வெள்ளி, டிசம்பர் 26, 2014

என் நூல் அகம் 2

 
மதுரை பதிவர் விழாவில் இனிய தோழி கவிஞர். திருமதி. மு.கீதா அவர்கள் எழுதிய நூலை கையொப்பமிட்டு கொடுத்தார் ‘’ஒரு கோப்பை மனிதம்’’ பருகினேன் பருகப் பருக...
 மிர்தமாய், ற்புதமாய், ருமையாய், மர்க்களமாய்,
னந்தமாய், ச்சர்யமாய், ர்ப்பாட்டமாய், க்கரோஷமாய்,
தமாய், ன்பமாய், மயமாய், னிமையாய்,
ரமாய், ட்டியாய், கைகுணமாய், ர்ப்புசக்தியாய்,
ணர்வாய், ரிமையாய், வமையாய், ண்மையாய்,
ர்கோலமாய், சிகுத்தலாய், சிவெடியாய், மைக்காயமாய்,
ந்திரமாய், ல்லாமாய், ளிமையாய், கத்தாளமாய்,
ணியாய், ற்றமாய், மாற்றமாய், காந்திரமாய்,
யமாய், யனாய், தீகமாய், ம்புலனாய்,
ளியாய், லியாய், ருமையாய், ழுக்கமாய்,
ர்உயிராய், துவாராய், ஷோனாய், ங்காரமாய்,
வையாய், வ்தடமாய்,
 இப்படி....
அனைத்து உணர்வுகளும் என்னுள் படரக்கண்டேன், சிறு சிறு கவிதைகளில் கூட பெரும் பெரும் தத்துவங்களை சொல்லமுடியுமா ?
கீழே சில ஏக்கா தருகிறேன்.
சிதைவு
கோடரிச் சொற்கள்
வீழ்ந்தன உறவுகள்
பேச்சு
மௌனமாயிருப்பதால்
நிகழாமலில்லை
பேச்சு
நா நயம்
தோற்றே போனது
நாணயம் தவறிய
நா நயம்...
சமத்துவம்
அரசியல் ஆண்களுக்கு
அரிசியியல் பெண்களுக்கு
ச்சீ
ச்சீ ச்சீ....
வெட்கம் கெட்டவர்கள்
திட்டிக்கொண்டே
திரையிட்டுக் கொண்டது
குளியலறைக் கண்ணாடி....
எம்மை மிகவும் கவர்ந்தது
தோட்டிச்சி பாட்டி
இந்த பாட்டிகளை நானும் கூட எமது வாழ்வில் கண்டு கடந்து வந்து இருக்கிறேன் ஆனால் ? எமக்கு தோன்றவில்லையே காரணமென்ன ? ஒருவேளை எமக்கு தோண்ட(தலையில்)இல்லையோ ?
 வியக்கின்றேன், வியக்கின்றேன். இந்தக் கவிஞரை பாராட்டும் தகுதி எமக்கில்லை, எமக்கில்லை. ஆகவே......
ந்னான் ப்போறேன், வடக்கே... ய்யேன் ஜோலியப்பாத்துக்கிட்டு.
 
