வெள்ளி, ஜூன் 29, 2018

பிச்சை கேட்போமே...

பிச்சை கேட்போமே ஐயப்பா பிச்சை கேட்போமே...
பிச்சை கேட்போமே ஐயப்பா பிச்சை கேட்போமே...

செவ்வாய், ஜூன் 26, 2018

கணபதி பப்பா மோரியா

गणपति पप्पा मोरिया

வணக்கம் நட்பூக்களே... 2014-இல் நான் வலைச்சர ஆசிரியராக இருந்த பொழுது அதில் எழுதிய தொடர் இதோ மீண்டும் சிறு கதையாய்...

னக்கு நன்றாக நினைவு இருக்கிறது நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது குருந்தன் வாத்தியார் பிள்ளையாரைப்பற்றி பாடம் நடத்தினார் பிள்ளையார் பெயர் கணபதி, கணபதிக்கு ஒரு தம்பி உண்டு பெயர் முருகன் கணபதியை நாம் (பிள்ளையாரை) பெரியப்பா என்றே அழைக்க வேண்டும் என சொன்னார். உடனே நான்...
அப்படியானால் முருகன் சித்தப்பாவா ?
என்று கேட்டு விட்டேன் கேட்டதுதான் தாமதம் செவிட்டில் சட்டீரென்று ஓர் அறை விழுந்தது
முருகனை, சித்தப்பா என்றோ, பெரியப்பா என்றோ சொல்லக் கூடாது.
என அதட்டி சொல்லி விட்டார் இது எனக்கு குழப்பமாகவே இருந்தது ஏனெனில் வீட்டில் நான் கணபதியை அப்பா என்றும், முருகனை பெரியப்பா என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தேன் வாத்தியார் சொன்னதால் நானும் வீட்டிற்கு வந்து கணபதியை (எனது அப்பா)
பெரியப்பா
என்று கூப்பிட்டேன் சொன்னதுதான் தாமதம் அவரும் சட்டீரென செவிட்டில் ஓர்   அறை விட்டார் இது எனக்கு மேலும் குழப்பத்தை உண்டு பண்ணியது குழப்பத்தை தீர்க்க, அம்மாவிடம் சென்று முறையிட்டேன்.

அப்பாவை எப்படி கூப்பிட்டே ?
பெரியப்பான்’’னு
இன்னொரு தடவை சொல்லு ?
பெரியப்பான்’’னு
என்னைப் பார்த்து சொல்லு ?
பெரியப்பான்’’னு
என் கண்ணைப் பார்த்து சொல்லு ?
பெரியப்பான்’’னு
அம்மா சட்டீரென்று ஓர்  அறை விட்டார் ச்சே என்ன இது ? குழப்பத்தை தீர்க்க முருகனிடம் (எனது பெரியப்பா) சென்றேன். வாத்தியார் சொன்னது ஞாபகம் வந்தது...
முருகனை சித்தப்பா, என்றோ, பெரியப்பா என்றோ சொல்லக் கூடாது
முருகா
என்றேன் சொன்னதுதான் தாமதம் சட்டீரென செவிட்டில் அறை விட்டார்.
முளைச்சு மூணு இலை விடலே என்னயவே முருகான்னு சொல்றியா ? 


