தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 05, 2014

நெஞ்சு பொறுக்குதில்லையே...

இந்த திரைப்படம் எடுக்கும் கூத்தாடிக் கூட்டமே... உங்கெளுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா ? சமூகத்தை 90% சீரழித்தாலும் 10% மாவது அரசியல்வாதிகளின் கோல்மால்களை, மொள்ளமாறித்தனத்தை, முடிச்சவித்த வித்தையை, கடைக்கோடியிலிருக்கும் பாமரனுக்கும் புரியும்படி திரைப்படம் எடுத்து தெளிய வைத்தது யாரு ? கீதையில சொன்ன தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் ஏன்டா ? நாசமாப் போறவங்களா ? இந்த வசனத்தை ஏன்டா ? நீங்களெல்லாம் சொல்றீங்க ? உங்களோட சுயபோதைக்கு பாதைமாற்றி உபயோகப் படுத்துறீங்களேடா, அரசியல் தொண்டனாவது படிக்காதவன் முட்டாள்த்தனமா, நமது பணம் என்பது தெரியாமல் வாயில்லா ஜீவன் பேரூந்து நம்மளை சுமந்துகிட்டு போகும் அதை தீ வைக்கின்றான், நீங்க கல்லூரியில படிச்சுட்டுதானேடா வர்றீங்க நாட்டைத் திருத்தப்போறோனு... சொல்லிக்கிட்டு நீங்களெல்லாம் அந்த அரசியல்வாதிகளைவிட மோசமாப் போயிட்டீங்களடா உங்களைச் சொல்லி குற்றமில்லைடா இன்னும் உங்களை நம்பிக்கிட்டு கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யிறானே முட்டாப்பயல்கள் அவங்கே இருக்கும்வரை நீங்க, ஆடுவீங்கடா... ஆடுங்கடா... இது உங்களோட ஆடுகளம் ஆடவிட்டது ஆட்டு மந்தை கூட்டம் திரைப்படம் ஆரம்பிக்கும்போது பகவானை காண்பித்து புஷ்பாபிஷேகம் செய்து காண்பிக்கின்றீர்களே... ஏன்டா ? பேதியிலே பெரண்டு போயிறுவியலா, உங்களுக்கு இறைநம்பிக்கை இருக்கிறதாடா ? இல்லை உங்களை மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக... செய்கிறீங்களாடா ? திரைப்படத்தில யோக்கியன் யோகமூர்த்தி மாதிரி நடிக்கிறீங்களேடா, நிஜ வாழ்க்கையில ஃபிராடு பிச்சைமுத்து மாதிரி இருக்கியலடா, உண்ணாவிரதம்னு சொல்லிக்கிட்டு நீங்க பேசுறதையெல்லாம் காது கொடுத்து கேட்க முடியலையடா, உங்களுக்காகத்தானேடா, செல்லம்மா புருஷன் அன்றே எழுதினான் கவி.
நெஞ்சு பொறுக்குதிலையே...
நெஞ்சு பொறுக்குதிலையே...
இந்த நிலைகெட்ட மனிதரை
நினைந்து விட்டால்....
நெஞ்சு பொறுக்குதிலையே...
நெஞ்சு பொறுக்குதிலையே...
அந்தக் கவிஞனைப்பற்றி... திரைப்படம் எடுக்கவோ, அவனது கவியைப்பற்றி பாடவோ, உங்களுக்கு தகுதியுண்டாடா ? தன்னலம் மட்டும் கருதும் துரோகிகளே... நீங்களெல்லாம் பேசுறதை எனது கணினியில கேட்டுக்கொண்டு இருக்கும்போது... பக்கத்துல இருந்தவன் பொருக்க முடியாமல் உணர்ச்சி வசப்பட்டு மண்ணை அள்ளி தூவிட்டுப் போயிட்டானேடா.. எனது கணினி இப்போ, மணினியாகிப் மண்ணாப்போச்சேடா மண்ணாப் போறவங்களே... உங்களை மரியாதை குறைவா பேசலைடா, மனசு பொருக்க முடியலைடா ஏன்னா ? நான் மனிதநேயம் உள்ள, மதவாதமற்ற தமிழன்டா... எனக்கு கணினி இப்போ நீங்களாடா வாங்கிக் கொடுப்பீங்க ? இல்லை பரிதாபப்பட்டு இந்தப் பாமரனுக்கு நண்பர் திரு. சொக்கன் சுப்பிரமணியன் அவர்கள் தான் வாங்கி கொடுக்கப்போறாரா ?


Video
(Please ask Audio Voice)


26 கருத்துகள்:

  1. நெஞ்சே இல்லாதவர்களிடம்..நெஞ்சு பொருக்குதில்லையே...என்றால்....இவரு அந்தக் காலத்து ஆளப்பா...!! என்று அவர்கள் சிரிப்பார்கள் நண்பரே......!!!

