1993 மார்ச் 30
இனையான்குடி மருத்துவர்
திருமதி. ரஹிமா உஸ்மான் மருத்துவமனை.
எனது வாழ்வில் அன்றுதான்
பெண்களின் பிரசவ வேதனையினை உணர்வுப்பூர்வமாக ஒருநாள் முழுவதும் உணர்ந்து கொண்ட
நாள். செவிலித்தாய் வந்து கேட்டார்... இங்கே,
கலைச்செல்வியோட கணவர் யாரு ? நான்தான் இதில் கையெழுத்து போடுங்கள் போட்டேன்
சிறிது நேரத்தில்... இங்கே, கலைச்செல்வியோட கணவர் யாரு ? இப்பத்தானே
போட்டேன். நீங்க ? எந்த
கலைச்செல்வியோட கணவர்... தேவகோட்டை கலைச்செல்வி. அப்ப, நீங்க ? நான்
சூராணம் கலைச்செல்வியோட கணவர் இன்னொருவர் வந்தார் உங்க பேரு ? சண்முகம்.
அப்ப இதில் நீங்க கையெழுத்து போடுங்க, ஒரு நிமிசம் இது யாருடைய பேப்பர் ?
தேவகோட்டை கலைச்செல்வியுடையது அப்ப நான்தானே கையெழுத்து போடணும் நீங்கதான்
போட்டீங்களே... அது எனது மனைவியுடைய பேப்பர் இல்லையே... அதனால் என்ன ? அவருடைய
மனைவி பேப்பரில் நீங்க கையெழுத்து போட்டீங்க இது சும்மா சம்பிரதாயத்துக்காக
வாங்குறோம். இது அவசியமில்லாதது இதை நான் ஒத்துக்கிற முடியாது அந்தப்பேப்பரை
கிழிச்சுப் போடுங்க, இதில நான்தான் கையெழுத்து போடுவேன். நான் சடக்கென
அந்தப்பேப்பரை பிடுங்கி கையெழுத்து இட்டுக்கொடுத்தேன் அவள் என்னை
நெற்றிக்கண்ணின்றி சுடுவதுபோல் பார்க்க, இவர் (சண்முகம்) எனது
பேப்பர் எனகேட்க, அவள் வெடுக்கென அதெல்லாம் வேண்டாமென சொல்லி விட்டு சடக்கென உள்ளே
நுழைந்து விட்டாள் இவர் என்னைப்பார்க்க, எனக்கு பாவமாக போய் விட்டது பக்கத்தில்
நின்றிருந்த எனது மனைவியின் தாய்-தந்தையினரின் பார்வை சொன்னது இவன் எங்கே போனாலும்
வில்லங்கம்தானா ? நான்
எனது உரிமையை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டேன் இதனாலேயே என்னை பலருக்கும்
பிடிப்பதில்லை அதைப்பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை என் மனசாட்சியே எனக்கு இறைவன்
இதுவே எமது கொள்கை.
சிறிது நேரத்தில் வெளியே வந்த செவிலித்தாய் இரண்டு
பேருக்குமே ....ண் குழந்தை பிறந்ததாக சொல்ல, நான் அவரிடம் சொன்னேன் உங்கள்
மனைவியுடைய பெயர் கலைச்செல்வி, எனது மனைவியின் பெயரும் கலைச்செல்வி இரண்டு
பேருக்குமே ஒரே நாளில், ஒரே இடத்தில், ஒரே நேரம் என்றுகூட சொல்லலாம் இரண்டும்
....ண் குழந்தை ஆகவே, ஒரே பெயர் வைப்போமா ? என்ன பெயர் ? சொன்னேன் என்னோட மனைவிக்கிட்டே கேட்கணும்... நான்
வச்சிட்டேன் என்னங்க குழந்தை இப்பத்தானே பிறந்துச்சு புண்ணியானம் செய்து ஐயர்
வந்து பெயர் வைக்கவேண்டாமா ? புண்ணியம்
செய்ததாலேதானே இந்தக்குழந்தை பிறந்தது எனக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க ஐயர்
யாரு ? சரிங்க
உடனே எப்படி பெயர் வச்சீங்க ? நான் பெயர் வச்சு இருபது வருஷமாச்சே... என்னை ஒரு மாதிரியாக
பார்த்தவர் நகர்ந்து கொண்டார், அதன் பிறகு நான் அவர்களை சந்திக்கவே இல்லை நான்
சொன்ன பெயர் வைத்திருக்க மாட்டார்கள் என்பது எமது கருத்து.
