தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 19, 2020

கள்ளுண்ணாமை

       ரடங்கு தவிர்க்கப்பட முடியாத மத்திய, மாநில அரசுகளின் செயல் இதில் டாஸ்மாக்கும் மூடப்பட்டது சுமார் இரண்டு மாதங்கள்வரை குடிகாரர்கள் குடிக்க முடியாமல், வழியில்லாமல் ஏதோ நாட்களை கடத்தி விட்டது உண்மைதான். பிறகு அரசுக்கு வருமானம் இல்லை என்பதற்காக மீண்டும் திறந்தது மக்களுக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல ஆள்பவர்கள் தங்களது சந்ததிகளுக்கு செய்யும் துரோகமும்கூட மக்களை குடிக்க வைத்துதான் ஆட்சி செய்ய வேண்டுமெனில் இந்த அரசு எதற்கு ? 

இனி நாம் ஆட்சிக்கு வரமுடியாது என்று ஆட்சியாளர்கள் தீர்மானித்து விட்டார்களோ ?  இப்படியே டாஸ்மாக்கை மறந்ததோடு நிரந்தரமாக மூடியிருந்தால் தாய்மார்கள் மனதில் பாலை வார்த்து நிச்சயமாக மீண்டும் ஆட்சியமைக்கும் நிலையாகி இருக்கும். தாலிக்கு அரசு தங்கம் தருகிறதாம் இதை ஆளுங்கட்சியும், அவர்களது அல்லக்கைகளும் உரக்க கூவுகிறார்கள் அட முடுமைகளா... டாஸ்மாக்கால் தினம் எத்தனை தாலிகள் அடகு கடைக்கு போய் மூழ்குகிறது. எத்தனை தாலிகள் நிரந்தரமாக அறுக்கப்படுகிறது என்பது தெரியுமா ? 

கொரோனாவால் இறப்பவர்களை பெரிய இழப்பாக கருதும் சமூகம் டாஸ்மாக்கால் நிகழும் மரணங்கள் அதிகம் என்பதை மறந்து விட்டார்கள். என்னவொன்று இது தொற்றுநோய் என்பதால் அஞ்சுகிறார்கள் மற்றபடி தொலைநோக்கு பார்வை மக்களிடம் கிடையாது இந்த கடையை திறப்பதற்கு எத்தனை முன்னேற்பாடுகள், காவல்துறையின் செயல்பாடுகள், திட்டங்கள் அடடா இந்த மூளையை மக்களின் நலனுக்காக உபயோகப்படுத் இருந்தால் நாடும், வீடும் நலமே மன்னனை போற்றுவார்கள் மக்கள் தினமே...


பொருட்பால்
குறள் 921

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
- திருவள்ளுவர்


சரி அரசு டாஸ்மாக்கை திறக்கட்டும் மக்கள் குடித்தால்தான் வாழ முடியும் என்ற அடிமட்ட வாழ்க்கைக்கு போய் விட்டார்களே... இந்த மூடர்கள் இறந்தால்தான் என்ன ?  இந்தக்கேள்வி இந்த சமூக மனிதர்களுக்கு மட்டுமல்ல. குடிப்பவன் எனது குடும்பதில் இருந்தாலுமே இவன் தேவையே இல்லை இவ்வுலகுக்கு நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

17.05.2020 இன்றைய ஒரேநாளில் தமிழகத்தில் டாஸ்மாக்கின் வருமானம் 163 கோடி ரூபாய் இந்தியா ஏழையர்களின் நாடு என்பது மெய்யா ?  அதிகபட்சமாக அன்றாடங்காச்சிகளின் பணமே இது ஆக ஏழைகளிடமே அவசியமற்ற செலவு இவ்வளவு செய்யும் போது... இந்த சிந்தனையற்ற மா’’க்களின் பணத்தை அரசியல்வாதிகளும், திரைப்படக் கூத்தாடிகளும், கிரிக்கெட் கிறுக்கர்ளும் ஏமாற்றுவதில் தவறில்லை.


மு.வரதராசன் விளக்கம்
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

சாலமன் பாப்பையா விளக்கம்
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல, மாற்றாகும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்
பிறரால் நேசிக்கப் படமாட்டர், தனது சுய ஆற்றலையும் இழப்பார் எப்பொழுதும் கள் மீது ஆர்வம் கொண்டு வாழ்பவர்.

இழிபிறவி யென இகழ்வர் பலர், நீவீர் இறப்பின் பலன் னென்று மகிழ்வர் தம் மகவு, மறவாதே உம் மாண்பு.

