தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 29, 2015

16-ஆம் நாள் காரியம்

நட்புகளே.... இந்தப்பதிவுக்கு முதன் முதலில் வருபவர்கள் இதன் முந்தைய பதிவான 01. ஆடியோ கேஸட் 02. காட்டுத்தீ படித்து விட்டு தொடரவும் காரணம் இது இறுதிப்பகுதி.

நண்பர்களே... நண்பிகளே... பதினாறாம் நாள் காரியம் முடிந்திருக்கும் அல்லவா ! எனது சிந்தனை கேஸட்டிலேயே இருந்தது பதினாறாம் நாளும் கடந்தது அந்த நேரம் தீபாவளி அவர்களுக்கு தீபாவளி இல்லாத இந்த நேரம் போய்க் கேட்டால் நமக்கு தீபாவளி கொண்டிருவாங்கே... ஏற்கனவே சனிக்கிழமை’’னு சொன்னவங்கே.... சரி பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது இன்று நல்லநாள்தான் இழவு வீட்டில் போய் கேஸட்டைக் கேட்போம் என போனேன் கேஸட் கேட்டு வந்தவன்ர் வீட்டின் முன் நூறாவது நாள் சத்யராஜ் மாதிரியே நின்றிருந்தான்ர் என்னை கண்டதும் ஊரின் எல்லையில் இருக்கும் உக்கிர மாகாளியம்மன் மாதிரியே பார்த்தான்ர் பக்கத்தில் போய் நின்றேன்...

என்னடா ?
கே...ஸட்டு...
கேஸட்டா பாட்டுப்பாடி எங்க அப்பனைக் கொன்னுபுட்டு கேஸட்டா கேட்கிறே ? கோர்ட்டுல கேசைப்போட்டு உள்ளே தள்ளிடுவேன் ஒட்றா...
மேலும் நின்று கொண்டே இருந்தேன் எனது முகம் மட்டும் இஞ்சி தின்ன சிங்கம் போல இறுக்கமாக இருந்தது...

என்னடா மொறைக்கிறே ? டேய் மருது இவனை என்னானு கேளுடா...
உள்ளேயிருந்து வந்த மருது..
உனக்கு என்னடா வேணும் ?  
என்னோட கேசட்டு வேணும்.
டேய் நாங்களே, எங்க அப்பன் சொத்தைப்பூராம் கொழுஞ்சிக்காட்டு சிருக்கிக்கு உயில் எழுதி வச்சுட்டு செத்துப் போயிட்டான்னு... கோபத்துல இருக்கோம் போயிரு... இல்லே...

ஏங்க இவ்வளவு சொத்து வச்சு இருக்கீங்க ஒரு கேஸட்டு வாங்க வக்கு இல்லை ?
டேய் என்னடா  ரொம்ப பேசுறே ?
சத்தம் கேட்டு உள்ளேயிருந்து மருதுவின் மனைவி வந்து...
என்னங்க சத்தம் இங்கே ?
இவன்தான்டி கேஸட்டு வேணுமாம்...
ஏப்பா, கில்லர்ஜி உனக்கு கேஸட்டுதான் முக்கியமாப் போச்சா இங்கே சொத்தெல்லாம் கைமாறிப்போன கோபத்துல ய்யேங் கொழுந்தன் கோவிந்தன் உன்னோட கேஸட்டை கொல்லம் பட்டறையில் வச்சு கூடத்தால அடிச்சு உடைச்சுருச்சு பொல்லாத கேசட்டு பத்து ஓவா பெறுமா ?

எனக்கு இதயத்தில் இடியே விழுந்தது போலிருந்தது அடப்பாவிகளா ‘’தல’’ பாட்டுக் கேஸட்டை கூடத்தால அடிச்சியலா அதுக்கு என் நெஞ்சுல அடிச்சுருக்கலாமடிடா... ?
உங்க குடும்பத்துல பிரச்சனையினா அதுக்கு என்னோட கேசட்டை எதுக்கு உடைக்கணும் ?
டேய்.... போயிருடா... மண்டையை உடைச்சுடுவேன்.
ஏங்க விடுங்க, சின்னப்பயல்ட்ட பேசிக்கிட்டு...

சின்னப்பயலா இந்தச் சின்னப்பயதான் உங்க குடும்பத்து பிரச்சனையை தீர்த்து வச்சான் தெரியுமுள்ள ?
அதான் தீர்த்துட்டியடா... எங்க அப்பனை, கொலைகாரப்பாவி.
யோவ் மரியாதையா... பேசு கேசட்டை உடைச்சுப்புட்டு நீ பேசுறே ?