மதுரை பதிவர் விழாவில் தோழி தேன் மதுரத் தமிழ் கவிஞர். திருமதி. பிரதிபா கிரேஸ் அவர்களும் ‘’துளிர் விடும் விதைகள்’’ என்ற தனது நூலை கொடுத்தார்கள். நான் என்ன ? இவர்களைப்போல் கவித்துவம் தெரிந்தவனா ? என்ன எழுதுவது ? ஒன்றும் தோன்றவில்லை வேறு வழியின்றி தோண்டினேன் எமது மூளையின் மூலையோரத்தில், அதில் கிடைத்த துகள்களை தூவியிருக்கிறேன் கீழே....
கவிதை படிப்பதின் முறையைக்கூட அறியாதவன் இப்பொழுதுதான் நண்பர் ‘’ஊமைக்கனவுகள்’’ மூலம் படிக்கத் தொடங்கி இருக்கிறேன், சரி இதன் மூலமாகவும் கவிதை படித்து பழகுவோமே என இறங்கினேன் கடலில் மூழ்கி முத்தெடுத்தவன் நிலையானேன் ஆம் துளிர் விடும் விதைகள் இது கீழிருந்து மேலோட்டம் நான் மூழ்கி மேலிருந்து கீழோட்டமானேன் ஆழ்கடலின் அமைதிக்குள் நீந்துவது போன்ற உணர்வு நான் மீண்டும் சுயநினைவு பெற்று மேல் நோக்கி வர நீண்ட நேரங்களானது அதாவது நூலை மூடும்வரை.
எதைச்சொல்ல, அதையா ? இதையா ?
(எதையாவது சொல்லையா ? யாரது, இடையிலே ஆஸி. சொக்கனா ? ஏங்க ஒரு ஃபளோவா போயிக்கிட்டு இருக்கும்போது குறுக்கே பேசுனா மறந்துட மாட்டேனே ? நீங்க பதிவு போடும் போது நான் ஏதாவது சொல்றேனா ? கம்முனு குந்திகினு படிமே)
நானும் ரசித்தவை... பல அதில் சில உங்களின் பார்வைக்கு....
தமிழ்கொண்டே சென்றிடுவாய்
செவ்வாயோ எவ்வாயோ எக்கிரகம்
சென்றிடினும் தமிழ்கொண்டே சென்றிடுவாய் !
அரிய இலக்கியம் படித்து, இதில் இலக்கியம் எதற்க்கு ? எனக்கேட்டு நம்மை குழப்பி விட்டு அவர் தரும் பதில்கள் அனைத்தும் அருமை.
புத்தாண்டை வரவேற்று...
தேன்மதுரத் தமிழ் தித்திக்க
எட்டுத்திக்கும் செந்தமிழ் கமழ
தமிழும் தமிழரும் வளம்பெற
வருக எம் இனிய புத்தாண்டே !
தூய்மை பேண...
நிலக்கடலை கொறிக்கலாம் – ஆனால்
நீலக் கடலை குப்பையாக்கலாமோ ?
நீ மட்டும் என்னுடனே...
மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன்
நீ மட்டும் என்னுடனே இருப்பாயா ?
தமிழே உதவ மாட்டாயா..
மென்மயிலிறகு கொண்டு வந்து
கன்னத்தில் இரண்டு போடவா ?
மேகம்... இதில் வந்த வரிகளை இவர் வானூர்தியில் பறக்கும்போது எழுதியவையாகத்தான் இருக்ககூடும் வெண்பஞ்சு பொதிகளை வானூர்தி கீறிக்கொண்டு சிறிய குலுக்கலுடன் பறக்கும் பொழுது அதை உணர்ந்து எழுதியிருக்கிறார்.
பிரமாண்டமாய் உருவம் இருந்தாலும்
ஊடுறுவிச் செல்லும் மென்மை !
உன் வாசம் நுகர்ந்தவுடன்... இதில் ஒரு பெண் தனது கணவனைக்குறித்து எழுதுகிறாள் என நம்மை நினைக்கவைத்து முடிவில் மழையைக் குறித்தே என்பதை உணர்த்தி நம்மை ஏப்ரல் மாதத்தில் முன்னிருத்தி விடுகிறார்.
பழகிய மழையே
நீ என்றும் அழகே
எப்பொழுதும் இனிமையே !
விழிப்பாய் இரு தோழி !
வலை விரிப்பார் வஞ்சகர் என அறிந்தும்
கலை மானாய்ச் சென்று மாட்டுவது ஏன் தோழி ?
பெண்ணித்தை காப்பாற்றும் பெண் புலியாய் சமூகத்தில் உலாவும் காமக்கொடூரன்களை நரியென்றும், ஓநாயென்றும் சாடியிருக்கிறார்.
நானாக நான் இருத்தலில்... குழந்தை கேட்கிறது..
நானாக நான் இருத்தல் எப்பொழுது ?
 நானாக நான் இருத்தல் பிழையா ?
கையெழுத்தை... இதில்..
அஞ்சல் ஆவணம்
அனைத்தும் கணினியில்
தொலைத்து விட்டேனே
கையெழுத்தை !
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் வாழ்த்திக்கொண்டே போகலாம் ஆனால் ? அதற்க்கும் தகுதி வேண்டுமே.. இது எமக்கு இல்லாத காரணத்தால் நானும் தகுதி வளர்க்கப் போகின்றேன்.
 