சாம்பசிவம்-
சிவசம்போ ஐயாக்கமாரு... உனக்குத்தான் மேலே சொல்லி இருக்காங்க, பக்குவமா பொழைச்சுக்கோ...

ChavasRegal சிவசம்போ-
? ? ?

காணொளி
ஊக்கமது கைவிடேல்

64 கருத்துகள்:

  1. தானே திருந்தினால் தான் உண்டு... வேறு வழி எதுவும் இல்லை ஜி...

    பெரியவர் ஊதுபத்தி பத்த வைக்க ரொம்ப சிரமப்படுகிறார்...! கொடுமை...

    பதிலளிநீக்கு
  2. பேன்டு சட்டை போட்டுக்கிட்டு டாஸ்மாக்ல கையேந்தி குடிக்கிறவனும் குடிகாரப்பயல்தானே.

    குடிக்கிற பயலுவளுக்கு என்ன கவுரதை வேண்டிக்கிடக்கு. கொஞ்சம் குடிச்சாலும் குடிகாரன்தான் மொடாக்குடியருக்கும் அதுதானே பேரு.

    ஜனநாயகத்துல மக்கள் குரலுக்கு செவி சாய்க்கிறாங்கன்னு நினைச்சுக்கிட வேண்டியதுதான். ஆனா பாருங்க... இந்த சாராயத் தோழிற்சாலை வச்சிருக்கறதே பெரிய அரசியல்வாதிங்க தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் ஸ்டார் ஹோட்டலில் குடிப்பதால் அவன் குடிகாரன் இல்லை என்றாகி விடமுடியாது.

      மிகப் பெரிய சாராய வியாபாரிகள் ஸ்டாலின் வகையறா மற்றும் சசிகலா வகையறாக்கள்தான்.

      வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
    2. ஹலோ என்ன இது என்னை நெல்லைதமிழனும் கில்லர்ஜியும் போட்டி போட்டு திட்டுறீங்க...ஹும்ம்ம்ம்ம்ம்ம்

      நீக்கு
    3. வருக தமிழரே நாங்க உங்களை திட்டவில்லையே...

      நீங்க கோட்டு, ஸூட்டு போட்டு பாருக்கு போவீங்களோ... ?

      நீக்கு
    4. அடடா... நான்பின்னூட்டம் போட்டபோது மதுரைத் தமிழன் நினைவுக்கு வரலையே. வந்திருந்தால், கூட இரண்டு வரி சேர்த்து, கிடைத்த வாய்ப்பை உபயோகித்திருக்கலாமோ? ஹா ஹா

      நீக்கு
    5. இப்பொழுது நெல்லைத்தமிழன், மதுரைத்தமிழனை திட்டப் போகிறாரோ...?

      நீக்கு
  3. மீண்டும் மதுப் பழக்கத்தில் மக்களைத் தள்ளி விட்டு இரண்டு தலைமுறைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டியவர்களின் சந்ததிகளுக்கு வாழ்க கோஷம் போட்டு விட்டு
    தன் தலைமுறையை அழித்தவன் ஆனான் த்மிழன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வாழ்க கோஷம் போடும் தமிழன் என்று வீழ்கிறானோ... அன்றுதான் தமிழகம் உருப்படும்.

      நீக்கு
  4. அவர்களாக திருந்தாவிட்டால் வேறு வழியே இல்லை. இங்கே எல்லாமே இப்படித்தான். அரசு சம்பாதிக்க கடை நடத்துகிறது. மனிதர்கள் போதைக்கு குடிக்கிறார்கள். யாரும் விட்டுக் கொடுப்பதாக இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  5. எத்தனை தாலிகள் நிரந்தரமாக அறுக்கப்படுகிறது. வலி நிறைந்த உண்மை. ஆனா இதெல்லாம் நமக்குத்தான் அரசுக்கோ குடிகாரர்களுக்கோ இது வெறும் வார்த்தைகள். இவர்களாவது திருந்துவதாவது.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. வருக அபிநயா தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. அவமான உணர்வேதுமின்றி
      அடுத்தவனுக்காகக் கோஷம்போட்டு
      பல்லை மிகக்காட்டி
      பாலாபிஷேகம் தேனாபிஷேகம் செய்து
      இடுப்பிலே துணியின்றி அலையும்
      இணையற்ற மாண்புடையவனே தமிளன்
      என்பதை உலகம் தெரிந்துகொண்டு
      எக்கச்சக்க நாளாகிவிட்டது !