டேய்... என்னடா யோவ் இப்ப, போறீயா என்ன சொல்றே...?
அந்த மாதிரி கேஸட்டு உன்னால, பதிய முடியுமா ?
ஏண்டா, ஒங்கிட்டே தியாகராஜ பாகவதர் பாட்டுதானடா கேட்டேன் நீ எதுக்குடா பாடுனா ?
அது என்னோட கேஸட்டு நான் பாடுவேன் உனக்கென்ன ?
இவரு, பெரிய யேசுதாஸு இவரு பாடுறாராம்...

ரோட்டில் போய்க்கொண்டு இருந்தவர்கள் ஒவ்வொருவராக நிற்க கூட்டம் கூடி விட்டது பெருசு ஒன்று வந்தது பஞ்சாயத்துக்கு....
டேய், மருது விடுப்பா, சின்னப்பயல்ட்ட சண்டை போட்டுக்கிட்டு கில்லர்ஜி இங்கிட்டு வாப்பா, உன்னோட பாட்டு கேட்டதாலதான் பொட்டண்ணேன் பொட்டு’’னு போனாரு சின்னக் கேஸட்டுக்காக பிரச்சனை ஆக்காதே அவங்களே சொத்து பூராம் கொழுஞ்சிக் காட்டுகாரிக்கு போச்சுனு கோபத்துல இருக்காங்கே... இவங்கே பூராமே, அ.க.மு.க.பொ.கே.ரா.கா கட்சிக்காரங்கே போலீஸ் கேஸாக்கி உன்னைப்புடிச்சு உள்ளே தள்ளிடுவாங்கே... விடப்பா, போயிட்டுப் போகுது பத்து ரூபா பெறுமா ? இதுக்கு எதுக்கு சண்டை போடுறே... போ.. போ.. நல்ல புள்ளையில ராசா போப்பா..

ச்சே என்னங்கடா உலகம் சாகப்போற ஆளுக்கு மனசாந்தியைக் கொடுக்கணும்னு நினைச்ச என் நிம்மதியை கெடுத்துட்டாங்களே... இவங்கெளுக்கு சொத்து கிடைக்கவே கூடாது எல்லா சொத்தும் கொழுஞ்சிக் காட்டுக்காரிக்கே போகட்டும் மனசு (சே. குமார் அல்ல) சபித்தது ‘’தல’’ M.K.T. நடித்து 1941-ல் வெளியான அசோக் குமார் திரைப்படத்தின்... 

‘’பூமியில் மானிட ஜென்மம் பிறந்து மோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்’’ 

என்ற பாடலை பாடிக்கொண்டு இல்லம் நோக்கி நடந்தேன்.

‘’தல’’ M.K.T. நடித்து 1934ல் வெளியான பவளக்கொடி என்ற அவரது முதல் திரைப்படத்தில் மொத்தம் 50 பாடல்கள். அதில் ‘’தல’’ மட்டும் 22 பாடல்கள் பாடினார் அத்தனையும் ஸூப்பர் ஹிட் !

கேஸட் வேண்டியோர் தொடர்புக்கு... sivappukanneer@gmail.com

வெள்ளி, நவம்பர் 27, 2015

வாழ்க்கை வாழ்வதற்கே !

வாழ்க்கை துணை இறந்த பிறகு சிலர் அவ(ன்)ள் நினைவாகவே, மறுமணம் செய்யாமல் வாழ்ந்து காலத்தை கழித்து விடுகிறார்கள்.
இது சரியா ?
இரு பாலருக்குமே, இது தவறான செயலே !
ஆம், இப்பிறவியின் பயன் என்ன ? தாம்பத்யமே !

பிறவி என்பதே ஒரு முறைதான், அதையேன் நாம் பாழாக்க வேண்டும் ? இல்லை, மறுபிறவி இருக்கிறது என்கிறாயா ?  
அப்படியானால், உமக்கு இது எத்தனையாவது பிறவி ?  
போன பிறவியில், நீ என்னவாக பிறந்தாய் ?
நான் DINOSAUR ஆக பிறந்தேன் என்கிறாயா ?  
இதற்கு, என்ன ஆதாரம் ?  

