தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

பொது நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 09, 2024

கிடைக்கும் அல்லது தெரியும்


   வணக்கம் நட்பூக்களே... நல்லவன் வாழ்வான் என்று நமக்கு சொல்லி தந்த முன்னோர்கள் கெட்டவன் சாவான் என்று சொல்லவில்லையே காரணம் என்ன ? முதற்காரணம் வாய்மொழி வாக்குகள் நல்லவைகளாக இருத்தல் அவசியம் அடுத்து நல்லவனாய் இருந்தால் வாழ்வான் என்ற விதையை நம்முள் விதைத்து விட்டனர். மேலும் நல்லவனோ, கெட்டவனோ மரணம் அனைவருக்கும் உறுதிதானே...

புதன், மே 15, 2024

ஃப்ரான்ஸ், ஃப்ரொபஸர் ஃப்ரான்ஸிஸ்

வணக்கம் நட்பூக்களே... எனக்கு வெகுகாலமாக ஓர் சந்தேகம் உண்டு அதை தங்களிடம் கேட்கும் எண்ணத்தோடு பதிவைத் துவங்குகிறேன்.

வியாழன், ஏப்ரல் 11, 2024

விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம்

வணக்கம் நட்பூக்களே...
மேலேயுள்ள புகைப்படத்தை படித்தீர்களா ? இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை 118 கோடி தினசரி இறப்பு விகிதம் 62389 தினசரி பிறப்பு விகிதம் 86853 இன்றைய நிலவரப்படி பார்வை இழந்தோர்கள் 682497 மரணம் அடைந்தவர்கள் அனைவருமே கண் தானம் செய்தால் ? ? ? அடுத்த பதினொன்று 11 தினங்களில் இந்தியாவில் ஒரு குருடர்கூட இருக்க மாட்டார்கள்.

வெள்ளி, மார்ச் 01, 2024

தர்மம் தலை கேட்கும்

வணக்கம் நட்பூக்களே... தன்மக்களிடம், மக்கள் சொல்லொன்று, செயலொன்றாய் வாழ்ந்து காட்டுகிறோம் இது முரண்பாடு இல்லையா ? தென்னை ஒன்று நட்டால் பனை ஒன்றா முளைக்கும் ? நாம் நமது மக்களுக்கு நல்லதை சொல்லும் முன் நாம் செல்லும் பாதை சரியா ? என்பதை முதலில் அறிவோம்.

செவ்வாய், பிப்ரவரி 13, 2024

கோவில் அல்ல கோயில்


நம்மை படைத்தது இறைவன் என்பதில் பலருக்கும் ஐயமில்லை. என்னவொன்று தனி மனிதனின் தலைமை ஆசையால் மனங்கள் பிளக்கப்பட்டு, மதங்களாக பிரிக்கப்பட்டு கடவுள்களையும் படைத்து விட்டோம். தொடக்கத்தில் நம்மை படைத்தது இறைவன், என்ற வார்த்தை மாறி மனிதன் கடவுளை படைத்தான் என்ற நிலைக்கு வந்து விட்டோம்.

வெள்ளி, பிப்ரவரி 02, 2024

நீ நடிகனே அல்ல !

 

வணக்கம் தமிழக மக்களுக்கு அதாவது ரசிகர்களுக்கு ரசனை இருக்கிறதா ? காரணம் நமக்கு நன்றாகவே தெரிகிறது, இந்தப்படத்தில் இதன் நாயகன் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார், சமூகத்துக்கு பழைய வரலாற்றை சரியாகவோ, புதுப்பித்தோ, மாற்றுக்கருத்தை வலியுருத்தியோ எடுத்து தருகிறார். இருப்பினும் நாம் அந்த மாதிரியாக திரைப்படங்களை பார்த்து வெற்றியடைய வைக்காமல் இருக்கிறோமே... இது தவறு என்பது விளங்கவில்லையா ?

