வணக்கம்
நட்பூக்களே... ஒரு விழா நிகழ்கிறது என்றால் மங்கலகரமாக குத்து விளக்கு ஏற்றி
தொடங்கி வைப்பார்கள். இது கூலித் தொழிலாளர்கள் முதல் கூத்தாடிகளின் திரைப்படத்
தொடக்க விழாக்கள் வரையில் இப்படித்தான் நிகழ்கிறது. இதோ இங்கொரு விழாவுக்கு குத்து
விளக்கு ஏற்றும் பெண்மணியின் அவலட்சணத்தை பார்த்தீர்களா ? இப்பெண் தொடங்கி வைக்கும் இது விளங்குமா ?
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
வியாழன், டிசம்பர் 05, 2024
சனி, நவம்பர் 30, 2024
திங்கள், நவம்பர் 25, 2024
தலைப்பு இலவசம்
அடப்பேதியில ஓயிருவியலா... திரைப்படத்துக்கு தலைப்பு வைக்கணும்னா...
தேவகோட்டை வாங்கடா.. பணமும் வேண்டாம், பெயரும் வேண்டாம் சமூகசேவைக்காக இலவசம்டா...
நீங்களெல்லாம் படம் ஓடணும்னு நினைச்சுத்தான் படம் எடுக்கிறீங்களா ? இல்லை தயாரிப்பாளர் தலையில் துண்டை போடணும்னு பேசி
வச்சுட்டு வாறீங்களாடா ? உங்களுக்கு கதையே எழுத வராதா ? அருபது ஆண்டு காலமாக அரைச்ச மாவையே வெட்கமே இல்லாமல்
ஊற்றிக் காண்பிக்கிறீங்க... அதை வெட்கமே இல்லாமல்......
புதன், நவம்பர் 20, 2024
காசிமேடு, காசுவெட்டி காசியம்மாள்
வணக்கம்
இந்தியா மட்டுமல்ல உலகம் அனைத்திலுமே அந்த நாட்டு நாணயங்களையோ, ரூபாய்த்தாள்களையோ
அழித்தல் வேலையில் ஈடுபடக்கூடாது. திரைப்படங்களில் அப்படி காட்சிகள் இடம் பெற
வேண்டிய நிலையிருந்தால் அதற்கான துறைகளிடம் சிறப்பு அனுமதி பெற்று அந்த மாதிரியான
ரூபாய்த்தாள்களை போலியாக அச்சடித்து. தீ வைப்பார்கள், அதனை அழிப்பது போல்
காட்சிகள் எடுப்பார்கள். இது உலகலாவிய சட்டம்.
வெள்ளி, நவம்பர் 15, 2024
உணர்---ஓம்
வணக்கம்
நட்பூக்களே... கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் வரிகள் ஒன்று நம்மில்
பலரும் கேட்டு இருப்போம். ’’தென்னையை
பெத்தா இளநீரு பிள்ளையைப் பெத்தா கண்ணீரு பெற்றவன் மனமே கல்லம்மா பிள்ளை மனமே
கல்லம்மா’’ என்ற பாடல் இன்றைய
வாழ்வில் பலரும் கண்ணீர் வடித்தே வாழ்கின்றனர் ஆயினும் நமக்கு ஒரு பிள்ளை வேண்டும்
அதுவும் ஆண் பிள்ளை அவன்தானே ஆப்பு வைப்பான்.
ஞாயிறு, நவம்பர் 10, 2024
இதுவும் வேண்டுமடா...
உறவுகளே... இந்த இழிநிலைக்கு காராணம் யார் ? சேனல்காரர்களா ? இல்லை
இந்த நாடகங்களை தயாரிக்கும் நாதாரிகளா ? அல்லது
இதில் நடிக்கும் கூத்தாடிகளா ? நான்
சொல்லவா ? மக்குகளாகவே வாழும் நாம்தான். நாம் ஒவ்வொரு தினமும் எத்தனை
ஆயிரம் நபர்கள் இதைப் பார்க்கின்றோம் என்பதை துள்ளியமாக கணக்கிடும் கருவிகள் மூலம்
பார்த்து இதன் தாக்கத்தை பார்வையாளர்களிடம் அதிகரிக்கின்றார்கள்.