    பதிலளிநீக்கு
  2. திரையை விட நேரில் நன்றாக நடிக்கும் கூட்டம் இவர்கள்! சரியான சவுக்கடி வரிகள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    இந்தக்கால அரசியலை மையமாக வைத்து மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி அரசியல் வாதிகள்இடம் கேட்டால் இவையெல்லாம் சகஜம் ஐயாஎன்பார்கள் ஒரு வார்த்தையில்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. நெஞ்சு பொறுக்கவில்லையா சகோதரா...
    கணினி மண்ணி ஆயிருச்சா...
    இவனுகளைப் பாக்கவே கூடாதுங்க...

    பதிலளிநீக்கு
  5. நெஞ்சு பொருக்கவில்லை தான்...தங்களின் கோபமும் நியாயம்..தான்

    பாவம் சொக்கன் என்ன செய்யப் போகிறாரோ.. ?

    பதிலளிநீக்கு
  6. யார் யாருக்கு என்னென்ன நெருக்கடியோ ?அடுத்து வரவிருக்கும் பிரமாண்ட படத்தின் ரைட்ஸ் 'அவர்களிடம் 'இருப்பதால் ஒரு நடிகரை கலந்து கொண்டேயாகணும் என்று பணிய வைத்தாராம் மெகா இயக்குனர் !
    இப்படி போட்ட காசை அள்ளத்துடிப்பவர்களை கண்டால் நெஞ்சு பொறுக்கவில்லைதான்!

    பதிலளிநீக்கு
  7. கில்லர்ஜி நியாயமான குமுறல். உண்மை நெஞ்சு பொறுக்குதில்லையே...........

    பதிலளிநீக்கு
  8. avanunga ellaam echa porikki pasanga, vidunga boss

    பதிலளிநீக்கு
  9. நேற்று தங்களின் தளத்தை அனுக முடியவில்லை..

    தங்கள் ஆதங்கம் நியாயமானது தான்!..

    அலங்கோலங்களே - கோலங்களாகின!..
    அருவெறுப்பே - அலங்காரங்களாகின!..

    விளக்குமாற்றால் கூட்டித் தள்ளவேண்டிய விஷயம்!..
    வீணாகக் கவலைப்படுவதில் அர்த்தமில்லை!,,

    பதிலளிநீக்கு
  10. சரியாக சொன்னீர்கள் நண்பரே, இவர்கள் அரசியல்வாதிகளை விட மோசமானவர்கள். இவர்கள் பின்னாடி அலையும் கூட்டம் திருந்தினால் தான், இவர்களும் திருந்துவார்கள்.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா10/07/2014 11:00 AM

    நெத்தியடி பொஸ்ட் ஜீ, ஆனால் அவர்கள் திருந்துவார்கள் என்று நினைக்கிறீர்கள், சான்ஸே இல்லை, பட்டாத்தான் திருந்துவாங்க... உண்மையாகவே அது உங்கள் கணினி தானா???

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா10/07/2014 3:01 PM

    நீங்கள் எத்தனை திட்டினாலும், எப்படித் திட்டினாலும் அவர்களுக்கு உறைக்கப் போவதில்லை.

    உடல் நலம் கெட்டுவிடக் கூடாது. கவனமாய் இருங்கள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் கோபமாக இருக்குறீர்கள், சற்று நேரம் கழித்து வருகிறேன் !

    பதிலளிநீக்கு
  14. நண்பரே! தங்கள் கோபம் நியாயமானதுதான்! ஆனா, ரொம்பவே காட்டமாகி, காண்டுட்டீங்க போல....கொஞ்சம் நிதானித்திருக்கலாமோ?!!! கூல் கூல் நண்பரே! அது சரி கடைசில என்ன நண்பர் சொக்கனையும் இழுத்து விட்டுட்டீங்க?!!!

    பதிலளிநீக்கு
  15. ஜீ...

    ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த நீஈஈஈஈண்ட டயலாக்கை சாரி, வசவை என்னை பார்த்து சொல்லியிருந்தீங்ன்னா... ஆத்தாடீ ! நான் நாண்டுக்கிட்டுல்ல.... !

    ஆனா அவங்கள்லாம் அரிதாரத்துலேயே மானம் ரோசத்தையெல்லாம் மறைச்சுப்புட்டவங்களாச்சே.... நல்ல மாட்டுக்குத்தான் ஒரு சூடு ! ஆனா நாய் வாலை நிமித்த முடியாதே !!

    அதுசரி.... என்னா தெகிரியம் உங்களுக்கு ?! சொக்கன்கிட்ட கம்ப்யூட்டர் கேக்கறீகளே... அவரு திருவிளையாடல் மாதிரி கேள்வி மேல கேள்விகேட்டு கில்லர்ஜீயை தருமியாக்கிட்டா ?