      நீக்கு
    3. வருக நண்பரே சவுக்கடி வார்த்தைகளால் உண்மைகளை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  7. மக்களாகத் தான் திருந்த வேண்டும். யாரும் போகாமல் இருந்தால் அரசும் கடையை மூட வேண்டியது தானே! ஆனால் அப்படி எங்கே நடக்கும்? இந்த நாற்றத்தில் என்ன சுகத்தைக் காண்கிறார்களோ! காணொளியை இப்போதே பார்த்துட்டேன். திறந்தது. நல்லா எடுத்திருக்கீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் குடியை நிறுத்துவது மக்கள் கையில்தான் உள்ளது.
      தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  8. திருந்துவது மக்கள் கையில்தான் உள்ளது. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அரசை நம்பி இனி பயனில்லை. தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. குடியின் தீமையை சொல்லும் நல்ல பதிவு.

    எத்தனை குடும்பங்கள் சிதைந்து போய் இருக்கிறது இந்த குடி அரக்கனால்!

    எத்தனை நல்லது சொன்னாலும் அதை கேட்கும் காதுகள் உள்வாங்கினால் நலம்.

    திருக்குறள் விளக்கம் , காணொளி எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கும், காணொளி கண்டமைக்கும் நன்றி.

      நீக்கு
  10. வேதனையான விஷயம்தான். 

    பதிலளிநீக்கு
  11. வேதனைதான்
    மதுப் பிரியர்களாகப் பார்த்து திருந்தினால்தான் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  12. அருமையாக என் மனக்குமுறலை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்! என்ன பயன்? இவர்களெல்லாம் திருந்தவா போகிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நாடு நாசமானதற்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களும்தான்.

      நீக்கு
  13. பழைய எமர்ஜென்சி நாட்களை நினைக்கிறேன்.
    அப்பொழுது பல தொழிலாளர்கள்
    கைதாவதுக்குப் பயந்தே குடிக்காமல் இருந்தார்கள்.அதாவது ஓரளவுக்கு.

    இப்போது எங்கு பார்த்தாலும் தாண்டவம் தான்.
    ஒரு குடும்பத்தில் ஒருவராவது இளம் வயதில் இறந்து
    விடுகிறார்கள்.
    கடல் வற்றினாலும் வற்றும். சாராயம் காய்ச்சுவது நிற்காது.
    இறைதான் காக்க வேண்டும்.
    காணொளி பரிதாபம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா ஆம் எனக்கும் ஞாபகம் இருக்கிறது அது 1976 - 1977 காலகட்டம் சாராயம் குடித்தவர்களை போலீஸ் பிடித்துக் கொண்டு போகும்.

      இன்று அரசாங்கமே சாராயம் விற்கிறது. வருகைக்கு நன்றி அம்மா.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    மது குடிப்பது தீங்கு என எவ்வளவோ சொல்லி சொல்லி அவர்களை திருத்த முடியாமல் வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையையே தொலைத்திருக்கிறார்கள். அது ஒரு அடிமை படுத்தும் பானம் என்பதால் குடிப்பவரின் இல்லங்கள் சோகத்தைத் தவிர வேறு எதுவும் சந்தித்ததில்லை. இன்று அரசே அதற்கு துணை புரிவது கொடுமைதான். அதுவும் பெண்களும் அந்தப் பழக்கத்தை தொடர்வது அதை விட கொடுமை. என்ன செய்வது..? கால மாற்றங்கள். விபரமாக அனைத்தும் பதிந்து உள்ளீர்கள். காணொளி பார்க்கவே கஸ்டமாகத்தான் உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      குடிகாரர்கள் அனைவருமே சுயநலவாதிகள்தான் தனக்காக, தனது தேவைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.

      தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  15. லஞ்சம்[மாமூல்] வாங்கிக்கொண்டு கள்ளச் சாராயத்தை அனுமதிக்கும் போலீஸ்காரன் முதலில் திருந்த வேண்டும்; கடும் நடவடிக்கைகளால் 100 திருத்தப்பட வேண்டும். ஆட்சியிலிருப்பவர்கள், மனம் திருந்தி, கொஞ்சம் புத்தியைச் செலவழித்து மதுவுக்கு மாற்றாக வருமானத்துக்கு வேறு வழி தேட வேண்டும்.

    ஆக, முதலில் திருந்த வேண்டியவர்கள் காவல்துறையினரும் ஆட்சியாளர்களும்தான்.