கவிஞர் பிரதிபா கிரேஸ் அவர்களுக்கு, கவிச்சுவை களித்த நன்றியுடன் சிறிய ஆலோசனை, தவறெனில் மன்னிக்க...
\\ நூலில் கூடுதல் இடம் இருப்பது காலி
குறைத்திருக்கலாமே அளவை தோழி \\
எனது என் நூல் அகம் 1 ‘’கிளிக்’’க...
 
இனிய நெஞ்சங்களே.... உங்கள் ‘’வால்மீகி’’யில் தற்போது காண்க...
 
அன்புடன்.
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
தொடரும் எமது நூல் அகத்தில்....
சரிதாயணம்
ஆவிப்பா.


செவ்வாய், டிசம்பர் 23, 2014

இன்றைய MONEYதர்கள்


விஞ்ஞானம் மனித வாழ்வுக்கு வளர்ச்சியா ? வீழ்ச்சியா ?

இன்றைய கால மனிதர்கள் 90 % பேர் சர்வ சாதாரணமாக 50 வயதுக்கு உள்ளேயே இயற்கையான மரணம் வந்து இறந்து விடுகிறார்கள், இது போக, செயற்கை மரணங்கள் பல வகைகளில் வருகிறது

பூகம்பம், TSUNAMI, BOMB BLAST, FLIGHTS ACCIDENT, TRAIN ACCIDENT, BUS ACCIDENT, POLITICS MURDERS, WARகளால் MURDERS, ரசிகர் மன்ற வேலைகளால் ACCIDENT, சொத்து காரணமாய் MURDERS, LOVE விவகாரங்களால் MURDERS, கள்ளக்காதலால் MURDERS, தியாகம் என்ற பெயரில் CYANIDE குப்பி உண்ணுதல், தலைவனுக்காக தீக்குளித்து SUICIDE, POLITICS SUICIDE என்ற பெயரில் MURDERS, LOVE FAILUREரால் மரணம், வழிப்பறிகளால் MURDERS, COLLEGEகளில் EV TEASING என்ற பெயரில் குரூரங்கள், CINEMA ACTORரை காணப்போய் கூட்ட நெரிசலில் மரணம், CINEMA ACTORருக்காக SUICIDE, ஜாதிமத சண்டையால் மரணங்கள், மின்சாரத்தால் மரணங்கள், விசவாயு தாக்கி மரணம். 

இன்னும் விதவிதமாய், வினோதமாய், வித்யாசமாய், மரணங்கள். ஒரு ''தேள்'' கடித்தால்கூட தாங்க கூடிய உடல் பலமோ, மனபலமோ தற்கால மனிதர்களிடம் இல்லை, காரணமென்ன ? 

உடல் உழைப்பு இல்லை, கடைசி காலம் வரை காலையில் CHEMICAL கலந்து உப்பு, புளி, மிளகாய் சேர்க்கப்பட்ட TOOTHPASTEடில் பல் துலக்குவது, இதனால் 40 வயதுக்குள் பல் விழுந்து விடுகிறது, HEATERரில் சூடாக்கப்பட்ட SHOWERரில் வரும் CHEMICAL கலந்த நீரில் CHEMICALலிலான SOAP, SHAMPOO போட்டு குளியல், ஆதலால் கூடிய விரைவில் முடி கொட்டுதல், அல்லது முடி வெளுத்துப் போகிறது, MAKE-UP என்ற பெயரில் முகத்திற்கு, POWDER, CREAM இதனால் தோல் வியாதி, MINERAL WATER என்ற பெயரில் கலப்படம் செய்யபட்ட BOTTLE நீரையே குடிக்கிறார்கள், திடமான உணவுகள் இல்லை, ஆறு மாதங்களுக்கு முன்பே கொல்லப்பட்ட மாமிச இறைச்சிகள், FRIDGE ஜில் வைத்து பாதுகாக்கப்பட்டு ELECTRIC அல்லது GAS அடுப்பில் உடனுக்குடன் சுடவைத்த உணவுகள், செயற்கை உரங்கள் போடப்பட்டு துரிதமாக வளர்க்கப்பட்ட காய்கறிகள், PIZZA, SANDWICH என்ற பெயரிலான கௌரவத்திற்காக உண்ணப்படும் ரப்பர் துண்டுகள், AIR COOLER மூலம் செயற்கை குளிரில் உறங்குவது, இதனால் BLOOD உறைந்து போய் OMENYSHTION என்ற நோய் வருகிறது, சிறிய நேரம் கிடைத்தாலும் COMPUTERரையோ, MOBILEலையோ நோண்டிக் கொண்டிருப்பது, அல்லது T.V பார்ப்பது, (இதில் 3D வேறு) இதனால் 25 வயதிலேயே கண் பார்வை இழந்து விடுகிறது, 