எனது மனைவி
தெய்வத்திருமதி. கலைச்செல்வி கில்லர்ஜி காலை 06.00 மணிக்கு தொடங்கிய பிரசவ வலி மாலை 06.00 மணிக்குத்தான் எங்கள்
அன்புச்செல்வம் பிறந்தது அறுவை சிகிச்சை இல்லை சுகப்பிரசவம் என பெருமையாக வெளியில்
சொல்லிக் கொண்டோம் ஆனால் அன்று முழுவதும் எனது
மனைவியோடு நானும், மனைவியுடைய அம்மா, அப்பா, சின்னம்மாவும் பட்ட வேதனை இருக்கிறதே
சொல்லிமாளாது அன்றைய முதல் உணவு எங்களுக்கு இரவு 08.00 மணி. அன்று மட்டும் காலையிலிருந்து... சுமார் 12 பெண்களுக்கு குழந்தை பிறந்திருக்கும் எனது
மனைவியின் அலறல் சத்தம் மட்டுமில்லை, பிற பெண்களின் சத்தம் கேட்டு எதற்க்கும்
கலங்காத நான் கலங்கியதும் அன்றுதான் அந்தப்பெண்களின் அலறல் சத்தத்தோடு
எனது தாயின் முகம் நிழலாடியது நமது தாயும் நம்மைப்பெற இப்படித்தானே கஷ்டப்பட்டு
இருப்பார்கள் இயல்பாகவே எனது தாயுடன் பாசமாக இருக்கும் நான் அன்றுமுதல் தாயின்
அருமையை கூடுதலாக அறிந்து கொண்டேன். நாட்டில் அறியாமைவாதிகள் யார், யாரையோ தாய்
எனச்சொல்கிறார்கள் என்னைப்பொருத்தவரை நடமாடும் தெய்வம் என்றால் ? அது அவனவனைப்பெற்ற தாயே தவிற வேறில்லை இது
தவறென்று எந்த மானிடனோ, மதக்கொள்கைகளோ, சொன்னால் அதை ஏற்றுக்கொள்வதில் எமக்கு
கசப்புணர்வு உண்டு. ஒவ்வொரு மனிதனும் தாய்ப்பாசத்தை உணர்ந்து பார்க்கும் ஒரு
சந்தப்பத்தை இறைவன் மனைவி மூலமாகவும் கொடுக்கின்றான் என்பதற்க்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.
குழந்தை பிறந்தவுடன் சீக்கிரம்
போய் பேபி சோப், பவுடர், அப்படியே பாத்திரக்கடையில் ஒரு சிறிய சங்கும் வாங்கி
வாருங்கள் என்று சொன்னார்கள் வெளியே போய் மருந்தகத்தில் சோப்பும்,
பாத்திரக்கடையில் சில்வர் சங்கும் பத்து நிமிஷத்தில் வாங்கி வந்து கொடுத்தேன் சிறிது நேரத்தில் எனக்கு தகப்பன் அந்தஸ்து கொடுத்த என்னவள் மயக்கம் தெளிந்து
விழிக்க...
(பலரும் தன்னை ஆண்மகன் என மார்தட்டிக் கொள்கின்றான் அந்த பெயரை இந்த
சமூகத்திற்க்கு முழுமையாக அங்கீகாரம் கொடுப்பவள் அவனது அங்கீகாரம் பெற்ற அவனது
மனைவியன்றி வேறு யாருமல்ல சிறிது தாமதமானாலும் ‘’மலடி’’ எனச்சொல்லி விட்டு மறுமணத்திக்கு தயாராகின்றான் ஆண்மகன் தானும்கூட ‘’மலடன்’’ ஆக இருக்கலாமே 80தை சிந்திக்காமல் எனது வாழ்வில் பலரையும் நான்
கண்டதுண்டு)
அவளது முகம் மறுபிறவி எடுத்து
வந்திருக்கின்றோம் 80தை எனச்சொல்லாமல் சொல்லியது எல்லோரும் சுற்றி
நின்று கொண்டிருக்க... குழந்தைக்கு சங்கில் ஊற்றி ஏதோ கொடுத்தார்கள் அந்த சங்கை
எடுத்து பார்த்த என்னவளின் முகத்தில் பிரகாசத்தைக் கண்டேன் சங்கில் எழுதியிருந்தது
‘’தமிழ்’’ ஆம் பாத்திரக்கடையில் வாங்கிய
அந்த அவசரத்திலும் பெயர் வெட்டச் சொன்னேன்.
எங்கள் வம்சவிருத்தியை
தளைக்க வந்த அந்த எங்கள் அன்புச்செல்வம் தமிழ்வாணன் இன்று (30.03.2015) 23 வது பிறந்தநாள் அன்பு உள்ளங்களே... நீங்களும்
வாழ்தலாமே...
ஸ்வீட்
எடுத்துக்கொள்ளுங்கள்.
காணொளி.
வந்தீர்கள்
சாப்பிடுங்கள், நேரமில்லையெனில் எடுத்துக்கொண்டு போங்கள்.
குறிப்பு - அன்று இன்னொரு
சம்பவம் எனக்கும், மற்றொரு நபருக்கும் இரவு 8 மணிக்கு மேல் 7 ½ ஆகியது அதை அடுத்தொரு பதிவில் சொல்கிறேன்.