புதன், ஏப்ரல் 01, 2020

அமேசனில் தேடுங்கள்...


ங்கள் மனம் கவர்ந்த எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன் அவர்கள் எழுதிக் கொட்டிய கோப்பு மலைகளிலிருந்து...

கொங்காபுரி தேசத்தின் போர் வீரன் கொங்குமுடியின் வீரதீரச்செயல்கள் வெளிவராத உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் அழும் விழிகளும், விழும் துளிகளும்

வெள்ளி, மார்ச் 27, 2020

மொழியில், கலந்திரு(ற)ப்பேன்


புதாபியில் நான் அரசாங்க வேலை வாங்குவதற்கு முன்பு சாதாரண நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தேன் ஆயிரக்கணக்கான பணியாளர்களில் நானும் ஒருவன் இதில் எனக்கு எப்பொழுதுமே உடன்பாடு இருந்ததே இல்லை தனித்து காணப்படும் மனிதனாக இருக்கவேண்டும் என்ற சிந்தை எனது அப்பா வயிற்றில் இருக்கும் பொழுதே தோன்றிய நீண்டகால எண்ணமாக இருந்திருக்க வேண்டும்.

ஞாயிறு, மார்ச் 22, 2020

ஒளியும், ஒலியும் (1)


பட்டொளி வீசி பறக்கட்டும் பாரினில்...

எதையும் பிளான் போட்டுதான் செய்யணும்

குளித்தான்... குளித்தான்... குளிர் காயும்வரை...

ஒளியில் ஆறறிவு, ஒலியில் ஐந்தறிவு

திங்கள், மார்ச் 16, 2020

பேயிடம் பேசிய பேரம்புதாபி நகரின் மையப்பகுதியில் இருக்கும் நான்கு கி.மீ. இந்த அண்டர்க் ரௌண்டில் நள்ளிரவு 01.00 மணிக்கு நான் எனது காரில் வரணும் காணொளியும் எடுத்துக் கொண்டு (ஆதாரமாம்) வந்து மறுமுனையில் எனக்காக காத்திருக்கும் அதாவது இவர்கள் எனது தலைக்கு மேலே வந்து கொண்டு இருப்பார்கள் நண்பர்களிடம் காண்பிக்க வேண்டும் இது பந்தயம்.

புதன், மார்ச் 11, 2020

செய்யாலூர், செய்வினை செய்யதுமேலே படித்தீர்களா ? குறிமேடையாம் எங்கும் தீர்க்க முடியாத செய்வினை, ஏவல், பில்லி. சூனிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படுகிறது. மேலும் பேய் கோளாறுகள் ஒரே நாளில் முற்றிலும் சரி செய்யப்படுகிறது. அதாவது இறைவனுக்கு நிகரானவர்கள் என்றே சொல்லலாம் போல... இவைகள் உண்மையோ பொய்யோ சரி இவைகளெல்லாம் காலங்காலமாய் நம்பி வரும், நம்பப்படும் ஆச்சார விதிமுறைகள் கடன்கள் என்றே சொல்லிக் கொள்வோம்.

வியாழன், மார்ச் 05, 2020

தமிழனின் நிலை


மிழன் தமிழ் நாட்டில் உழைத்து பிழைப்பதற்கு இப்படி வெளி மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி வந்தவனின் படங்களை தனது செலவில் போட்டு வைத்து பிழைக்க வேண்டியது இருக்கிறது இது தமிழனுக்கு அவமானில்லையா ? இவன் மட்டுமில்லை பல கூத்தாடிகளின் புகைப்படமும் இருக்கிறது. இதே தமிழனின் புகைப்படத்தை வெளி மாநிலங்களில் போட இயலுமா ? இதை தமிழன் சிந்திக்க மறுக்கிறான். தமிழ் நாட்டில் வந்தவனை எல்லாம் வளர்த்து விடுவதில் மதுரைக்காரர்கள்தான் முன்னிலையானவர்கள்.

வெள்ளி, பிப்ரவரி 28, 2020

கோனாபட்டு, கோபக்காரன் கோதண்டம்


மொடிச்சியப்பனும், கலிவரதனும் அபுதாபி விமான நிலையத்துக்கு காரில் போய்க் கொண்டு இருந்தார்கள்.
டேய் கலிவரதா அந்தா... சிக்னல்ல நொங்கு வித்துக்கிட்டு நிக்கிறானே கோதண்டம் பெருங்கோவக்காரன்.
அவனா,,, கோனாபட்டுக்காரன்ல... அப்புடியென்ன... கோவப்பட்டான் ?

ஞாயிறு, பிப்ரவரி 23, 2020

கலாச்சாரக் கொலையாளிகள்ந்த கூத்துகளை படிச்சேளா ? கூத்தாடிகிட்டே ஆட்சியை கொடுத்தால் அவன் கூத்தியாக்கிட்டே கொடுத்துட்டே போவான்னு ஒரு தலைவர் சொன்னது நம்ம தமிழ்நாட்டில் எவ்வளவு நிரூபணம் ஆச்சு ? அதனுடைய பிரிவுகளில் இதுவும் ஒன்று. நடிகர்-நடிகைகளை பார்த்து முடி வெட்டிய, தோடு போட்டுக் கொண்ட. தாடி வளர்த்துக் கொண்ட, உடையணிந்து கொண்ட, தலையில் வண்ணம் அடித்துக் கொண்ட, சால் போடாமல், கை இல்லாத ஜாக்கெட் போட வாழப்பழகிய இன்றைய இளைய சமூகம் நாளை இதையும் கடைப்பிடிக்காது என்பது என்ன நிச்சயம் ?