சரி வாழ்க்கை எப்படி போகிறது ? OFFICEஸில் வேலை முடிந்து களைத்து வீடு வந்தால், மனைவிக்கு NEW MODEL MIXER வாங்கவில்லை என்பதால் சண்டை, சரி இரவில் சமாதானப்படுத்துவோம் என்றால் L.K.G படிக்கும் மகள் இரவு 09.00 மணிவரை COMPUTERரில் CAMS விளையாடிக் கொண்டு இருக்க, மகனும் இரவு 10.30 மணிவரை LAPTOP YOUTUBEபில் மன்மதராசா... மன்மதராசா... பாட்டு போட்டு கேட்டுக் கொண்டிருக்க, OFF செய்யச் சொன்னால் தங்கச்சியை காரணம் சொல்வான் அவளுக்கும் அண்ணனை கண்டாலே ஆகாது இருவரும் கீறியும்-பாம்பும் போல், பிறகு எப்படி ? மனைவியும் தன் பங்குக்கு இரவு 11.15 மணிக்கு VIZAN T.V யில், வரும்...

''தோ(ல்)ள் கொடுத்த தோழி'' 

SERIALலுகாக, காத்துக் கொண்டிருக்க... மன உலைச்சலில் அப்படியே உறங்கிப்போக.... இப்படியே பல வருடங்களும் உருண்டோட.... 

மகனுக்கு தெரிந்த, M.L.A மூலம் M.B.B.S. APPLICATION னும் கிடைத்து விட்டது DONATION கொடுக்க, BANKகில் FIVE LAKH, LONEனுகாக லோலோன் அலைய வேண்டியதாகிப் போச்சு, உறவுக்கார திருமணத்திற்கு போககூட நேரமில்லாமல் e MAILலில், வாழ்த்து அனுப்ப வேண்டிய நிலை, ஒருவழியாக COLLEGE போக, மகன் PULSAR BIKE இல்லாமல், உள்ளே நுழையவே முடியாதாம் ? ? ?

அதற்காக கீழ்வீட்டை ஒத்திக்கு விட்டு அதற்கு ஒரு லட்சம் அழுது, சரி மகன் படித்து DOCTOR ஆகி, கை நிறைய சம்பாரித்து நம்மகிட்டதானே கொடுக்கப் போறான், என சமாதானமடைய... அடுத்த வீட்டு அருணாசலம் ஒருநாள் சொன்னசேதி கேட்டு முதல் முறையாக HEART ATTACK 06.2 வந்து HOSPITAL லில் சேர்த்து CT SCAN, MEDICINE, ROOM RENT, 43,000 Rs, CREDIT CARD டில் இழுக்க விட்டு, மூன்றுநாள் கழித்து வீடு வந்து மனைவியிடம் தான் கேட்ட சேதியை சொன்னால் ?

உங்களுக்கு வேற, வேலையே இல்லை எப்பப்பாரு எம்புள்ளைய கரிச்சுக் கொட்டிக்கிட்டே இருங்க... மனைவி போயே விட்டாள், அவர் கேட்டசேதி 

உன் மகனும், கீழ்வீட்ல ஒத்திக்கு வந்து இருக்கிறவருடைய மகளும் BIKEல, லட்சுமி THEATERக்கு CINEMA பார்க்க வந்தாங்க, நான் பார்த்துட்டு தெரியாதது மாதிரி வந்துட்டேன், பார்த்துக்க அப்புறம் கீழ்வீட்டுக்கு ஒத்திக்கு வந்தவ, மேல்வீட்ல விளக்கு ஏத்திடப்போறா... 