இறைவனுடன், ஐக்கியமாவதே மரணம் என்கிறாயா ?
அவர்தானே, உம்மை அனுப்பி வைத்தார் ? அப்படியானால் ஏற்கனவே நீ ஐக்கியமாக வில்லையா ?  

மரணத்திற்கு, பின்தான் வாழ்க்கை இருக்கிறது என்கிறாயா ?   
இது எப்படி உமக்கு தெரியும் ?

நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறாயா ?
நம்பிக்கைதான் வாழ்க்கை, நாம் நம் இந்தியாவில் வாழமுடியாதா ?
ஏன், நம்பிக்கை இழந்து அயல்நாடு செல்கிறாய் ?
இந்தியாவில், யாரும் வாழ்ந்து முன்னேற வில்லையா ?
கண்ணால் காணும், விசயத்தில் நம்பிக்கை வைக்காத நீ காதால் கேட்ட, விசயத்தில் நம்பிக்கை வைக்கிறாயே எப்படி ?

ஆம், நண்பா, நண்பி மறுமணம் செய்வது தவறல்ல !
கணவன் இருக்கும்போது மனைவி பிறருடன் கூடுவதும்,
மனைவி இருக்கும்போது கணவன் பிறரை நாடுவதும் தான் தவறு.
மறுமணம், மறைந்தவருக்கு செய்யும் துரோகம் ஆகாது.

விபச்சாரம் பெருகி வருவதற்கு மறுமணம் அங்கீகரிப்படாததும் ஒரு காரணமே !  இந்த வழியில் சென்றுகூட, நாம் எயிட்ஸை ஒழிக்கலாமே !

ஓ... அரசாங்கமே, வாழ்க்கைத் துணையை இழந்து மறுமணம் செய்பவர்களுக்கு மட்டும், நீ ஏன் சலுகைகள் வழங்கக்கூடாது ?

(ஊமையன் சொல்றது, செவிடன் காதுல எங்கே கேட்கப்போகுது)

வாழ்க்கை வாழ்வதற்கே ! ஆம், வாழ்க்கை வாழ்வதற்கே !
வாழ்க்கைத் துணை இல்லாமல் வாழ்வது மரணத்தினும் கொடுமை, அது மனவியாதியை மட்டும் பற்றிக் கொள்வதில்லை, உடல் வியாதியையும் தொற்றிக்கொள்ளும், இதைச்சொல்ல, உனக்கென்ன தகுதி உள்ளது எனக் கேட்டுவிடாதே !
என் வாழ்க்கையை, இழந்து விட்டேனா ? இல்லை இழக்கடிக்கப்பட்டதா ? என்பதின், விடையை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

எனினும் உமக்குச் சொல்வதற்கு, காலஞ்சென்ற கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொன்ன வழியை பின்பற்றுகின்றேன், அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் நூலின் முன்னுரையில்,

ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் நான் வாழ்ந்து இருக்கிறேன் ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டுமென உனக்கு புத்தி சொல்லும் யோக்யதை எனக்கு உண்டு.

இப்படி எழுதி விட்டுத்தான் தொடங்கி இருக்கிறார், ஒரு எடுத்துக் காட்டுக்காகத்தான் அவரைச் சொன்னேனே தவிர,

அவர் வந்த பாதை வேறு, நான் தந்த போதை வேறு. 
அவர் தொட்டு கெட்டு, பாட்டு ஆன அதிர்ஷ்டசாலி,
நான் தொடாமலே கெட்டு, பட்டு போன துரதிர்ஷ்டசாலி.

மனைவி இறந்து, ஏற்கனவே குழந்தைகள் உள்ளவனை, திருமணம் செய்யும் சகோதரிகளே ! உன்னை மணந்த பிறகு உன்னிடம் மயங்கி முதல்தார குழந்தைகளை, உதாசீனப்படுத்துபவனை நம்பாதே ! நாளை ஒருக்கால் நீ இறந்து விட்டால் ? உனது குழந்தைகளுக்கும் இதே கதிதான் உஷார்.


சாம்பசிவம்-
பிள்ளையை கிள்ளி விட்டுட்டு தொட்டிலை ஆட்டுற ஆளைப் பார்த்திருக்கேன், நீர் என்ன ? தொட்டில ஆட்டி விட்டுட்டு பிள்ளைய கிள்ளுறீரு ?