செவ்வாய், நவம்பர் 05, 2024
பூஜையும், பூசையும்
வணக்கம்
நட்பூக்களே... சுமார் இருபது வருடங்களுகு முன்பு கிராமம் மட்டுமல்ல, நகரங்களில்கூட
எங்கெங்கு காணினும் பெண்களுக்கு பேய் பிடித்து விட்டதாக சொல்லி சிலர் ஏர்வாடி தர்ஹாவுக்கு
அழைத்துப் போவார்கள் அதற்கென்று டிகிரி படித்தவர்கள் போல சில ஊரில் பூசாரிகள்
இருப்பார்கள், சவுக்கால் அடிப்பார்கள் இவர்கள் பேய் ஓட்டுபவர்கள் என்றும்
அழைக்கப்படுவார்கள் ஏதோ ஸ்டேரிங் பிடிக்கும் டிரைவர்கள் போல...
வெள்ளி, நவம்பர் 01, 2024
கூத்தாடிகளின் உபரி வருமானம் (2)
இன்றைய திரைப்படக் கூத்தாடன், கூத்தாடிகள் தங்களது
வருமானத்தை பெருக்க பல வழிகளிலும் இதர தொழில்களை நடத்தி வருகிறார்கள் அவைகளை
ஆதாரத்துடன் தங்களுக்கு தொடர்ந்து தருகிறேன். அவ்வகையில் இரண்டாவது பதிவு.
ஞாயிறு, அக்டோபர் 27, 2024
நவீன வசதிகளுடன்...
வணக்கம்
நண்பர்களே... நமது தமிழகத்தில் எல்லா ஊர் பேருந்து நிலையங்களிலும் பாருங்கள்
நகராட்சியோ அல்லது மாநகராட்சியோ இப்படித்தான் கழிவறைகள் கட்டி வைத்து
இருக்கின்றது. அதாவது நான்கு அடி உயரத்தில் மட்டுமே தடுப்புச்சுவர்கள். இதன்
அருகிலும் போய் பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுனரும், நடத்துனரும்கூட போய்
நிற்பார்கள். வரிசையாக தலைகள் மட்டும் தெரியும்.
செவ்வாய், அக்டோபர் 22, 2024
இருள் முகங்கள்
வணக்கம் நட்பூக்களே...
மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா ? இது உ.பி.யில் மட்டுமல்ல,
தமிழகத்தில் பல இடங்களிலும் இப்படி கணவன் – மனைவிகள் போலியாக வாழ்க்கின்றார்கள்.
இது விஞ்ஞான வளர்ச்சியால் நமக்கு கிடைத்த சாபக்கேடு. எனக்கு நீ துரோகம் செய்தால்
உனக்கு நான் செய்வேன். குட்டு உடைபட்டு விட்டதா ? பரவாயில்லை அமைதியாக நீ
உன் வழியில் போ, நான் என் வழியில் போகிறேன்.
வியாழன், அக்டோபர் 17, 2024
ஊட்டி, ஊதாரி ஊமைத்துரை
ஊமைத்துரை
இவன் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத அப்பாவியைப் போலிருப்பான். ஆனால் எமகாதகன் வீட்டில் கடைக்குட்டி ஊமைத்துரை என்று பெயர் வைத்ததனாலோ என்னவோ வாய் பேசாத ஊமையாகிப் போனான். அய்யா அய்யாத்துரை இரண்டு பெரிய தேயிலை தோட்டங்களை நடத்தி, அப்பா அப்பாத்துரையிடம் விட்டு சென்று விட்டார்.
இவன் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத அப்பாவியைப் போலிருப்பான். ஆனால் எமகாதகன் வீட்டில் கடைக்குட்டி ஊமைத்துரை என்று பெயர் வைத்ததனாலோ என்னவோ வாய் பேசாத ஊமையாகிப் போனான். அய்யா அய்யாத்துரை இரண்டு பெரிய தேயிலை தோட்டங்களை நடத்தி, அப்பா அப்பாத்துரையிடம் விட்டு சென்று விட்டார்.