இதன் விளைவுதான், HEART ATTACK 06.2  அடப்பாவி உனக்கு COLLEGE போக BIKE வாங்கி கொடுத்தா நீ அவளோட BIKEல, ஊரைச்சுத்தறியா ? நம்ம, ஜாதியென்ன ? அவ ஜாதியென்ன ? ச்சே... இதைப்பக்குவமா கையாளனும் மகனிடம் இதைப்பற்றி கேட்கவேண்டாம், நாளைக்கே பணத்தைக் கொடுத்து வீட்டைக்காலி செய்யணும் மனைவியிடம் பணத்திற்கு NECKLACEசை கேட்டால் நானே ஒண்ணுதான் வச்சுயிருக்கேன், சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு எதை போட்டுப் போறது ? அவள் தரவில்லை சரி ஏற்கனவே இருந்த யோசனைப்படி OUTDOORரில் தன்பெயரில், வாங்கிப் போட்ட 12 சென்ட் இடத்தை உடனே விற்று ஒரு லட்சம் கொடுத்து வீட்டை காலி செய்துட்டு, நல்ல இடமாப்பார்த்து மகளுக்கு கல்யாணம் செய்திடலாம், கல்யாணமாலை மூலம் மாப்பிள்ளை வீட்டார் வந்தனர் மாப்பிள்ளை DUBAIயில், OIL COMPANYயில் SUPERVISOR ராக, வேலை பார்ப்பதாகவும் அதனால் 65 பவுன் நகையும், BIKEகும், கொடுத்தால் போதுமென பெருந்தன்மையாக சொல்லி விட்டார்கள், நல்ல இடமென்பதால் எல்லாவற்றுக்கும் சம்மதித்து கல்யாண வேலைகள் மும்முரமாக நடந்தது, இன்னும் ஒருவாரமே இருக்கிறது, நகைகளெல்லாம் செய்து வந்து பீரோவில் பூட்டி வைத்து விட்டு நிம்மதியாக தூங்கினார், காலையில் மனைவி அலறியடித்துக் கொண்டு வந்து உசுப்பிளாள்...

என்னங்க... பீரோவுல இருந்த நகையப்பூராம் காணோமுங்க... கீழ்வீட்டுக்கு குடிவந்த அந்த ஓடுகாலிச் சிறுக்கி நம்ம பயலை கூட்டிக்கிட்டு ஓடிட்டாங்க.... அய்யோ... நான் என்ன செய்வேன் ?

ஒப்பாரி வைத்தவள், எழுந்து உட்கார்ந்த கணவன் ஒன்றும் சொல்லாமல் இருப்பதால்...
''என்னங்க'' 
என தோளில் கை வைத்தாள், அவர் ஏற்கனவே SECOND HEART ATTACK 09.4 வந்து 49 வது, வயதிலேயே முடிந்துபோய் 0.54 SEC ஆகி விட்டது.

கணவன் கேட்டு NECKLACE தரமறுத்தவள், கணவன் கேட்காமலேயே தாலியை கொடுக்கத் தயாரானாள்.

விஞ்ஞானம் அபார வளர்ச்சிதான், மனிதனுக்குமா ?

இது,அன்றைய மனிதர்கள்.in தொடர்ச்சி

இனிய நெஞ்சங்களே.... வலைச்சரத்தில் எனது கடைசி பதிவில் இப்படி எழுதியிருந்தேன்...

நண்பர்களே கில்லர்ஜி க்கு இன்னொரு பெயர் உண்டு அதுதான் கீழே சொடுக்குக....


என்று கூறியிருந்தேன் இதை ‘’கிளிக்’’கி சென்று கருத்துரை அளித்த ....

திரு. துளசிதரன் தில்லை அகத்து
திரு. மெக்னஷ் திருமுருகள்.
திருமதி. இளமதி

அவர்களுக்கு நன்றி.

அறிவிப்பு – நண்பர்களே, டேஷ்போர்டில்.

புதன், புனிதாவுக்கு விரதம் – நாலு பேருக்கு நன்றி (M.R. ராஜாமணி 1983) 

நேற்று முதல் வந்து இருக்கிறது ‘’கிளிக்’’கினால் Blank Page என்று வருகிறது இதற்க்கு நான் பொருப்பு அல்ல என்பதை அறிவிக்கிறேன் நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...