு என்றார்களே ஏன் ?


அதே மனிதன் பேப்பரிலான கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கிறானே ஏன் ?


சினிமாவில் மனைவி மீது பாசத்தை பொழிபவர்கள் நிஜ வாழ்வில் விவாகரத்து செய்கிறார்களே ஏன் ?


சினிமாவில் கர்ணபரம்பரை போல் நடித்து காண்பிப்பவர்கள் நிஜ வாழவில் கஞ்சன் ஜங்காவாக இருப்பது ஏன் ?


சினிமா நடிகர்கள் தனக்கு பின்னால் ஆயிரம் விசிலடிச்சான் குஞ்சுகளை கண்டவுடன் தமிழகத்தை காப்பாற்றப் போகிறேன் என்கிறார்களே ஏன் ?


இந்த நடிகர்களிடம் ஆட்டோகிராப் என்ற பெயரில் கையெழுத்து வாங்க சில விட்டில் பூச்சிகள் துடிக்கிறார்களே ஏன் ?


இதைப் போலவே நம்மாளும் கையெத்துப் போட முடியும் என்பதை மறந்து விடுகிறார்களே ஏன் ?


சினிமா சமூகத்தை சீரழிக்கிறது என்று சொல்பவர்கள் குடும்ப சகிதம் சினிமாவுக்கு போவது ஏன் ?


எதிர்க்கட்சிக்கார்கள் ஊழல் செய்கிறார்கள் என்று சொல்லும் அரசியல்வாதிகள், தான் வந்தவுடன் அதையே செய்கிறார்களே ஏன் ?


அரசியல்வாதிகள் நாட்டை சீரழிக்கிறார்கள் என்று சொல்பவர்கள் சீரழித்தவர்களுக்கே மீண்டும் அங்கீகாரம் கொடுப்பது ஏன் ?


நியாயம் பேசும் மனிதன் ஆண்பாலையும், பெண்பாலையும் சமப்படுத்தாமல் பேசுவது ஏன் ?


நியாயம் பேசும் மனிதன் மதப் பிரச்சனை என்று வரும்போது தன்மதத்திற்கு சார்பாய் பேசுவது ஏன் ?


நியாயம் பேசும் மனிதன் ஜாதிப் பிரச்சனை என்று வரும்போது தன் ஜாதிக்கு சார்பாய் பேசுவது ஏன் ?


நியாயம் பேசும் மனிதன் தன் ஜாதிக்குள்ளேயே சொந்த பந்தத்திற்கு சார்பாய் பேசுவது ஏன் ?


நியாயம் பேசும் மனிதன் சொந்த பந்தத்திற்குள்ளேயே தன் குடும்பத்திற்கு சார்பாய் பேசுவது ஏன் ?


நியாயம் பேசும் மனிதன் தன் குடும்பத்திற்கு உள்ளேயே தனக்கே சார்பாய் பேசுவது ஏன் ?

 

சாம்பசிவம்-

நீரு மாத்தரம் எப்படிங்றேன் ?

வியாழன், பிப்ரவரி 19, 2015

முயற்சி, திருவினையாக்கும்.

 
ன்பை, நான் கொடுத்தேன்
சையை, நீ தொடுத்தாய்
ன்பம், தந்த இறையருளால்
ன்றெடுத்தேன், நம் மகனை
ன், தமிழ்ப்பெயரை உச்சரித்து
ரெல்லாம், சொல்கிறானே
ன்மகன், செஞ்சடையோன்
க்கமுடன், கேட்கிறானே
ந்துவயது, நம்மகனும்
ரேயொரு, தங்கைகூட
டிவிளையாடிடவே, நான்
வையாகி, விடும்முன்னே
முயற்சிப்போமா ?
முத்தமிழ, 
முத்தழகா,   
முத்தெடுத்து, 
முத்தமிட....
முத்தத்திலே, தொட்டிலிட்டால்
முதல்பையன், ஆட்டிடுவான்
முனைந்திடுவோம், கட்டிலிலே
முதல்நாளாய், நினைத்திடுவோம்.
மூண்றாவது, குழந்தைக்கும்
மூண்றாண்டு, போகட்டுமே !
மூப்பையூரு, அத்தை
மூக்காயி, தந்த மகனே
மூக்கழகா, உன்
மூஞ்சிபோல, பிறக்கட்டுமே
மூண்று, முத்துக்களும்.
 
சாம்பசிவம்-
முயற்சி திருவினையாக்கும்னு, வாசுகியக்கா புருஷன், இதுக்குத்தான் சொன்னாரா ?

Related Posts Plugin for WordPress, Blogger...