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  16. நீங்கள் ஆதங்கப்பட்டு ஆத்திரப்பட்டு கூறியவை சரிதான். ஆனால் யார் இதை காதில் வாங்கிக்கொள்ளப் போகிறார்கள். எல்லாம் வல்ல இறைவன் இவர்களிடமிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றட்டும்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே.!

    ஏன் இவ்வளவு கோபமான வார்த்தைகளுடன் இந்தப் பதிவு? ஆனால் கோபம் இருக்கும் இடத்தில்தான் நியாயமும் இருக்கும். அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்.! சற்று சமாதானமடைந்தவுடன், முடிந்தால் என் புதிய பதிவான குறுங்கவிதையையும், சிறுகதையையும் கண்டு கருத்துரையிட்டால், நன்றியுடன் மகிழ்ச்சியடைவேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. அண்ணா,
    ஊருக்கு வந்திருகீன்களா? அது தான் ஆளை காணோமா??? சரி , குடும்பத்தோடு (இனிய குழந்தைச்செல்வன்களோடு) அருமையை பொழுதை களியுங்கள்:)))

    பதிலளிநீக்கு
  19. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்

    பதிலளிநீக்கு
  20. http://makizhnirai.blogspot.com/2014/10/know-some-english-ix.html

    தளத்துக்கு சீக்கிரமா போங்க ஜீ ! உங்களை பத்தி இங்கிலீஸ் கிசுகிசுவெல்லாம் போடறாங்க !!!

    சாமானியன்

    பதிலளிநீக்கு
  21. தேவக்கோட்டையிலிருந்தபடி கனவுக்கோட்டையின் மீது கல்லெறிந்து விட்டீர்...!
    ஒருத்தர் கனவாவது இதனால் கலைந்தால் தேவலை!
    சரியான விளாசல்.
    சபாஷ்...!

    பதிலளிநீக்கு
  22. ஓஹோ இந்தியவிலேயா அது தான் கனோமா நல்லா பிள்ளைகளோடும் உறவுகளோடும் இனிமையாக பொழுதுகளை களித்து விட்டு வாருங்கள் சகோ கூலா ok வா தங்கள் ஆதங்கம் புரிகிறது வருத்தம் தான் என்ன செய்யமுடியும் சொல்லுங்க.திருந்தாத ஜென்மங்கள்....!

    பதிலளிநீக்கு
  23. அவர்கள் வியாபாரிகள் தோழர்
    வியாபாரம் பாதிக்காது பார்த்துகொள்வது அவர்களின் கடமைகளின் ஒன்று..
    உணர்வுவயப் படலாம் ...
    டவுசரைக் கழட்டவா என்றால் வந்து சமர்த்தாய் அமர்ந்துவிடுவார்கள்.. அவ்வளவே..


    கொஞ்சம் புதிய அறிவியல்(5) ...

    பதிலளிநீக்கு
  24. மீசையாரே ...வணக்கம் .கோபமான வரிகள்...அப்படியே கொதிக்குதே...உங்க மனசு.
    மதுரையில உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி..!
    அப்படியே என் வலைப்பக்கமும் வாங்க...!

    பதிலளிநீக்கு
  25. அன்புள்ள கில்லர்ஜி அவர்களுக்கு,

    வணக்கம். ‘ நெஞ்சு பொறுக்குதிலையே ’படித்தேன். பராசத்தியில் பாரதியின் பாடலை சி.எஸ்.ஜெயராமன் பாடி வி.சி. கணேசன் நடித்ததைக் காட்டியது பொருத்தமாக இருந்தது.
    தங்களின் கோபம் நியாமனதே!.

    ‘நிஜ வாழ்க்கையில் கதாநாயன்களே இரசிகர்களுக்கு வில்லன்களாக மாறிவிடுகிறார்கள். கட்டவுட்டுக்குப் பாலாமிஷேகம் செய்து கீழே விழுந்து சமீபத்தில் ஓர் இரசிகன் இறக்கவில்லையா? ’ என்று அய்யாவின் பட்டிமன்றத்தைப் பார்த்துக் கேட்டு இருந்தேன் அல்லவா?
    பகுத்தறிவற்று இப்படிப் பாழாய்ப் போய்க் கிடக்கிறார்களே இரசிகர்கள் இன்று.

    மூடநம்பிக்கைக்கு எதிரா தந்தை பெரியார் செய்யாததை, தீண்டாமைக் கொடுமைக்கெதிரா அண்ணல் அம்பேத்கர் செய்யாததை, கல்விக்கண் திறக்க கர்மவீரர் காமராசர் செய்ததைவிட...திரைப்படங்கள் என்ன சமுதாய மாற்றத்திற்காக செய்து விட்டன என்று கேட்டதில் நியாயம் தானே?
    பூப் பறிக்க ஆயுதம் எதற்கு?

    தீதும் நன்றும் பிறர்தர வாரா

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.





    பதிலளிநீக்கு