ஞாயிறு, அக்டோபர் 13, 2024
செவ்வாய், அக்டோபர் 08, 2024
வசம்புவாயனும், வடிச்சகஞ்சியும்
வணக்கம்
வசம்புவாயண்ணே நல்லா இருக்கியளா ?
வாடாத்தம்பி வடிச்சகஞ்சி நல்லா இருக்கியாடா ? என்ன இந்தப்பக்கம் ?
சில சந்தேகம்
வந்துச்சு அதான் கேட்டுப் போகலாம்ணு...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்லுறேன்.
வாடாத்தம்பி வடிச்சகஞ்சி நல்லா இருக்கியாடா ? என்ன இந்தப்பக்கம் ?
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்லுறேன்.
வியாழன், அக்டோபர் 03, 2024
எனது அமைதிப்பூங்கா
இறைவா
துரோகங்களை மறக்கும் மனம் கொடு
கூடவே துரோகிகளை மறக்கவும் குணம் கொடு
இனி எனக்கு நாளும் உறங்கும் நிலை கொடு
வாழும் வரையில் எனக்கு நிம்மதியை கொடு
கூடவே துரோகிகளை மறக்கவும் குணம் கொடு
இனி எனக்கு நாளும் உறங்கும் நிலை கொடு
வாழும் வரையில் எனக்கு நிம்மதியை கொடு
சனி, செப்டம்பர் 28, 2024
செவ்வாய், செப்டம்பர் 24, 2024
வம்பு உருவாகுமே...
வணக்கம் நண்பர்களே... ‘’அன்பு நடமாடும் கலைக்கூடமே’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல். எனக்கு மிகவும்
பிடித்தமான பாடலாகும். இதன் சிறப்பு கவிஞர் இறுதியில் மே... மே... மே.. என்று
முடித்து இருப்பார். எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின்
இணைப்பும் கொடுத்துள்ளேன்
வெள்ளி, செப்டம்பர் 20, 2024
நான் ரசித்தவை (3)
வணக்கம் நண்பர்களே... முன்பு நான் ரசித்த
திரைப்பட வசனங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன், இப்பொழுது பாடல் வரிகளில் சில
பகிர்ந்து கொள்கிறேன். தாங்களும் இரசிக்கலாம். பாடிய பாடகர்-பாடகிகளையும்
குறிப்பிட்டுள்ளேன் – கில்லர்ஜி
ஞாயிறு, செப்டம்பர் 15, 2024
கருங்குழி, கருவிழி கனிமொழி
கருங்குழி, அழகிய கிராமம் அங்கு செல்வந்தர் கருங்குமலை தனது பணபலத்தால் எதிரிகளை படுகுழியில்
தள்ளி விடுவார். இவருக்கு ஒரே செல்வமகள் இருந்தாள் நல்ல அழகி. பெயர் கனிமொழி,
பார்க்கும் ஆடவர்களை கவரும் கருவிழியழகி அவ்வளவு வசிகரமானவள். அவளை நேர் கொண்ட
பார்வையாக பார்க்க அஜீத்தால் மட்டுமே முடியும் ஆனால் அவராலும் முடியாது காரணம்
ஷாலினி.
செவ்வாய், செப்டம்பர் 10, 2024
புதன், செப்டம்பர் 04, 2024
சனி, ஆகஸ்ட் 31, 2024
எனக்கு அகவை முந்நூறு
நண்பர்களே... மேலே மேற்படியார்
சொல்லி இருப்பதை பார்த்தீர்களா ? இவர் நூற்றி ஐம்பது வருடம் வாழ்வாராம். இருக்கட்டும்
நானும்கூட முந்நூறு வருடம் வாழப்போகிறேன் அதற்கான ஆய்வை முடித்து விட்டேன். அந்த
ஆய்வு ரகசியம் எமது சீடர்களால் எப்படியோ கசிந்து இவரது கைக்கு போய் விட்டது போல...