என்னடாது இவரும் அறையுறாரு எனக்கு இது மேலும் மேலும் குழப்பமாகியது குழப்பத்திலேயே நடந்து போய் கட்டடியான் கோயிலோரம் போய் நின்று யோசித்துக் கொண்டு இருந்தேன் எனக்கு யோசிக்க, யோசிக்க வாத்தியார் மீது கோபம் கோபமாக வந்தது அவரால்தானே இத்தனை அறை விழுந்தது தெளிந்த நீரோடை போல் சென்று கொண்டிருந்த என் வாழ்வில் புயலை வீசி விட்டாரே... அந்த வழியாக JOGGING சென்று கொண்டிருந்த எனது ஐயா ஸ்ரீபூவு என்னைப் பார்த்து விட்டார்
கில்லர்ஜி இங்கே என்னடா செய்றே ?
இவரிடம் சொல்வோமா ? இல்லை இவரும் ஓர் அறை விடுவாரா ? குழப்பமாய் தயங்கி, தயங்கி வாத்தியார் மீது இருந்த கோபத்தை கொட்டி விட்டேன் ஐயாவும் வாத்தியார் மீது கோபமாகியதும் எனக்கு சந்தோஷமாகியது. ஹைய்யா நல்லவேளை ஐயா அறையலே,
அவன் யாருடா உன் அப்பனை பெரியப்பான்னு சொல்றதுக்கு ? காலைல நானும் உன்கூட பள்ளிக் கூடத்துக்கு வர்றேன் வா
என்று வீட்டிற்கு கூட்டி வந்து விட்டார். மறுநாள் காலை என்னுடன் ஐயா ஸ்ரீபூவும் வந்தார், நேராக வாத்தியாரிடம் போய்...

ஏய்யா, நீ என் பேரனை அப்பனை பெரியப்பான்னு சொல்லச் சொன்னியாம் ?
என்றார் ஐயா ஸ்ரீபூவு மிராசுதார் என்பதால், வாத்தியாரும் மிரண்டு விட்டார், அவரும் தயங்கி, தயங்கி பிள்ளையார் பாடம் நடத்தியதையும், உங்க பெரிய மகன் பெயர் முருகன் என்பதும், சின்ன மகன் பெயர் கணபதி என்பதும் சத்தியமா எனக்கு தெரியாது என்றார். சொன்னதுதான் தாமதம் சட்டீரென ஓர் அறை விழுந்தது எனக்கு. அறைந்தது சாட்சாத் எனது ஐயா ஸ்ரீபூவு.
இந்த பிள்ளையார் கதை எல்லாம் நீ எங்கிட்ட சொல்லலையே ஏண்டா ?
எனக்கு பொறி தட்டியது போல் இருந்தது என்னடா இது எல்லாருமே அறையுறாங்க ? கடைசியில் இதுக்கெல்லாம் காரணமான பிள்ளையார் மீது கோபம் வந்தது எல்லாக் கடவுளையும் போல இவரையும் கும்புட வேண்டியதானே... இவரை மட்டும் ஏன்... பெரியப்பான்னு சொல்லணும் ? குழப்பத்தை தீர்க்க, பேச்சிமுத்து சித்தப்பாவிடம் கேட்கலாமா ? வேண்டாம் நேற்றுதான் கடையில் பஜ்ஜி எடுத்து தின்னதற்கு பிச்சி எடுத்து விட்டார். மாரிமுத்து சித்தப்பாவிடம் கேட்கலாமா ? வேண்டாம் அவர் கோபம் வந்தால் மாறி மாறி குத்துவார், களஞ்சியம் சித்தப்பாவிடம் கேட்கலாமா ? அவர் லாஞ்சி வேலைக்கு லால்குடி போயிட்டாரே அப்பத்தா கல்லாப்பருந்திடம் கேட்போமா ? அது கொத்தி விடுமே வேண்டாமென, விட்டு விட்டேன்.

சாம்பசிவம்-
இத்தனை பேர் அறைஞ்சதுக்கு காரணம் உங்க ஐயா ஸ்ரீபூவுதான் உங்க அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் நித்திஷ், ரித்திஷ் இப்படி லேட்டஸ்ட் பேரா வச்சிருந்தா ? இவ்வளவு பிரச்சனை வந்துருக்காது.

இதோ ஞானி ஸ்ரீபூவுவின் கொள்ளுப் பெயர்த்தியின் மகன் எம்.ரித்திஷ்

சனி, ஜூன் 23, 2018

அரசியலில் குதிப்பது எப்படி ?