    மது இல்லாவிட்டாலும், போதைக்கு வேறு வழி தேடும் மனிதர்கள் திருந்துவதும் மிக முக்கியம்தான்.

    ஆட்சியாளர்களும் மதுப்பிரியர்களும்கூட உங்கள் கருத்துரைகளைப் படிக்க வேண்டும். படிப்பார்களா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அயோக்கியன் என்பது அறிந்தே மக்கள் வாக்களிக்கும்போது அவர்கள் திருந்த வேண்முமென்று நாம் எதிர் பார்ப்பது முறையா ?

      வாக்குரிமையின் தன்மை அறியாத தமிழக மக்களுக்கு தேர்தல் தேவையா ?

      நீக்கு
  16. நம்மவர்கள் என்று திருந்தப்போகின்றார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவர் அவர்களே...
      அதற்கு இனி சாத்தியமே இல்லை.

      நீக்கு
  17. தொலைக்காட்சி செய்திகளில் டாஸ்மாக் செய்திகளை பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கு. அதுவும் மூடப்பட்ட கடைகள் திறக்கப்படும் என அறிவித்து முதல்நாள் திறப்பின்போது நடந்த நிகழ்வுகள் கொடுமை. இன்னமும் தொடருது. அதிலும் பல மதுமிதாக்களும் அடக்கம். கொடுமையடா சாமி. காணொளி..திருந்தாத,திருத்தமுடியாத மக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  18. அரசியல்வாதிகள் அமுதசுரபியை தூக்கி எறிய மாட்டார்கள். எந்தக் கட்சி என்றாலும்.

    பதிலளிநீக்கு
  19. இங்கே வரவேண்டிய ‘கருத்து’, மேலே போய் உட்கார்ந்துகொண்டது !

    பதிலளிநீக்கு
  20. நக்கீரத் துணிச்சல் உங்களுக்கு. சாடியிருக்கிறீர்கள். ஆனாலும் இது ஆள்வோர் காதில் ஊதிய சங்குதான்.

    காணொளி ஆயிரம் செய்திகளை அருமையாய்ச் சொல்கிறது.
    மதுவின் தீமை குறித்து நான் உள்ளூர் தொலைக்காட்சி மூலம் ஓங்கி குரல் கொடுக்கின்றேன். என் படத்தையும் வெளியிட்டு எனக்கு ஓர் அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.
    முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகை கண்டு உவமை அடைகிறேன்.

      உங்களால் இயன்றவரை "குறள்" கொடுங்கள்.
      என்னால் இயன்றவரை நான் "குரல்" கொடுப்பேன்.

      தங்களுக்கு நான் அங்கீகாரம் கொடுத்தேன் என்பது பெரிய வார்த்தை ஐயா.

      நீக்கு
  21. அறம் பேசும் தொகுப்பு

    பதிலளிநீக்கு
  22. இப்பதிவை குடிமக்கள் போதை தெளிந்ததும் வாசித்தால் நல்லது.

    பண்டிகை , ஊர் திருவிழா காலங்களில் வெள்ளையும் ஜொள்ளையுமாக காலையில் காட்சசியளிப்பவர்கள் மாலையில் புழுதியில் புரண்டு உருண்டு எழுந்து தள்ளாடி நடக்கும் காட்சி பார்ப்பவர்களுக்கு நகாய்ப்பை உண்டாக்கினாலும் அவரது குடும்பத்தார் அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லும்போது கூனி குறுகி, நாணி, வெட்கப்படும் காட்சியை பார்த்திருக்கின்றேன். இங்கே drink responsibly என்கிறார்கள், குடிப்பவனுக்கு ஏது ரெஸ்பான்சிபிலிட்டி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இந்த அவமான உணர்வுகள் குடிகாரனின் குடும்பத்தினருக்குதான் அவனுக்கு இல்லை.

      தங்களது வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  23. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.. அருமை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  24. இந்த வாரம் மனதை பாதித்த இரு செய்திகள் 1. டாஸ்மாக் விற்பனை,2. பீகாரில் கோடிக்கணக்கில் செலழித்து கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இந்த தேசத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் இன்றைய நிலையில் உலகை காப்பது இறையின் கையில்தான் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  25. எந்த காலத்தில் அம்மன் பேசினாள்....என்பது மாதிரி...குடிகாரர்கள் செத்த பின்புதான் குடியை நிறுத்துவார்கள்.. மக்கள்தான் அடிதடியில் இறங்கி சாராய கடையையும் அதை நடத்தும் அரசையும் இழுத்து மூட வைக்கனும்...