பரவாயில்லை எனது ஆய்வில் பாதிதான் கிடைத்து இருக்கிறது ஆகவே நூற்றி ஐம்பது வருடம்.
நான் முந்நூறு அல்லவா...
திங்கள், ஆகஸ்ட் 26, 2024
குட்டிச்சுவரு...
நண்பர்களே... ஜெயிலர் என்றொரு
திரைப்படத்தில் வந்த பாடல் வரிகள் ஒன்று என்னை மெய் சிலிர்த்து கேட்டு இரசிக்க வைத்தது
அதனைக் குறித்து எழுத வேண்டுமென்று வெகு நாட்களாக நினைத்திருந்தேன். பாடலின்
தொடக்க வரிகள் என்னவென்பதை என்னால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை காரணம் பின்னணி
இசையின் மெல்லிய நீரோட்டம் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.
புதன், ஆகஸ்ட் 21, 2024
வள்ளியை கிள்ளியபோது...
01.
மளிகை கடை
வேலை செய்து மாளிகை வீடு கட்டியவர்களும் உண்டு.
மாளிகையில் வாழ்ந்து கெட்டு மளிகை கடை வேலை செய்பவரும் உண்டு.
மாளிகையில் வாழ்ந்து கெட்டு மளிகை கடை வேலை செய்பவரும் உண்டு.
வெள்ளி, ஆகஸ்ட் 16, 2024
நினைவஞ்சலி
வணக்கம்
நட்பூக்களே...இப்பொழுது எங்கெங்கு காணிணும் நினைவஞ்சலி சுவரொட்டிகள், நெகிலி பதாகைகள்
என்று சுவர்களில் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதாவது இறந்ததற்கு சுவரொட்டி
அடிக்கின்றார்களோ... இல்லையோ மறுவருடம் முதல் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு,
மூன்றாம் ஆண்டு மட்டுமல்ல, அப்பத்தாவின் பதினாறாம் ஆண்டு நினைவஞ்சலி என்று
சுவரொட்டிகள் ஒட்டுகின்றார்கள்.
ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2024
பாஞ்சாலி
நண்பர்களே.. மேலே புகைப்படத்திலிருக்கும்
குடும்பம் ஹரியானா மாநிலத்தில் நாகரீகம் வளராத மலைவாசி மக்களின் குடும்பங்களில்
ஒன்று. முன்புறம் கையில் தான் பெற்ற குழந்தையுடன் நிற்பதுதான் குடும்பத்தலைவி
பின்புறம் நிற்பவர்கள் யார் தெரியுமா ? அவர்கள் இந்தப் பெண்மணியின் கணவர்கள். ஆம் ஐந்து நபர்களும்
கணவர்களே... வரிசைப்படி பிறந்தவர்கள்.
செவ்வாய், ஆகஸ்ட் 06, 2024
கிறுக்கியது ஏழு
அவனுக்கு
ஊரார் வைத்த
பெயர் கிறுக்கன் மாலை
நேரமாதலால் பறவைகள்
நேர்த்தியாக அரை வட்டமாக
கூடு திரும்பும் அவசரத்திலும்
இவனை கூச்சலிட்டு கேலி செய்து
போனது. கிறுக்கன் கேட்டான்
ஏ... பறவைகளே நீங்கள் எதற்கு
என்னை கேலி செய்கிறீர்கள்
நானும் உங்களைப் போல்தானே
ஆடையின்றி வாழ்கிறேன்...
* * * * * * Sunday * * * * * *
பெயர் கிறுக்கன் மாலை
நேரமாதலால் பறவைகள்
நேர்த்தியாக அரை வட்டமாக
கூடு திரும்பும் அவசரத்திலும்
இவனை கூச்சலிட்டு கேலி செய்து
போனது. கிறுக்கன் கேட்டான்
ஏ... பறவைகளே நீங்கள் எதற்கு
என்னை கேலி செய்கிறீர்கள்
நானும் உங்களைப் போல்தானே
ஆடையின்றி வாழ்கிறேன்...