 உமக்கு இராயல் சல்யூட் சகோதரி
இது இறையின் ஆட்சியின்றி வேறென்ன ?
இதுல மூன்றாவது பேரு பிரமநாத்தம்டா...
ஹெல்மெட் உயிரை பாதுகாக்கும் – காவல்துறை
நடக்கட்டும் எல்லாம் நடக்கட்டும்
காலமாற்றம் இறைவன் வீட்டில் ஐந்து
கிரகம் யாருக்குப் பிடிக்கப் போகுதோ...?
கலெக்டரைவிட பியூன் வேலை தேவலாம்
காரணம் அம்மாவும், சின்னம்மாவும்தான்
வயசான காலத்துல இவ வேற...
மக்களை மாவரைக்குறதுக்கு இவனுகளும்...
எவன்டா அந்த எடிட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு...
அதிரா வீட்டு பூனைதானா ?
இவனும் முடிவோடதான் எடுக்குறான்
உசுரோட அஞ்சலியா ?
உயிரை உயிரா மதிங்கடா...
எல்லாம் செல்லாத பணமாப் போச்சே...
நம்மளைவிட படிச்சவனாக இருப்பானோ...?
அரசியலில் குதிப்பது இப்படித்தான்
என்ன இப்படி கிளம்பிட்டாளுக...?

சிவாதாமஸ்அலி-
ஒரு மார்க்கமாத்தான் அலையிறாளுக...
Chivas Regal சிவசம்போ-
நம்மளுந்தான் இருக்கோம் பார்க்க நாதியில்லாம...

வியாழன், ஜூன் 21, 2018

கேணிக்கரை, கேனயன் கேசவன்


ன்பே நீ கேட்டாய் என்று நெக்லஸ் வாங்கி தந்தேன்
ருயிரே நீ கேட்கா விடினும் என் அன்பைத் தந்தேன்
னியவளே நீ கேட்டதற்காக கொலுசு வாங்கி தந்தேன்
ருடலை சேர்த்திட ஈசனிடம் வரம் வாங்கி வைத்தேன்
னக்காக அழகான வைர மூக்குத்தியும் வாங்கி தந்தேன்
ரறிய நாம் இணைவோம் என்று சொல்லி வைத்தேன்
ன்னவளே வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்றாய்
ழரை வட்டிக்கு பணம் வாங்கி துவங்கி கொடுத்தேன்
ஸ்வர்யமே உன்னுடன் ஐக்கியமாவேன் என்றிருந்தேன்
ட்டியாணம் வேண்டுமென தூது சொல்லி விட்டவளே
டிவந்து வாங்கி கொடுத்தேன் ஓவர்டைம் சம்பளத்தில்
வைப்பாட்டி ஆன பின்பு சொன்னாயடி ஒரு வார்த்தை
Your application is not accepted, my Husband

கேனப்பயலாக்கி விட்டாய் கேள்விக்குறியாய் வாழ்கின்றேன்.
கேணிக்கரை K - 9 K – 7

Chivas Regal சிவசம்போ-
இந்த மாதிரியான K-9 னை எல்லாம் Dr. K-7 வச்சு A K 47 னாலே தூக்கணும்.

திங்கள், ஜூன் 18, 2018

புதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన


    ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதேநேரம் ஊசி போடுவதை கண்டாலே எனக்கு அலர்ஜியாக இருக்கும் அபுதாபியில் இருக்கும் பொழுது இது மேலும் வலுவடைந்தது அதற்கு காரணம் ஆரம்ப காலங்களில் அங்குள்ள மருத்துவமனைகளில் ஊசி மிகவும் தடிமனாக இருப்பது மட்டுமல்ல, மனிதாபிமானமே இல்லாமல் நம் ஊரில் மாட்டுக்கு சொருகுவார்களே அதைப் போலவே குத்துவார்கள் அதைவிட முக்கியம் அங்கு மருத்துச் செலவு மிகவும் அதிகமாக இருந்தது.