    பதிலளிநீக்கு
  26. வருக நண்பரே கலவரம் நடத்தி எதற்காக உயிரை விடணும் ?
    அறவழியில் தேர்தல் வரும்பொழுது பாடம் புகட்டலாமே... ?

    பதிலளிநீக்கு
  27. மிகவும் வேதனையான விஷயம் கில்லர்ஜி. மதுவுக்கு எல்லா ஊர்களும் அடக்கம்தான்.

    துளசிதரன்

    கில்லர்ஜி நான் அப்படியே டிட்டோ செய்கிறேன் உங்கள் கருத்துகளை. உங்கள் கேள்வியை நானும் கேட்பதுண்டு இப்படியேனும் அரசாள வேண்டுமா என்று. ஆனா பாருங்க ஆள்பவர்கள் மட்டும் என்னவாம்?!! குடிக்காமலா இருக்காங்க? இவர்கள் மேல்மட்டம். அடித்தட்டு மக்களின் வாழ்வியல்தான் கேடுகெட்டுப் போகிறது. பிள்ளைகள் கூடக் குடிக்கறாங்களே அப்பன் குடிக்கறத பாத்து. இடையில் பள்ளி மாணவிகள் ஊருக்கு வெளியே சென்று பட்டை அடிப்பது போல காணொளி வந்துச்சு. உன்னால் முடியும் தம்பில சீதா எல்லா பொம்பிளைங்களையும் கூட்டி வெச்சுப் போசுவாங்களே ஒரு வசனம் அதுதான் நினைவுக்கு வந்துச்சு

    ரீகலைத் தேடினேன் கடைசில கிடைச்சிட்டார். என்னத்த வேணா சொல்லிக்கோங்க நான் இப்படித்தான்னு மல்லாந்துட்டாரு போல அதான் மூச்சு பேச்சு இல்லை!!!!!! ஹா ஹா ஹாஅ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது இருவரது கருத்துரைக்கும் நன்றி.

      சிவாஸ்தான் பேச்சு, மூச்சு இல்லாமல் கிடக்கிறாரே...

      நீக்கு
  28. நண்பரே! குடிகாரர்களை மதுப்பிரியர்கள் என அழைத்து மரியாதை செய்யும் இவர்கள் என்ன சொன்னாலும் மதுக்கடைகளை மூடமாட்டார்கள். தாங்கள் சொல்லும் அறிவுரையெல்லாம் விழலுக்கு இரைத்த நீர் போலத்தான். குடிப்பவர்கள் குடித்து வாழ்வை முடித்துக் கொள்ளப்போகிறார்கள் அவர்கள் குடும்பம் தான் பாவம் அல்லாடப் போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே குடிகாரர்களை, "மதுப்பிரியர்கள்" என்று அழைப்பது விளக்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் வைப்பது போலானது.

      வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  29. வெகுஜனக் கருத்துக்குமாறனது இது குடி என்பது வள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்க வேண்டும் அதனால் தானோ இந்தகள்ளுண்ணாமை அதிகாரம் டமிழ் நாட்டில் மட்டுமல்லை குடிப்பழக்கம் இதர மாநிலங்களிலும் உண்டுகேரளா ஆந்திரா எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்தது வேதகாலத்திலேயே சோமபானம் அருந்துவார்களாம் தேவர்கள் உட்பட அனைவரும் மது அருந்துவது என்க்கும் உடன்பாடில்லைஉடல் நலத்துக்கு கேடு அ ளவுக்கு மீறினால்

    பதிலளிநீக்கு
  30. குறள் ஆரய்ச்சி எல்லாம் பலமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா மது அருந்துவது அரசர் காலத்திலிருந்து சோமபாணமாக இருக்கத்தான் செய்து இருக்கிறது.

      குறள் ஆராய்ச்சியா ?

      ஹா.. ஹா.. எனக்கும் அதற்கும் வெகுதாரம் ஐயா வருகைக்கு நன்றி.

      நீக்கு
  31. அருமையான ஆராய்ச்சி nanbare.
    உங்களின் குறள் விளக்கமும் மற்றவர்கள் விளக்கத்துடன் சேர்ந்து வந்தது எதிர் பாராதது.
    ஒரு வேளை நீங்கள் தான்
    அடுத்த DD யோ....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      நான், நான்தான்
      டி.டி.டிடிதான்.

      நானும் எப்பத்தான் எழுத்தாளராவது ?

      நீக்கு