சனி, மே 13, 2023

முனைவென்றி, முனைவர் முனுசாமி


மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா ? போலி டாக்டர் பட்டமாம் எதுலதான் போலி செய்யிறதுனு விவஸ்தை இல்லையா ? சாலையோர போளி விக்கிற கடையிலதான் போலிதான்னா... இங்கேயுமா ? டாக்டர் பட்டம் என்பது இவ்வளவு இழிவான செயலுக்கு போய் விட்டதே... திரைப்படக் கூத்தாடன் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்களாம். எதற்காக தெரியுமா ? போக்கிரி என்ற தேசிய விருது பெற்ற பெருங்காவியத்தில் நடித்ததற்காக...

திங்கள், மே 01, 2023

இளம் ஜோடிகளே...

 

வணக்கம் நட்பூக்களே... இது எனது பதிவல்ல, பொதுவாக நான் பிறருடைய பதிவுகளை வெளியிடுவது இல்லை என்பது தாங்கள் அறிந்ததே... பொதுநலம் வேண்டி யாரோ எவரோ எழுதிய அற்புதமான அறிவுரை என்றே சொல்ல வேண்டும் இன்றைய சூழலில் புதிய திருமணமான இளஞ்ஜோடிகள் இதை படித்து பயன் பெறவேண்டிய நல்ல விடயம். - கில்லர்ஜி

செவ்வாய், பிப்ரவரி 28, 2023

வினைப்பயன்

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
 
அறத்துப்பால்
குறள் 374
 
இரண்டு வகையான இயற்கையை படைத்தது இந்த உலகம் இரவு இருக்கும்போது பகலில்லை, பகல் இருக்கும்போது இரவில்லை, இதைப் போலவே ஞானம் உள்ளவனிடம் செல்வமில்லை, செல்வம் உள்ளவனிடம் ஞானம் இல்லை.

ஞாயிறு, பிப்ரவரி 05, 2023

அம்மணத்தான் ஊரில்...

வணக்கம் நட்பூக்களே... வீட்டுப் பிரச்சனை, நாட்டுப் பிரச்சனை மட்டுமல்ல உலக அளவிலான எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி பேசித் தீர்க்கலாம் இதற்கு இரண்டு விடயங்கள் ஒத்துப் போகவேண்டும். ஒன்று இருதரப்பினரும் உண்மை மட்டுமே பேசவேண்டும், இரண்டாவது அகம்பாவத்தை விட்டு இறங்கி வரவேண்டும். இதில் முதலாவதுதான் நமது முக்கிய பிரச்சனை ஆம் உண்மை பேச மறுப்பதால் நியாயம் இங்கு கேள்விக் குறியாகிறது

ஞாயிறு, நவம்பர் 27, 2022

மன அமைதிக்கு வழி

சில மனிதர்கள் தான் செய்தது துரோகம், தவறு என்பதை உணராமலேயே வாழ்வதைக் கண்டு இறை நம்பிக்கையில் எனக்கு ஐயம் ஏற்பட்டது உண்மை. இன்று அதையே வேறு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது இறைவன் உண்டு என்று. ஆம் நம்மால் எதையும் தடுக்க இயலவில்லையே நமக்கு மீறிய ஏதோவொரு சக்தி சர்வ நிச்சயமாய் இருக்கிறது.

வெள்ளி, அக்டோபர் 07, 2022

உயர்ந்த உள்ளம்

   ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்கு அரசியல்வாதியாகவோ, திரைப்படக் கூத்தாடியாகவோ இருக்க வேண்டும் என்பது இல்லை. பணமும் முக்கியம் இல்லை. மனம் இதுதான் வேண்டும். சுயநலம், வறட்டு கௌரவம் பார்க்காது இருக்கும் உயர்ந்த உள்ளம் வேண்டும். இது எங்கு கிடைக்கும் ? லூலூ சூப்பர் மார்கெட்டிலா ? இல்லை நமது குருதியில் பிணைந்து ஓடுதல் வேண்டும்.

திங்கள், ஆகஸ்ட் 15, 2022

உண்மையான சுதந்திரமா ?

 

நமது நாடு சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் (75) கடந்து விட்டது இருப்பினும் இன்றைய தினத்தை அரசு சுதந்திரமாக கொண்டாடுகிறதா ? பல்லாயிரம் காவலர்களை பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு தில்லியில் மட்டுமின்றி நாட்டின் தலைநகரங்கள் எங்கும் கொண்டாடுகிறது.