* * * * * * Sunday * * * * * *
வியாழன், ஆகஸ்ட் 01, 2024
ஆத்தூர், ஆதார் ஆராயி
ஆதார் அட்டையில் நமது புகைப்படத்தை நாமே அடையாளம் காண
முடியாத வகையில் அச்சடிப்பது நமது நாட்டின் சிறப்பு. அதையும் நாம் ஏற்றுக்
கொண்டோம். வேறு வழியில்லை என்பதால், பெட்ரோல் விலை, கேஸ் விலை ஏறுகிறது என்ன
செய்தோம் ? ஒரு ஆணியும் புடுங்கவில்லை. காரணம் நமக்கு புடுங்கத்
தெரியாது. ஆனால் வாங்கத் தெரியும்.
வெள்ளி, ஜூலை 26, 2024
ஞாயிறு, ஜூலை 21, 2024
பொன்மொழியும், என் வழியும்
வறுமை வந்தால் வாடாதே
வசதி வந்தால் ஆடாதே
நான்
வசதியில் ஒருக்காலமும் ஆடியதில்லை ஆனால் வறுமையில் வாடி இருக்கிறேன் காரணம் நான்
வசதியிலும் வாடிக் கொண்டுதான் வாழ்கிறேன் இது எனது சாபக்கேடு போலும்.
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
வசதி வந்தால் ஆடாதே
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
செவ்வாய், ஜூலை 16, 2024
எனது விழியில் பூத்தது (10)
வணக்கம்
நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த பத்தாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது
பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ
(Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம்
நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். - கில்லர்ஜி
வியாழன், ஜூலை 11, 2024
வங்கமுத்தும், வழுக்குப்பாறையும்
வணக்கம்
வங்கமுத்தண்ணே... நல்லா இருக்கீங்களா ?
வாடா வழுக்குப்பாறை நல்லா இருக்கேன்டா நீ எப்படி இருக்கே ?
நல்லாயிருக்கேன் சில சந்தேகம்
வந்துச்சு கேட்கலாம்னு வந்தேன்ணே...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
வாடா வழுக்குப்பாறை நல்லா இருக்கேன்டா நீ எப்படி இருக்கே ?
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
சனி, ஜூலை 06, 2024
பாதையோரக் கிளிகள்
குறுக்கு பாதையிலே சந்தைக்கு
போறியடி
முறுக்கு வாங்கித் தாறேன் வேணுமாடி
காத்தாயி எனை ஒரு பார்வை பாரேன்டி
காத்தாகி பறக்குமே என் மனந்தான்டி
முறுக்கு வாங்கித் தாறேன் வேணுமாடி
காத்தாயி எனை ஒரு பார்வை பாரேன்டி
காத்தாகி பறக்குமே என் மனந்தான்டி
திங்கள், ஜூலை 01, 2024
அரசியல் கிலோ எவ்வளவு ?
வணக்கம் கீழேயுள்ள இரண்டாவது
புகைப்படத்தை பார்த்தீர்களா ? இது அவசியமில்லாத வேலைதானே ? இந்த வகையான
கூதரைகளால்தான் நாட்டில் மதப்பிரச்சனை வருகிறது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கலாம்.
அவர்கள்தானே தங்களது பிழைப்புக்காக... மக்களின் மூளையை இப்படி செலுத்தி விட்டு
மக்களிடையே பிரச்சனைகளை கிளப்பி பிறகு சமாதானம் செய்வதுபோல் பேசி ஆகமொத்தம்
அடித்தட்டு மக்கள்தான் பலியாவான். எந்தவொரு அரசியல்வாதியும் சாகமாட்டான்.
வியாழன், ஜூன் 27, 2024
சனி, ஜூன் 22, 2024
திங்கள், ஜூன் 17, 2024
ஈரோடு, ஈயக்கட்டி ஈஸ்வரன்
ஈரோடு,
மாநகராட்சி அலுவலகம் அருகில்....
வணக்கம் ஈஸ்வரன்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடா தொன்னையப்பா நல்லா இருக்கேன் என்ன இந்தப்பக்கம் ?
வாடா தொன்னையப்பா நல்லா இருக்கேன் என்ன இந்தப்பக்கம் ?