வியாழன், நவம்பர் 26, 2015

German Toiletஒருமுறை, நான் GERMANY யில் ஊர் சுற்றிக்கொண்டு திரியும் பொழுது RAILWAY STATIONனில் TOILET போவதற்காக MACHINEனில் 1.00 EURO ()
போட்டு TICKET எடுத்தேன், URINE PASS செய்யத்தான் போனேன், முடிந்தவுடன் திரும்பும்போது TICKETடை படித்துப் பார்த்தேன், LETTIN போகவில்லை என்றால் TICKETடை வேறு MACHINEனில், கொடுக்கும்போது 0.50 CENT () RETURN வந்து DOOR திறந்து விடும், இது எப்படியென்றால் அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி விட்டால் URINE போயிருக்கிறான், தாமதமானால்... LETTIN போயிருக்கிறான் என்று அர்த்தம்.

(அதாவது Abu Dhabi Airportடில் Car Parking System போல, 0.15 Min க்குள் திரும்பி விட்டால் Gate திறக்கும் இல்லா விட்டால் Dhs கட்டவேண்டும்)

நான் URINEதானே, போனேன் ஏன்  பாக்கி வரவில்லை ? நானும் MACHINEனை உருட்டிப் பார்த்தேன், புரட்டிப் பார்த்தேன், என்ன சொல்றே நீ ? என்று மிரட்டிப் பார்த்தேன் அசையவில்லை நான் MACHINEனிடம் பேசுவதைக் கண்ட  ஒரு ஜெர்மனியன் என்னை மேலிருந்து கீழாக ஒரு மாதிரி பார்த்தான் ஆஹா இவன் அப்படி நினைக்கின்றான் போலயே ம்ஹூம் பாக்கி வரும் பாக்கியம் நமக்கு எப்போதுமே இல்லை, ச்சே என்ன  MACHINE இது... தமிழ்நாட்டு அரசியல்வாதி போல கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டாமா ? மனதுக்குள் ஆய் வார்த்தைகளால் திட்டி விட்டு பிரைவேட்டாக இருந்தாலும் சரி ஆடம்பர ஹோட்டலாக இருந்தாலும் சரி கழுவ பைப்பு வைக்கிறாங்களா ? ச்சே தண்ணீருக்கு நான் பட்டபாடு அதைப்பற்றி எழுதினால் நான்கு பதிவு வந்துடும் அப்புறம் நீங்க பதிவு நாறுதுனு கருத்துரை போடுவீங்க வேண்டாம் கேட்டால் ட்ஷ்யூ பேப்பர் இருக்குதுல அப்படிங்கிறான் கொங்காப்பயலுக... 

யோசனையோடு TRAINனில், பிரயாணத்தை தொடரும் போதுதான் ஞாபகம் வந்தது, நான் URINE PASS செய்து விட்டு திரும்பியபோது கண்ணாடியில் சுமார் 1 ¾ மணிநேரம் எனது மீசையை சீவிக்கொண்டு நின்று விட்டேன் ஒருவேளை அதனால்தான் பாக்கி வரவில்லையோ....

  அபுதாபி அனஸ்

CHIVAS REGAL சிவசம்போ- 

ஹும், காசியில போயும், ஓசி டீ குடிக்கிற பழக்கம் போகலையா ?

காணொளி

புதன், நவம்பர் 25, 2015

கார்மேகமே...


கார்மேகக் கண்ணா வா வா
கணத்த மழை நீரைத் தா தா
அழகு மேகக் கூட்டமே வா வா
அணை நிரம்ப அமுத நீரைத் தா தா
அந்தரத்து அலங்காரமே வா வா
அனைத்து மக்களுக்கும் நீயே தா தா
இன்ப மழை பொழிய வா வா
இடி முழங்க மின்னலை தா தா
கடல் நீரை எடுத்து வா வா
கண்மாய்களில் நீரைத் தா தா
தாகம் தீர்க்க நீயே வா வா
தரணி எங்கும் நீரைத் தா தா
கருப்பு நிறத்துடன் வா வா
கரும்பு சாறாய் தா தா
கர்ணப் பிரபுவே வா வா
கங்கை நதியிலும் தா தா
 கிழக்கு விளக்கே வா வா
மேற்கு வரைக்கும் தா தா
தெற்கு தென்றலே வா வா
வடக்கும் நிலைக்க தா தா
எங்களின் வளமே வா வா
எட்டுத் திசைக்கும் தா தா
இது குழந்தைகள் பாட்டு எனலாமா ?

இதோ E வெண்மேகமே... முந்தைய பதிவு