சனி, மே 21, 2022

பேரறிவாளன் விடுதலை

பேரறிவாளன் அழகிய பெயர் செயல்தான் சரியில்லை மிகப்பெரிய கொலைக் குற்றத்தின் முக்கிய குற்றவாளி. இவரை விடுதலை செய்தது (18 May 2022) சரி என்றோ, தவறு என்றோ வாதம் செய்யும் பதிவல்ல இது முப்பத்தி ஒன்று (31) ஆண்டு காலம் சிறை இது முறையா ? அன்றே இவரை தூக்கிலிட்டு இருந்திருந்தாலும் அவர் மறுபிறவி எடுத்து பிறந்துகூட இருக்கலாம்.

சனி, ஆகஸ்ட் 14, 2021

அப்பாச்சிமேடு, அப்பா அப்பாதுரை

 

01. மகனுக்கு மணம் முடித்து மருமகளுக்கு தந்தையாக தயாரானார் தயாநிதி. சூழ்ச்சியில் மகனுக்கு தந்தையானான் சம்மந்தி விதியால் தயாநிதி வீதியில்...

புதன், பிப்ரவரி 17, 2021

கொரோனாவால் இழப்பு யாருக்கு ?


கொரோனா வருகையால் பல நாடுகளின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல பல குடும்பங்களின் வாழ்வு சிதறிப்போனது. உண்மையே காரணம் உழைத்துமே வாழ்வாதாரத்தை முன்னேற்ற இயலாத வாழ்வில் மூன்று மாதங்களுக்கும் மேல் வேலை செய்யவில்லை என்றால் அன்றாடங் காய்ச்சியின் நிலைப்பாடு என்னாகும் ?  அரசு இவர்களைப்பற்றி நினைத்ததாக, நினைப்பதாக தெரியவில்லை.

புதன், அக்டோபர் 21, 2020

திருக்குறளை சுட்டிய திருக்குவளை


   தமிழ் இன்றைய இளைய தலைமுறையினரிடம் வாழ்கிறதா ? நிச்சயமாக இல்லை இதோ தமிழ் மாதங்கள் பனிரெண்டு அதன் பெயர்களைக்கூட சொல்லத் தெரியவில்லையே... வெட்டியாக தமிழ் தமிழ் என்று கூவுகிறது ஓர் கூட்டம் ஆனால் இதில் காரியத்துக்காக குரல் கொடுப்பவரையே நம்புகிறது இந்த பாமரப்பயல்கள் கூட்டம்.

ஞாயிறு, ஜூலை 19, 2020

கள்ளுண்ணாமை

       ஊரடங்கு தவிர்க்கப்பட முடியாத மத்திய, மாநில அரசுகளின் செயல் இதில் டாஸ்மாக்கும் மூடப்பட்டது சுமார் இரண்டு மாதங்கள்வரை குடிகாரர்கள் குடிக்க முடியாமல், வழியில்லாமல் ஏதோ நாட்களை கடத்தி விட்டது உண்மைதான். பிறகு அரசுக்கு வருமானம் இல்லை என்பதற்காக மீண்டும் திறந்தது மக்களுக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல ஆள்பவர்கள் தங்களது சந்ததிகளுக்கு செய்யும் துரோகமும்கூட மக்களை குடிக்க வைத்துதான் ஆட்சி செய்ய வேண்டுமெனில் இந்த அரசு எதற்கு ? 

வியாழன், ஜூலை 09, 2020

கண்டிக்காத குழந்தை தண்டிக்கப்படும்


    சமீபத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தேன். கணவன்-மனைவி-ஆண்மகவு இப்படி தனிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கைதான். சில குழந்தைகள் எந்நேரமும் எதற்கெடுத்தாலும் அழுது அடம் பிடித்துக் கொண்டே இருக்கும் இது பரம்பரை குணம் மட்டுமல்ல தற்கால மக்களின் மாற்றத்தால் தொற்றிக் கொண்ட வியாதி என்றே சொல்லலாம்.

புதன், மே 20, 2020

கவரிமா



கவரிமான் தற்கொலை செய்யுமா ? ஆச்சர்ய மூட்டும் தகவல்கள் கவரிமான் எங்கு வசிக்கிறது ? முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா ? எப்படி தற்கொலை செய்து கொள்ளும் ?