கண்ணே என்றான் கண்மணியை
கனியே என்றான் கனிமொழியை
பொன்னே என்றான் பொன்னியை
முத்தே என்றான் முத்தழகியை
பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...?
முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக துபாய் இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...
வணக்கம் நண்பர்களே... ‘’பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூமாதுளை’’ என்ற கங்கை அமரன் அவர்களின் பாடலை எனது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? ஒரு மோட்டார் சைக்கிளில் யாரோ ஒரு கோமாளி விநாயகர் சதுர்த்தி அன்றாக இருக்கலாம். மக்களை கவர்வதற்காக இப்படியான கோமாளித்தனங்களை செய்யும் மனிதர்கள் உலகில் எங்கும் உண்டு இதுவொரு நகைச்சுவையாக எடுத்து பொழுதை கடத்தி விடவேண்டும். ஆனால் பக்கத்தில் நிற்கும் ஒரு மனிதர் அவனை பிள்ளையாரே வந்ததாக நினைத்து சாலையில் கும்பிடுவது முறையா ?