செவ்வாய், பிப்ரவரி 18, 2020

கொட்டாம்பட்டி, கொழுந்தியாள் கொடிமலர்


ணக்கம் நட்பூக்களே... மேலே புகைப்படத்திலிருக்கும் நபர்களை பார்த்தீர்களா ? இவர்கள் தந்தையும், மகளும் என்று நினைத்து இருப்பீர்கள் உண்மைதான் சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள் எவ்வளவு தொலைக்காட்சி நாடகங்கள் பார்த்து இருப்பீர்கள். இவளது கணவன் போகக்கூடாத இடத்துக்கு செல்கிறார் மனைவி தடுத்தும் கேட்காமல் செல்கிறார் உடன் மனைவி தனது தந்தையிடம் வந்து அழுது கொண்டே முறையிடுகிறாள் அவரும் மருமகனை போகவிடாமல் தடுக்க சொல்கிறார்.

வியாழன், பிப்ரவரி 13, 2020

ஆரவல்லி என்ற சூரவல்லிரவல்லி நாம இரண்டு பேரும் இப்படி ஆடு மேய்க்கும்போது பேசிப்பழகுறது உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா என்னாகும் ?
விளக்கமாரு நஞ்சுரும். உங்க அப்பா பார்த்தால் என்ன ஆகும் ?
பழைய செருப்பு பிஞ்சுரும்
அப்படினா நாம என்னதான் செய்யிறது செங்கோடா ?

சனி, பிப்ரவரி 08, 2020

நன்நாள் வாழ்த்துகள்இன்று 08.02.2020 முதல் வருட திருமணநாளை தங்களது செல்வமகள் T.Krishanya-வுடன் கொண்டாடும் எங்கள் வீட்டு செல்வங்கள் தமிழ்வாணன்-பிரியங்கா சீரும், சிறப்புமாய் வாழ இணைய உறவுகள் அனைவரின் வாழ்த்துகளை வேண்டி...

ஞாயிறு, பிப்ரவரி 02, 2020

தமிழுக்கு அஞ்சலி


திருச்சி என்றால் வலைப்பதிவர்களுக்கு நினைவில் வருவது புகைப்படச்சித்தர் திருமிகு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்தான் இன்று (02.02.2020) அவர் மறைந்து முதலாம் ஆண்டு நினைவு தினம். அவர்தம் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வோம்.

வியாழன், ஜனவரி 30, 2020

மகா நடி’’கண்


ட்பூக்களே... மேலே புகைப்படத்திலிருக்கும் இந்த நடிகனின் நடிப்பாற்றல் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்து இருக்கிறது அதாவது இவருக்கு வசனம் கொடுக்கப்படவில்லை. கொடுத்தால் சிறப்பாகவே செய்திருப்பார்.

வெள்ளி, ஜனவரி 24, 2020

செங்கல்பட்டு, செங்கல்சூளை செங்கல்வராயன்வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு ? எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னிடம் நிரந்தரமாய் இருந்ததில்லை. கல்யாணத்திற்குப் போனால் திரும்பும்போது செருப்பு இருக்காது. இதனாலேயே எனக்கும், மனைவி செங்கமலத்துக்கும் தினம் சண்டை வரும். ஆத்திரமாய் வந்தது. இந்தச் செருப்பாலே என்னோட சொத்தில் பாதி அழிந்திருக்கும். நான் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறேன். நானும் மனைவியும்தான் பார்த்துக் கொள்கிறோம். திடீரென்று எனக்கு ஒரு யோசனை வந்தது. செங்கமலமும் சரி என்றாள்.

சனி, ஜனவரி 18, 2020

மலேஷியாவில், மகிழ்ச்சியாய்...


2013 - Emirates Etihad Airways-ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்கு ஃபிளைட் டிக்கெட் கொடுத்தார்கள் என்ன அதிசயம் கில்லர்ஜி பெயர் வந்து விட்டது சந்தோஷமாக புறப்பட்டு போய் ஊர் சுற்றினேன்... மலேசியாவில் யாரை பார்க்கலாம்... என யோசிக்கும்போது... ஆஹா நமது இலங்கை நண்பர் ரூபன் அவர்களை சந்திக்கலாமே... ஹோட்டலில் இருந்து நண்பர் ரூபனை தொலைபேசியில் அழைத்தேன்...

திங்கள், ஜனவரி 13, 2020

நிறுத்திக்கொள்


கீழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதரனாக இருந்தாலும் எனது கருத்து இதுதான் இதில் மாற்றுக்கருத்து இல்லை அதேநேரம் நான் வேறு வகையில் வேதனைப்படுகின்றேன் இவனையும் மனிதனாக மதித்து இவனுக்கும் ஒரு பெண்ணைக் கொடுக்கின்றார்களே அந்த சகோதரியை நினைத்து வேதனைப்படுகின்றேன்.

செவ்வாய், ஜனவரி 07, 2020

டால்மியாபுரம், டவுட்டு டவுசர்


ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே ?
வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன்
ஏண்ணே அந்தப் பலகையில் கடை ரோஸ்ட்'னு போட்ருக்காங்களே இது எப்படிணே ?
அடமூதேவி அது கடை ரோஸ்ட் இல்லைடா, காடை ரோஸ்ட்

புதன், ஜனவரி 01, 2020

நல்வாழ்த்துகள் 2020


அன்பு வலைப்பூ நட்பூக்களுக்கு எமது உளம் கனிந்த 2020 புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வருடம் தங்கள் அனைவருக்கும் தொடர்ந்து நல்ல மகிழ்ச்சிகளை அள்ளித்தர வேண்டுமென்று உலக மேலாளரிடம் உள்ளம் உருகி வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் நாளும் நலமுடன்.
Related Posts Plugin for WordPress, Blogger...