எனது சம்பளத்தில் காய்ச்சல் வந்தால் பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது இதன் காரணமாக என்னைப் போன்ற தொழிலாளிகள் மாத்திரையை வாங்கி விழுங்குவதோடு முடித்துக் கொள்வார்கள் நான் அதைக்கூட செலவு என்று நினைத்து மறுத்து விடுவேன் முக்கிய காரணம் பணம் சேர்க்க வேண்டும் என்ற வெறி ஆனால் இந்நொடிவரை தவறான வழிகளிலோ, பிறகுக்கு துரோகம் செய்தோ பணம் சேர்த்ததில்லை. காரணம் அது எனது சந்ததிகளுக்கு சேர்க்கும் பாவமாக கருதினேன். மேலும் மன உறுதியோடு காய்ச்சல்தானே என்று எனக்கு நானே பேசிக்கொள்வேன். அதிலிருந்து விடுபட ஓடுவேன், உடல் பயிற்சி செய்வேன். ஆனால் இப்பொழுது இன்சூரன்ஸ், மெடிக்கல் கார்டு என்று பல வழிமுறைகள் வந்து விட்டது.

சமீபத்தில் கோவையில் இருக்கும் பொழுது எனக்கு காய்ச்சல் வந்தது வழக்கம் போல சாதாரணமாக உதறி விட்டுக் கொண்டே இருந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனை போகச் சொல்லிக் கொண்டே இருந்ததாலும் என்னாலும் தாக்குப் பிடிப்பது கஷ்டமாக இருந்தது மேலும் சைனாவிலிருந்து இந்திய கன்றி எங்கும் பன்றிக் காய்ச்சலை பரவிக் விட்டுக் கொண்டு இருப்பதாக தகவல் எனக்குமா பன்றிக் காய்ச்சல் வரும் ? நல்ல மனதுடன் வாழ்ந்ததற்கு இறைவன் நன்றிக் காய்ச்சல்தானே கொடுக்க வேண்டும் வேறு வழியின்றி வீட்டருகில் இருக்கும் மருத்துவமனைக்கு பையர் அழைத்துக் கொண்டு போனார் (வார்த்தை உதவிக்கு நன்றி சகோ திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்) தம்பதியினர் இருவரும் மருத்துவர்கள் அவர்களிருவரும் தமிழக-கேரளா கூட்டமைப்பு என்பதை பார்த்ததில், பேசியதில், உணர்ந்ததில் அறிந்து கொண்டேன். அவர்களுக்கான தட்சிணையுடன் வழக்கமான எல்லா மருத்துவர்கள் போலவே அவர்களுடைய மருத்துக்கடையிலேயே வாங்க வைத்தார்கள். எல்லாம் முடிந்த பொழுது அங்கு இருந்த பெரியவர் எனக்கு கையில் ஒன்று கொடுத்தார் வாங்கிப் பார்த்தேன் புதிய ஏற்பாடு


என்ன சொல்லலாம் ? நானிரிந்த நொம்பலத்தில் மனம் ஆயிரம் சொல்ல நினைத்தது, நாக்கு இரண்டாயிரம் வார்த்தைகளை தயார் செய்தது, விரல்கள் மூவாயிரம் வரிகளை டைப்பி விட்டது ஆனால் உடல் தளர்ந்து இருந்தது சட்டென எதிர்க்கட்சி வழக்கறிஞரைப் போல் மனம் சொல்லியது மீண்டும் இங்கு வரும் சூழல் வரலாம் அப்பொழுது ஏதாவது ஊசியைப் போட்டு உன் கதையை முடிச்சாலும் முடிச்சுடுவாங்கே நாட்டை ஆண்ட முதல்வருக்கே அந்நிலை நீ எம்மாத்திரம் அதனால் அடங்கு... அடக்கு... என்றது. உடன் டங்கு அடங்கியது. மேலும் மதங்கள் அனைத்தும் அன்பைத்தானே போதிக்கிறது மதவாதிகள் படிக்க மாட்டார்கள் நாம் மிதவாதியாயிற்றே... இதையும் படிப்போமே என்று உள்மனம் சொல்ல வாங்கி கொண்டேன். சரியென்று வெளியேறி வந்தால் வரவேற்பறையில் பையர் நின்றிருந்தார் கையைப் பார்த்தேன் அவரது கையில் புதிய ஏற்பாடு நான் அந்த மருத்துவமனையில் முதலில் கண்டதே அந்த மேஜையும் அதன் மேலிருந்தவைகளையும்தான் சட்டென மீண்டும் உள்ளே போனேன் எனது கையிலிருந்ததை வைத்து விட்டு மற்றதை எடுத்தேன் அது പുതിയ നിയമം


அவர் என்னை முகமலர்ச்சியுடன் பார்த்து கேட்டது...
மலையாளியானோ ?
இல்லையே...
பின்னே மலையாளம் எடுக்குனது... ?
இனிமே எழுத்துக்கூட்டி படிச்சுக்கிற வேண்டியதுதான்.
அவரது முகத்தில் ஈயாட விட்டு வெளியேறி வீட்டுக்கு வந்தேன்.

நான் ஏற்கனவே சொன்னது போல் மீண்டும் அங்கு போக வேண்டிய நிலை இம்முறை எனக்கல்ல எனது அம்மாவுக்கு நலமில்லாமல் அழைத்துப் போனேன். வழக்கம்போல் தண்டம் கட்டி விட்டு வெளியே அழைத்து வரவும் அதேநபர் எனது அம்மாவுக்கு கொடுத்தார் அது புதிய ஏற்பாடு எனது அழகு முகத்தை ஒருமுறை பார்த்தால் மறுமுறை மறந்தவர் உண்டோ ? சற்றே யோசித்தபடியே எனக்கும் கொடுத்தார் புதிய ஏற்பாடு மறுக்காமல் வாங்கி அதே மேஜையில் வைத்து விட்டு வேறு எடுத்தேன் அது नया नियम


சொன்னால் அதிரா நம்புவார்களோ... என்னவோ... அடுத்த வாரமே எனக்கு விரலில் நகச்சுத்தி வேறு வழி ? அங்குதான் போனேன் பரிபாடிகள் முடிந்து வெளியே வந்து மேஜையருகே நின்ற என்னை பார்த்துக் கொண்டே இருந்தார் பிறகு நானே எடுத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டேன் அது  కొత్త నిజంథన

அவருக்கு என்னமோ புரிந்து விட்டது என்பது மட்டும் எனக்கு புரிந்தது என்பதை நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என்று நானும் இந்நொடி புரிந்து கொள்கிறேன். மீண்டும் இங்கு வரும் நிலையை இறைவன் கொடுக்கலாம் காரணம் அந்த மேஜையில் தமிழ்நாடு சுடுகாடாகும் என்று சாபமிட்ட விஸ்வாமித்ரனின் மொழியான கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளிலும் இவைகள் இருக்கின்றனவே...

நட்பூக்களே... இவ்விடத்தில் நான் ஒரு பழைய சம்பவத்தை உங்களுக்காக நினைவு கூர்கிறேன் சுமார் முப்பது வருடமிருக்கலாம் நானும், நண்பன் ராமச்சந்திரனும் இரயிலில் பயணித்துக் கொண்டு இருக்கும் பொழுது அவன் படித்துக் கொண்டு இருந்த நூலிலிருந்து ஒரு விடயத்தை சொல்லி தமிழ் மொழியைப்பற்றி பெருமையாக சொன்னான். சற்றே யோசித்த நான் பிறகு அவனிடம் சொன்னேன். இது பெருமையே கிடையாது மொழிக்கு வேண்டுமானால் நீ சொல்வது போல் பெருமையாக இருக்கலாம் ஆனால் தமிழன் என்று பார்த்தால் இது அவமானப்பட வேண்டிய விடயம் காரணம் இதன் தொடக்கத்திற்கு தமிழன்தான் சரியானவன் என்று ஆங்கிலேயன் அன்றே கணித்து இருக்கின்றான் என்றேன்.

நண்பர்களே... அந்த விடயம் என்ன தெரியுமா ?
ஆங்கிலத்திலிருந்த பைபிளை இந்தியாவில் நுழைத்து மக்களை படிக்க வைக்க முதன் முதலில் தேர்வு செய்து அச்சடித்த மொழி தமிழ் அதன் பிறகுதான் மற்ற அனைத்து மொழிகளிலும் வந்து இருக்கிறது

Related Posts Plugin for WordPress, Blogger...